Tamil Star |
- பழம்பெரும் நடிகை ஸோஹ்ரா ஷேகல் மரணம்!
- ஆன்ட்டி என்று கூப்பிட்ட மாணவர்கள்… கோபப்பட்ட அனுஷ்கா!
- மிகவும் தாழ்வாக பறந்த விமானம்: அச்சத்தில் அதிர்ந்து போன மனிதர்கள்!
- சுறாவை வேட்டையாடும் மற்றொரு சுறா…. மிக அரிய காட்சி!
- சான்சே இல்லை…. இவரை அடிச்சிக்க யாராவது இருக்கீங்களா?
- தாத்தாவின் விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் இளைஞர்கள்!
- Xiaomi Mi3 ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் அறிமுகம்!
- விலகினார் ஹாங் மியுங்!
- விக்கெட்டுக்கு புதிய சாதனை புவனேஷ்வர் – ஷமி அபார ஆட்டம்!
- இரு நாட்டின் உறவுகளை மேம்படுத்த கிடைத்த சிறந்த வாய்ப்பு : வில்லியம் பேன்ஸ்
- இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை ஏற்றுக்கொண்டதில்லை : பாகிஸ்தான்
- வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை! நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை!
- அகதிகளை தற்கொலை செய்து கொள்ள சட்டத்தரணிகள் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு!
- மஹிந்தவின் ஆட்சியிலேயே இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ கணேசன் பேட்டி!
- மாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதவிக்காலம் நீடிப்பு?
- இந்த ஆவேச தாக்குதலில் வெற்றி யாருக்கு?
- இதை 1000 தடவை பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க மாட்டீங்க!
- என்ன அழகா ரொட்டி தயாராகிறது இந்த மெஷின்ல!
- முதலையை ஆக்ரோஷசமாக வேட்டையாடும் சிறுத்தையின் துணிச்சலான காட்சி!
- வெளியிட்ட வேகத்தில் பரபரக்கும் கமலின் உத்தம வில்லன் டீஸர்!
| பழம்பெரும் நடிகை ஸோஹ்ரா ஷேகல் மரணம்! Posted: 10 Jul 2014 11:54 PM PDT
இந்தியாவின் பழம்பெரும் நடிகை மற்றும் டிவி நட்சத்திரமான ஸோஹ்ரா ஷேகல் நேற்று மரணமடைந்தார். இதய நோயால் அவதிக்கு உள்ளாகி வந்த 102 வயதான ஷேகல், தெற்கு டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த புதனன்று நிமோனியாவால் பாதிப்படைந்த ஷேகல் நெஞ்சுவலியினால் நேற்று மாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். பாலிவுட்டின் வாரிசு என்று அழைக்கப்பட்ட ஷேகல், முதன்முதலாக சேன்னி கும் அண்ட் சவார்யா என்ற படத்தில் நடித்திருந்தார். கிட்டதட்ட எட்டு தலைமுறைகளை திரைத்துறையில் கண்டுள்ள ஷேகல், ஹாலிவுட் படங்களில் கூட நடித்துள்ளார். அவரது மகள் கிரண் ஷேகல் இவரைப் போலவே ஒரு சிறந்த ஒடிசி நடனக் கலைஞர். 1994 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட ஷேகல் அதிலிருந்து மீண்டு வந்தார். 2008 ஆம் ஆண்டில் "இந்த நூற்றாண்டின் திரை வாரிசு" என்ற விருதினை யுஎன்பிஎப் என்ற அமைப்பின் லாட்லி மீடியா விருதுகள் நிகழ்ச்சியில் பெற்றார். சிறுவயது முதலேயே நாட்டியத்தில் ஈர்ப்புடைய ஷேகல், உதய் சங்கருடன் 1935இல் இருந்து இணைந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். அதன்பின்னர் அல்மோராவிற்கு சென்ற ஷேகல் அங்கு பிரபல ஓவியரும், நடனக்கலைஞருமான காமேஷ்வர் ஷேகலை மணம் புரிந்து கொண்டார். இந்திய சினிமாவின் அனுபவசாலியாக கருதப்படும் ஷேகல், கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் சிறப்பானதாக பாஜி ஆன் தி பீச், ஹும் தில் தே சனம், தில் சே ஆகிய படங்கள் அமைந்திருந்தன. ஏறக்குறைய இந்திய சினிமாவின் தலைமுறைகள் கண்ட மிகத்திறமை சாலியும், அனுபவமிக்கவருமான ஷேகல் என்ற மிகச் சிறந்த நடிகையின் மறைவுக்கு நம்முடைய அஞ்சலியைக் காணிக்கையாக்குவோம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆன்ட்டி என்று கூப்பிட்ட மாணவர்கள்… கோபப்பட்ட அனுஷ்கா! Posted: 10 Jul 2014 11:49 PM PDT
நடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் ஆன்ட்டி என்று அனுஷ்காவை கூப்பிட்டு கோபப்பட வைத்துள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர். (அனுஷ்கா ஹாட் படங்கள்) சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் 'ருத்ரம்மா தேவி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு சில பள்ளிச் சிறுவர், சிறுமியர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அனுஷ்காவை 'ஆன்ட்டி' என்று அழைத்தார்களாம். அதனால் அனுஷ்கா கோபப்பட்டு வருத்தமடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சிறுவர், சிறுமியர் தன்னை 'அக்கா' என்று அழைக்க வேண்டும் என்று அனுஷ்கா நினைத்திருப்பார் போல. ஆனால் பள்ளி மாணவர்கள் 'ஆன்ட்டி' என்றுதானே அழைப்பார்கள் என படப்பிடிப்புக்கு வந்திருந்தவர்கள் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளிலேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார். இன்னும் சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர்களுக்கு 'ஆன்ட்டி' மாதிரியான தோற்றத்திலும் இருக்கிறார். இருந்தாலும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் அனுஷ்கா இருப்பதால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த ஆடையிலும் அவர் அசத்தலாகவும், பொருத்தமாகவும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அது புடவையாக இருந்தாலும் சரி, மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தாலும் சரி எந்தவிதமான ஆடையிலும் அனுஷ்கா அழகாகத் தெரிகிறார் என்பது ரசிகர்களின் கருத்து. அதே சமயம் அவர் முகத்தில் உள்ள மெச்சூரிட்டி அவருக்கு கொஞ்சம் வயதான ஹீரோயின் தோற்றத்தைத் தருகிறது என்பதில் பொய் எதுவுமில்லை. இப்போதுள்ள சில இளம் ஹீரோக்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என்பதே உண்மை. இதை ஒத்துக்கொள்ளாமல் ஆன்ட்டி என்று கூப்பிட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வது சரியா அனுஷ்கா.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிகவும் தாழ்வாக பறந்த விமானம்: அச்சத்தில் அதிர்ந்து போன மனிதர்கள்! Posted: 10 Jul 2014 11:42 PM PDT |
| சுறாவை வேட்டையாடும் மற்றொரு சுறா…. மிக அரிய காட்சி! Posted: 10 Jul 2014 11:23 PM PDT |
| சான்சே இல்லை…. இவரை அடிச்சிக்க யாராவது இருக்கீங்களா? Posted: 10 Jul 2014 11:20 PM PDT |
| தாத்தாவின் விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் இளைஞர்கள்! Posted: 10 Jul 2014 11:16 PM PDT |
| Xiaomi Mi3 ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் அறிமுகம்! Posted: 10 Jul 2014 11:09 PM PDT
Xiaomi நிறுவனம் இறுதியாக இந்திய சந்தையில் அதன் முதல் ஸ்மார்ட்போனான Mi3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் தளத்தில் ரூ.14,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 15 முதல் விற்பனைக்கு செல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Xiaomi Mi3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.3 இயங்குகிறது. இதில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே மற்றும் 441ppi பிக்சல் அடர்த்தி கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உடன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட் ஸ்மார்ட்போனை ரூ.15,000 விலைக்குள் உருவாக்கிய முதல் கைபேசி Xiaoming Mi3 ஸ்மார்ட்போன் ஆகும். Adreno 330 ஜி.பீ. யூ மற்றும் ரேம் 2 ஜிபி உடன் இணைந்து 2.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 (8274AB) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Mi3 ஸ்மார்ட்போனில் விரிவாக்கத்தக்க சேமிப்பு ஆதரவு விவரங்கள் இல்லாமல் 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் af/2.2 aperture மற்றும் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. Xiaomi Mi3 ஸ்மார்ட்போனில் 3050mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ஒரு 144x73.6x8.1mm மெஷர்ஸ் மற்றும் 145 கிராம் எடையுடையது. Xiaomi Mi3 ஸ்மார்ட்போன் உலோக சாம்பல் வண்ணத்தில் கிடைக்கும். Xiaomi Mi3 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே, 441ppi பிக்சல் அடர்த்தி, Adreno 330 ஜி.பீ. யூ, ரேம் 2 ஜிபி உடன் இணைந்து 2.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 (8274AB) ப்ராசசர், 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, af/2.2 aperture மற்றும் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ஆண்ட்ராய்டு 4.3, 3050mAh பேட்டரி, 145 கிராம் எடை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Jul 2014 11:04 PM PDT
சியோல் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்கெட்டுக்கு புதிய சாதனை புவனேஷ்வர் – ஷமி அபார ஆட்டம்! Posted: 10 Jul 2014 11:01 PM PDT
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், புவனேஷ்வர் குமார் - முகமது ஷமி ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை எட்டியது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் முரளி விஜய் 122 ரன், கேப்டன் டோனி 50 ரன்னுடன் 2ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தது. விஜய் 146 ரன் எடுத்து (361 பந்து, 25 பவுண்டரி, 1 சிக்சர்) ஆண்டர்சன் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து டோனியுடன் ஜடேஜா இணைந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தனர். ஜடேஜா 25 ரன் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிரையர் வசம் பிடிபட்டார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டோனி 82 ரன் எடுத்து (152 பந்து, 7 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அறிமுக வீரர் ஸ்டூவர்ட் பின்னி, இஷாந்த் ஷர்மா இருவரும் தலா 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப, இந்தியா 346 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. 119.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 344 ரன் எடுத்திருந்த இந்தியா, மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புவனேஷ்வர் குமார் - முகமது ஷமி ஜோடி கடைசி விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தது. இவர்களை பிரிக்க முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறினர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 433 ரன் எடுத்திருந்தது (153 ஓவர்). புவனேஷ்வர் குமார் 46 ரன் (120 பந்து, 4 பவுண்டரி), முகமது ஷமி 39 ரன்னுடன் (62 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், கும்ப்ளே - ஸ்ரீசாந்த் ஜோடி 73 ரன் சேர்த்ததே இந்திய அணி கடைசி விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன் ஆகும் (ஓவல், ஆக. 2007). இந்த சாதனையை புவனேஷ்வர் - ஷமி ஜோடி நேற்று முறியடித்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரு நாட்டின் உறவுகளை மேம்படுத்த கிடைத்த சிறந்த வாய்ப்பு : வில்லியம் பேன்ஸ் Posted: 10 Jul 2014 10:37 PM PDT
டெல்லி வந்துள்ள அவர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, வெயிளியுறவு அமைச்சர்ட சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களடம் பேசிய வில்லியம் பேன்ஸ் பிரதமர் நரேந்தி மோடி செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று தெரிவித்தார். மோடியின் வருகை இருநாட்டு உறவுகளை பலப்படுத்த கிடைத்த சிறப்பான வாய்ப்பு என்றும் தெரிவித்தார். மோடி அரசு இந்தியாவை வெற்றி பாதையில் அழைத்து செல்லும் என்று கூறிய வில்லியம் பேன்ஸ் அதற்கு அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என்றார். தொழில் வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாக அவர் கூறினார். அமெரிக்க அமைச்சர் வில்லியம் பேன்ஸ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை ஏற்றுக்கொண்டதில்லை : பாகிஸ்தான் Posted: 10 Jul 2014 10:33 PM PDT
காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு மேற்கொண்டுவரும் ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குழுவை டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தஸ்லிம் அஸ்லாம் இந்தியாவின் நடவடிக்கை காஷ்மீர் பிரச்சனையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார். காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுகொண்டது இல்லை என்று குறிப்பிட்ட அவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் வரை ஐ.நா. கண்காணிப்பு தொடரவேண்டும் என்றார். எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் அந்நாட்டு வெளியுறவுத்துறையின் இந்த திடீர் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை! நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை! Posted: 10 Jul 2014 10:28 PM PDT
வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார். தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை. நாட்டை நேசிக்கும் ஒர் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டு;ம். நாடு பற்றி பெருமிதத்துடன் பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகளை தற்கொலை செய்து கொள்ள சட்டத்தரணிகள் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு! Posted: 10 Jul 2014 10:25 PM PDT
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அவர்களின் சட்டத்தரணிகளால் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த குற்றச்சாட்டை குறித்த முகாமின் முன்னாள் பணிப்பாளராக இருந்த கிரேக் லேக் என்பவர் முன்வைத்துள்ளார். அத்துடன் கிறிஸ்மஸ் அகதிகள் தற்போது அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிறிஸ்மஸ் தீவில் உள்ள 10 தாய்மார் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள செய்தியை அடுத்தே லேக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கிறிஸ்மஸ் தீவில் உள்ள தாய்மார் அங்கிருந்து வெளியேறி நாவுறு தீவுக்கு செல்ல தயாராக இருப்பதாக அகதிகள் சார்பான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் எவரும் குறித்த தாய்மாரை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தெ ஒஸ்ரேலியன் வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சோமாலிய யுவதிகளை விடுவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், அவர்களை சிட்னி மேற்கில் குடியமர்த்தியமை அடுத்தே கிறிஸ்மஸின் 10 தாய்மார்களும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மஹிந்தவின் ஆட்சியிலேயே இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ கணேசன் பேட்டி! Posted: 10 Jul 2014 10:19 PM PDT
1989 ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அன்று ஜெனீவாவுக்கு சென்று முறையிட்டார். எனவே இன்று அவர் சர்வதேச தலையீடு பற்றி கூறுவது அபத்தமானது என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சிங்கள தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். போரின் போது சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொண்ட இலங்கையின் சிங்கள கட்சிகள் இன்று சமாதானத்துக்கு மாத்திரம் சர்வதேசத்தின் உதவியை மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேல்மாகாணத்தில் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உள்ள அதிகாரங்கள் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதவிக்காலம் நீடிப்பு? Posted: 10 Jul 2014 10:13 PM PDT
வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கையின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், ஆளுனர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளாகும். வடமாகாண ஆளுனராக, முன்னாள் யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவருடைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று வெள்ளிக்கிழமை 11ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் புதிய ஆளுனர் ஒருவரை நாளை மறுநாள் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஆளுனர் யார் என்ற விபரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வடக்கு மாகாணசபையில் ஆளுனராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார். கடந்த செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதனைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுத்து வந்ததுடன் அதன் நிர்வாகத்தில் தலையீடுகளைச் செய்து குழப்பம் விளைவித்து வந்தார். வடக்கு மாகாணத்துக்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர் வேண்டாம் என்றும் சிவில் பின்னணி கொண்ட ஆளுனர் ஒருவரை நியமிக்குமாறும் வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் ஜனாதிபதி அதனைக் கண்டுகொள்ளவில்லை. எனினும் கடந்த ஜனவரி மாதம் தெல்லிப்பளையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதியுடன் இது குறித்து வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேசிய போது சந்திரிசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதாகவும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார். அதன் பின்னர் சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண முதல்வருக்கு ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார். இந்தநிலையில் மீண்டும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடையவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுவரை அடுத்த ஆளுனர் யார் என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த ஆவேச தாக்குதலில் வெற்றி யாருக்கு? Posted: 10 Jul 2014 04:01 AM PDT |
| இதை 1000 தடவை பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க மாட்டீங்க! Posted: 10 Jul 2014 03:59 AM PDT |
| என்ன அழகா ரொட்டி தயாராகிறது இந்த மெஷின்ல! Posted: 10 Jul 2014 03:55 AM PDT |
| முதலையை ஆக்ரோஷசமாக வேட்டையாடும் சிறுத்தையின் துணிச்சலான காட்சி! Posted: 10 Jul 2014 03:51 AM PDT |
| வெளியிட்ட வேகத்தில் பரபரக்கும் கமலின் உத்தம வில்லன் டீஸர்! Posted: 10 Jul 2014 03:45 AM PDT
கமல் ஹாஸன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தின் புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. கமல் ஹாஸன் தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமியுடன் சேர்ந்து படத்தை கமல் தயாரிக்கிறார். படத்திற்கு கிப்ரான் இசை பணியை கவனிக்கிறார். இந்த படத்தின் டீஸர் இயக்குர் சிகரம் கே. பாலச்சந்தரின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டும், உற்சாகமாக குதித்துக் கொண்டும் இருப்பது போன்று டீஸர் துவங்குகிறது. ரசிகர்களிடம் இருந்து நகரும் கேமரா திரைக்கு செல்கிறது. அங்கு ரமேஷ் அரவிந்த் போர்டை டாப் செய்ய கே. பாலச்சந்தர் நிற்கிறார். பாலச்சந்தரை அடுத்து தெய்யம் மாஸ்க் போட்ட பல நடிகர்கள் வருகிறார்கள். டீஸரில் பாலசந்தர், ஜெயராம், ஆன்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வரிசையாகத் தோன்றி உத்தம வில்லன் என்கிறார்கள். இறுதியில் கமல் ஹாஸன் வெள்ளை நிற கோட் சூட்டில் மால் ஒன்றில் நின்று அங்கிருக்கும் கூட்டத்தை நோக்கி கையை அசைப்பதுடன் டீஸர் முடிகிறது. டீஸர் வெளியிடப்பட்ட உடனேயே இணையதளத்தில் ஹிட்டாகியுள்ளது. அதை பலரும் பார்த்துள்ளனர், பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















