Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலை பகுதியில் புலி அட்டகாசம்: கிராம மக்கள் பீதி

Posted: 10 Jul 2014 10:13 PM PDT

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் வனப்பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், வனப்பகுதி வழியாக பாதயாத்திரையாக சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும் நாட்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும். தற்போது சபரிமலை கோவில் நடை வருகிற 16–ந்தேதி தான் திறக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை இல்லாததால் காட்டில் உள்ள மிருகங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு வர தொடங்கியுள்ளன. சபரிமலை பகுதியில் உள்ள முக்கிய கிராமமான பம்பாவுக்குள் நேற்று ஒரு பெரிய புலி புகுந்தது. அந்த புலி துளசிராம் என்ற டீக்கடைக்காரர் வளர்த்து வந்த நாயை கடித்து குதறியது. நாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த துளசிராம் வெளியில் புலி நிற்பதை பார்த்ததும்

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம்: இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் திட்டம்

Posted: 10 Jul 2014 09:55 PM PDT

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக மலையேறுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக 1944–ம் ஆண்டு திருப்பதி–திருமலை இடையே 56 வளைவுகளுடன் கூடிய முதல் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாகவே வாகனங்கள் சென்று வந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு

Posted: 10 Jul 2014 08:57 PM PDT

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16–ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும். மறுநாள் 17–ந் தேதி முதல் சுவாமி அய்யப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

உ.பி.யில் கனமழையால் 10 பேர் பலி

Posted: 10 Jul 2014 03:38 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அங்குள்ள பஹ்ரியாச் மற்றும் கோண்டா மாவட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு பகுதிகளில் 10 பேர் பலியானார்கள். அங்குள்ள மஹ்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதான பீம்சென்

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி

Posted: 10 Jul 2014 01:38 PM PDT

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க குஜராத்துக்கு ரூ.200 கோடி

Posted: 10 Jul 2014 01:25 PM PDT

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு

அடித்தட்டு மனிதனுக்கு புதிய வாழ்வு தரும் சூரியோதயம்: பட்ஜெட் குறித்து மோடி கருத்து

Posted: 10 Jul 2014 01:08 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஏழைகளுக்கும், சமுதாயத்தின் அடித்தட்டு பகுதி மக்களுக்கும் புதிய நம்பிக்கை ஒளியை தரும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. சோதனையான இந்த காலகட்டத்திலும்

பிரிமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்தது

Posted: 10 Jul 2014 12:19 PM PDT

பிராண்டட், ஸ்பீடு என்ற பெயர்களில் குறிப்பிடப்படும் 'பிரிமியம்' பெட்ரோல் மீதான உற்பத்தி வரி, மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது. லிட்டருக்கு ரூ.7.50-ல் இருந்து ரூ.2.35 ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

செப்டம்பரில் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா

Posted: 10 Jul 2014 12:10 PM PDT

அமெரிக்காவின் துணை செயலாளரான வில்லியம் ஜெ.பர்ன்ஸ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும், பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியையும்

பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் 102 வயதில் காலமானார்

Posted: 10 Jul 2014 11:28 AM PDT

பிரபல இந்தி நடிகையும், நடனப் பெண்மணியுமான ஜோஹ்ரா செகல் தனது 102வது வயதில் இன்று காலமானார். 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி பிறந்த அவர், நடன இயக்குனரான உதயசங்கர் குழுவில் நடனப் பெண்மணியாக

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட்: ப.சிதம்பரம்

Posted: 10 Jul 2014 07:39 AM PDT

மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:- நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்த கொள்கைகளின் பிரதிபலிப்பு. இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய அரசு அறிவித்த அம்சங்களை அருண் ஜெட்லி ஆமோதித்திருக்கிறார். ஏற்கனவே

அருணாச்சல பிரதேசத்தில் மாணவர் சங்கம் பந்த்: 2-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 10 Jul 2014 07:22 AM PDT

அருணாச்சல பிரதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் இரண்டாவது நாளான இன்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் நிதி நிலை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பில் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அருணாச்சல பிரதேச மாணவர் சங்கம் சார்பில் 36 மணி நேரம் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொள்கைகளின் நகல்: பட்ஜெட் குறித்து சோனியா கருத்து

Posted: 10 Jul 2014 05:34 AM PDT

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பட்ஜெட் குறித்து கூறுகையில், "இந்த பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் மற்றும்

பெற்றோர் எதிர்ப்பால் இளம் காதல் ஜோடி தற்கொலை

Posted: 10 Jul 2014 04:00 AM PDT

கான்பூரில் பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுத்ததால் இளம் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். கான்பூரில் உள்ள கத்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குந்தி (வயது 18). இவர் 25 வயதுடைய பிபின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் குந்தியின் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த குந்தி வீட்டில் உள்ள பேனில் தூக்குப்போட்டு

ஏழைகளுக்கு உதவாத மத்திய பட்ஜெட்: காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

Posted: 10 Jul 2014 03:36 AM PDT

நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதல் பொது பட்ஜெட் ஏழை விரோத பட்ஜெட் என்றும், ஏமாற்றம் அளிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "ஒருபுறம் முந்தைய அரசின் வரிக் கொள்கைகளின்படி வரி வசூல் நடவடிக்கையை தொடர்வதாக கூறிவிட்டு, அழுத்தம் காரணமாக

புனேவில் இன்று போலீஸ் நிலையம் முன்பு குண்டு வெடிப்பு- 2 பேர் காயம்

Posted: 10 Jul 2014 03:12 AM PDT

மகாராஷ்டிரா மாநிலம், மத்திய புனே பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு இன்று மதியம் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். புனேவில் உள்ள பத்வார்பெத் என்ற பகுதியில் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி

மேற்கு வங்காளத்தில் இடி தாக்கி 9 பேர் பலி

Posted: 10 Jul 2014 03:04 AM PDT

மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் இன்று மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோஸ்பூர் மற்றும் அதன் அருகே உள்ள கிராமத்தில் உள்ளவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கோலியா கிராமத்தில் வேலை செய்ய சென்றார்கள். அப்போது இடியுடன் கடும் மழை பெய்தது. இதனால் தொழிலாளர்கள் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த கோவிலை சக்தி வாய்ந்த இடி தாக்கியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க சட்டம்: கேரளா அறிவிப்பு

Posted: 10 Jul 2014 02:36 AM PDT

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு புதிய சட்டத்தை இயற்ற கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இதனை கேரள சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான் அறிவித்தார்.

பாதுகாப்பு-காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதமாக உயர்வு

Posted: 10 Jul 2014 02:28 AM PDT

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- மக்கள் வேலை வாய்ப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்கும் வகையில் 100 நவீன நகரங்கள் அமைக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு

சோப்பு, எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி.க்களின் விலை குறைகிறது

Posted: 10 Jul 2014 12:50 AM PDT

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்கவரி 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் சோப்பு விலை குறையும் வாய்ப்புள்ளது. கம்யூட்டர், சோப், சிறிய எல்இடி, எல்சிடி டிவி விலை குறையும் வாய்ப்புள்ளது. தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு. காலணிகளுக்கு உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு. எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவீதத்தில் 7 சதவீதமாக அதிகரிப்பு.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™