Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ., விசாரணை: ராஜினாமா செய்ய திட்டம்

Posted:

புதுடில்லி:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர், தன் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது.ரூ.360கோடி லஞ்சம்:முந்தைய காங்., ஆட்சி காலத்தில், வி.வி.ஐ.பி.,க் களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி - பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற நிறுவனத்துடன், மத்திய அரசு, 3,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களுக்கு, அந்த நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ...

இந்தியர்களுக்கே முன்னுரிமை: 'எச்1பி' விசாவுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி:அமெரிக்காவுக்கு தற்காலிக பணியாளர்களாக செல்லும், இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு, அந்நாட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக, 'எச்1பி' விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும், 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.இந்த விசாவை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து பணிபுரியலாம். அமெரிக்காவில், ஏறக்குறைய ஆறு லட்சம் பேரிடம் இந்த விசா உள்ளது.இந்நிலையில், அதிகளவு இந்தியர்களுக்கு, இந்த விசா வழங்கப்படுவதால், தங்களுக்கு பணி வாய்ப்பு ...

ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு : அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி:'ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி, மாநில அரசுகள், அவர்களை விடுதலை செய்ய முடியாது. சி.பி.ஐ., விசாரித்த வழக்குகளில், கைதிகள் விடுதலையில் மத்திய அரசின் தலையீடு குறித்து, மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை குறித்த முடிவில், தமிழக அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஆர்.எம்.லோடா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' ...

காந்தியடிகளுக்கு மதுரை தரும் மரியாதை இதுதானா? மேலாடை துறந்த நினைவிடம் எங்கே?

Posted:

மதுரை : 'வறுமையில் வாடித்தவிக்கும் பாமர மக்களில் தானும் ஒருவன்' என்பதை உணர்த்தும் வகையில் மதுரை மேலமாசிவீதியில் உள்ள ஒரு வீட்டில் 1921ம் ஆண்டு செப்., 22ல் முழங்கால் வரை ஆடை உடுத்தும் விரதத்தை காந்தியடிகள் துவக்கினார்.மேலாடையை துறந்த காந்தியடிகள் வாழ்நாள் இறுதி வரை எளிமையின் உருவமாக வாழ்ந்தார். ''நம்மை தூசிக்கும் தூசியாக பிறர் மதிக்க வேண்டும்.அந்தளவிற்கு எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்,'' என வலியுறுத்தி வந்தார். ''பாமர மக்களின் வாழ்வில் புத்தொளி பிறக்கும்போது நானும் மேலாடை அணிவேன்,'' என சபதம் கொண்டார்.மதுரை மேலமாசிவீதியில் மேலாடையை துறந்த ...

திரிணமுல் எம்.பி.,க்கள் 2வது நாளாக அமளி: சபாநாயகரை விமர்சித்ததால் சலசலப்பு

Posted:

ரயில்வே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள், நேற்று லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை எதிர்த்தும், அவரது நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சித்தும் பேசியதை அடுத்து, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.பா.ஜ.,வினருடன் மோதல்: லோக்சபாவில், நேற்று முன்தினம், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும், பா.ஜ., - எம்.பி.,க் களுக்கும், தகராறு ஏற்பட்டது.தங்களை, பா.ஜ., - எம்.பி.,க்கள், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டுவதாக குற்றம்சாட்டி, திரிண முல் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையும், காந்தி சிலை முன் ...

தேர்தல் கமிஷன் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும்: கருணாநிதி

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:விஜயகாந்த் அறிக்கையில், 'மவுலிவாக்கத்தில், 61 பேர் பலியான விபத்து குறித்து உண்மைகள் வெளிவர சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.ராமதாஸ் நிருபர்களிடம், 'தமிழகத்தில் அரசியல் சாராத ஓய்வு பெற்ற நீதிபதிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ள நிலையில், அவர்களில் யாரையாவது, விசாரணை நீதிபதியாக நியமிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.விஜயகாந்த், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் மீதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளார். உச்ச ...

பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக உயரும்

Posted:

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2013-14ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, வரி மற்றும் செலவுகளில் சீர்திருத்தம், சந்தை பொருளாதாரத்திற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம், வரும் ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி:நடப்பு நிதி ஆண்டில் தொழில்துறை உற்பத்தி மெல்ல அதிகரித்து வருகிறது. மின்சாரம், உரங்கள் துறையின் உற்பத்தி, 2012-13ஐ விட, சென்ற நிதி ஆண்டில் உயர்ந்துள்ளது.ஏற்றுமதி/ இறக்குமதி: ஏற்றுமதி வளர்ச்சி, 1.8 ...

பா.ஜ., தலைவராக அமித் ஷா தேர்வு : பார்லி., குழுவில் ஒருமித்த முடிவு

Posted:

புதுடில்லி:பா.ஜ., தேசிய தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின், வலதுகரம் என கூறப்படும், அமித் ஷா, 50, கட்சியின் பார்லிமென்ட் குழுவால், நேற்று தேர்வு செய்யப்பட்டார். நேற்று முதல், அந்த பொறுப்பில் தொடர்ந்த அமித் ஷாவுக்கு, பா.ஜ., மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பா.ஜ.,வில் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரி மீது, முறைகேடு புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அவர் பதவி விலகினார். அதையடுத்து, முன்னாள் தலைவரான ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி ...

பார்லி.,யில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

Posted:

புதுடில்லி:பார்லிமென்டில் இன்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தாக்கல் செய்ய உள்ள, 2014 - 15ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், மாத சம்பளதாரர்களுக்கு பல வரிச்சலுகைகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல், 'புதிய வரிக் கொள்கை பின்பற்றப்படுவதற்கான அறிவிப்புகளுடன், பழைய வரி விதிப்பு முறைகளுக்கு, பிரியாவிடையும் அளிக்கப்படும்; உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் அறிவிப்புகளும் இடம்பெறும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரபல சட்ட வல்லுனரான அருண் ஜெட்லி, சமர்ப்பிக்கும் முதல் மத்திய பட்ஜெட் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தி ...

வருமான வரி நோட்டீசால் சோனியா அலறல் : மத்திய அரசு பழிவாங்குவதாக புகார்

Posted:

புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனத்தின் சொத்துகளை அபகரித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதற்கு, ''நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, என்னையும், காங்., தலைவர்களையும் பழிவாங்கும் நோக்கத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது,'' என, சோனியா குற்றம் சாட்டிஉள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்ரமணியசாமி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் மற்றும் காங்., மூத்த தலைவர்கள் சிலருக்கு எதிராக, டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.'கோடிக்கணக்கில்...': ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™