Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காலமானார் திருக்குறள் நா. சண்முகனார்

Posted: 09 Jul 2014 01:05 PM PDT

உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலப் பொதுச் செயலர் திருக்குறள் நா. சண்முகனார் (84), திருச்சி கீழக்காசிப் பாளையத்திலுள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு: பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

Posted: 09 Jul 2014 01:02 PM PDT

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 18-இல் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 09 Jul 2014 01:02 PM PDT

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 18-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை.யில் இன்று பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 09 Jul 2014 01:01 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில், பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

12-ஆம் தேதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலை நிறுத்தம்: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

Posted: 09 Jul 2014 12:59 PM PDT

மருத்துவ மாணவர்களின் ஊக்கத்தொகை உயர்வு குறித்த பிரச்னைக்கு ஜூலை 12-ஆம் தேதிக்குள் முடிவு தெரியாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆகஸ்டில் போராட்டம்: ஜி. ராமகிருஷ்ணன்

Posted: 09 Jul 2014 12:58 PM PDT

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து மாநில அளவிலான போராட்டம் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

ரயில்வேயில் அன்னிய முதலீடு: அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Posted: 09 Jul 2014 12:55 PM PDT

ரயில்வே துறையில் அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தப்பட வேண்டும்

Posted: 09 Jul 2014 12:55 PM PDT

அரக்கோணத்தில் அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் அதிமுக உறுப்பினர் ஜி. ஹரி வலியுறுத்தினார்.

விவசாயத் துறையை பிரதமர், முதல்வர் ஏற்க வேண்டும்: கே.பி. ராமலிங்கம் "தமிழில்' வலியுறுத்தல்

Posted: 09 Jul 2014 12:53 PM PDT

விவசாயத் துறையை பிரதமரும், முதல்வரும் ஏற்று கவனிக்கும் நிலை நம் நாட்டில் உருவாக வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தினார்.

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் இராக்கிலிருந்து மதுரை வருகை

Posted: 09 Jul 2014 12:50 PM PDT

இராக்கிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 தமிழர்கள் விமானம் மூலம் புதன்கிழமை மதுரை வந்தடைந்தனர்.

திருச்சி அருகே கார்கள் மோதல்: 5 பேர் சாவு

Posted: 09 Jul 2014 12:50 PM PDT

திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூர் அருகே புதன்கிழமை அதிகாலை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

சுதந்திரப் போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை காலமானார்

Posted: 09 Jul 2014 12:47 PM PDT

மதுரையில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் போராடி சிறை சென்ற சுதந்திரப் போராட்டத் தியாகி நீலமேகம் பிள்ளை (93) கடந்த 8-ஆம் தேதி காலமானார்.

பொறியியல் மோகம் குறைந்ததேன்?

Posted: 09 Jul 2014 12:42 PM PDT

பொறியியல் கல்வி தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் சில செய்திகள் நம்முடைய மோசமான அடிப்படைக் கல்வி, அதன் ஆழமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பொருளாதாரக் கண்ணிவெடிகள்

Posted: 09 Jul 2014 12:42 PM PDT

பெரிய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை சரி செய்ய கடைசி உத்தியாக சில ஏமாற்று நகாசு வேலைகளை கணக்குத் தணிக்கையாளர்கள் செய்வார்கள் என்ற அவப் பெயர் உள்ளது.

முன்னுதாரணமான முடிவு!

Posted: 09 Jul 2014 12:41 PM PDT

இன்று நாடு தழுவிய அளவில் எல்லா அலுவலகங்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்னை- பணிக்கு மது அருந்தி விட்டு வரும் ஊழியர்கள்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா உறுதி

Posted: 09 Jul 2014 12:39 PM PDT

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிச்சயம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்

Posted: 09 Jul 2014 12:38 PM PDT

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கூடாது

Posted: 09 Jul 2014 12:37 PM PDT

சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைத்து அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழறிஞர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 09 Jul 2014 12:36 PM PDT

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர்களாக தமிழறிஞர்களையே நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும்: எச். ராஜா

Posted: 09 Jul 2014 12:35 PM PDT

நாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.

பேரவையில் எங்கள் குரல் கம்பீரமாக ஒலிக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted: 09 Jul 2014 12:34 PM PDT

சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று அக் கட்சியின் பேரவை குழுத் தலைவர் ஏ.சௌந்தரராஜன் தெரிவித்தார்.

"மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன்' வார்த்தைகளை நீக்குவது குறித்து தீவிர பரிசீலனை: தமிழக அரசு தகவல்

Posted: 09 Jul 2014 12:33 PM PDT

தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளின் பெயருடன் மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை நீக்குவது குறித்து தீவிர பரசீலனை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பி.இ. கலந்தாய்வு: 3 நாள்களில் 9 ஆயிரம் பேர் சேர்ந்தனர்

Posted: 09 Jul 2014 12:33 PM PDT

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வில் 3 நாள்களில் 9,170 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கை கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. விடுதி முகப்பு வாயில் திறப்பு

Posted: 09 Jul 2014 12:32 PM PDT

புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. விடுதி குடியிருப்பு வளாக முகப்பு வாயில் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சலவைக் கூடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொங்கல் இலவச வேட்டி-சேலை: ரூ.486.36 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

Posted: 09 Jul 2014 12:31 PM PDT

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.486.36 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக ரூ.240.55 கோடி நிதி விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2014 12:24 PM PDT

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கூட்டுறவு ஊழியர் சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரணியல் ரயில் நிலையம் அருகே இளைஞர் கல்லால் அடித்துக் கொலை?

Posted: 09 Jul 2014 12:24 PM PDT

இரணியல் ரயில் நிலையம் மணியன்குழி பாதை அருகே முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட காயத்துடன் கிடந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கூட்டுறவு சங்க ஊழியர் சாவு

Posted: 09 Jul 2014 12:23 PM PDT

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கூட்டுறவு சங்க ஊழியர் ரமேஷ் குமார் (45) புதன்கிழமை உயிரிழந்தார்.

பைக் மீது லாரி மோதல்: தம்பதி காயம்

Posted: 09 Jul 2014 12:23 PM PDT

களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனர்.

லீபுரம் ஊராட்சியில் நாளை மனுநீதி நாள் முகாம்

Posted: 09 Jul 2014 12:22 PM PDT

அகஸ்தீசுவரம் வட்டம், லீபுரம் ஊராட்சி பகுதிக்கு மட்டும் கல்லுவிளை காலனியில் சிறப்பு மனுநீதித் திட்ட இரண்டாம் கட்ட நிறைவு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறுகிறது.

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Posted: 09 Jul 2014 12:22 PM PDT

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அம்மா திட்டம் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வடசேரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 09 Jul 2014 12:22 PM PDT

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அகற்றினர்.

களியக்காவிளை புனித அந்தோணியார் ஆலய விழா நாளை தொடக்கம்

Posted: 09 Jul 2014 12:21 PM PDT

களியக்காவிளை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய பாதுகாவலர் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான குறைதீர் கூட்டம் தொடக்கம்

Posted: 09 Jul 2014 12:21 PM PDT

குமரி மாவட்டத்தில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கான குறைதீர் கூட்டத்தை புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார்.

திருவட்டாறு தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

Posted: 09 Jul 2014 12:21 PM PDT

திருவட்டாறு அருகே திங்கள்கிழமை தனியார் கல்லூரி பேருந்து மோதியதால் ஏற்பட்ட தொடர் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வந்த மினிடெம்போ ஓட்டுநர் ஜெஸ்டஸ் (39) புதன்கிழமை இறந்தார்.

களியக்காவிளையில் பலத்த மழை

Posted: 09 Jul 2014 12:21 PM PDT

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

Posted: 09 Jul 2014 12:20 PM PDT

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி முத்தையன்( 65) புதன்கிழமை உயிரிழந்தார்.

ஆடி அமாவாசை: ஜூலை 26 இல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Posted: 09 Jul 2014 12:20 PM PDT

குழித்துறை வாவுபலி தினம் மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு ஜூலை 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குடலிறக்க நோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை பாதுகாப்பானது

Posted: 09 Jul 2014 12:20 PM PDT

குடலிறக்க நோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை முறை முற்றிலும் பாதுகாப்பானது என இத்துறையின் நிபுணரான மருத்துவர் சிவகுமார் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

Posted: 09 Jul 2014 12:20 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

கணவர் மாயம்:7 மாதத்துக்குப் பின் மனைவி புகார்

Posted: 09 Jul 2014 12:19 PM PDT

மார்த்தாண்டம் அருகே கணவர் மாயமானதாக அவரது மனைவி 7 மாதத்துக்குப் பின் போலீஸில் புகார் செய்தார்.

நயினார்புரம் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 09 Jul 2014 12:19 PM PDT

உடன்குடி அருகே நயினார்புரம் ஸ்ரீசக்தி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இனாம்மணியாச்சி ஊராட்சியில் சார்-ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Jul 2014 12:19 PM PDT

இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து சார்- ஆட்சியர் விஜயகார்த்திகேயன் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.

திருச்செந்தூர் சப்பாணி மாட சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

Posted: 09 Jul 2014 12:18 PM PDT

திருச்செந்தூர் கோட்டை ஸ்ரீ சப்பாணி மாட சுவாமி கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

குழந்தைகள் பாதுகாப்புச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Jul 2014 12:18 PM PDT

தூத்துக்குடியில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 09 Jul 2014 12:18 PM PDT

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கால்பந்துப் போட்டி: காமராஜ் மெட்ரிக் பள்ளி சாதனை

Posted: 09 Jul 2014 12:17 PM PDT

கோவில்பட்டி நகரப் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியில், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

கந்தபுரம் ஆலயத்தில் 12இல் குருபௌர்ணமி விழா

Posted: 09 Jul 2014 12:17 PM PDT

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு ஸ்ரீசாய்ராம் ஆலயத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) குருபௌர்ணமி விழா நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு சலுகை

Posted: 09 Jul 2014 12:17 PM PDT

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு குறைதீர் கூட்டம்

Posted: 09 Jul 2014 12:17 PM PDT

தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமை வகித்தார்.

ஆளுநராக உள்ள என் மீது வழக்குத் தொடர முடியாது: ஷீலா தீட்சித் மனு

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தொடர்ந்த வழக்கில், "ஆளுநர் மீது வழக்குத் தொடர முடியாது' என்று தில்லி முன்னாள் முதல்வரும், கேரள ஆளுநருமான ஷீலா தீட்சித் தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுதாக்கல் செய்தார்.

தூத்துக்குடி கல்லூரியில் ஆன்லைனில் மாணவியர் பேரவைத் தேர்தல்

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவைத் தேர்தல் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

திருச்செந்தூர் குறுவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், விடுபட்டவர்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது.

கழுகுமலை அருகே குப்பைக் கிடங்கில் தீ

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

கழுகுமலை அருகே குப்பைக் கிடங்கில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கழுகுமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவியதையடுத்து கோவில்பட்டி

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி?

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

மக்களவையில் புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டு விற்றவர் கைது

Posted: 09 Jul 2014 12:16 PM PDT

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள் விற்றவரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

267 பேருக்கு பட்டா மாற்ற ஆணை

Posted: 09 Jul 2014 12:15 PM PDT

:கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 267 பேருக்கு பட்டா மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

சிற்றுந்து அதிக கட்டண வசூல் பிரச்னை: சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு

Posted: 09 Jul 2014 12:15 PM PDT

கோவில்பட்டி பகுதியில் இயங்கும் சிற்றுந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுகுறித்து சிற்றுந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மார்க்சிஸ்ட்

மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகை மாயம்

Posted: 09 Jul 2014 12:15 PM PDT

கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது.

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Posted: 09 Jul 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

விதிமுறை மீறல்: 2 மீன்பாடி வண்டிகள் பறிமுதல்

Posted: 09 Jul 2014 12:14 PM PDT

தூத்துக்குடியில் விதிமுறையை மீறி மோட்டார் பொருத்தி இயக்கப்பட்ட இரண்டு மீன்பாடி வண்டிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு அமல்

Posted: 09 Jul 2014 12:14 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அதிகாலை 5 மணி முதல் 12 ஆம் தேதி காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எட்டயபுரத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

Posted: 09 Jul 2014 12:14 PM PDT

எட்டயபுரம் பகுதி கடைகளில் இருந்த காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் அருகே 2 பேர் தற்கொலை

Posted: 09 Jul 2014 12:14 PM PDT

திருச்செந்தூர் அருகே இரு சம்பவத்தில் வியாபாரி உள்ளிட்ட 2 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர். அடைக்கலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (57). கோவையில் மளிகைக் கடை

ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2014 12:13 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மக்களவையில் மீண்டும் அமளி

Posted: 09 Jul 2014 12:13 PM PDT

மக்களவையில் புதன்கிழமை மீண்டும் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், "மக்களவைக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் எச்சரித்தார்.

நீரில் மூழ்கி ஒருவர் சாவு

Posted: 09 Jul 2014 12:13 PM PDT

விளாத்திகுளம் அருகே வன்னிப்பட்டி காட்டாறு நீரோடையில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் நீரில் மூழ்கி இறந்தார்.

2 ஆண்டுகளில் 4 மடங்கான வாராக் கடன்கள்

Posted: 09 Jul 2014 12:13 PM PDT

வங்கிகளில் கடந்த இரு ஆண்டுகளில் வாராக் கடன்கள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.43 லட்சம் நஷ்ட ஈடு வழங்காததால் மின்வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி

Posted: 09 Jul 2014 12:13 PM PDT

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.43 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை அலுவலக பொருள்களை, நீதிமன்ற ஊழியர்கள்

மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 09 Jul 2014 12:12 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நா ள் முகாம்களில் பயனாளிகளுக்கு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தண்டராம்பட்டு பகுதியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

Posted: 09 Jul 2014 12:12 PM PDT

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட ராயண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா புதன்கிழமை ஆய்

ஜமுனாமரத்தூரில் செம்மரக் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு

Posted: 09 Jul 2014 12:12 PM PDT

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு செம்மரக்கடத்தல் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர டிஎஸ்பி கமலாகர் ரெட்டி பேசும்போது ஆந்திர மாநில வனப்பகுதிகளில் உள்ள செம்மரத்தை யாராவது வெட்டினால் கண்டதும் சுட உத்தரவு

பெண் கழுத்தை இறுக்கி கொலை; சென்னை கார் ஓட்டுநர் சரண்

Posted: 09 Jul 2014 12:12 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம்,பெரணமல்லூர் அருகே பெண்ணை கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்த வழக்கில் சென்னை பேராசிரியரின் கார் ஓட்டுநரான பெண்ணின் அத்தை மகன் புதன்கிழமை சரண் அடைந்தார்.

அமெரிக்க அமைச்சர் இன்று இந்தியா வருகை

Posted: 09 Jul 2014 12:11 PM PDT

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வில்லியம் ஜே பர்ன்ஸ் வியாழக்கிழமை (ஜூலை 10) இந்தியா வருகிறார்.

தம்பதி மீது தாக்குதல்: விவசாயி கைது

Posted: 09 Jul 2014 12:11 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (30). இவர் கடந்த 6-ம் தேதி தனது நிலத்தின் வரப்பை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்

ஓபிசி சான்றிதழில் மாற்றம்

Posted: 09 Jul 2014 12:11 PM PDT

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி), இடஒதுக்கீடு சலுகையை எளிதில் பெறும் வகையில், அவர்களது சாதிச் சான்றிதழின் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

Posted: 09 Jul 2014 12:11 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது .

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Jul 2014 12:11 PM PDT

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கூரை வீட்டில் தீ

Posted: 09 Jul 2014 12:10 PM PDT

செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாட்டாளி மகன் தேவேந்திரன் (45). இவருக்கு சொந்தமான வீடு திருவண்ணாமலை-செங்கம் செல்லும் சாலையில் தோக்கவாடி பகுதியில் உள்ளது.

பைக் சாகசப் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்

Posted: 09 Jul 2014 12:10 PM PDT

திருவண்ணாமலை அருகே ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பைக் சாகசப் பயிற்சியில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

பதிவு செய்யாத குழந்தைகள் காப்பகங்கள் தடை செய்யப்படும்

Posted: 09 Jul 2014 12:10 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத குழந்தைகள் காப்பகங்கள் இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத காப்பகங்கள் தடை செய்யப்படும் என்று

ஆந்திர ஆளுநரிடமும் சிபிஐ விசாரணை

Posted: 09 Jul 2014 12:10 PM PDT

ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பாக, முன்னாள் உளவுத்துறை இயக்குநரும், ஆந்திர மாநில தற்போதைய ஆளுநருமான இ.எஸ்.எல். நரசிம்மனிடம் புதன்கிழமையன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரது சாட்சியத்தைப் பதிவு செய்தனர்.

காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

Posted: 09 Jul 2014 12:10 PM PDT

ஆரணி நகர, வட்ட ஆய்வாளர் அலுவலக காவல் நிலையத்தில் டிஐஜி தமிழ்சந்திரன் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.

பள்ளியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்

Posted: 09 Jul 2014 12:09 PM PDT

ஆரணி கார்னேஷன் தொடக்கப் பள்ளியில் சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்த வகை கண்டறிதல் முகாம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் கண்கள் தானம்

Posted: 09 Jul 2014 12:09 PM PDT

செய்யாறில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் கண்கள் அண்மையில் தானம் செய்யப்பட்டன.

திருவத்திபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் பானை உடைப்பு போராட்டம்; உண்ணாவிரதம்

Posted: 09 Jul 2014 12:09 PM PDT

திருவத்திபுரம் நகராட்சியில் குடிநீரை சீராக வழங்கக் கோரி கவுன்சிலர்கள் பானை உடைப்பு போராட்டம் நடத்தினர். தேமுதிக கவுன்சிலர் சாலை வசதி கோரி உண்ணாவிரதம் இருந்தார்.

சத்துணவில் பல்லி: மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 09 Jul 2014 12:09 PM PDT

ஆரணியை அடுத்த அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி விழுந்து இறந்ததால் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு ம

கலைக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

Posted: 09 Jul 2014 12:09 PM PDT

செய்யாறை அடுத்த அனக்காவூரில் உள்ள விஸ்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 சாவு

Posted: 09 Jul 2014 12:08 PM PDT

 திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூர் அருகே புதன்கிழமை அதிகாலை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

சலுகை அறிவித்தும் காஷ்மீர் திரும்பியது ஒரே பண்டிட் குடும்பம்தான்

Posted: 09 Jul 2014 12:08 PM PDT

புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் மறு குடியமர்த்தலுக்காக மத்திய அரசு அறிவித்த சலுகைகளைப் பயன்படுத்தி ஒரே ஒரு பண்டிட் குடும்பம்தான் காஷ்மீர் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாகர்கோவில்

Posted: 09 Jul 2014 12:08 PM PDT

மகாத்மா கொலை: ஹிந்து அமைப்புகள் தொடர்பான கோப்புகளை அழித்துவிட்டது மத்திய அரசு

Posted: 09 Jul 2014 12:07 PM PDT

மகாத்மா காந்தியின் கொலையில் சில ஹிந்து அமைப்புகளின் தொடர்பு குறித்த தகவல்கள் அடங்கிய கோப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டதாக மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது.

அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

Posted: 09 Jul 2014 12:06 PM PDT

நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவரானார் அமித் ஷா

Posted: 09 Jul 2014 12:06 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித் ஷா (50) புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

நீச்சல் உடையில் அமைச்சரின் படம்: ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர் மீது வழக்கு

Posted: 09 Jul 2014 12:04 PM PDT

கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதீன் தாவாலிகர், பெண்கள் அணியும் நீச்சல் உடையில் இருப்பது போன்று கணினியில் வரையப்பட்ட (மார்ஃபிங்) உருவப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் உலகப் போர் நூற்றாண்டு: ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

Posted: 09 Jul 2014 12:02 PM PDT

முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை

Posted: 09 Jul 2014 12:01 PM PDT

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு, பிரிட்டன் நீதித்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சைலேஷ் வாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

வன்முறையை கையாண்டால் பொருளாதாரத் தடை விதிப்போம்

Posted: 09 Jul 2014 12:00 PM PDT

""ஆப்கனில் அதிபர் பதவிக்கான தேர்தலில் சர்ச்சை நிலவுவதால், இந்த விஷயத்தில் இரு தரப்பு வேட்பாளர்களும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.

டிசம்பருக்குள் பணவீக்கம் குறையும்

Posted: 09 Jul 2014 11:59 AM PDT

இந்த ஆண்டு டிசம்பருக்குள் நாட்டின் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன்மூலம் வங்கிக் கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் 2013-14ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை'

Posted: 09 Jul 2014 11:59 AM PDT

ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடுகளையும் தனியார் பங்கேற்பையும் அனுமதிப்பதை உரிய கவனத்துடன் அணுக வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தாக்கல் செய்த 2013-14-ஆம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™