Tamil News | Online Tamil News |
- இந்தியர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை'
- தொடரும் அகால மரணங்கள்: கருணாநிதி
- போராட்டங்களுக்கு நிதியுதவி: அமைச்சர் 'திடுக்'
- மின்னணு தேர்தல் முறை அமலாக்கம்: அப்துல் கலாம் காட்டுகிறார் புதுவழி
- லோக்சபாவில் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ரகளை : ரயில்வே பட்ஜெட்டுக்கு எதிராக கூச்சல் குழப்பம்
- ரயில்வே பட்ஜெட்; கடந்த 10 ஆண்டுகளில் மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்
- தொலைநோக்குடன் ரயில்வே பட்ஜெட் : ஜெ., வரவேற்பு
- பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்: ரயில் பயணிகள் அதிர்ச்சி
- ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்
- ரயில் பட்ஜெட்டில் தனியாருக்கு ஏகப்பட்டது வாய்ப்பு: அதிவேக ரயில்களுக்கு அன்னிய முதலீடு வரவேற்பு:சுகாதாரம், பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவுடா கவனம்
- குமாரசாமி லஞ்ச விவகாரம்: அறிக்கை கேட்கிறது உள்துறை
- பா.ஜ., தேசிய தலைவராக அமித் ஷா இன்று தேர்வு?
| இந்தியர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை' Posted: புதுடில்லி : ''இந்திய குடிமக்கள் அனைவருக்கும், படிப்படியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:இந்திய குடிமக்கள் யார்; குடிமக்கள் அல்லாதவர்கள் யார் என்பதை, நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம். உண்மையான இந்தியர்களை அடையாளம் காண, நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி, இது தொடர்பாக, சமீபத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு அலுவலக அதிகாரிகள் மற்றும் இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஆகியவற்றுடன், ஆலோசனை நடத்தி உள்ளார்.மக்கள் தொகை ... |
| தொடரும் அகால மரணங்கள்: கருணாநிதி Posted: சென்னை : ''அ.தி.மு.க., ஆட்சியில், அகால மரணங்கள் தொடருகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன. உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர். ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில், 54 பேர் பலியாகினர். கும்ப கோணம் பள்ளியில் தீப்பிடித்து, 94 குழந்தைகள் கருகினர்.எம்.ஜி.ஆர்., நகரில் வெள்ள நிவராண ... |
| போராட்டங்களுக்கு நிதியுதவி: அமைச்சர் 'திடுக்' Posted: புதுடில்லி : ''சென்னையில் செயல்படும், கிரீன் பீஸ் இந்தியா உட்பட, அன்னிய நாடுகளின் நிதியுதவி பெற்ற, சில அரசு சார்பற்ற அமைப்புகள், அணுமின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதியுதவியும் அளித்துள்ளன,'' என்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.கூடங்குளம்:லோக்சபாவில், எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:கிரின் பீஸ் இந்தியா உட்பட, பல அரசு சார்பற்ற அமைப்புகள், அன்னிய நாடுகளிடம் இருந்து, நிதியுதவி பெற்று உள்ளன. இந்த ... |
| மின்னணு தேர்தல் முறை அமலாக்கம்: அப்துல் கலாம் காட்டுகிறார் புதுவழி Posted: புதுடில்லி: 'தேர்தலின் போது, விரும்பும் வேட்பாளருக்கு, மொபைல்போன் மூலம், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மின்னணு தேர்தல் முறையால், ஒளிவுமறைவற்ற தன்மை உருவாகும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.புத்தகத்தில் தகவல்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'மாற்றத்திற்கான ஒரு அறிக்கை' என்ற தலைப்பில், புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ளதாவது:தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பாக, தற்போது செயல்படுகிறது. அதுபோல், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் ... |
| லோக்சபாவில் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ரகளை : ரயில்வே பட்ஜெட்டுக்கு எதிராக கூச்சல் குழப்பம் Posted: புதுடில்லி : லோக்சபாவில் நேற்று, திரிணமுல் காங்., கட்சி - எம்.பி.,க்கள் ரகளை, எல்லையை தாண்டி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை கண்டித்து, அவர்கள் கோஷமிட்டதால், சபையில் பரபரப்பு நிலவியது. அவர்களுடன் பா.ஜ., - எம்.பி.,க்கள் மோதலில் ஈடுபட்டதால், சபை ஒத்திவைக்கப்பட்டது.மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., கட்சிக்கு, 34 எம்.பி.,க்கள், லோக்சபாவில் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நேற்று, தன் முதல் ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்தது; ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.அவரின் ... |
| ரயில்வே பட்ஜெட்; கடந்த 10 ஆண்டுகளில் மக்களை ஏமாற்றிய காங்கிரஸ் Posted: புதுடில்லி: முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பத்தாண்டு காலம் ஆட்சி செய்தது. இந்த காலகட்டத்தில் 99 ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதில் ஒன்று மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். காங்கிரசின் இந்த செயல் மக்களுக்கு செய்த துரோகம் எனவும் மக்களை ஏமாற்றும் செயல் என வல்லுவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர் தெரிவித்ததாவது: 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. காங்., மத்திய அரசின் செயல்படாத தன்மையால் திட்டங்கள் அனைத்தும் முடங்கின. ... |
| தொலைநோக்குடன் ரயில்வே பட்ஜெட் : ஜெ., வரவேற்பு Posted: சென்னை : ''ரயில்வே பட்ஜெட் தொலைநோக்கு உடையதாக உள்ளது,'' என முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.ரயில்வே பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திச் சென்றது. இந்த இக்கட்டான நிலையில், புதிய அரசு சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.வைர நாற்கர அதிவிரைவு ரயில் இணைப்புத்திட்டம், நாட்டின் போக்குவரத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். அதிவிரைவு புல்லட் ரயில் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை ... |
| பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்: ரயில் பயணிகள் அதிர்ச்சி Posted: ரயில்வே பட்ஜெட்டில், தென் மாவட்டங்களுக்கான எந்தவொரு வளர்ச்சித் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகாதது, ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில், 58 புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, ஜெய்நகர் - மும்பை, காமாக்கியா - பெங்களூரு, பெங்களூரு - மங்களூரு, பெங்களூரு - ஷிமோகா, பிடார் - மும்பை, டாட்டாநகர் - பையப்பனஹல்லி, தார்வாத் - தந்தேலி, யஷ்வந்த்பூர் - தும்கூர், பெங்களூரு - ராமநகரம், யஷ்வந்த்பூர் - ஓசூர், பெங்களூரு - நீல்மங்களா என, 11 ரயில்கள் ... |
| Posted: ரயில்வே பட்ஜெட்டில், 5 வெகு ஜன ரயில்களும், 5 பிரீமியம் ரயில்களும், 6 ஏ.சி., ரயில்களும், 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, எட்டு பயணிகள் ரயில்களும், 7 புறநகர் ரயில்களும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும், 11 ரயில்களும், மேலும் நீட்டிக்கப்படுமென, அறிவிக்கப்பட்டுஉள்ளது. புதிதாக, 18 வழித்தடங்களில், ரயில் போக்கு வரத்து ஏற்படுத்த, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இரட்டை, மூன்றாவது, நான்காவது ரயில் பாதைகள் அமைப்பது குறித்து, 10 வழித்தடங்களில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.*இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ... |
| Posted: புதுடில்லி : ரயில்வே துறையின் மோசமான நிதி நிலையை சீர் செய்தல், தனியாருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல், நிலுவையில் உள்ள திட்டங்களை முடித்தல், விபத்துகளை தடுப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளுதல், கணினிமயமான சேவைகளை மேம்படுத்துதல், ரயில் நிலையங்களிலும், வண்டிகளிலும் சுத்தத்தை பேணுதல் ஆகியவை, ரயில்வே நிதி நிலை அறிக்கையின் மைய கருத்துக்களாக அமைந்தன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், முதல் ரயில்வே நிதி நிலை அறிக்கையை, ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா, பார்லிமென்டில், நேற்று தாக்கல் செய்தார். ஆடம்பரங்களை தவிர்த்து ... |
| குமாரசாமி லஞ்ச விவகாரம்: அறிக்கை கேட்கிறது உள்துறை Posted: பெங்களூரு:மத சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, தன் கட்சிக்காரரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, கர்நாடகா மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா முன்னாள் முதல்வரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான, குமாரசாமி, தன் கட்சிக்காரருக்கு, எம்.எல்.சி., சீட் கொடுப்பதற்கு, 40 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, 'சிடி' வெளியிடப்பட்டது. இதை, குமாரசாமியே ஒப்புக்கொண்டார்.இந்த விவகாரம், கர்நாடகாவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'குமாரசாமியின் இந்த நடவடிக்கை, ஜனநாயகத்தையே விலை ... |
| பா.ஜ., தேசிய தலைவராக அமித் ஷா இன்று தேர்வு? Posted: புதுடில்லி:இன்று நடக்கவுள்ள பா.ஜ., பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக, அமித் ஷா தேர்வு செய்யப்படவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ., தேசிய தலைவரான ராஜ்நாத் சிங், தற்போது உள்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இதனால், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில், கட்சியின் மூத்த தலைவர்கள், கடந்த சில வாரங்களாக, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.பா.ஜ., பொதுச் செயலர் அமித் ஷா மற்றும் ஓம்பிரகாஷ் மாத்துார், ஜே.பி.நந்தா ஆகியோரில் யாராவது ஒருவர், தலைவராக நியமிக்கப்படலாம் என, தகவல் வெளியானது.ஆனாலும், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 09,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |