ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !
- சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை
- தொடரும் அகால மரணங்கள்: கருணாநிதி
- உலகச் செய்திகள்!
- ஈகரை தளங்கள் : தடைகள் ஏதுமுள்ளதா ?
- செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு
- ஈகரையின் வெற்றி
- எமது அறிமுகம்
- சீனாவில் பிரபலமாகும் மனித ரத்த பானம்
- இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்!
- இல்லாது இரு
- செ செ வின் ரோஜா பூ
- வெரிகோஸ் வெயின் - varicose vein
- விடவே விடாது-இந்திரா சௌந்தரராஜன் நாவல் .
- நீ வருவாய் என-இந்திரா சௌந்தரராஜன் நாவல் .
- இதைப் படிச்சிட்டு பக்கத்துல யாரையும் கடிச்சு வச்சா நான் பொறுப்பில்லை! கடிஜோக்
- ஜுரியன் கோவில் ஜுனியம் - தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ்.
- செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும்.
- நாம் தான் கடைசி தலைமுறை!
- போரடிக்காமல் இருக்க சில வழிகள்!
- சமூக தள, மின் அஞ்சல் கணக்குகளை மூடிடும் வழிகள்
- குமாரசாமி: நேர்மையான ஊழல்வாதி?
- ஒபாமா
- பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை
- பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன்
- அளவெட்டி மைந்தன் தயாளனின் தந்தையர் தின பாடல்.....
- ரயில்வே பட்ஜெட் 2014
- கள்ளுண்ணும் குருவியின் காம ரசம்.
- ரசித்தவை!
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு
- ரஷ்ய விமானிகளின் சாதுரியத்தால் பெரும் விமான விபத்து தவிர்ப்பு!
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- கிழங்கு வகை சமையல்கள்!
- இரும்புச்சத்து இல்லாமல் போனால்...
- ஹீமோபிலியா - Hemophilia (heem-o-FILL-ee-ah)
- நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு
- ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
| மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் ! Posted: 08 Jul 2014 03:19 PM PDT மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கைப்படி, இவ்வருட ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 பேர் டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இதே காலக்கட்டத்தில் மொத்தம் 31,660 டிங்கி சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், இவ்வாண்டு 12,858 டிங்கி சம்பவங்கள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்பதை இப்புள்ளி விபரம் காட்டுகின்றது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பை கட்டுப்படுத்த ... |
| சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை Posted: 08 Jul 2014 03:08 PM PDT சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரின் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நோயாளிகளுக்கு நரம்பு வழியாக செலுத்தப்படும் ஐ.வி. திரவத்தை சோதித்துப் பார்த்த சில மருத்துவர்கள் அதில் பூஞ்சை படிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். சத்திஸ்கர் மருத்துவ சேவைக்கழகம் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 2.5 லட்சம் பாட்டில்கள் இதுபோல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன ... |
| தொடரும் அகால மரணங்கள்: கருணாநிதி Posted: 08 Jul 2014 03:07 PM PDT சென்னை : ''அ.தி.மு.க., ஆட்சியில், அகால மரணங்கள் தொடருகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன. உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர். ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில், 54 பேர் பலியாகினர். கும்ப கோணம் பள்ளியில் ... |
| Posted: 08 Jul 2014 03:05 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| ஈகரை தளங்கள் : தடைகள் ஏதுமுள்ளதா ? Posted: 08 Jul 2014 03:04 PM PDT ஈகரை தளங்கள் - ஈ-தமிழ் நெட்வொர்க் - ஈகரை செய்திக் களஞ்சியம் - ஈகரை நூலகம் - உறுப்பினர் புகைப்படம் தனிமடல் அனுப்ப முடியவில்லை? ஆகிய இணையங்களுக்குள் நுழைய முடிவதில்லை. தடைகள் ஏதுமுள்ளதா ? |
| செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Posted: 08 Jul 2014 01:40 PM PDT செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வரவேண்டும் என்ற தனது கனவை அப்துல் கலாம் வெளியிட்டுள்ளார். அப்துல் கலாம் புத்தகம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆராய்ச்சி செய்து, அப்துல் கலாம் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார். 'புதிய சுதந்திரமான லோக்பால் சட்டம் (தற்போதைய வடிவில் அல்ல) வர வேண்டும், அது, ... |
| Posted: 08 Jul 2014 01:21 PM PDT அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்.. இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி, ஹலோ, செந்தில் அண்ணாவா? ஆம். வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன், சொல்லுங்க மேடம். ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது. அப்படியா, சந்தோசம் மேடம். என் ... |
| Posted: 08 Jul 2014 12:32 PM PDT பெயர்:இரா.மூர்த்தி சொந்த ஊர்:ஈரோடு ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தேடுதல் பொழுதுபோக்கு:இளையராஜா பாடல்கள் கேட்டல்/பார்தல் தொழில்:மார்கெட்டிங் மேலும் என்னைப் பற்றி:தமிழ்மீதும்,தமிழிழம் மீதும் பற்றுள்ள தமிழன். |
| சீனாவில் பிரபலமாகும் மனித ரத்த பானம் Posted: 08 Jul 2014 12:30 PM PDT சீன உணவு. உலகில் மிகச் சிறந்த உணவாக சீன உணவையே போற்றப்படுகிறது. இந்த உணவைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என கூறப்படுகிறது. வாராஸ்யமான உணவு வகைகளை சமைப்பதில் சீனர்கள் அதி நேர்த்தியானர்வகள் ஆனால் சில சமயம் அவர்கள் உண வகைகள ந்மக்கு பயத்தையும் , வாந்தியையும் கொடுக்கும். ஆசியாவில் குறிப்பாக சீனாவில் புது புது வகையான உணவு பொருட்களும் குளிர்பானங்களும் அறிமுகமாகும் தற்போது மனித ரத்த பானம் அறிமுகமாகி உள்ளது. சீன நகர வணிக சந்தைகளில் தற்போது புதிதாக ரத்த பான பைகள் நிரப்பி விற்கபடுகின்றன.வித்தியாசமான ... |
| இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்! Posted: 08 Jul 2014 12:29 PM PDT ''உ ணவு சாப்பிடுவதற்கான கட்டுப்பாடுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று, உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆயுர்வேத கோணம். இன்னொன்று, நம் கலாசாரம் சார்ந்தது. வயிற்றில் இருக்கும் உணவுப் பொருட்களை ஜீரணிக்க 'ஜாடராக்கினி' என்று சொல்லப்படும் உஷ்ணம் இருக்கிறது. சூரியனின் கதிர்கள் இந்த ஜாடராக்கினிக்கு உதவி செய்யும். சூரியன் அஸ்தமித்த பிறகு இந்த ஜாடராக்கினி பலவீனமாகிவிடுகிறது என்பதால், அந்த நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவைத்தான் சாப்பிட வேண்டும். 'இரவில் படுத்துவிடுகிறோம்; கர்மேந்திரியங் களுக்கோ, ஞானேந்திரியங்களுக்கோ ... |
| Posted: 08 Jul 2014 10:20 AM PDT இருக்கும் போது தெரிவதில்லை எதுவும் இல்லாத போது உணர்கிறோம் இருப்பின் மகத்துவம் எதிர்படும் நபர்கள் கேட்கிறார்கள் காணத நபரின் நலனும் செயலும் இல்லாதது குறித்துதான் இருப்போர் எண்ணம் இருந்துகொண்டிருக்கும் இருப்பதாய் பாவித்து பாவித்து இருப்பதாய் இருந்து கொண்டிருப்போம் இல்லாத போதும் பார்க்கும் முகங்கள் கேட்கும் குரல்கள் செய்யும் வேலை இப்படியாய் எல்லாவற்றிலும் காணக் கிடைக்கிறார்கள் இல்லாதிருப்பவர்கள் இருப்பவர்கள் இல்லாதவர்களாய் ஆகிப்போதும் உண்டு இருப்பில் கிடைக்கும் ... |
| Posted: 08 Jul 2014 09:49 AM PDT ![]() |
| வெரிகோஸ் வெயின் - varicose vein Posted: 08 Jul 2014 09:30 AM PDT ரத்தக் குழாய் விரிவடைந்து, பெரிதாவதைத்தான் 'வெரிகோசிஸ் வெயின்' என்கிறோம். உடலில் உள்ள எந்த ஒரு ரத்தக்குழாயும் விரிவடையலாம். ஆனால், பாதம் மற்றும் காலில் உள்ள ரத்த நாளங்கள்தான் பெரும்பாலும் விரிவடைகின்றன. காலில் நரம்புகள் சுருண்டு, பாம்புபோல் வளைந்தும் நெளிந்தும் வேர் போல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். இதன் அறிகுறிகள்... எந்தவித வலியும் இருக்காது. காலில் தோலுக்கு அடியில் உள்ள ரத்தக் குழாய் பர்பிள் அல்லது நீல நிறத்தில் தெரியும். காலில் எடை அதிகரித்த உணர்வு ஏற்படும். ... |
| விடவே விடாது-இந்திரா சௌந்தரராஜன் நாவல் . Posted: 08 Jul 2014 09:26 AM PDT |
| நீ வருவாய் என-இந்திரா சௌந்தரராஜன் நாவல் . Posted: 08 Jul 2014 09:25 AM PDT |
| இதைப் படிச்சிட்டு பக்கத்துல யாரையும் கடிச்சு வச்சா நான் பொறுப்பில்லை! கடிஜோக் Posted: 08 Jul 2014 09:13 AM PDT பானு: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்? மானிக்: 49 பானு: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே? மானிக்: பழைய ஜோக்; கதவ திறந்து. பானு: அப்ப மானை? மானிக்: யானைய எடுத்துட்டுதான். பானு: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு மிருகம் மட்டும் போகல, எது? மானிக்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு. பானு: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி ஈஸியா கடந்தாள்? மானிக்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே. பானு: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கையில ... |
| ஜுரியன் கோவில் ஜுனியம் - தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ். Posted: 08 Jul 2014 08:43 AM PDT ஜுரியன் கோவில் ஜுனியம் காமிக்ஸ் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ்- ரிப்போர்ட்டர் ஜிலேபி அட்வேன்ட்சர். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/a7ep8i8u5oez19e/Jilepi+-+Juriyan+kovil+juniyam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Posted: 08 Jul 2014 08:18 AM PDT ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ ... |
| Posted: 08 Jul 2014 06:56 AM PDT வலிக்கும் உண்மை.. 1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் ... |
| போரடிக்காமல் இருக்க சில வழிகள்! Posted: 08 Jul 2014 06:53 AM PDT இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை "போரடிக்கிறது" என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று அவர்கள் ... |
| சமூக தள, மின் அஞ்சல் கணக்குகளை மூடிடும் வழிகள் Posted: 08 Jul 2014 06:51 AM PDT உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே ... |
| குமாரசாமி: நேர்மையான ஊழல்வாதி? Posted: 08 Jul 2014 06:28 AM PDT கர்நாடகத்தின் சட்ட மேலவைக்கு மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட விரும்பிய விஜூ கவுடா பாட்டீலின் ஆதரவாளர்களிடம் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி ரூ. 40 கோடி கேட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. குறுந்தகட்டில் பதிவுசெய்யப்பட்ட அவரது உரையாடலை, கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பி, டி.ஆர்.பி-ஐ அதிகரித் துக்கொண்டன. "இது கண்டிக்கத் தக்க செயல். அரசியல், தேர்தல் போன்ற ஜனநாயக முறைகளெல்லாம் அசிங்கப்பட்டுவிட்டன…" என்றெல்லாம் பிற கட்சிகளில் இருந்து கண்டனக் ... |
| Posted: 08 Jul 2014 06:21 AM PDT ![]() |
| பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை Posted: 08 Jul 2014 06:14 AM PDT பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை. புதன்கிழமை அதிகாலை ... |
| பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன் Posted: 08 Jul 2014 06:09 AM PDT பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணி கேப்டனும், சிறந்த பின்கள வீரருமான தியாகோ சில்வா இன்றைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட முடியாது. கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ... |
| அளவெட்டி மைந்தன் தயாளனின் தந்தையர் தின பாடல்..... Posted: 08 Jul 2014 06:01 AM PDT |
| Posted: 08 Jul 2014 06:00 AM PDT நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள்: தமிழகம்: மேல்மருவத்தூர், வேளாங்கன்னி போன்ற புனித் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஷாலிமார் - சென்னை பிரீமியம் ஏ.சி. எக்ஸ்பிரஸ், காமாக்யா - சென்னை பிரீமியம் எக்ஸ்பிரஸ், மும்பை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்படும். புதிய ரயில்கள்: 5 ஜன்சதாரண் ... |
| கள்ளுண்ணும் குருவியின் காம ரசம். Posted: 08 Jul 2014 05:56 AM PDT ரோஜாவே.. உன் இதழோரம்.. வழிவது.. தேனா..?! இல்லை... எனைக் கடைக்கண் கொண்டு கண்டதால்.. அரும்பி நிற்கும் வியர்வையா..?! தேனோ.. வியர்வையோ வழித்தெடுக்க.. குருவி இவனுக்கு அனுமதி வேண்டும்.!! முள்ளிட்ட ரோஜாவே பதில் சொல்லு..!!! ஒருதலையாய் வீணே ஆசை வைத்து இதயம் கிழிந்து நிற்க இது முட்டாள் குருவியல்ல...!! |
| Posted: 08 Jul 2014 05:55 AM PDT ![]() |
| Posted: 08 Jul 2014 05:53 AM PDT மகிழும் தவளைகள்….!! * விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு இரவில் ஒளி சிந்தி மின்மினிகள் * இருளில் எவரை வேவு பார்க்கின்றன இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள். * காதல் கிளிகளின் கூடுகளை எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள். * இரவுமில்லை பகலுமில்லை நீரில் வாழும் மீன்களுக்கு… * மழை நின்றபின் இரவெல்லாம் கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள். * |
| உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Posted: 08 Jul 2014 05:45 AM PDT உத்தரபிதேச மாநிலம் படான் மாவட்டம் சிங்காவுலியில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமிகள் அங்குள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் சிறுமிகளை கேலி செய்துள்ளனர். அவர்களின் பேச்சுக்கு சிறுமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மேலும், நான்கு வாலிபர்களுடன் சேர்ந்து சிறுமிகளை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரன் ... |
| ரஷ்ய விமானிகளின் சாதுரியத்தால் பெரும் விமான விபத்து தவிர்ப்பு! Posted: 08 Jul 2014 05:10 AM PDT ரஷ்யா, ஜூலை 8 – கடந்த சனிகிழமை ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, யூடீஏர் விமான நிறுவனத்தின் போயிங் 767-300 ரக விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பரட் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக ஏய்ரோலினா அர்ஜெண்டினா நிறுவனத்தின் ஏல்ர்பஸ் ஏ 340-300 ரக விமானம் ஒன்று ஒடுபாதை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதை ரஷ்ய போயிங் 767-300 ரக விமானிகள் கண்டுகொண்டனர். இருப்பினும், ரஷ்யா விமானிகள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்கையில், மேலும் அதிர்ச்சியாக ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் ஏர்பஸ் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 08 Jul 2014 05:02 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 08 Jul 2014 04:56 AM PDT உருளைக்கிழங்கு அல்வா தேவையானவை: உருளைக்கிழங்கு பெரியதாக - 2, சர்க்கரை - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ் - 5 சொட்டு. செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, கட்டி இல்லாமல் கைகளால் பிசையவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொண்டு, கம்பிப்பாகாக காய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய்யை சேர்த்து கிளறி, கடைசியில் சிறிது ... |
| இரும்புச்சத்து இல்லாமல் போனால்... Posted: 08 Jul 2014 03:38 AM PDT சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனம்! உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது. 'நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும்தான் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகம் பாதிக்கிறது. போதிய சத்துள்ள ... |
| ஹீமோபிலியா - Hemophilia (heem-o-FILL-ee-ah) Posted: 08 Jul 2014 02:53 AM PDT காயமோ விபத்தோ ஏற்பட்டு, ரத்தம் வெளியேறத் தொடங்கினால், அது சிறிது நேரத்தில் உறையாமல், தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதுதான் ஹீமோபிலியா. இந்த நோய் மரபணுக்கள் வழியாக வரக்கூடிய பரம்பரை நோய். 'ரத்தக்கசிவு ஏற்படும்போது, முதலில் ரத்தக் குழாய்களில் உள்ள தசைகள் ரத்தக் குழாய்களைச் சிறிதாக்கி, வெளியேறும் ரத்தத்தின் அளவைக் குறைக்கிறது. உடனே ரத்தத்தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அங்கு அடைப்பை ஏற்படுத்துகிறது. கடைசியாக ஃபைபிரின் உறைதல் ஏற்பட்டு, ரத்தக் கசிவை நிறுத்துகிறது. ஹீமோபிலியா உள்ளவர்களுக்குப் ... |
| நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு Posted: 08 Jul 2014 12:46 AM PDT நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன். இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள். அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற பல துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் ... |
| ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! Posted: 07 Jul 2014 11:35 PM PDT நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம். ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு ஒரு சிறு அன்பளிப்பையாவது கொடுத்துச் சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தத் திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


