Tamil News | Online Tamil News |
- 'எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற காங்கிரசுக்கு உரிமை உள்ளது'
- வழக்குகளின் தேக்கத்திற்கு காரணம் என்ன? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்
- நிரா ராடியாவை என் வீட்டில் சந்தித்தேன் : கோர்ட்டில் ஒப்புக்கொண்டார் ராஜா
- 'ஊழல் வழக்குகளில் சிக்கிய வி.ஐ.பி.,க்கள்'
- குற்றாலம் பங்களாவில் சசிகலா கணவர் நடராஜன் கைது; புழல் சிறையில் அடைப்பு
- இப்போதாவது விழிக்குமா அரசு நிர்வாகம்? கட்டுமான விதிமீறலே சுற்றுசுவர் இடிந்த விபத்துக்கு காரணம்
- தே.மு.தி.க.,வை யாராலும் அழிக்க முடியாது: கட்சியினரை உற்சாகமூட்டிய விஜயகாந்த்
- பேரணியில் பலம் காட்ட இன்று ஆலோசனை: 25 ஆயிரம் பேர் பங்கேற்க கருணாநிதி உத்தரவு
- மத்திய பட்ஜெட்: அருண் ஜெட்லியும் 6 சவால்களும்: 'ஆடு புலி ஆட்டம்' ஆரம்பம்
- வறுமைக்கோடு வரையறை சர்ச்சை: கட்சிகள் கடும் எதிர்ப்பு
- ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே லோக்சபா ஒத்திவைப்பு: விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி
- ரயில்வே நவீனமாக தனியார் முதலீட்டிற்கு பச்சைக்கொடி?இன்று பட்ஜெட்டில் வருகிறது புது திட்டங்கள்
| 'எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற காங்கிரசுக்கு உரிமை உள்ளது' Posted: புதுடில்லி: ''எதிர்க்கட்சிகளில் தனிப்பெரும் கட்சி காங்கிரஸ் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற உரிமை உள்ளது,'' என, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா கூறினார்.காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சி தலைவரான சோனியா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:எங்களுக்கு உரிமை உள்ளதுஎதிர்க்கட்சிகளில், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி. எங்கள் கட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைந்துள்ளது. ஆகையால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற, எங்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்னை தொடர்பாக, நீதிமன்றத்தை அணுகுவது குறித்து, இன்னும் எந்த முடிவும் ... |
| வழக்குகளின் தேக்கத்திற்கு காரணம் என்ன? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் Posted: புதுடில்லி:''மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் அதிகரித்து உள்ளது, நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது போன்றவையே, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், மூன்று கோடிக்கும் மேலான வழக்குகள் தேக்கமடைய காரணம்,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.லோக்சபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அவர் எழுத்து மூலமாக அளித்த பதில்:கடந்த, மே 1ம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில், 64 ஆயிரம் வழக்குகளும், 2013ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள, 24 உயர் நீதிமன்றங்களில், 44.62 லட்சம் வழக்குகளும், கீழ் நீதிமன்றங்களில், 2.68 கோடிவழக்குகளும் ... |
| நிரா ராடியாவை என் வீட்டில் சந்தித்தேன் : கோர்ட்டில் ஒப்புக்கொண்டார் ராஜா Posted: புதுடில்லி: ''கம்பெனிகளின் முன்னாள் தரகரான நிரா ராடியாவை, டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடாவுடன் என் வீட்டில் சந்தித்தேன். ஆனால், ராடியாவுடன் தொலைபேசியில் எதுவும் பேசவில்லை,'' என, தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.ஊழல் வழக்கு:'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு ஊழல் வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், நேற்று சாட்சியம் அளித்த, ராஜா கூறியதாவது:டாடா குழும நிறுவனப் பணி தொடர்பாக, கம்பெனிகளின் முன்னாள் தரகர் நிரா ராடியாவும், டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் ... |
| 'ஊழல் வழக்குகளில் சிக்கிய வி.ஐ.பி.,க்கள்' Posted: ஐதராபாத்: ''சமீபகாலமாக, மிக முக்கியமான ஊழல் வழக்குகளில், பல வி.ஐ.பி.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், சட்டம், அனைவருக்கும் பொதுவானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர் பிரதீப் குமார் கூறியுள்ளார்.மேலும், அவர் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளில், '2ஜி ஸ்பெக்ட்ரம்', காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த ஊழல்கள், தலைப்பு செய்தியாக அடிபட்டன. இந்த வழக்குகளில், மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள், எம்.பி.,க்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள் ... |
| குற்றாலம் பங்களாவில் சசிகலா கணவர் நடராஜன் கைது; புழல் சிறையில் அடைப்பு Posted: சென்னை: குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, சசிகலாவின் கணவர் நடராஜனை, சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல், கொலை மிரட்டல் விடுத்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம்உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவின், நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது, கராத்தே மாஸ்டரும், சிற்ப வல்லுனருமான ஹூசைனி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு அளித்து இருந்தார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டம், விளாரில், முள்ளி வாய்க்கால் ... |
| இப்போதாவது விழிக்குமா அரசு நிர்வாகம்? கட்டுமான விதிமீறலே சுற்றுசுவர் இடிந்த விபத்துக்கு காரணம் Posted: சென்னை: சென்னை போரூர் மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தின் சோகம் மறைவதற்குள் திருவள்ளூரில் தனியார் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 'காற்று செல்ல, இடைவெளியின்றி நீளமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டதே, 11 பேர் உயிரிழந்த விபத்துக்கு முக்கிய காரணம்' என, கட்டுமான பொறியாளர்கள் கூறினர்.திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே, அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட, எடப்பாளையம் பகுதியில், தனியார் ஒருவருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது.விபத்து: இங்கு குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் உட்பட, பல ... |
| தே.மு.தி.க.,வை யாராலும் அழிக்க முடியாது: கட்சியினரை உற்சாகமூட்டிய விஜயகாந்த் Posted: ''அ.தி.மு.க., தலைமை மட்டுமல்ல; எந்த கட்சியின் தலைமை முயற்சி எடுத்தாலும், தே.மு.தி.க.,வை, என்றைக்கும் யாராலும் அழிக்க முடியாது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சியினரை ஊற்சாகமூட்டும் வகையில் பேசி உள்ளார்.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, 'உங்களுடன் நான்' கலந்தாலோசனை கூட்டம் மூலம், கட்சியினரை சந்தித்து,விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்காக, கோவை முதல் திருவண்ணாமலை வரையில், தன்னுடைய முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த விஜயகாந்த், இரண்டாம் கட்டமாக, நேற்று முன்தினம், சென்னையில் கலந்தாலோசனை நிகழ்ச்சியை ... |
| பேரணியில் பலம் காட்ட இன்று ஆலோசனை: 25 ஆயிரம் பேர் பங்கேற்க கருணாநிதி உத்தரவு Posted: சென்னை மவுலிவாக்கத்தில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்துக்கு, அனுமதி வழங்கியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, தி.மு.க., சார்பில், வரும் 12ம் தேதி, சென்னையில் பேரணி நடைபெறுகிறது. அதில், 25 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.தீவிரம்: மாவட்ட செயலர் பதவிகளை கைப்பற்ற துடிக்கும், கட்சி பிரமுகர்கள், இந்த பேரணியில், தங்களது பலத்தை காட்டும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை ... |
| மத்திய பட்ஜெட்: அருண் ஜெட்லியும் 6 சவால்களும்: 'ஆடு புலி ஆட்டம்' ஆரம்பம் Posted: புதுடில்லி:மந்தமான பொருளாதார வளர்ச்சி, பணவீக்க உயர்வு, நிதிப் பற்றாக்குறை போன்ற நெருக்கடியான சூழலில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரும் 10ம் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள முக்கிய ஆறு பிரச்னைகளை, அருண் ஜெட்லி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ள, பொருளாதார வல்லுனர்கள் குழு, அவற்றுக்கான தீர்வை வழங்கி உள்ளது.மானிய போர்: கடந்த 10 ஆண்டுகளாக, மத்திய அரசின் மானியச் சுமை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஐ.மு., அரசின் கொள்கை ... |
| வறுமைக்கோடு வரையறை சர்ச்சை: கட்சிகள் கடும் எதிர்ப்பு Posted: புதுடில்லி : 'நகர்ப்புறங்களில், தினமும் 47 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், கிராமப்புறங்களில், 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், ஏழைகளாக கருதக் கூடாது' என, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. நிபுணர் குழுவின் இந்த வறுமைக் கோடு வரையறை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐ.மு., கூட்டணி:முந்தைய, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 'நகர்ப்புறங்களில், தினமும் 33 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், கிராமப்புறங்களில், 27 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வர மாட்டார்கள். ... |
| ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு Posted: புதுடில்லி: 'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் ... |
| Posted: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று கூடியது. சபை துவங்கியதும், ஆந்திரா எரிவாயு கசிவு விபத்து, சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து ஆகியவற்றில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேர அலுவல்களை துவங்க முயற்சித்தார். ஆனால், காங்., உள்ளிட்ட, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ... |
| ரயில்வே நவீனமாக தனியார் முதலீட்டிற்கு பச்சைக்கொடி?இன்று பட்ஜெட்டில் வருகிறது புது திட்டங்கள் Posted: புதுடில்லி: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, இன்று பார்லிமென்டில், தன் முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், ரயில்வே துறையை நவீனமயமாக்க, தனியார் முதலீட்டிற்கு பச்சைக்கொடி காட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகின்றன.வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே, முந்தைய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |