Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எது உண்மையான விளையாட்டு?

Posted: 07 Jul 2014 03:34 PM PDT

ஒரு திருமண வீட்டில் நடக்கும் கொலையைப் போல அரங்கேறியிருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தில் நெய்மாரின் வெளியேற்றம். கோப்பையை வெல்லக்கூடிய அணியாக எதிர்பார்க்கப்படும் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாருக்கு ஆட்டத்தின்போது ஏற்பட்ட முதுகெலும்பு முறிவு, திட்டமிட்ட சதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கொலம்பிய அணியின் ஆட்டக்காரர் ஹ்வான் ஜுனிகா, நெய்மாரின் முதுகில் தன்னுடைய வலது காலால் உதைத்துக் காயப்படுத்தும் புகைப்படம் ஒட்டுமொத்தக் கால்பந்தாட்டத்துக்கே அவமானச் சின்னம் என்றால் ...

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை

Posted: 07 Jul 2014 03:32 PM PDT

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. முதலாவது அரை இறுதி ஆட்டம் உலக கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. 2 நாள் ஓய்வுக்கு பிறகு பெலோஹோரிசோன்ட்டில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 1.30 மணிக்கு முதலாவது அரை ...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Posted: 07 Jul 2014 03:13 PM PDT

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ...

வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை.

Posted: 07 Jul 2014 03:13 PM PDT

வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை.

நேற்று பிரேசில் வென்றது.
வெற்றிக்கான கோல் பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார் லூயிஸ்.
6 போட்டிகளிலும் தான் 6 கோல்கள் பெற்றும் தனது அணி தோற்றுப்போன கவலையில் மனமுடைந்து அழும் கொலொம்பிய வீரர் ரொட்ரிகுவெசைத் தேற்றி, ரசிகர்களை அவருக்கு பாராட்டு வழங்குமாறு கேட்கும் லூயிஸ்.


பிணம் தின்னும் சாத்திரங்கள்

Posted: 07 Jul 2014 03:08 PM PDT

"அம்மா... முடியலையேம்மா... நான் என்ன பதில் சொல்வேன்?" "என் ராசா, உங்களை இனிமே என்னைக்குப் பார்ப்பேன் ராசா... என்னைச் சிரிக்கச் சொல்லி அழகுபார்ப்பீங்களே... இன்னிக்கு முகமே தெரியாம சிதைஞ்சு கெடக்குறீங்களே... ஏ, அய்யா, ஏ அய்யா..." "பாவா, பாவா... யே... பாவா..." "கடவுளே உனக்குக் கண்ணில்லையே... ஊருல பொழைக்க வழி இல்லாமத்தான இங்கே வந்தோம்... வந்த எடத்துல எங்களை வதைச்சுட்டீயே... நாங்க என்ன பாவம் செஞ்சோம்..." "பாவி பாவி... விட்டுட்டுப் போயிட்டியே பாவி... இனி நான் எப்படி வாழ? ம்ம்ம்ம்..." - ...

அழகா....அறியாமையா ?

Posted: 07 Jul 2014 01:20 PM PDT

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
அழகாய் சொன்னானா ...
அறியாமல் சொன்னானா கவிஞன் ?

சொல்லிவிட்டு மறைந்தும் போனான்
அவனிடம் யார் போய் சொல்வது ?

திருடர்கள் சந்ததி வளர்க்கவில்ல்லை
அதனால் பெருந்துன்பம் ஏதுமில்லை.
அரசியல்வாதிகள் தலைமுறையாய் அல்லவா
தொடர்கிறார்கள் எம்மை !

விஜய்டிவி முகத்திரையைக் கிழித்தெரிந்த இயக்குனர் ராம்.

Posted: 07 Jul 2014 01:17 PM PDT

விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி. விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார். தங்க மீன்கள் படத்தில் ...

கம்பரின் மகன் பெயர் – (பொது அறிவு தகவல்)

Posted: 07 Jul 2014 11:34 AM PDT

கம்பரின் மகன் பெயர் அம்பிகாபதி - குல்ஜாரியால் நந்தா இரண்டு முறை பிரதம மந்திரியாக இருந்தவர். - முதுன் முதலாக கண்வங்கி நியூயார்க்கில் அமைக்கப்பட்டது - உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு இந்தோனேஷியா - கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் - கர்மவீரர் என்றழைக்கப்பட்ட தமிழக அரசியல்வாதி காமராஜ் - தில்லானா மோகனாம்பாள் கதையை எழுதியவர் - கொத்தமங்கலம் சுப்பு - காவிரி ஆறு கடலில் சேரும் ஊர் பூம்புகார். அதனால்தான் இது காவிரிபூம்பட்டினம். - நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரைக்கு உண்டு. - சரஸ்வதி ...

வரலாற்றில் இன்று.... ஜூலை

Posted: 07 Jul 2014 11:31 AM PDT

1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன. 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது. 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1876 ...

ஆதங்கம் - ஒரு பக்க கதை

Posted: 07 Jul 2014 11:30 AM PDT

தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு. மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது. - ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள். - மெல்ல அருகில் வந்தவள், 'எப்படியிருக்கீங்க?' என்றாள் இயல்பாக. - ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு! நல்லாருக்கியா மீனா' எனும்போது ஒரு பைக் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் '' ஏறுங்க' என்றான் மீனாவைப் பார்த்து. - யாரது ...

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்

Posted: 07 Jul 2014 11:05 AM PDT

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ்

தமிழின் பெருமை அறிந்த ஜெர்மன் பெண்மணி

Posted: 07 Jul 2014 11:02 AM PDT

தமிழின் பெருமை அறிந்த ஜெர்மன் பெண்மணி

நாம் மறந்துகொண்டிருக்கும் தமிழின் சிறப்பை காண்போம் இங்கே:

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.

Posted: 07 Jul 2014 10:43 AM PDT

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று. ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டதுபோல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியைஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர். இந்த ...

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி

Posted: 07 Jul 2014 10:41 AM PDT

வணக்கம் உறவுகளே............

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி அதில் முக்கியமாக கிழமை மற்றும் தமிழ் தேதி அவசியம் வரவேண்டும்...... தெரிந்தவர்கள் சற்று விரைந்து உதவுங்கள்..............

நன்றியுடன்
உங்கள் மாணிக்...................

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Posted: 07 Jul 2014 10:39 AM PDT

பெயர்:  ச சக்தி  
சொந்த ஊர்:
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகிள்
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

வணக்கம் இங்கு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி :

மூவகை மனிதர்கள்

Posted: 07 Jul 2014 10:36 AM PDT

- உலகின் அனைத்துப் பொருட்களிலும் உண்டு மூன்று வெவ்வேறு வகைகள்; உத்தமம் எனவும், மத்தியமம் எனவும், உருப்படா அதமம் எனவும் மூவகைகள். தேனைத் தவிர எதையுமே உண்ணாத தேனீக்கள் உன்னதமான உத்தம வகை; தேன் கிடைக்காவிடில் இறக்குமேயன்றி, தேடிச் செல்லா அவை வேறு உணவை! தேனை உண்ட பின்னும், தேடிச் சென்று தெருவில் இருக்கும் கழிவுகளையும் பேதம் இன்றி உண்ணும் வெறும் ஈக்கள் பெயர் பெரும் மத்தியம வகை என்று! சாணப் புழுக்கள் என்ற ஒரு வகையோ சாணத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்பவை. தேனில் இட்டால் உடனே மடிந்து ...

உங்கள் தோழியாக !!!

Posted: 07 Jul 2014 10:28 AM PDT

பெயர்:நித்யானந்தி
சொந்த ஊர்:ஈரோடு
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையத்தளம் மூலம்
பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது
தொழில்:கூட்டுறவு சங்க பணியாளர்
மேலும் என்னைப் பற்றி:உங்கள் தோழியாக என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

காணாமல் போன காரிகை

Posted: 07 Jul 2014 10:02 AM PDT

நிலத்திலும் வந்தாள்  
நீரிலும் வந்தாள்  
மானிடர் போற்றும் பேரழகி
பேரிடர் வந்து காணாமல் போனாலோ ?



ரமணியன்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Posted: 07 Jul 2014 09:20 AM PDT

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார். அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர். மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு. அவரிடம் என்னவென்று வினவினார். அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான். அவனின் வலியுடன் வந்த ...

சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்

Posted: 07 Jul 2014 09:18 AM PDT

சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய் நடிப்பு :திரு. நாசர், சாரா ***** மசாலாப் படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய படம். படத்தில் வெட்டுக்குத்து இல்லை, குத்துப்பாட்டு இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சி இல்லை. ஆனால் படம் வெற்றி பெற்றுள்ளது. காரணம் கதையும், நடிகர் நாசரும், சிறுமி சாராவும். மிக நல்ல படம். இந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தெய்வத் திருமகள் படத்தில் நடித்து இருந்த சிறுமி சாரா, ...

கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 07 Jul 2014 09:17 AM PDT

கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! கற்றோரின் எண்ணிகையை பன் மடங்கு உயர்த்தியவர் ! கல்விச்சாலைகள் திறப்பதை தலையாய கடமையாகச் செய்தவர் ! மாடு மேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தவர் ! மதிய உணவிட்டு கல்வி கற்றிட வழி வகை செய்தவர் ! தான் படிக்காவிட்டாலும் தமிழகத்தைப் படிக்க வைத்தவர் ! தான் படிக்கட்டாக இருந்து பலரை உயர்த்தி விட்டவர் ! மருத்துவர்களும் பொறியாளர்களும் பெருகிடக் காரணமானவர் ! மாணவர்களுக்கு கல்வியின் மேன்மையை உணர்த்தியவர் ! கைநாட்டு வைக்கும் படிக்காத ...

'கயா' யாத்திரை !

Posted: 07 Jul 2014 08:35 AM PDT

'கயா' யாத்திரை ! தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்      வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ ...

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Posted: 07 Jul 2014 08:04 AM PDT

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!

நிழலும் நிஜமும் - சிறுகதை

Posted: 07 Jul 2014 07:46 AM PDT

நிழலும் நிஜமும் - சிறுகதை   இயக்குனர் "டேக் -1, ஆக்ஷன்" என்று கூறியவுடன், நடிகை நடிக்க, காட்சி ஆரம்பமானது. வேலைக்காரி: அம்மா காப்பி கதாநாயகி : கொடு. (என்று வாங்கி காப்பி குடித்துக்கொண்டே) , நீ காபி குடிச்சிட்டியா? வேலைக்காரி: இன்னும் இல்லையம்மா. கதாநாயகி : ஏன் குடிக்கலை? இந்த வீட்டை நீ உன் சொந்த வீடா நினைச்சிக்க.  நாங்கள் எல்லாம் உன் சொந்தக்காரர்கள் என நினைச்சிக்க. புரிஞ்சிதா? வேலைக்காரி: சரிங்கம்மா. கதாநாயகி: முதல்ல காப்பியை குடி .  அப்புறம் வந்து என்னை கவனி. வேலைக்காரி: ...

வான வேடிக்கைக

Posted: 07 Jul 2014 06:17 AM PDT

வான வேடிக்கைகளுக்கிடையில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று ஒருவர் சிந்தித்து சிறிய  drone ஒன்றை வானவேடிக்கை நிகழும் பொது அனுப்பி படம் பிடித்திருக்கிறார்....மிகவும் அழகாக இருகிறது...

This posting includes an audio/video/photo media file: Download Now

மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!

Posted: 07 Jul 2014 05:52 AM PDT

திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடிவருகிறார்கள்! அனைவரின் குரலும் சற்றும் பிறழாது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும்  என்ற ஆவலை ஏற்படுத்துகிறது! தரவிறக்கம் செய்ய: 5821 KB http://www.mediafire.com/download/hg444qbdu4vihb7/OmNamaShivayaOm_64kbps.mp3 பாடல் வரிகள்: ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம ...

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Posted: 07 Jul 2014 05:52 AM PDT

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ...

ஒரு ஆணின் புலம்பல்!

Posted: 07 Jul 2014 05:48 AM PDT

இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?

குழந்தைகள் சிரிப்பினிலே...!!.

Posted: 07 Jul 2014 02:51 AM PDT

குழந்தைச் செல்லங்கள்…!! * அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து தனக்குத் தேவையானவைகளைச் சாதித்துப் பெற்றுக் கொள்கின்றன ஆசைக் குழந்தைகள். * கருந்திராட்சைப் பழத்தைக் காட்டி அம்மா, எனக்கு அந்தக் கோலிப் பழம் வேணுமென்று அடம் பிடித்துக் கேட்கின்றது அம்மு குட்டிகள். * பொரித்த வற்றல் கொடுத்தால் தான் ஒரு வாய் சோறு ஊட்டிப்பேன் என்று அடம் பிடிக்கின்றது செல்லக் குழந்தைகள். *

தெரிஞ்சுக்கோங்க!............. கல் தின்னும் கோழிகள்!

Posted: 07 Jul 2014 12:36 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

காலட்சேப பவனம்-பாக்கியம் ராமசாமி

Posted: 06 Jul 2014 10:59 PM PDT

காலட்சேப பவனம்-பாக்கியம் ராமசாமி

http://www.mediafire.com/download/dsu2y91dl3ejeb1/Kaletchab+bhavan+-+Bakiyam+Ramasamy%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

உதவி தேவை உறவுகளே, (UPSC & TNPSC)

Posted: 06 Jul 2014 10:53 PM PDT

உதவி தேவை உறவுகளே,

நான் UPSC தேர்வு எழுத போகிறேன். அதை பற்றி தகவல் மற்றும் அதற்காண பயிற்சி மையம் பற்றிய தகவலும். நான் Chennai இல் உள்ளேன்.

இலவச பயிற்சி மையம் இருந்ததல் நல்லது மேலும் யாராவது நம் ஈகரை நண்பர்கள் இந்த தேர்வை எழுதுபவர்கள் Chennai இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்,

பாஸ்கர், சு .

பொங்கல் கவிதைகள்

Posted: 06 Jul 2014 10:37 PM PDT

தைமகள் வருகின்றாள் தைமகளும் கன்னலோடு வந்தவளும் பார்க்கின்றாள் கதலியோடு தருகின்றாள் இன்பத்தைச் செந்நெல் லோடு தந்தவளும் மகிழ்கின்றாள் மஞ்ச ளோடு பெறுகின்றாள் ஏற்றத்தை உழவ ரோடு பேரின்பம் அடைகின்றாள் மக்க ளோடு மருள்கின்றாள் வேற்றுமையைக் கண்ட தோடு மனமுருகி அழுகின்றாள் கவலை யோடு

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Posted: 06 Jul 2014 10:21 PM PDT

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! சிறந்த மதிய உணவகம்..! 1- சந்திரன் மெஸ், தல்லாகுளம் ( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி ) 2- குமார் மெஸ், தல்லாகுளம் ( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless ) 3- அம்மா மெஸ், தல்லாகுளம் ( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா ) 4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி ( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி ) 5- ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (257)

Posted: 06 Jul 2014 10:03 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

முதலைக் கண்ணீர் ...

Posted: 06 Jul 2014 09:43 PM PDT

- ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம், அதில் வசித்த ஒரு அறிவுள்ள குரங்கும், நீரில் வாழ்ந்து வந்த ஒரு முதலையும், நீண்ட நாட்களாய் நெருங்கிய நண்பர்கள்! தினம் தினம் பேசிப் பழகிய அவைகள், தித்திக்கும் நாவல் பழங்களைப் பகிர்ந்து, தின்று மகிழ்ந்து, நேரம் போவதே தெரியாமல், தினம் தினம் அளவளாவியபடி இருந்தன. தன் மனைவிக்கும் சில நாவல் பழங்கள் தன் மனம் மகிழக் கொடுக்க விரும்பி, சில பழங்களை முதலை ஒரு நாள் காலை மலர்ந்த முகத்துடன் எடுத்துச் சென்றது. முதலை நல்லது ஆயினும் அதன் மனைவி, முதல் தரமான பொல்லாத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™