Tamil News | Online Tamil News |
- சுவர் இடிந்ததில் இறந்தவர்கள் வெளிமாநிலத்தவர்களே...
- தலைமை தேர்தல் கமிஷனர் மீது வழக்கு: ஜனாதிபதிக்கு விஜயகாந்த் கடிதம்
- முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்கிறது? கருணாநிதி
- இனி சிகரெட் பிடிப்பது 'காஸ்ட்லி': 50 சதவீத வரி விதிக்க மத்திய அரசு யோசனை
- நினைத்தபடி ஊர் சுற்ற முடியாது: அதிகாரிகளுக்கு அரசு கட்டுப்பாடு
- ரயில்வே நவீனமயத்திற்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்
- லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் யார்? சபாநாயகர் சுமித்ரா கையில் முடிவு
- தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் பலி : மவுலிவாக்கத்தை அடுத்து செங்குன்றம் அருகே பரிதாபம்
- கொலை பயத்தில் இந்து தலைவர்கள்: தடுத்து நிறுத்துவாரா புதிய பா.ஜ., தலைவர்?
- ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : அமலாக்க துறை அதிரடி
- அருணாச்சலில் இப்படியும் ஒரு அவலம்: உள்துறை அமைச்சக அதிகாரி 'பகீர்' தகவல்
| சுவர் இடிந்ததில் இறந்தவர்கள் வெளிமாநிலத்தவர்களே... Posted: சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அலமாதிக்கு உட்பட்ட உப்பரபாளையம் பகுதியில் விற்பனை பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து நான்கு பெண்கள், மூன்று வயது குழந்தை உட்பட 11 பேர் பலியாயினர்; ஒருவர் உயிர் தப்பினார். இவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தவர் ஆவார்கள்.சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் அருகே குடிசை அமைத்து இவர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசை மீது விழுந்தது. இதில் ௧௧ பேர் பலியாகினர் இடிபாடுகளில் சிக்கி தவித்த நாகராஜ், 19, என்பவரை மீட்டு சென்னை ... |
| தலைமை தேர்தல் கமிஷனர் மீது வழக்கு: ஜனாதிபதிக்கு விஜயகாந்த் கடிதம் Posted: சென்னை : தே.மு.தி.க., சார்பில், தலைமை தேர்தல் கமிஷனர் மீது, வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்,'' என, ஜனாதிபதிக்கு அக்கட்சி தலைவர், விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு, இரண்டு நாட்கள் முன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அப்போதே, இந்த தடை உத்தரவுக்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருக்கின்ற மாநிலங்களில் கூட, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆளும்கட்சிக்கு அனுசரணையாகவே, இந்த உத்தரவு ... |
| முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்கிறது? கருணாநிதி Posted: சென்னை : 'முல்லை பெரியாறு அணை பிரச்னையில், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணை பிரச்னையில், அணை பலவீனமாக இருப்பதாக தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனுவை, கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து, முன்னாள் நீதிபதி தாமஸ் அளித்த பேட்டியில், 'முல்லைப் பெரியாறு அணை மிகுந்த பலத்துடன் உள்ளது. இந்தியாவில், மிகவும் பாதுகாப்பான அணை முல்லைப் பெரியாறு மட்டுமே. ஆனாலும், அணை பலவீனமாக இருப்பதாக, சிலர் கேரள மக்களிடம் பீதியை கிளப்பி வருகின்றனர்' என, ... |
| இனி சிகரெட் பிடிப்பது 'காஸ்ட்லி': 50 சதவீத வரி விதிக்க மத்திய அரசு யோசனை Posted: புதுடில்லி : இளைஞர்களிடையே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி திட்டம் தீட்டி உள்ளது. சிகரெட்டுக்கு, 50 சதவீத மதிப்பு கூடுதல் வரி விதிக்கும்படி, அனைத்து மாநில அரசு களையும், மத்திய சுகாதார அமைச்சர் வற்புறுத்தி உள்ளார்.கடிதம்: மத்திய சுகாதார அமைச்சரான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஹர்ஷ்வர்த்தன், சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். அதில், 'புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே, சிகரெட், குட்கா போன்ற புகையிலை பொருட்களின் விலைகளை, எளிதில் வாங்க முடியாத ... |
| நினைத்தபடி ஊர் சுற்ற முடியாது: அதிகாரிகளுக்கு அரசு கட்டுப்பாடு Posted: புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அலுவலக வேலை எனக்கூறி, இனி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு, கடும்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தங்கள் துறைகள் சம்பந்தபட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப் போவதாக அறிவித்து, அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். இதற்காக, அரசு தரப்பில், ஏராளமான தொகை செலவிடப்படும்.புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ... |
| ரயில்வே நவீனமயத்திற்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள் Posted: புதுடில்லி:பார்லிமென்டில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், ரயில் விபத்துகளை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பிற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், புதிய அரசின், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், பார்லிமென்டில் இன்று துவங்குகிறது. நாளை, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, 2014 - 15ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.ஏற்கனவே, பயணிகள் ரயில், சரக்கு ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை தாக்கல் செய்யவுள்ள ... |
| லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் யார்? சபாநாயகர் சுமித்ரா கையில் முடிவு Posted: புதுடில்லி : நடப்பு, 16வது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தத் தகுதியை பெற, காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் லோக்சபாவில் பலம் இல்லாத நிலையில், சபாநாயகர், சுமித்ரா மகாஜன் மனது வைத்தால், அந்தப் பதவி காங்கிரசை சேர்ந்த யாருக்காவது வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.இதை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், வெங்கையா நாயுடுவும் உறுதி செய்துள்ளார். ''முடிவு, சபாநாயகர் கையில் தான் உள்ளது. காங்கிரஸ் கூறுவது போல், உரிமை எல்லாம் கோர முடியாது,'' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கடந்த மே 12ல், நடந்து ... |
| தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் பலி : மவுலிவாக்கத்தை அடுத்து செங்குன்றம் அருகே பரிதாபம் Posted: சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து, 61 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தின் சோகம் மறைவதற்குள், செங்குன்றம் அருகேஉள்ள அலமாதியில் மற்றொரு துயர சம்பவம் நேற்று நிகழ்ந்தது.விற்பனை பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், நான்கு பெண்கள், மூன்று வயது குழந்தை உட்பட, 11 பேர் பலியாயினர்; ஒருவர் உயிர் தப்பினார்.திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே, சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட, எடப்பாளையம் பகுதியில், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த பாலா, 45, என்பவருக்கு சொந்தமான ... |
| கொலை பயத்தில் இந்து தலைவர்கள்: தடுத்து நிறுத்துவாரா புதிய பா.ஜ., தலைவர்? Posted: |
| ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : அமலாக்க துறை அதிரடி Posted: புதுடில்லி:வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்த வழக்கின் விசாரணையை, மத்திய அமலாக்க துறை தீவிரப்படுத்தியுள்ளது. முந்தைய, காங்., ஆட்சி காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி - பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் என்ற நிறுவனத்திடம், மத்திய அரசு, 3,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக,இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களுக்கு, அந்த நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது.இந்நிலையில், ... |
| அருணாச்சலில் இப்படியும் ஒரு அவலம்: உள்துறை அமைச்சக அதிகாரி 'பகீர்' தகவல் Posted: புதுடில்லி:அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில், இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின், 'சிக்னல்' கிடைக்கவில்லை என்றும், சீன நிறுவனங்களின் 'சிக்னல்' மட்டுமே கிடைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தில், இணைச் செயலர் அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், சமீபத்தில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றிருந்தார். சீன எல்லையில் உள்ள இந்த மாநிலத்தின், குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து, டில்லியில் உள்ள தன் நண்பர்களுடன் மொபைல் போனில் பேச முயன்றார்.ஆனால், இந்தியாவில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 07,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |