Tamil News | Online Tamil News |
- டில்லி சட்டசபை கலைப்பு விவகாரம்:சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- சி.பி.ஐ., விசாரணை நடத்தவில்லை: எம்.கே.நாராயணன் தகவல்
- அனல் மின் திட்டத்தை முடக்க வெளிநாட்டு சதி : பின்னணியில் உதயகுமார் ஆதரவாளர்கள்
- மவுலிவாக்கம் கட்டட உரிமையாளர் தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்
- 'மறுபடியும் முதல்ல இருந்தா...?':மா.செ., விவகாரத்தில் தி.மு.க.,வில் திடீர் குமுறல்
- 'கட்டட இடிபாடு சி.பி.ஐ., விசாரணை தேவை'
- 31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித்
- கத்ரா - உதாம்பூர் மலைப்பகுதியில் ரயில் போக்குவரத்து துவக்கம் : வைஷ்ணவி தேவி கோவிலுக்கு எளிதில் பயணிக்கலாம்
- 'பருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்'
- ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேர் விடுதலை
- காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு விலை உயர்வு? அமைச்சரவைக்கு எண்ணெய் அமைச்சகம் பரிந்துரை
| டில்லி சட்டசபை கலைப்பு விவகாரம்:சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Posted: புதுடில்லி;டில்லி சட்டசபையை கலைக்கக்கோரிய ஆம் ஆத்மியின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை ஐந்து நீதிபதி கள் கொண்ட அரசமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.டில்லி சட்டசபை தேர்த லில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சி யின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பொறுப்பேற்றார்.ஒத்துழைப்பு இல்லை:இந்நிலையில், லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பான விவகாரத்தில், காங்கிரஸ், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சரியான ஒத்துழைப்பு தராததாக குற்றம் சாட்டிய ... |
| சி.பி.ஐ., விசாரணை நடத்தவில்லை: எம்.கே.நாராயணன் தகவல் Posted: சென்னை;சி.பி.ஐ., என்னிடம், இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை,'' என, மேற்கு வங்க மாநில முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.பாதுகாப்புத்துறைக்கு ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக தகவல் வௌியானதை அடுத்து, அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணனிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக செய்தி வௌியானது.இதையடுத்து, அவர், மேற்கு வங்க மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று இரவு, கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த எம்.கே.நாராயணனிடம் நிருபர்கள்,'ஏற்கனவே சென்னை வந்த போது, ஹெலிகாப்டர் பேர வழக்கில், ... |
| அனல் மின் திட்டத்தை முடக்க வெளிநாட்டு சதி : பின்னணியில் உதயகுமார் ஆதரவாளர்கள் Posted: தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், 1600 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல்மின் நிலையம் அமைப்பதற்காக நடந்த மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போட சிலரை தூண்டிவிடும் வெளிநாடுகளின் சதியா இது; எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவி வருகிறதா என உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையை துவக்கி உள்ளனர்.உப்பூர் அருகே, ... |
| மவுலிவாக்கம் கட்டட உரிமையாளர் தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம் Posted: மதுரை: சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்த, 11 மாடி கட்டட உரிமையாளர் மனோகரனின் அடிப்படை தொழில் தொடர்பான ஆவணங்கள், மாயமான நிலையில், அவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.சென்னை, மவுலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம், கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர்.இருவர் குழு:இது தொடர்பாக, கட்டட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது நிறுவனம் அடிப்படை தொழிலை துவங்கியது, மதுரை ... |
| 'மறுபடியும் முதல்ல இருந்தா...?':மா.செ., விவகாரத்தில் தி.மு.க.,வில் திடீர் குமுறல் Posted: எந்த நோக்கத்திற்காக, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதோ, அது நிறைவேறுமா என்ற சந்தேகம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அதே மாவட்ட செயலர்களுக்கே பதவியும் அதிகாரமும் போய் சேரும் சூழல் உருவாகி வருவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ள கட்சியினர், 'மறுபடியும் முதல்ல இருந்தா...' என, வடிவேலு ஸ்டைலில், நொந்து போய் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.வெளிப்படுத்தப்பட்ட குமுறல்:இந்த விவகாரத்தில், சிலர், கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி, தங்கள் எதிர்ப்பையும் எதிர்பார்ப்பையும் கொட்டித் தீர்த்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. 'இப்படியொரு நிலைமை வருமென்றால், ... |
| 'கட்டட இடிபாடு சி.பி.ஐ., விசாரணை தேவை' Posted: சென்னை : ''அடுக்கு மாடி கட்டடம் அனுமதி வழங்கியதில், முறைகேடுகள் நடந்தது பற்றி வெளிவர வேண்டு மென்றால், சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ள ஒரு நபர் குழுவினால், எந்தவிதமான உண்மையும் வெளிவராது என்ற கருத்து, பரவலாக சொல்லப்படுகிறது. அந்த கமிஷன், எத்தனை நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து, அறிக்கை தர வேண்டும் என, சொல்லவில்லை.இதிலிருந்து, இது ஒரு கண் துடைப்பு கமிஷன். அரசினர், தப்பித்துக் கொள்வதற்காக, நியமித்துஉள்ள கமிஷன் என, எண்ண ... |
| 31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித் Posted: புதுடில்லி : 'டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த போது, அவரின் அதிகாரப்பூர்வ வீட்டில், 31 'ஏசி'களும், 25 'ஹீட்டர்'களும் பொருத்தப்பட்டிருந்தன' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் விடுத்திருந்த கேள்விகளுக்கு, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அளித்துள்ள பதில்:டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவருக்கான அரசு வீட்டில், 31 'ஏசி'க்களும், 15 கூலர்களும், 25 ஹீட்டர்களும், 16 ஏர் பியூரிபையர்களும், 12 கெய்சர்களும் பொருத்தப்பட்டு இருந்தன.ஷீலா தீட்சித், அந்த வீட்டில் குடியேறிய போது, மின்சார உபகரணங்களை ... |
| Posted: கத்ரா : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், திரிகுதா மலைப்பகுதியில் உள்ள, கத்ரா மற்றும் உதாம்பூர் நகர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ரயில் பாதையில், நேற்று ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதன்மூலம், பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு, பக்தர்கள் எளிதாக பயணிக்கலாம்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு மற்றும் உதாம்பூர் இடையே ஏற்கனவே ரயில் பாதை அமைக்கப்பட்டு, அந்தப் பாதையில், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, உதாம்பூர் மற்றும் கத்ரா இடையேயான, 25 கி.மீ., தூரத்திற்கு, 1,133 கோடி ரூபாய் செலவில், புதிதாக ரயில் பாதை ... |
| 'பருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்' Posted: புதுடில்லி : 'இந்த ஆண்டு நாட்டின் சராசரி மழைப்பொழிவின் அளவு மிக குறைவாக இருக்கும்; வறட்சி அதிகரிக்கும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறைந்த அளவே மழை'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த ஆண்டு, நாடு முழுவதும் பருவமழையில் பெரும் மாற்றம் காணப்படும். சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைந்த அளவே மழைப் பொழிவு இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக குறைந்த மழை பெய்யும். ஆண்டுக்கு, 96 - 104 சதவீதம் வரை மழைப்பொழிவு இருந்தால் அது சராசரி மழைப்பொழிவு எனப்படும். ... |
| ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேர் விடுதலை Posted: புதுடில்லி : ஈராக்கில், ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள், 46 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்டு வர, 'ஏர் இந்தியா' நிறுவன பயணிகள் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இன்று நாடு திரும்பவுள்ளனர்.ஈராக்கில், சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அந்நாட்டு அரசுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில், முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ... |
| காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு விலை உயர்வு? அமைச்சரவைக்கு எண்ணெய் அமைச்சகம் பரிந்துரை Posted: புதுடில்லி : சமையல், 'காஸ்' விலையை சிலிண்டர் ஒன்றுக்கு, 250 ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், மண்ணெண்ணெய் விலையையும், லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. விலை உயர்வை நடைமுறைப்படுத்தும்படி, மத்திய அமைச்சரவைக்கு, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் பரிந்துரை அனுப்பவுள்ளது.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை, மானிய விலையில் விற்பனை செய்வதால், தங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் புகார் தெரிவித்தன.இதையடுத்து, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 05,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |