Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நம்ம வீட்டு சமையல்

Posted: 04 Jul 2014 03:01 PM PDT

கூழ் தோசை தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் ...

கிரீன் டீ

Posted: 04 Jul 2014 02:41 PM PDT

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது. புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் வைட்டமின் சி-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது. உடல் எடை குறையும் உடலில் உள்ள கொழுப்பு செல்களை எரித்து, ...

விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள்

Posted: 04 Jul 2014 02:23 PM PDT

வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த அடையாளம். அவரின் வாழ்க்கைத் தரும் உன்னதமான பாடங்களில் சில… கேள்வி கேள்: இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். 'கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்' என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, 'அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?' என்று கேட்டார் அம்மா. 'எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும்' என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர். உன்னை நம்பு: ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 04 Jul 2014 01:59 PM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

ஆண்களின் உலகம்!

Posted: 04 Jul 2014 01:49 PM PDT

அண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற ...

சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை

Posted: 04 Jul 2014 01:43 PM PDT

உலகில் மக்களின் நோய்களைத் தீர்க்க தொன்றுதொட்டு எத்தனையோ சிகிச்சை முறைகள் இருக்க சீனாவில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் தீ சிகிச்சை தற்போது மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்றவற்றை இந்த சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியும் என்று இந்த சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான மருத்துவ சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. தீ சிகிச்சை மருத்துவ உலகின் நான்காவது புரட்சி ஆகும். இது சீன, மேற்கத்திய ...

பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!

Posted: 04 Jul 2014 01:34 PM PDT

புதுடெல்லி: பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், தொந்தரவற்றதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நிலையில், இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது. இதனால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக ...

ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா? - கருணாநிதி கேள்வி

Posted: 04 Jul 2014 01:28 PM PDT

மவுலிவாக்கத்தில் 61 பேரை பலிகொண்ட கட்டிட விபத்து தொடர்பாக, தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளை முன்வைத்து, திமுக தலைவர் கருணாநிதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 'ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?' என்ற தலைப்பில் அவர் இன்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், "சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறார். இதுபோல திராவிட முன்னேற்றக் ...

நிழலும் நிஜமும் - சிறுகதை

Posted: 04 Jul 2014 01:28 PM PDT

நிழலும் நிஜமும் - சிறுகதை   இயக்குனர் "டேக் -1, ஆக்ஷன்" என்று கூறியவுடன், நடிகை நடிக்க, காட்சி ஆரம்பமானது. வேலைக்காரி: அம்மா காப்பி கதாநாயகி : கொடு. (என்று வாங்கி காப்பி குடித்துக்கொண்டே) , நீ காபி குடிச்சிட்டியா? வேலைக்காரி: இன்னும் இல்லையம்மா. கதாநாயகி : ஏன் குடிக்கலை? இந்த வீட்டை நீ உன் சொந்த வீடா நினைச்சிக்க.  நாங்கள் எல்லாம் உன் சொந்தக்காரர்கள் என நினைச்சிக்க. புரிஞ்சிதா? வேலைக்காரி: சரிங்கம்மா. கதாநாயகி: முதல்ல காப்பியை குடி .  அப்புறம் வந்து என்னை கவனி. வேலைக்காரி: ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 04 Jul 2014 01:24 PM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Posted: 04 Jul 2014 01:16 PM PDT

படித்ததில் பிடித்தது. நகைச்சுவை ………………………………………………………………… # பாஸ் செக்ரெட்டெரியிடம் சொன்னார்.. வார இறுதியில் 3 நாள் பிசினெஸ் ட்ரிப் போகணும் ரெடியா இருங்க..என்றார். # செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி… 3 நாள் பிசினஸ் ட்ரிப் போறேன். உடம்பையும் வீட்டையும் கவனிச்சிகோங்க என்றாள். # கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. மனைவி 3 நாள் வீட்டிலில்லை. வந்து விடு என்றான். # கேர்ள் ப்ரெண்டு தன்னிடம் டியூசன் படிக்கும் பையனுக்கு போன் பண்ணி 3 நாள் டியூசன் இல்லை என்றார். # பையன் தாத்தாவுக்கு போன் ...

வி.எஸ்.காண்டேகர் -மனோரஞ்சிதம் (மொழி பெயர்ப்பு நாவல் )

Posted: 04 Jul 2014 01:10 PM PDT

வி.எஸ்.காண்டேகர் -மனோரஞ்சிதம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . நிறைய நண்பர்களுக்கு காண்டேகர் யார் என்பது தெரியாது அவரை பற்றி அறிய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் . யார் இந்த காண்டேகர் ? http://goo.gl/oiQiBP http://www.mediafire.com/download/ceb6bdb3lymhgbd/kantekar-manoranjitham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ஜெர்மனி, பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது

Posted: 04 Jul 2014 01:02 PM PDT

உலகக் கோப்பைக் கால்பந்தாட்ட முதல் காலிறுதியில் ஜெர்மனி அபாரமாக விளையாடி பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹமெல்ஸ் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. அதன் பிறகு பிரான்ஸின் தீவிரவில்லாத முயற்சிகளை ஜெர்மனி எளிதில் முறியடித்தது. மீண்டும் கோல் கீப்பர் நியூயர் அபாரம்: ஆட்டம் காய நேரத்திற்குச் சென்றபோது பிரான்சிற்குக் கிடைத்த கடைசி நேர வாய்ப்பை முறியடித்தார் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர். 90+3வது நிமிடத்தில் ...

பெருந்தலைவர் காமராஜரின் பொன்மொழிகள்

Posted: 04 Jul 2014 12:59 PM PDT

* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் * அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது * படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து * திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது. * ...

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Posted: 04 Jul 2014 12:58 PM PDT

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார். அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர். மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு. அவரிடம் என்னவென்று வினவினார். அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான். அவனின் வலியுடன் வந்த ...

கோச்சடையான் கோச்சடையான் கோச்சடையான் கோச்சடையான்

Posted: 04 Jul 2014 12:54 PM PDT

கோச்ச்டையான் பார்த்துவிட்டீர்களா?
இது எப்படியிருக்கு?????

https://www.cloudy.ec/v/e6778384a0996

பிறப்பு

Posted: 04 Jul 2014 12:50 PM PDT

கர்மம் என்பது முற்பிறப்பிற்கு நாம் செய்யும் பரிகாரம்...
தர்மம் என்பது வரும் பிறப்பிற்கு நாம் செய்யும் உபகாரம்...
கிழிந்த உடையையும், மிஞ்சிய உணவையும்
தருவது மட்டும் தர்மம் ஆகாது...
உயர்ந்த உதவியையும், சிறந்த நன்மையையும்
செய்வதே நல்ல தர்மமாகும்...
தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரின் மதிப்பில் சவாரி செய்ய மாட்டார்கள்.
தங்களுக்கு எது தெரியுமோ, எதைச் செய்ய விரும்புகின்றார்களோ அதையே செய்வார்கள்.

ஈகரைக்கு நன்றி...!

Posted: 04 Jul 2014 12:32 PM PDT

நம் தளத்துள் நுழைந்த போது எனக்கான இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அது சிறப்பு பதிவாளராக எனது ரேங்க் உயர்ந்திருந்தது தான்.

சிறப்பு பதிவாளராக எனை அங்கீகரித்த ஈகரை நிர்வாக குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி.

விமந்தனி என்ற பெயர் க்ளிட்டரிங்கில் இன்னும் அழகாய் தெரிகிறது. மீண்டும் ஈகரை நிர்வாக குழுவினருக்கு எனது நன்றி.

No.1 பணக்காரர் -கத்தார் ராஜா

Posted: 04 Jul 2014 12:11 PM PDT

2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ... 1. கத்தார் : நாணயம் : ரியால் GDP (PER CAPITA) : $ 88,222 2. லுசம்பெர்க் : நாணயம்: ஈரோ GDP (PER CAPITA) : $ 81,466 3. சிங்கப்பூர் : நாணயம்: சிங்கப்பூர் டாலர் GDP (PER CAPITA) : $ 56,694 4. நார்வே : நாணயம்: க்ரோனி GDP (PER CAPITA) : $ 51,959 5. புருனை : நாணயம் : புருனை டாலர் GDP (PER CAPITA) : $ 48,333 6. ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E ) நாணயம் : திர்ஹம் கடப் (PER காபிட) $47439 7. அமெரிக்கா ...

தெளிவு

Posted: 04 Jul 2014 12:08 PM PDT

மகிழ்ச்சித் திளைப்பில் அறிவு மயங்கிடும் இலக்கை மறக்காதே; கடமை மறக்காதே புகழ்ச்சி உரைகள் பூரிக்கச் செய்யும் போதையில் திளைக்காதே; போர்வையில் கிடக்காதே விரித்த வலையிலே புள்ளினம் சிக்கிடும் வருந்திப் பயனில்லை; தப்பிக்க வழியில்லை எதிர்ப்பு வரும்போது விழிப்பு வந்திடும் தயங்கி நிற்காதே; தடுமாற்றம் கொள்ளாதே! குதித்து எழவே துடிப்பு மேலிடும் துவண்டு போகாதே; பயந்து சாகாதே! பதுங்கும் வேங்கை ஒதுங்கி மறையாது பாய்ச்சிலில் தெரிந்துவிடும்; பார்வையில் புரிந்துவிடும் வெற்றி விளிம்பிலும் எச்சரிக்கை ...

உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ

Posted: 04 Jul 2014 12:05 PM PDT

# உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது. # மொத்தமே 499.2 ஏக்கர்தான் இந்த நாட்டின் பரப்பளவு. நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்தைவிட சிறிய நாடு. # மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். கடலோரப் பகுதி - 4.1 கிலோ மீட்டர். # நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம். (110 ஏக்கர் பரப்புக் கொண்ட வாட்டிகன் 249வது இடம்) # ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே மொனாக்கோ உள்ளது. # ...

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Posted: 04 Jul 2014 12:00 PM PDT

** கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! ** காலையில் ஒருநாள் சீரியல் நடிகையின் சிரிப்பு பேச்சில் விற்கப்பட்டது ஒரு வீடு!! கவர்ச்சி நடிகை பரிந்துரைத்த கம்பி தானாம்!! அதனால் என்னவோ இரவில் சரிந்து விழுந்தது!! இடிந்து விழுந்தபின் சட்டப்படி மண் பரிசோதனை செய்கிறார்கள் மனித சதைகள் அதிகம் உள்ளதாம்!! காசு வாங்கியவன் கம்பி எண்ணுகிறானாம்!! காசு கொடுத்தவனை கம்பிக்குள் எண்ணுகிறார்களாம்!! சடலக்குவியல்கள் அரைசதம் அடித்தாக அறிவிப்பு!! நாளைக்குள் சதமடிக்கலாம் பதபதைப்பு!! மூக்கை மூடி பார்வை ...

உன் விழி சுடரில்... என் கவிதைகள்!

Posted: 04 Jul 2014 11:54 AM PDT

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Posted: 04 Jul 2014 11:46 AM PDT

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ...

வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 04 Jul 2014 10:27 AM PDT

வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! பிரான்சிஸ் பதிப்பகம், பிளாட் எண் 26, மகிழம்பூ தெரு, பாமா நகர், தபால் தந்தி நகர் அஞ்சல், மதுரை-14. விலை : ரூ. 120 "வெற்றிமுகம்", நூலின் தலைப்பை படித்தவுடன், நூல் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. நூலாசிரியர் நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்களின் வெற்றிமுகம், முகப்பு அட்டையில் மிளிர்கின்றது. நூலை காணிக்கையாக்கிய விதத்திலேயே வித்தியாசப்படுகிறார். "என் மனைவி ஏடா, மகள் ...

சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 04 Jul 2014 09:34 AM PDT

சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி மானமிகு பதிப்பகம், 3/20-A, ஆதிபராசக்தி நகர், திருப்பாலை, மதுரை-14. விலை : ரூ. 70 ***** இனிய நண்பர் நூலாசிரியர் முனைவர் கவிஞர் வா. நேரு அவர்கள் புதுவை மற்றும் தமிழக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைபேசி மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி. என்னுடைய வேண்டுகோளை ஏற்று எழுத்து டாட் காம் மில் எழுதியவற்றை தொகுத்து ...

நாணயம் மந்திரிகளுக்கு அவசியம்

Posted: 04 Jul 2014 08:37 AM PDT

அந்த காலத்து நாணயம் : வாய்தா கொடுத்த முதல் அமைச்சரும் வாய்தா கேட்ட முன்னால் முதல் அமைச்சரும். பத்தவச்சலம் என்பவர் களவானி காங்கிரசில் காமராஜர்க்கு பின் முதல் அமைச்சராக இருந்தபோது சட்டசபை தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் பிழைப்பு வாத்த்தின் பிதாமகன் வெற்றி பெற்றார். அப்போது பிதாமகனிடம் பதவி இழந்த பத்தவச்சசலம் வாய்தா கேட்டார். எதற்கு வாய்தா கேட்டார் என்றால்.. முன் னோரு காலத்தில் இந்தியாவின் அரசர்கள் எல்லாம் தலை முடி வளர்த்து கொண்டை யிட்டு முக்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள் ...

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Posted: 04 Jul 2014 08:17 AM PDT

"இடுப்பில் டயர் போட்டுவிட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். இதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள். பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 04 Jul 2014 05:41 AM PDT

* .

அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 04 Jul 2014 05:38 AM PDT

*
நொறுக்குத்தீனி...!!
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.
*

பினாங்கில் 12 வயது மாணவனுக்கு ஜெஇ (apanese Encephalitis) வைரஸ்!

Posted: 04 Jul 2014 04:47 AM PDT

பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், "அச்சிறுவன் ...

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Posted: 04 Jul 2014 04:41 AM PDT

*
விரும்பியது எதுவும்…'' [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

Posted: 04 Jul 2014 02:14 AM PDT

நண்பர்களே..! நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள் என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி. நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும். இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் சமிபத்தில் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட இந்த தமிழ் கட்டிட கலையினை பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன். உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..! இந்த ...

ஈகரையின் நிர்வாக குழுவில் புதிதாக இணைந்துள்ள M .M செந்தில் & மானிக் இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

Posted: 04 Jul 2014 01:49 AM PDT

[eegarai]ஈகரையின் நிர்வாக குழுவில் புதிதாக இணைந்துள்ள M .M செந்தில் அண்ணன்! அவர்களுக்கும் மானிக்கும் ஈகரையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.

ஈகரை நிர்வாகத்துடன்  சிறப்புடன் தொடர தனது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.[/eegarai]

மறு அறிமுகம்

Posted: 04 Jul 2014 12:51 AM PDT

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்

தமிழின் பெருமை அறிந்த ஜெர்மன் பெண்மணி

Posted: 04 Jul 2014 12:38 AM PDT

தமிழின் பெருமை அறிந்த ஜெர்மன் பெண்மணி

நாம் மறந்துகொண்டிருக்கும் தமிழின் சிறப்பை காண்போம் இங்கே:

This posting includes an audio/video/photo media file: Download Now

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 04 Jul 2014 12:26 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

பாதுஷா

Posted: 04 Jul 2014 12:04 AM PDT

பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர் பக்கம்தான்! இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷா எக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? பாதுஷா தேவையான பொருட்கள் மைதா மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 1கப் பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன் வெண்ணை - 115 கிராம் சர்க்கரை - 1 1/2கப் தண்ணீர் - 1/4 கப் கேசரி பவுடர் - 1/4 ஸ்பூன் எண்ணெய் ...

சாவி -பழைய கணக்கு (சிந்தனை + நகைச்சுவை )

Posted: 04 Jul 2014 12:04 AM PDT

சாவி -பழைய கணக்கு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/e9z06mxvd3dhw44/PAZHAYAKANAKU-Chavee%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™