Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்... தாமதம்! 9 ஆண்டுகளாக பழைய புத்தகமே தொடரும் அவலம்

Posted:

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.அரசின் ஒப்புதலுக்கு...:இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் ...

நானும் எழுதுவேன் நட்வர் சிங்கின் குற்றச்சாட்டுக்கு சோனியா பதிலடிகாங்கிரஸ் கட்சிக்குள் துவங்கியது குழாயடி சண்டை

Posted:

நானும் எழுதுவேன் நட்வர் சிங்கின் குற்றச்சாட்டுக்கு சோனியா பதிலடிகாங்கிரஸ் கட்சிக்குள் துவங்கியது குழாயடி சண்டைபுதுடில்லி:'கடந்த 2004ல், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமராக பதவியேற்பதை, அவரின் மகன் ராகுல் தான் தடுத்தார்; பிரதமர் பதவியை சோனியா ஒன்றும் தியாகம் செய்யவில்லை' என, நெடுங்காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான, நட்வர் சிங் தெரிவித்துள்ளதற்கு, சோனியா பதிலடி கொடுத்துள்ளார். ''நானும் புத்தகம் ஒன்றை எழுதப் போகிறேன். அதில், அனைத்து உண்மைகளையும் தெரிவிப்பேன்,'' என, கூறியுள்ளார்.வெளியுறவுத் துறை முன்னாள் ...

'ரகசிய காப்பு பிரமாணத்திற்கு அர்த்தம் இல்லை'

Posted:

'பதவியேற்பின் போது மேற்கொண்ட, ரகசிய காப்பு பிரமாணத்திற்கு அர்த்தமே இல்லா மல் போய்விட்டது' என, கூறிய எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கியதால், ராஜ்யசபா பல முறை ஒத்திவைக்கப்பட்டது.கட்காரி வீட்டில் கண்டுபிடிப்புமத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீட்டில் ரகசிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் எழுப்பி வருகின்றனர். நேற்று காலை, 11:00 மணிக்கு, ராஜ்யசபா கூடியதும், கேள்விநேரத்தை ரத்து செய்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ...

ரயில்வே திட்டங்களை முடிக்க ரூ.5 லட்சம் கோடி தேவை:லோக்சபாவில் அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

Posted:

புதுடில்லி:''ரயில்வே துறையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற, 5 லட்சம் கோடி ரூபாய் தேவை,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.புதிய திட்டங்கள் இல்லை:லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது: முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட, பல ரயில்வே திட்டங்கள் நிலுவையில் இருப்பதால், சமீபத்தில், நான் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.தற்போது செயல்பாட்டில் உள்ள, 362 முக்கிய ரயில்வே திட்டங்களை முடிக்கவே, 1.82 லட்சம் கோடி ரூபாய் தேவை. இந்த, 362 திட்டங்களில், 113 திட்டங்கள், புதிய ரயில் பாதைகள் அமைப்பது, ...

மோடிக்கு 'விசா' வழங்க மறுத்தது புஷ் அரசு தான்:அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கெர்ரி தகவல்

Posted:

புதுடில்லி:இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி, ''மோடிக்கு அமெரிக்கா வருவதற்கான விசா மறுத்தது முந்தைய ஜார்ஜ் புஷ் அரசு. ஒபாமா தலைமையிலான அரசு, மோடியை வரவேற்கிறது; நாங்கள் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என கூறினார்.அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஜான் கெர்ரி, நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பல முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.பின், டில்லி யில் உள்ள இந்திய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்கு சென்ற ...

'மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதியில்லை!'

Posted:

சென்னை:''தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம்,'' என, வேளாண் அமைச்சர், கிருஷ்ணமூர்த்தி கூறினார்.சட்டசபையில் நேற்று, வேளாண்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:தே.மு.தி.க., சேகர்: அரிசி, கொண்டைக்கடலை, கடுகு உள்ளிட்ட, 15 வகை பயிர்களுக்கு மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே, இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி, வணிக பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.இதற்கு, அனுமதி வழங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். ...

குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற 83 பேர் கதி?உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல்

Posted:

சென்னை:'குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற, 83 பேரின் உத்தரவு செல்லாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நேற்று, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 'இந்த மனு, 10 நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.பத்து ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற, 83 பேர், பல்வேறு துறைகளில், தற்போது, உயர் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, 83 பேரின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போது தேர்வு ...

ஸ்டாலினுக்கு எதிரான தமிழக அரசு மனுதள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Posted:

புதுடில்லி:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகனுக்கு எதிரான, நில அபகரிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த, அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள, சேஷாத்ரி என்பவருக்கு சொந்தமான நிலத்தை, வேணுகோபால் ரெட்டி என்பவர் விலைக்கு வாங்கினார்.அப்போது, துணை முதல்வராக இருந்த, மு.க.ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி ஆகியோர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, தன் நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்ததாக, அ.தி.மு.க., ஆட்சிக்கு ...

'தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி அழைப்பு

Posted:

சென்னை:ஜனநாயகத்தை காப்பாற்ற, எதிர்கட்சிகள் புரட்சி கொடியை எந்த வேண்டும்,'' என, தே.மு.தி.க., கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, தி.மு.க, தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.தென்சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் சென்னை தி.நகரில் நடைபெற்ற, 'தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பிலான, கண்ட பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாலர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றினர்.கூட்டத்தில் தி.முக., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:என் மீது, மான நஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கிற்கு பயந்து அஞ்சி, மூலை முடுக்குகளில் முடங்கி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™