Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நிரந்தர உலக அழகி

Posted: 31 Jul 2014 12:11 PM PDT



எனது கைபேசி முகப்பில்
நிரந்தர உலக அழகி ..............

என் அக்காவின் குழந்தை
தனுஷ்கா..............


மாமா கிருஷ்ணமூர்த்தி

விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி

Posted: 31 Jul 2014 12:06 PM PDT

- பூனை மட்டுமில்ல...யாரு கண்ணை மூடிக்கிட்டாலும் உலகம் இருட்டாத்தான் தெரியும்...! - >ஸ்ரீதேவி செல்வராசன் - --------------------------------------------- - எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் பெரியவர்கள்... இழுத்துப் போடுவதையே வேலையாய் செய்கிறார்கள் குழந்தைகள் - அம்புஜா சிமி - ------------------------------------------ - ஒழுங்காப் படிக்காட்டி கழுதை மேய்க்கப் போகணும்னு பயந்து பயந்து படிச்ச பல பேர் இன்றைக்கு கழுதைதான் மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று, ...

இன்றைய சிந்தனை துளிகள்.

Posted: 31 Jul 2014 12:05 PM PDT

இன்றைய சிந்தனை துளிகள்...

தவறு செய்ததற்காக வெட்கப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒப்புக் கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.

பட்டங்களை பெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வதே பெருமை, பட்டம் பெறுவதல்ல.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள்.

இன்பமும் துன்பமும் நேர்மாறானவைதான் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் ஏற்பாடு.

ஆரோக்கியகுறைவு காரணமாகவே கெட்டகுணங்களில் பாதி உண்டாகிறது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் !

Posted: 31 Jul 2014 12:02 PM PDT

பரமார்த்த குரு மற்றும் அவரது சீடர்களின் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதே கதை, வேதங்களில் கொஞ்சம் வேறு வடிவத்தில் இருக்கிறது. தங்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணி, கரையில் நின்று அழுதுகொண்டிருந்த சீடர்களைத் துறவி ஒருவர் பார்க்கிறார். விஷயம் என்ன என்பதையும் அவர்களிடமே விசாரித்து அறிந்து கொள்கிறார். அழுது கொண்டிருந்த சீடர்களில் ஒருவனை அவர் அழைத்து நீங்கள் பத்துப் பேரும் உயிருடன்தான் இருக்கிறீர்கள்.. . பிறகு ஏன் அழுகிறீர்கள் ? என்று கேட்க, இல்லை சுவாமி.. . ஒன்பது பேர்தான் ...

தடைகளைக் கடந்து!

Posted: 31 Jul 2014 11:58 AM PDT

தோல்வியின் முகங்காண மறுப்பவனுக்கு – என்றும் துன்பங்கள் அகலாத தொடர்கதையே– தினம் போராடித் தடைகடந்து வாழ்பவனுக்கு – எந்தப் பெருஞ்சுமையும் சுகமான விடுகதையே!   வேடிக்கை பார்ப்பவருக்குக் கிட்டாது - வெற்றி   அழுது புலம்புபவருக்கு எட்டாது – வரும் வேதனையை வென்று நிற்பவருக்கே - நித்தம் வெற்றி வாய்ப்புகள் வசப்படுமே! ஆயிரம் தடைகள் எதிர்ப்படினும் – துயர் அடுத்தடுத்து வந்துனக்கு இடர்தரினும்- எல்லாம் ஆதவன்முன் பனிபோல் மறைந்திடுமே - நீயும் சாதிக்கும் இலக்கை மனங்கொண்டால்! சோதனையைத் தாண்டி ...

கமல்ஹாசன் அவர்களின் படங்கள் தோல்வியடைக் காரணம்...

Posted: 31 Jul 2014 11:57 AM PDT

- உண்மையின் பக்கம் போவதை பலர் விரும்புவதில்லை. உண்மையை தன் பக்கம் வளைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்..! - >பிரவீணா ராஜன் - -------------------------------- - துணியை வாங்கும் முன் விலையை பார்ப்பது சாப்பிடும் முன் மெனு கார்டில் விலை பார்ப்பது பிராண்டட் ஷோரூம்களைப் பார்த்து விலகிச் செல்வது பைக்கோ, ஸ்கூட்டரோ மைலைஜை பார்ப்பது தகுதிக்கு மீறி செலவு செய்வது எளிமை என்பதே அறியாதது என எல்லாம் கலந்ததே மிடில்கிளாஸ்..! - >சித்தன், கோவை - ------------------------------------ - கமல்ஹாசன் ...

சைட் பிஸ்னஸ் - பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? - சில டிப்ஸ்

Posted: 31 Jul 2014 11:56 AM PDT

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்கள், அவர்களின் கனவை நனவாக்க முடிவதில்லை என்ற தவறான புரிதல் இருக்கிறது. இந்த தவறான புரிதல் பொய் மட்டுமல்லாது சிறிய வணிக சமுதாயத்திற்கு ஆபத்தாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு தொழில்முனைவர்களும் பெரு நகரங்களில் ஒரு சிறிய அலுவலகத்தில் அமர்ந்து, விலை குறைவான உணவுகளை உட்கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தன் தொழிலை பெரிதாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருப்பார்கள் என்பது உண்மை அல்ல. தொழில் முனைவர்கள் பலரும் வறுமையில் வாடி, என்றைக்காவது ஒரு நாள் லட்சக்கணக்கான ...

இன்றைய உண்மைகள்...!!!

Posted: 31 Jul 2014 11:53 AM PDT

இன்றைய உண்மைகள்...!!! 1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது. 2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. 3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர். 4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம். 5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு. 6. கை நிறைய சம்பளம். வாய் ...

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழி கூறுங்கள்

Posted: 31 Jul 2014 11:44 AM PDT

-- 1) Walls have ears. - 2) Face is the index of mind. - 3) Spare the rod and spoil the child. - 4) Christmas comes but once a year. - 5) The mills of God grind slow but sure. - 6) As the King is, so his subjects are. - 7) Strike while the iron is hot. - 8) Make hay while the Sun shines. - 9) Ask and it shall be given unto you. - 10) Every bird must hatch its own eggs.

தாயுமானவன்- பாலகுமாரன் நாவல் .

Posted: 31 Jul 2014 11:39 AM PDT

கிங் மேக்கர் ஆவது ரொம்ப ஈஸி!

Posted: 31 Jul 2014 11:28 AM PDT

- - உழைப்பவனின் வேட்டி மடித்துக் கட்டும் உரிமை மறுக்கப்படும் போதெல்லாம் வேட்டிப் பிரச்னை எழவில்லை. அதிகாரமிக்கவர்களின் வேட்டிக்கு பங்கம் வந்த போதுதான் அது தமிழர் பிரச்னையானது..! - >யுவான் சுவாங் - ------------------------------------ - தலைமுடியை வாருவதே இல்லை... அங்கே அடைகாத்துக் கொண்டிருக்கும் குருவிகளைக் கலைத்தால் என் கவிதை நின்றுவிடும்..! - >லீனா மணிமேகளை - ----------------------------------- - சில மருந்துகளோடு ஒப்பிடும்போது வாழ்க்கை ஒரு போதும் இவ்வளவு கசப்பானதாக இருக்க ...

உணவுகளின் போட்டோகள்

Posted: 31 Jul 2014 11:07 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 31 Jul 2014 09:06 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 31 Jul 2014 05:26 AM PDT

* .

அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Posted: 31 Jul 2014 04:45 AM PDT

நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம்.  ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு  ஒரு சிறு அன்பளிப்பையாவது  கொடுத்துச்  சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட  நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை  மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தத்  திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த ...

உன்னால் வாழ்கிறேன்

Posted: 31 Jul 2014 04:27 AM PDT

என் கனவுகளின் தூரம் கொண்டு கரைந்தே நானும் தேய்ந்தேனடி.. உன் நினைவுகளின் பக்கம் வந்து வாழ்ந்தே நானும் மாய்கிறேனடி.. நிஜத்தில் உன் விழிகண்டு குளிர் காணவே... கனவில் உன் முத்தமும் என்னை சுடுகிறதடி..கண்ணே உன் புன்னகைக்குள் நான் தொலைந்ததால் இன்று.. தனிமையில் என் புன்னகைத்தேடி அலைகிறது என் கண்ணீர் துளிகள்... நீ என்னுள் வாராய் என்றே மரணம் தேடாமல்.. உன் நினைவுகளோடு இன்றும் வாழ்கிறேன் பெண்ணே..!! ..கவிபாரதி..

பிறந்த தேதி வைத்து குணங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

Posted: 31 Jul 2014 03:42 AM PDT

பிறந்த தேதி வைத்து  குணங்கள் அறிந்துகொள்ள வேண்டும்

பிபாஷா பாசுவின் காதல்...!

Posted: 31 Jul 2014 02:37 AM PDT

- "நானும் நடிகர் ஹர்மான் பவேஜாவும் காதலர்கள்தான். ஒருவழியாக, என்னைவிடவும் சிறந்த மனிதரைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் கொடுத்துவைத்தவள்' என்று சமீபத்தில் தன் காதலை ஊருக்கு உரக்கச் சொன்ன பிபாஷா பாசுவின் வலது கை விரலில் ரிங் ஒன்று புதிதாக மின்னுகிறது. - நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்து விட்டது என்று பாலிவுட்டில் ஒரே பரபரப்பு.. ------------------------------------ - சநகன் (குமுதம்)

ஹேட் ஸ்டோரி 2 - படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்

Posted: 31 Jul 2014 02:13 AM PDT

- - "ஹேட் ஸ்டோரி 2' என்கிற கில்மா ஹிந்திப் படம், சட்டசபை வரைக்கும் பேசப்படுகிறது. இப்படம் முழுக்க ஒரே கிஸ்ஸிங், படுக்கயறைக் காட்சிகள்தான். இது, பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளைச் செய்ய ஊக்குவிக்கும். இதனால் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்' என்று கர்நாடக சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. புகார் சொல்ல, பாலிவுட்டில் ஒரே புகை. - --------------------------------------

தக்காளி பணக்காரர்களுக்கானது....!

Posted: 31 Jul 2014 01:54 AM PDT

---------- புதுடெல்லி: வடமாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். - இந்நிலையில், தக்காளி பணக்காரர்களுக்கானது என்றும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறபோதிலும், மோசமான மழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. எனவே விலை உயர்வுக்காக மத்திய அரசை குற்றம் சாட்டக்கூடாது" என்று கூறியுள்ளார். - -

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம்

Posted: 31 Jul 2014 01:48 AM PDT

- வாஷிங்டன் இரண்டாம் உலகப்போரின் போது (1945–ம் வருடம், ஆகஸ்டு 6–ந் தேதி) ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதில் ஒருலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 'குட்டிப்பையன்' என்று அழைக்கப்பட்ட இந்த அணுகுண்டை 'பி–29 சூப்பர் போர்ட்ரஸ்' போர் விமானத்தில் இருந்து வீசிய அமெரிக்க வீரர்களில் ஒருவர் தியோடர் வேன் கிர்க் (வயது 94). அப்போது இவருக்கு வயது 24. அமெரிக்காவில் ஜார்ஜியாவில் வசித்து வந்த தியோடர், தனது 94 வயதில், வயோதிகத்தின் காரணமாக கடந்த 28–ந் ...

விவாகரத்து வழக்கு: ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்!

Posted: 31 Jul 2014 01:40 AM PDT

----------------------------------- - மும்பை: விவாகரத்திற்கு சம்மதிப்பதற்காக தனது மனைவி சுசன்னேவுக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம் தர நடிகர் ஹிருத்திக் ரோஷன் சம்மதித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும், நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசன்னேவுக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹிரே கான் (7), ஹிருதான் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். - இதுதொடர்பாக பேசிய நடிகர் ஹிருத்திக் ரோஷன், "எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. ...

சொல்லப்படாத ரகசியம் – முக நூலில் ரசித்தது

Posted: 31 Jul 2014 01:38 AM PDT

- எவ்வளவு நீருற்றினும் நனையவேயில்லை… கல்லின் உட்புறம்! - >மஞ்சுபாஷினி - ———————- - டயட்டிற்கென பிர்யேகமான டயட் உணவகங்களின், விலைப்பட்டியல் மட்டும் டயட்டில் இருப்பதில்லை! - >பிரபின் ராஜ் - ———————— - எல்லோருக்கும் அவரவருக்கான இன்னும் வெளியில் சொல்லப்படாத ரகசியம் என்றொன்று இருக்கத்தான் செய்கிறது..! - >சதீஷ் குமார் - ————————- - முதுகில் குத்தி விட்டு ஓடியவரின் முதுகைத்தான் பார்க்க முடியத்து..! - >ராஜா சந்திரசேகர் - ———————— - பயணச்சீட்டுக்காக பல கைகள் மாறும் ...

உபயம்

Posted: 31 Jul 2014 12:59 AM PDT

நாகரிக உலகில்
ஆணும் தலை கவிழ்ந்தான்
கை பேசியின் உபயத்தால்

தொடத் தொடத் தொல்காப்பியம் (278)

Posted: 30 Jul 2014 11:01 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 30 Jul 2014 08:43 PM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

கத்ரினாவுக்குப் பிறந்த நாள் ...

Posted: 30 Jul 2014 07:17 PM PDT

- சமீபத்தில் கத்ரினாவுக்குப் பிறந்தநாள் வந்தது. "தமாஷா' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடு என்று தன் பழைய காதலி தீபிகாவிடம் சொல்லி விட்டார் ரன்பீர். காதலியும் சொன்ன சொல்லுக்கு வந்தர். பிறகுதான், ஷூட்டிங் ஸ்பாட்டில் கத்ரினா கயீஃபின் பிறந்தநாளைக் கொண்டாடினால் தீபிகா ஒரு மாதிரி ஃபீல் பண்ணுவாரே என்று ரன்பீருக்கு உறுத்தியது. உடனே அங்கிருந்து வேறொரு இடத்துக்குச் சென்று தனிமையில் கத்ரினாவின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இருந்தாலும்கூட நாகரிகம் கருதி ட்விட்டரில் கத்ரினாவுக்கு வாழ்த்து ...

இடையழகி இலியானா...

Posted: 30 Jul 2014 07:11 PM PDT

- "ஹிப்'பழகி இலியானா, ஆஸ்திரேலியா போட்டோகிராபர் ஆண்ட்ரூ நீபோனைக் காதலித்து வருகிறார். ட்விட்டரில் இலியானாவும் ஆண்ட்ரூவும் காதல் மொழியில் உரையாடிக் கொள்கிறார்கள். ஒரு சாம்பிள்: - ஆண்ட்ரூ: நன்றாகச் சமைக்கும் ஆணை பெண்கள் காதலிப்பார்கள் இலியானா: நான் ஏன் உன்னைக் காதலிக்கிறேன் என்பதில் அதிசயம் இருக்கமுடியுமா? - ஆண்ட்ரூ: எனக்கு உன் காதல் ஒரு லாட்டரி. ஐ லவ் யூ. - இலியானா: ஹாப்பி பர்த்டே டார்லிங்... நான் உன்னுடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! - ------------------------------------------


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™