Tamil News | Online Tamil News |
- பா.ஜ., அலுவலகத்தில் அமைச்சர்கள் தொண்டர்களின் குறை கேட்க ஏற்பாடு
- என் வீட்டில் உளவு கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை மீண்டும் உறுதியாக சொல்கிறார் நிதின் கட்காரி
- காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் சதீஷ்குமார்: வேலூரில் பெற்றோர் மகிழ்ச்சி
- கும்பகோணம் தீ விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு
- பெரிய கோவில் சென்டிமென்டே காரணம்: தோல்வியால் அலறும் தி.மு.க.,வினர்
- மத்திய அரசு அலுவலகங்களில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு தாமதமாக வரும் ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்'
- சொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
- மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்?
- ரயில்களில் 2ம் வகுப்பு 'ஸ்லீப்பர்' பெட்டிகள் இனி கிடையாது? படிப்படியாக 'ஏசி' பெட்டிகளாக மாற்ற திட்டம்
- மாணவர்கள் சேராததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல்: இந்த ஆண்டு மட்டும் 100 பள்ளிகளுக்கு மூடு விழா
| பா.ஜ., அலுவலகத்தில் அமைச்சர்கள் தொண்டர்களின் குறை கேட்க ஏற்பாடு Posted: புதுடில்லி : மத்திய அரசுக்கும், பா.ஜ., கட்சிக்கும் இடையே, ஒத்துழைப்பு இருப்பதை உறுதி செய்ய, வரும் புதன்கிழமை முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மத்திய அமைச்சர், கட்சித் தலைமையகம் சென்று, தொண்டர்களை சந்திக்க உள்ளார். இம்மாதம் 2ம் தேதி, பா.ஜ., தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, 'கட்சிக்கும், அரசுக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அத்துடன், நாடுமுழுவதிலும் இருந்து, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், அரசின் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த, கருத்துக்களை கேட்டறிய ... |
| என் வீட்டில் உளவு கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை மீண்டும் உறுதியாக சொல்கிறார் நிதின் கட்காரி Posted: புதுடில்லி:'உளவு பார்க்கும் அதிநவீன கருவிகள் எதுவும், என் வீட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி மீண்டும் தெரிவித்து உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், சாலை போக்குவரத்துத் துறை கேபினட் அமைச்சராக இருப்பவர், நிதின் கட்காரி. இவரின், எண் - 13, டில்லி தீன் மூர்த்தி லேன் வீட்டிலிருந்து, அதிநவீன உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த கருவிகள் அமெரிக்க உளவு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை என்றும், செய்திகள் வெளியாகின. இதனால், பிரதமர் ... |
| காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் சதீஷ்குமார்: வேலூரில் பெற்றோர் மகிழ்ச்சி Posted: வேலூர்:காமன்வெல்த் போட்டியில், வேலூர் வீரர் சதீஷ்குமார்,23, தங்கப்பதக்கம் பெற்றார். சத்துவாச்சாரியில் உள்ள அவரது பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.வேலூர் அடுத்த சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்,65. முன்னாள் ராணுவ வீரர். வேலூர், வி.ஐ.டி. பல்கலையில், செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். மனைவி தெய்வானை, 50. மகன்கள் சதீஷ்குமார், 23, பிரதீப்குமார், 20.கடந்த, 1985 முதல் 2001 வரை, ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெபல்பூரில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில், இரண்டு முறை பங்கேற்ற சிவலிங்கம், தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். தந்தை சிவலிங்கத்தை, ரோல் மாடலாக கொண்டு, தானும் பளு ... |
| கும்பகோணம் தீ விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு Posted: தஞ்சாவூர்:கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில், நாளை, தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில், கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தன.இதில், கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை, 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன; மேலும், 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தன.24 பேர்: இது தொடர்பாக, கும்பகோணம் கிழக்கு போலீசார், ... |
| பெரிய கோவில் சென்டிமென்டே காரணம்: தோல்வியால் அலறும் தி.மு.க.,வினர் Posted: தஞ்சை பெரிய கோவிலுக்குள் செல்லும் பிரபலங்கள், தங்கள் பதவியை இழந்து காணாமல் போவது வாடிக்கையாக இருப்பதால், அந்தப் பக்கம் போவதை தவிர்க்கும் பிரபலங்கள் ஏராளம்.ஆனால், அதை மீறி, 1,000வது ஆண்டு விழாவை அப்போதைய தி.மு.க., அரசு கொண்டாடியதன் விளைவு - ஆட்சியை இழந்து, தி.மு.க., படுதோல்வி அமைந்திருக்கிறது என, கட்சியினர், தோல்விக்கு புது காரணம் கண்டு பிடித்து சொல்கின்றனர்.காலம் காலமாக:யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரமாண்டம், சிற்பம், ஓவியம், கட்டடக்கலை என, பலவற்றில் இதற்கு இணை ... |
| மத்திய அரசு அலுவலகங்களில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு தாமதமாக வரும் ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்' Posted: புதுடில்லி:மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டு உள்ளார்.திடீர் சோதனை:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், வெங்கையா நாயுடு. இவர் நேற்று தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, பல நாற்காலிகள் காலியாக இருந்தன. கிட்டத்தட்ட, 80 ஊழியர்கள் அவர்களின் இருக்கையில் இல்லை.இதையடுத்து, அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததற்கான ... |
| சொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு Posted: புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், செப்டம்பர், 15ம் தேதிக்குள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:லோக்பால் சட்டப்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை, சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனால், 2014 ஆகஸ்ட், 1ம் தேதி நிலவரப்படி உள்ள, அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள் மற்றும் டிபாசிட்கள் குறித்த விவரங்களை, அனைத்து அரசு ஊழியர்களும் சமர்ப்பிக்க ... |
| மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்? Posted: புதுடில்லி:மத்திய அமைச்சரவை, விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், 12 பேர், அமைச்சரவையில் புதிதாக இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, கடந்த மே மாத இறுதியில் பதவியேற்றது. பிரதமர் நரேந்திர மோடியையும் சேர்த்து, 46 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த, கோபிநாத் முண்டே, சாலை விபத்தில் இறந்தார்.இந்நிலையில், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர், ஜித்தேந்திரா சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் போன்றோர், ... |
| Posted: புதுடில்லி: எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் உள்ள, இரண்டாம் வகுப்பு, 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டிகளை, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளாக மாற்ற, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில், சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளே இல்லாத சூழல் ஏற்படும்.ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ரயில்வேக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி, ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.ரயில்வே துறையை நவீனப்படுத்த, ... |
| Posted: தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.தமிழகத்தில், 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்; 42, அரசு உதவிபெறும் பள்ளிகள்; 450 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது.இந்த பயிற்சியை முடித்து, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு பெற்றால், அரசு ஆரம்பப் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 29,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |