Tamil News | Online Tamil News |
- மரபணு பயிர்களுக்கு கள பரிசோதனை: பேராபத்தில் இந்தியா!
- பொ.ப., துறைக்கு இரவு 8 மணி வரை வேலை: ஊழியர்கள் அதிர்ச்சி
- தீபாவளிக்கு மாமூல் வசூலிக்க தீவிரம்: தீயணைப்பு துறையில் ரகசிய ஏலம்
- மதுரை பொதுக்கூட்டத்தை கலகலக்க வைக்க திட்டம்: ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி, முல்லைவேந்தன் கைகோர்ப்பு
- தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வங்கியை துவக்க திட்டம்
- மன்மோகன் மவுனம் காப்பது ஏன்? அறிக்கை அளிக்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
- பிரதமர் மோடிக்கு சிறப்பான ஆடைகள்: அமெரிக்க பயணத்திற்காக தயாரிப்பு
- சாலை திட்டங்களை அமல்படுத்துவதில் மாற்றம்: நிலம் கையகப்படுத்திய பின்னரே 'டெண்டர்!'
- கருணாநிதிக்கு மார்க்கண்டேய கட்ஜு கேள்வி: 'சொத்து விவரங்களை வெளியிட தயாரா?'
| மரபணு பயிர்களுக்கு கள பரிசோதனை: பேராபத்தில் இந்தியா! Posted: 'மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம்' என்று, கடந்த 18ம் தேதி, மத்திய அரசு அளித்த அனுமதி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, நம் உணவு பாதுகாப்பு குறித்தும், விவசாயம் குறித்து யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.உலகெங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் விவகாரம், சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. மரபணு மாற்று பயிர்களை, பெரு வியாபாரமாக, லாப வெறியோடு நோக்கும் சில பெரும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் செல்லுபடியாகும், வெகு சில நாடுகளில் மட்டுமே, இந்த ... |
| பொ.ப., துறைக்கு இரவு 8 மணி வரை வேலை: ஊழியர்கள் அதிர்ச்சி Posted: பொதுப்பணி துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்றிரவு, 8:00 மணி வரை பணிபுரிய, திடீரென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சட்டசபையில், இன்று காலை, பொதுப்பணி துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடக்கிறது. மூத்த அமைச்சர் பன்னீர் செல்வம் பொறுப்பில் இத்துறை உள்ளது.மானிய கோரிக்கை: இதனால், இத்துறை முக்கியத்துவம் பெற்று உள்ளது. இத்துறை மூலம், அரசின் பல்வேறு கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. அணைகள் பராமரிப்பு உள்ளிட்ட பாசன திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.கடந்தாண்டு, அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் ... |
| தீபாவளிக்கு மாமூல் வசூலிக்க தீவிரம்: தீயணைப்பு துறையில் ரகசிய ஏலம் Posted: திருப்பூர்:தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூர் கோட்ட தீயணைப்பு நிலையங்கள் சிலவற்றில், சட்டவிரோத மாமூல் வசூலுக்கான ஏலம், ஊழியர்களுக்குள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசுத்துறை ஊழியர்களில் சிலர், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, வசூல் நோட்டுடன் வலம் வருவது வழக்கம். கடை, நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, 'தீபாவளி வரவு' வைத்து வசூலில் ஈடுபடுவர்.கறைபடிந்த அதிகாரிகளுக்கு 'கவர்'களும், 'அன்பளிப்பு' என்ற பெயரில் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கப்படும். நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.திருப்பூர் ... |
| மதுரை பொதுக்கூட்டத்தை கலகலக்க வைக்க திட்டம்: ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி, முல்லைவேந்தன் கைகோர்ப்பு Posted: 'தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில், வரும் 1ம் தேதி, மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரது பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், அதே தினத்தன்று, கட்சியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரியும், முல்லைவேந்தனும் நேரில் சந்தித்து, அடுத்தக்கட்ட வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.பல்வேறு புகார் தொடர்பாக, தர்மபுரி மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் சமீபத்தில், ... |
| தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வங்கியை துவக்க திட்டம் Posted: புதுடில்லி:தெற்காசிய நாடுகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக, 'தெற்காசிய மேம்பாட்டு வங்கி' என்ற பெயரில், புதிய வங்கியைத் துவங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 'சார்க்' நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் விவாதிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், 'பிரிக்ஸ்' அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில், 'பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி' துவங்கப்பட்டது. இந்த வங்கியைத் துவங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பது, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.இதையடுத்து, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான, ... |
| மன்மோகன் மவுனம் காப்பது ஏன்? அறிக்கை அளிக்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி:''ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய விவகாரத்தில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தொடர்ந்து மவுனம் காத்து வருவது, அதில் ஏதோ நடந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது. எனவே, மன்மோகன் சிங், இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.பதவி நீட்டிப்பு:'பிரஸ் கவுன்சில்' எனப்படும், ஊடகங்களை கட்டுப்படுத்தும் அமைப்பின் தலைவராக இருக்கிறார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு. இவர், பத்தாண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை ... |
| பிரதமர் மோடிக்கு சிறப்பான ஆடைகள்: அமெரிக்க பயணத்திற்காக தயாரிப்பு Posted: புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் அமெரிக்கா செல்லும் போது அணியும் ஆடைகளை தயாரிப்பதற்காக, பிரபல ஆடை வடிவமைப்பாளர், டிராய் கோஸ்டாவிடம், 'ஆர்டர்' அளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் இளம் பிரதமர்களில், ராஜீவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள நரேந்திர மோடி, ஸ்டைல் பிரதமராக விளங்குகிறார். அணியும் ஆடைகள், நடந்து செல்லும் பாங்கு, பேசும் விதம் போன்றவற்றில், தனித்தன்மையை கடைபிடிக்கிறார். இதனால், இந்தியாவின், 'ஸ்டைல் பிரதமர்' என, 'பிரிக்ஸ்' மாநாட்டின் போது, வெளிநாட்டு பத்திரிகைகள் அவரை புகழ்ந்துள்ளன. இந்நிலையில், அவரின் ஆடைகளை தயாரிக்க, நாட்டின் பிரபல ... |
| சாலை திட்டங்களை அமல்படுத்துவதில் மாற்றம்: நிலம் கையகப்படுத்திய பின்னரே 'டெண்டர்!' Posted: புதுடில்லி:''முந்தைய அரசில் பின்பற்றப்பட்ட திட்டம் போல் இல்லாமல், 80 சதவீத நிலம் கையகப்படுத்திய பிறகே, புதிய சாலைத் திட்டத்திற்கான, 'டெண்டர்' வெளியிடப்படும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, 300 திட்டங்கள் கொண்ட தொகுப்பு ஏற்படுத்தப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிதின் கட்காரி கூறினார்.இதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுமையைப் புகுத்தியுள்ளது தெரிய வருகிறது.பா.ஜ., முன்னாள் தேசிய தலைவரான நிதின் கட்காரி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின், சாலை போக்கு ... |
| கருணாநிதிக்கு மார்க்கண்டேய கட்ஜு கேள்வி: 'சொத்து விவரங்களை வெளியிட தயாரா?' Posted: புதுடில்லி:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில், கருத்து தெரிவித்திருந்த, 'பிரஸ் கவுன்சில்' தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவுக்கு, கண்டனம் தெரிவித்திருந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதியிடம், நீதிபதி கட்ஜு, கேள்வி எழுப்பியுள்ளார். 'அரசியலுக்கு வரும் முன், கருணாநிதியின் சொத்து விவரத்தையும், அரசியலுக்கு வந்த பிறகு அவரும், அவர் குடும்பத்தினரும் சம்பாதித்த சொத்து விவரத்தையும் வெளியிடத் தயாரா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2006 முதல், 2011 வரை பதவி வகித்த மார்க்கண்டேய கட்ஜு, இப்போது, 'பிரஸ் கவுன்சில்' தலைவராக உள்ளார். அதற்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |