Tamil News | Online Tamil News |
- சிறார் சட்டத்தை திருத்த அரசு முடிவு: அமைச்சர் மேனகா கோரிக்கை ஏற்பு
- வி.கே.சிங் குற்றச்சாட்டு: சி.பி.ஐ., திடீர் பல்டி
- இப்தார் நிகழ்ச்சி: சென்னை திரும்பும் விஜயகாந்த்: பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு
- பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'
- 'டிரக்ஸ் கேபிட்டல்' ஆக மாறும் கர்நாடகா: 3 ஆண்டுகளில் ரூ.14,000 கோடி போதை பொருட்கள் விற்பனை
- நாங்கள் வருவது ஆளுங்கட்சியினருக்கு பிடிக்கவில்லை: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
- கடல் எல்லைப்பகுதியில் மிதவைகளை நிறுவக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்
- 10 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி கட்ஜு இப்போது வாய் திறப்பது ஏன்? தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி
- மிரட்டிய தி.மு.க., அமைச்சர் யார்? எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்!
- நீதிபதி நியமன விவகாரத்தில் மார்க்கண்டேய கட்ஜு கேள்விக்கணை: ஆறு கேள்விகளை கேட்டு பதிலளிக்குமாறு வலியுறுத்தல்
- சட்டசபைக்கு வர தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை: 4 முறை 'வெளியேற்றப்பட்டதால்' சபாநாயகர் உத்தரவு
| சிறார் சட்டத்தை திருத்த அரசு முடிவு: அமைச்சர் மேனகா கோரிக்கை ஏற்பு Posted: புதுடில்லி: சிறார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. நடைமுறையில் உள்ள சிறார் சட்டத்தின்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறாராக கருதப்படுகின்றனர். இந்த வயதுக்குட்பட்டவர்கள், பாலியல் பலாத்காரம் போன்ற கடுமயான குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு, குறைந்தபட்ச தண்டனை தான் கிடைக்கும். ஆயுள், தூக்கு போன்ற தண்டனைகளை, இவர்களுக்கு அளிக்க முடியாது. ஆனால், சமீபகாலமாக, பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோரில், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், 'சிறார் சட்ட வயது ... |
| வி.கே.சிங் குற்றச்சாட்டு: சி.பி.ஐ., திடீர் பல்டி Posted: புதுடில்லி: மத்திய அமைச்சர் வி.கே.சிங், தெரிவித்த லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என, கடந்தாண்டு கூறியிருந்த சி.பி.ஐ., தற்போது, தன் நிலையை மாற்றி கொண்டுள்ளது.தற்போதைய, வெளியுறவு இணை அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், கடந்தாண்டு ஒரு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில், 'ராணுவத்துக்கு தேவையான லாரிகளை, 'டாட்ரா' என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கினால், 10 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங், என்னிடம் கூறினார்' என, தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., 'வி.கே. சிங்கின் குற்றச்சாட்டுக்கு எந்த ... |
| இப்தார் நிகழ்ச்சி: சென்னை திரும்பும் விஜயகாந்த்: பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு Posted: தே.மு.தி.க., சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்கவிருக்கிறது. இதற்காக, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜயகாந்த், விரைவில் சென்னை திரும்புகிறார்.தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி தலைமை அலுவலகத்தில், ஆண்டு தோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, வரும் 27ம் தேதி நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த 12ம் தேதி, மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன், சிங்கப்பூருக்கு சென்றார். சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ... |
| பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்' Posted: கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, தொடர்ச்சியாக, 15 நாட்கள் நடந்துள்ளன. தொடர்ந்து, ஆகஸ்ட், 4ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை நடந்த கலந்தாய்வில், 53,526 இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 1,50,319 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், தினமும், 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்கள் எண்ணிக்கை, அண்ணா பல்கலையை, கவலை ... |
| 'டிரக்ஸ் கேபிட்டல்' ஆக மாறும் கர்நாடகா: 3 ஆண்டுகளில் ரூ.14,000 கோடி போதை பொருட்கள் விற்பனை Posted: தகவல் தொழில் நுட்பத்தில் பிரபலமடைந்திருந்த கர்நாடகா, தற்போது, போதை பொருட்கள் வியாபாரத்தால், 'டிரக்ஸ் கேபிட்டல்' என்ற அவப்பெயரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, போதை பொருள் வியாபாரம் நடந்துள்ளதாக, கலால் துறை கணித்துள்ளது.போதை பொருள் விற்பனையும், கடத்தலும், கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூரு, மங்களூரு, ஹூப்ளி - தார்வாட், பெல்காம், மைசூரு ஆகிய மாவட்டங்களில், போதை பொருட்கள் தாராளமாக புழங்குகின்றன. கர்நாடக மாநிலத்தில், கடந்த, 2010 - 11ல், 2,800 கோடி ரூபாய்; ... |
| நாங்கள் வருவது ஆளுங்கட்சியினருக்கு பிடிக்கவில்லை: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு Posted: சென்னை: ''நாங்கள் சட்டசபைக்கு வருவது, அமைச்சர்கள், முதல்வர், சபாநாயகருக்கு பிடிக்கவில்லை. எனவே, திட்டமிட்டு எங்களை வெளியேற்றினர்,'' என, தி.மு.க., சட்டசபைத் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.வருவாய்த் துறை அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகரை முற்றுகையிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.நிவாரணம் வழங்கக்கோரி: அதை கண்டித்து, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள், சட்டசபைக்கு வெளியில் கூறியதாவது: தி.மு.க., ஸ்டாலின்: தமிழகத்தின் சில பகுதிகள், வறட்சியால் ... |
| கடல் எல்லைப்பகுதியில் மிதவைகளை நிறுவக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் Posted: சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேசும்போது, தமிழக அரசின் கருத்துக்களை, அமைச்சகங்களுக்கு இடையிலானக் குழு, கவனத்தில் கொண்டு, நீண்ட கால தீர்வு ஏற்படும் வகையில், மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.மீனவர் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு நேற்று, ஏழாவது முறையாக, முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக, கடந்த மாதம், 17ம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை அமைச்சரோடு, பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில் ... |
| 10 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி கட்ஜு இப்போது வாய் திறப்பது ஏன்? தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி Posted: சென்னை: 'பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து, நீதிபதி மார்கண்டேய கட்ஜு, இப்போது வாய் திறந்தது ஏன்? யாருடைய நிர்ப்பந்தத்தில், அவர் பேசுகிறார். குற்றம் சுமத்திய நீதிபதியின் பெயரை, அவர் வெளியிடாதது ஏன்?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக கட்சி நிர்பந்தம்: இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான, மார்கண்டேய கட்ஜு, தன் இணைய தள பக்கத்தில், சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில், மாவட்ட ... |
| மிரட்டிய தி.மு.க., அமைச்சர் யார்? எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்! Posted: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட விவகாரம், இரண்டாவது நாளாக, மீண்டும், பார்லிமென்ட்டில் எதிரொலித்தது.ராஜ்யசபா கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இதையடுத்து, சபை, 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. லோக்சபாவில், இதே விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி, அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் தம்பித்துரை, 'நோட்டீஸ்' வழங்கியிருந்தார். ... |
| Posted: புதுடில்லி: 'நீதிபதி நியமன விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூவர், வளைந்து கொடுத்தனர்' என, 'பிரஸ் கவுன்சில்' தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்ததற்கு, முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதி மறுப்பு தெரிவித்திருந்தார். அவரிடம் நேற்று, ஆறு கேள்விகளை கேட்டு, பதிலளிக்குமாறு கட்ஜு வற்புறுத்தியுள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய, மார்க்கண்டேய கட்ஜு, 2004 நவம்பரில், கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி, விசாரணை நடத்துமாறு ... |
| சட்டசபைக்கு வர தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை: 4 முறை 'வெளியேற்றப்பட்டதால்' சபாநாயகர் உத்தரவு Posted: சென்னை: சட்டசபையில், நேற்று, அமைச்சர் பேச் சை, சபை குறிப்பில் இருந்து நீக்கக் கோரி, அமளியில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். நடப்பு கூட்டத் தொடரில், இதுபோல், அவர்கள் வெளியேற்றப்படுவது, இது, நான்காவது முறை என்பதால், 'தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும், சபை நடவடிக்கையில், கலந்து கொள்ள இயலாது' என, சபாநாயகர் அறிவித்தார்.சட்டசபையில், நேற்று, தமிழகத்தின் சில பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், எதிர்க்கட்சி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |