Tamil News | Online Tamil News |
- இரண்டு மாநிலங்களில் ஆட்சி பறிபோகும் நிலையால் காங்., கிலி: அசாம், மகாராஷ்டிரா அமைச்சர்கள் திடீர் ராஜினாமா
- ஐகோர்ட்டில் ஊழல் புகார் நீதிபதி பதவியில் நீடித்தது எப்படி? இணையதள பக்கத்தில் மார்க்கண்டேய கடஜு விளக்கம்
- பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன: சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் பேட்டி
- மின்வெட்டு குறித்து பேச தி.மு.க.,விற்கு அருகதை இல்லை: சட்டசபையில் முதல்வர் காட்டம்
- இந்தியை போல் சமஸ்கிருத வார விழாவுக்கு திருத்தம்: கருணாநிதி வலியுறுத்தல்
- தமிழக பொருட்களின் தரம்; ஊழியர்களின் செயல்பாடு: உலக வங்கி தலைவர் பாராட்டு
- கட்சியை பிளக்க யார் சதி செய்தது: கருணாநிதி அறிக்கையால் தலைவர்கள் குழப்பம்
- பார்வையற்ற மூன்று சிறுவர்களை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணையா?
| Posted: புதுடில்லி: அசாம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர், தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால், கட்சி மேலிடம் கிலி அடைந்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, படு தோல்வி அடைந்து, மத்திய ஆட்சியை இழந்தது. காங்., ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரசுக்கு படு தோல்வி தான் பரிசாகக் கிடைத்தது.விஸ்வரூபம்: அதன் ... |
| Posted: 'சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி தான் காரணம்' என, 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர், மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவருமான மார்கண்டேய கட்ஜு, தன் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு கூடுதல் நீதிபதி இருந்தார். அவர் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் ... |
| பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன: சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் பேட்டி Posted: சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியில், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையும் அரசின் சாதனையாக, விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என, தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் பேச, அனுமதி அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் நேற்று, இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர். முதல் முறை வெளிநடப்பு செய்ததும், சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:அனுமதி தரவில்லை: நாட்டில் நிலவும், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்துள்ளோம். அந்த ... |
| மின்வெட்டு குறித்து பேச தி.மு.க.,விற்கு அருகதை இல்லை: சட்டசபையில் முதல்வர் காட்டம் Posted: சென்னை: ''மின்வெட்டு குறித்து பேச, தி.மு.க.,விற்கு அருகதை இல்லை. ஏனெனில், மின்வெட்டு என்பதை, தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே, தி.மு.க., ஆட்சி தான்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது: தி.மு.க., உறுப்பினர் பெரியசாமி, இன்னும் கூடுதலாகப் பேச, நேரம் கேட்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை, 50 நிமிடங்களாக கேட்டோம். அவர் திரும்ப திரும்ப, 'மின்வெட்டு' என்கிறார்.பேச்சுக்கே இடமில்லை: மின்வெட்டு குறித்து பேச, தி.மு.க.,விற்கு அருகதை இல்லை. ஏனெனில், மின்வெட்டு என்பதை, தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே, தி.மு.க., ஆட்சி தான். ... |
| இந்தியை போல் சமஸ்கிருத வார விழாவுக்கு திருத்தம்: கருணாநிதி வலியுறுத்தல் Posted: சென்னை: ''இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மட்டுமே, அம்மொழியை சமூக வளைதளங்களில், அதிகாரிகள் பயன்படுத்தலாம் என, அறிவித்தது போல், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதற்கும், மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்த பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை, என்றைக்கும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் நாட்டில் உள்ள, சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பை, அனுமதிக்க முடியாது. இதற்கு, கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் ... |
| தமிழக பொருட்களின் தரம்; ஊழியர்களின் செயல்பாடு: உலக வங்கி தலைவர் பாராட்டு Posted: சென்னை: ''தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம் மற்றும் ஊழியர்களின் செயல்பாடு நன்றாக உள்ளதால், உலகம் முழுவதும் இருந்து, தொழில் முனைவோர், சென்னையில் தொழில் துவங்கி வருகின்றனர்,'' என, உலக வங்கித் தலைவர், ஜிம் யங் கிம் தெரிவித்து உள்ளார்.டில்லியில் இருந்து, நேற்று, சென்னை வந்த ஜிம் யங் கிம், விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்திற்கு அடுத்த இடத்தில், சென்னையில் இயங்கி வரும், உலக வங்கியின் கிளை உள்ளது. கடந்த 2001ல், சென்னையில், உலக வங்கி கிளை, ஏழு ஊழியர்களுடன் துவங்கப்பட்டு, இன்று, 700 ஊழியர்கள் வரை ... |
| கட்சியை பிளக்க யார் சதி செய்தது: கருணாநிதி அறிக்கையால் தலைவர்கள் குழப்பம் Posted: சென்னை: தி.மு.க., பிளவுபடுத்தப்பட்டு விடும் என மனப்பால் குடிப்பவர்கள் ஏமாந்து விட்டனர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.'லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவி விட்டதால், கட்சி இனி எழுந்திருக்கவே முடியாது. முன்னணி தலைவர்கள் எல்லாம், கட்சியை விட்டு விலகி ஓடிவிடுவர். தலைமையும், இனி எழுந்திருக்கவே எழுந்திருக்காது என்று, வழக்கம் போல, நம் எதிரிகள் மனப்பால் குடித்தனர். அவர்களுடைய கற்பனையான எண்ணங்கள் எல்லாம், தூள் தூளாக்குகின்ற வகையில், கழகத்தின் அடிமட்டத்தில் ஆணி வேர்களாக உள்ள, ஒரு தொண்டன் கூட அசையவில்லை' என, ... |
| பார்வையற்ற மூன்று சிறுவர்களை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் Posted: காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களை, ஆசிரியர் பிரம்பால் மிருகத்தமான தாக்கும் வீடியோ வெளியாகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 'கிரீன்பீல்டு ரெசிடென்ஷியல் பள்ளி' என்ற பெயரில், பார்வை திறன் அற்ற மாணவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. இதில், 62 மாணவர்கள் தங்கி, படிக்கின்றனர். இங்கு படிக்கும், 10 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களை, அந்த பள்ளியின் ஆசிரியர், பிரம்பால் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ, நேற்று வெளியானது. அதில், சிறுவர்களின் தலையை ஒரு கையால் பிடித்து ... |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணையா? Posted: புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அதேநேரத்தில், மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கும் பதில் அளித்துள்ளனர்.இருமுறை: இதுதொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடுகள் நடந்த காலகட்டத்தில், பிரதமர் மன்மோகன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |