Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு பங்களாக்களை காலி செய்யாத 'மாஜி'க்கள்: மத்திய அரசு விளக்கம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி:'அரசு பங்களாக்களை காலி செய்யாமல், நீண்ட நாள் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர்கள், 22 பேரும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலரும், அரசு பங்களாக்களை காலி செய்யாமல், அவற்றிலேயே தங்கி இருப்பதாக, பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இந்த பத்திரிகை செய்தியுடன், கடிதம் ஒன்றை, உச்ச நீதிமன்றத்திற்கு, முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் அனுப்பி வைத்திருந்தார்.இதை மனுவாக ஏற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோடா தலைமையிலான அமர்வு, 'பதவிக்காலம் ...

முதியோர் உதவித்தொகை பலருக்கு 'கட்' அரசுக்கு நிதிச்சுமை எதிரொலி

Posted:

மதுரை:ஆளுங்கட்சியினர் சிபாரிசின் பேரில் சரிபார்த்தலே இல்லாமல் முதியோர் உதவித்தொகையை வழங்கியதால், அரசுக்கு ரூ. பலகோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. எனவே பயனாளிகள் எண்ணிக்கையை குறைப்பதற்காக, பலரது உதவித்தொகையை நிறுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் கடந்த தி.மு.க., ஆட்சியில் ரூ.500 வழங்கப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்தொகை ரூ ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும், இத்திட்ட புதிய பயனாளிகள் தேர்வும் முறையாக நடக்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ., சிபாரிசு அல்லது அ.தி.மு.க., ...

பயிற்சி என்ற பெயரில் பத்தாண்டுகள் 'சிறை': பட்டாலியன் போலீசார் புலம்பல்

Posted:

மதுரை: தமிழகத்தில் 2011ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்த பட்டாலியன் படை போலீசார், பத்தாண்டுகள் கட்டாயம் அந்த படையிலேயே பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவால் தாங்கள் 'சிறை' வைக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.போலீஸ் துறையில் சேருபவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி பள்ளியில் அடிப்படை விஷயம் கற்றுத்தரப்படும். பின், பட்டாலியன் படைக்கும், காலியிடங்களை பொறுத்து ஆயுதப்படை, உள்ளூர் ஸ்டேஷன்களுக்கும் போலீசார் இடமாற்றப்படுவர். இதுதான் காலம் காலமாக நடந்த முறை. ஆனால், கடந்த 2011ல் பட்டாலியன், ஆயுதப்படைக்கு என தனித்தனியாக போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், ...

நாங்கள் தோற்கவில்லை; மக்கள் தான் தோற்றனர்: கடலூரில் ஸ்டாலின் பேச்சு

Posted:

கடலுார்: "லோக்சபா தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை. தமிழக மக்கள்தான் தோற்றுவிட்டனர்" என கடலுாரில் நடந்த திருமண விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., மாணவரணி மாநிலச் செயலாளர் புகழேந்தி - - ரத்தினமாலா ஆகியோரின் மகள் காவியச்செல்வி, திருச்சி ராஜசேகரன் -- சுமதி மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரின் திருமணம், கடலுாரில் நேற்று நடந்தது.திருமணத்தை நடத்தி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:இன்று மண வாழ்க்கை மேற்கொள்ளும் தம்பதிகள், தங்களது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.நேற்று (நேற்று முன்தினம்) சட்டசபையிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டதும், ...

தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

Posted:

சென்னை:''முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பின், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த கிடைத்துள்ள வெற்றி, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றி,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.ஜவர் குழு:சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஆனந்த் தலைமையில், ஐவர் குழுவை அமைத்தது. 'இக்குழுவில், தமிழகம் இடம் பெறாது' என, முதலில் முடிவெடுத்த, அப்போதைய தி.மு.க. அரசு, அதன்பின், பங்கேற்பது என, முடிவு செய்து, தமிழக பிரதிநிதியை, ...

கருப்பு பண முதலைகள்: 700 பேர் பட்டியல் தாக்கல்

Posted:

புதுடில்லி:''சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள், 700 பேரின் பெயர், விவரத்தை பிரான்சிடம் இருந்து பெற்றுள்ளோம்,'' என, லோக்சபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.இந்தியாவில் முறைகேடான விதங்களில் பணத்தை சம்பாதித்தவர்கள், வருமான வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவும், அந்த பணத்தை பதுக்கவும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று நிதி ...

பயங்கரவாதி சயீத்தை கைது செய்ய முடியாது: சொல்கிறார் இந்தியாவுக்கான பாக்., தூதர்

Posted:

புதுடில்லி : ''ஜமாயத் - உத் - தாவா அமைப்பின் தலைவர், பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, இந்திய பத்திரிகையாளர் வேத பிரதாப் வைத்திக் சந்தித்தது பற்றி, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது. மேலும், சயீத்துக்கு எதிராக, எந்த ஆதாரங்களும் இல்லாததால், அவரை கைது செய்ய முடியாது,'' என, இந்தியாவுக்கான பாக்., துாதர் அப்துல் பாசித் தெரிவித்தார்.தனி நபர் சந்திப்பு: டில்லியில், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:ஹபீஸ் சயீத்து - வேத பிரதாப் வைத்திக் சந்திப்பானது, இரு தனிநபர்கள் இடையேயானது. இந்த சந்திப்பு பற்றி, பாக்., அரசுக்கு எதுவும் தெரியாது; ...

மலேசிய விமான விபத்தில் தொடர்கிறது மர்மம்: 181 உடல்கள்; கருப்பு பெட்டிகள் கண்டெடுப்பு

Posted:

கோலாலம்பூர்:உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதி யில், ரஷ்ய எல்லைக்கு அருகில், 298 பேருடன் வெடித்துச் சிதறிய மலேசிய விமான விபத்திற்கான காரணம், இன்னும் புலப்படவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, அதன் எதிரி நாடான உக்ரைன் தெரிவிக்கிறது; அதை ரஷ்யா மறுத்துள்ளது. பலியான, 181 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டிகளும் கிடைத்துள்ளன.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு, 283 பயணிகள் மற்றும் 15 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த, மலேசிய ...

கர்நாடகாவில் மழை கொட்டுவதால் காவிரியில் வெள்ளம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை நீடிப்பதால், நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட முக்கிய அணைகள், முழு கொள்ளளவை எட்ட உள்ளன.பாதுகாப்பு கருதி, இவ்வணைகளில் இருந்து, 18 ஆயிரம் கனஅடி நீர், காவிரியில் திறந்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™