Tamil News | Online Tamil News |
- நேரு குடும்பத்தின் 5வது தலைமுறையும் பார்லிமென்ட்டுக்குள் நுழைந்தது
- சென்னை தனியார் 'கிளப்'களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை: வேட்டிக்கு தடை விதித்தால் அனுமதி ரத்தாகும்: புது சட்டம் கொண்டு வர முடிவு
- கருணை கொலை அனுமதி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி: கருத்து சொல்லுமாறு எல்லா மாநிலங்களுக்கும் 'நோட்டீஸ்'
- நம்பிக்கை தரும் 'பிரிக்ஸ்' வங்கி: இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி
- கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை: அமைச்சர் மீது கருணாநிதி காட்டம்
- பொன்னேரியில் ஜப்பான் உதவியுடன் 750 ஏக்கரில் 'ஸ்மார்ட் சிட்டி': மாஸ்டர் பிளான் தயாரிப்பு பணிகள் துவக்கம்
- டில்லி மாநிலத்தில் விரைவில் பா.ஜ., ஆட்சி? மோடி முடிவுக்காக காத்திருப்பு
- சென்னை விமான நிலையத்தில் கொள்ளையோ கொள்ளை: வாகனங்கள் கட்டாய கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை
- காலாவதியான மேம்பாலங்கள் சென்னைக்கு தேவையா? ஈகா தியேட்டர் - - வள்ளுவர்கோட்டம் மேம்பாலத்தால் புதிய சிக்கல்
| நேரு குடும்பத்தின் 5வது தலைமுறையும் பார்லிமென்ட்டுக்குள் நுழைந்தது Posted: புதுடில்லி: பிரியங்காவின் மகன் ரைஹான், சபை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக, நேற்று லோக்சபாவுக்கு வந்ததால், காங்., எம்.பி.,க்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா என்ற தொழில் அதிபரை திருமணம் முடிந்துள்ளார். இவர்களுக்கு, ரைஹான் என்ற மகனும், மிரயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ரைஹான், 13, மூன்று நண்பர்களுடன், நேற்று லோக்சபாவுக்கு வந்தார். சபாநாயகருக்கு நேர் எதிரில் உள்ள பார்வையாளர் மாடத்துக்கு சென்று, அமைதியாக, சபை நடவடிக்கைகளை பார்த்தார். பின், தன் பாட்டி சோனியாவை சந்தித்து, சிறிது நேரம் பேசிவிட்டு, ... |
| Posted: சென்னை: ''வேட்டி அணிவதற்கு தடை விதித்து, தமிழர் கலாசாரத்துக்கு எதிராக செயல்படும், தனியார் 'கிளப்'களின் அனுமதி ரத்து செய்யப்படும். இதற்கான, சட்டம், நடப்பு சட்ட சபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்கவும், உரையாடவும் தடையில்லை. தமிழகத்தில், தனியார் 'கிளப்'களில் நடக்கும் நிகழ்ச்சியில், வேட்டி அணிந்து பங்கேற்க தடை விதித்திருப்பது, அரசியல் அமைப்புச் ... |
| Posted: புதுடில்லி: 'கருணைக் கொலை யை, சட்ட ரீதியாக அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கருத்துச் சொல்ல வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.'உடல் உறுப்புகள் செயல் இழந்த பிறகும், மரணம் அடையாமல், பல ஆண்டுகளாக சிகிச்சை பெறும் நோயாளியின், செயற்கை சுவாசத்தை நிறுத்துவதன் மூலம், அவரை சாக அனுமதிக்க வேண்டும். இந்த கருணைக் கொலையை, சட்டப் பூர்வமாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், 'ஒருவரை கவுரவமாக சாக ... |
| நம்பிக்கை தரும் 'பிரிக்ஸ்' வங்கி: இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி Posted: போர்ட்டாலிசா: பிரிக்ஸ்' நாடுகளின் வளர்ச்சிக்காக, 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயரில், புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. 'சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக, இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.பிரேசிலில் நடைபெற்ற, 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக, புதிய வளர்ச்சி வங்கி தேவை என, ... |
| கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை: அமைச்சர் மீது கருணாநிதி காட்டம் Posted: சென்னை: ''என்னை அறிக்கை நாயகர் என, சட்டசபையில் கேலி, கிண்டல் செய்து, சபையின் மாண்பினை குலைக்க, கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படாதீர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக, அவரது அறிக்கை: சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. என் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, அங்கு நான் அமர்வதற்கு, இந்த ஆட்சியினர் முறையான இடவசதி செய்து தராத காரணத்தால், நான் சபைக்கு செல்வதில்லை. அங்கு நடைபெறும், நடைமுறைகள் வழக்கம் போலவே உள்ளன. அமைச்சர்கள், தங்கள் துறை சம்பந்தப்பட்ட மானியங்களுக்கு பதில் அளிக்கும் போது, முதல்வருக்கு பாராட்டுப் புராணம் ... |
| Posted: சென்னை அருகே பொன்னேரியில், மத்திய அரசு அறிவித்துள்ள, 'ஸ்மார்ட் சிட்டி' துணை நகரம், ஜப்பான் நிதி உதவியுடன், 750 ஏக்கரில் அமைய உள்ளது.நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையில், தொழில்வள வழித்தடங்களை உருவாக்கும் திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதில் தென் மாநிலங்களில், சென்னை - பெங்களூரு தொழில்வள வழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் பெரிதான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், 'நாடு முழுவதும், 100 துணை நகரங்கள் ஏற்படுத்தப்படும்' என, லோக்சபா தேர்தல் அறிக்கையில் பா.ஜ., ... |
| டில்லி மாநிலத்தில் விரைவில் பா.ஜ., ஆட்சி? மோடி முடிவுக்காக காத்திருப்பு Posted: புதுடில்லி: டில்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க, பா.ஜ., முயற்சி மேற்கொண்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலில் இருந்து நாடு திரும்பியதும், இதுகுறித்த முக்கிய முடிவை, அக்கட்சி மேலிடம் எடுக்க உள்ளது.டில்லி மாநிலத்தில், 2013 டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், பா.ஜ., அதிகபட்சமாக, 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எட்டு தொகுதி களில் வெற்றி பெற்ற, காங்., ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக ... |
| சென்னை விமான நிலையத்தில் கொள்ளையோ கொள்ளை: வாகனங்கள் கட்டாய கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை Posted: சென்னை விமான நிலையத்தின், உள்நாட்டு முனைய வருகை பகுதிக்கு வரும், வாகனங்கள் இனி கட்டணம் செலுத்தாமல், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாத வகையில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதியால், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கட்டுப்பாடு இல்லை: சென்னை விமான நிலைய, உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில், 'அலைட்டிங் பாயின்ட்' எனப்படும், 'போர்ட்டிகோ' பகுதியில், வெளியூர்களில் இருந்து வரும் உள்நாட்டு விமான பயணிகளை, அவரவர் வாகனங்களில் வந்து அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த வார ... |
| Posted: உலக அளவில், காலாவதியாகிவிட்ட மேம்பாலங்கள் அமைப்பதில், சென்னை மாநகராட்சி அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், சென்னையில் ஈகா தியேட்டர் -- வள்ளுவர் கோட்டம் உட்பட, 12 மேம்பால திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையில் பல்வேறு பிரதான சாலைகள், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கின்றன. ஆனால், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அப்போது இருந்ததை காட்டிலும் பல மடங்காக அதிகரித்து உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைகளும், போக்குவரத்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 17,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |