Tamil News | Online Tamil News |
- குற்றவாளிகளுக்கு வயது வரம்பு தேவையா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
- மத்திய அரசு பணிக்கு மாற்றம் : அதிகாரி அசோக் கெம்கா நிம்மதி
- சட்டசபை கேள்வி நேரத்தில் மின் பிரச்னை: பதில் தயாரிப்பில் அதிகாரிகள் மும்முரம்
- காமராஜரின் கருத்துக்களை ஏற்று செயல்பட்டேன்: கருணாநிதி
- 'சுனாமி' தாக்கிய போது கருணாநிதி எங்கிருந்தார்? முதல்வர் கருத்தை கண்டித்து தி.மு.க., வெளிநடப்பு
- பயங்கரவாதி - பத்திரிகையாளர் சந்திப்பில் அரசுக்கு தொடர்பில்லை: மத்திய அரசு விளக்கம் தந்தும் பார்லிமென்டில் அமளி
- ரூ.1.80 லட்சம் கோடி: நெடுஞ்சாலை திட்ட பணிகள் அடுத்த மாதம் துவக்கம்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கட்காரி அறிவிப்பு
- ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக்க நடவடிக்கை: அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
- பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது: 'பிரிக்ஸ்' மாநாட்டில் மோடி பேச்சு
- தமிழக கோரிக்கையை ஏற்க காவிரி டிரிபியூனல் கைவிரிப்பு: சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு உத்தரவு
- காந்தி படுகொலை ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: வெங்கையா
- கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?: வீரேந்திர கட்டாரியா காட்டம்
| குற்றவாளிகளுக்கு வயது வரம்பு தேவையா? உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: புதுடில்லி: 'சிறார் நீதிச்சட்டத்தை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில், 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஈடுபடுவது, கடந்த 10 ஆண்டுகளில், 65 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனாலும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை, சிறுவர்கள் என, சிறார் நீதிச்சட்டம் தெரிவிப்பதால், அவர்கள் கடும் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். அதனால், சமீபத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா, 'கொடூர குற்றங்களில் ... |
| மத்திய அரசு பணிக்கு மாற்றம் : அதிகாரி அசோக் கெம்கா நிம்மதி Posted: புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அரியானா காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 49, நேற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.கடந்த, 1991ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக தேர்ச்சி பெற்ற அசோக் கெம்கா, பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு, சில ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, காங்கிரசை சேர்ந்த முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.குறிப்பாக, காங்கிரஸ் தலைவர், சோனியாவின் ... |
| சட்டசபை கேள்வி நேரத்தில் மின் பிரச்னை: பதில் தயாரிப்பில் அதிகாரிகள் மும்முரம் Posted: சட்டசபையில், கேள்வி நேரத்தில், மின் துறை சம்பந்தமான கேள்விகள் அதிகம் கேட்கப்படுவதால், அதற்கான பதில் தயாரிப்பில், மின் வாரிய அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குடியிருப்பு, தொழிற்சாலைகளுக்கு, மின் தடை அமல்படுத்தப்பட்டது.கடந்த, ஆறு ஆண்டுகளாக அமலில் இருந்த மின் தடை, கடந்த ஜூன் மாதம் முதல், விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும், மின் தடை தொடர்கிறது.இந்நிலையில், சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த, 10ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடக்கிறது.சட்டசபையில், காலை, 10:00 மணி ... |
| காமராஜரின் கருத்துக்களை ஏற்று செயல்பட்டேன்: கருணாநிதி Posted: சென்னை:''காவிரி பிரச்னை, அவசர நிலை காலத்தில், காமராஜரின் கருத்துக்களை தெரிந்து கொண்டு செயல்பட்டேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தலைவர்கள் சிறையில் வாடினர். இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைகிறது. தன் தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர் என்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், காமராஜர் உடல் நலிவுற்று, படுத்த படுக்கையானார்.ஒருநாள் காலை, நானும், நெடுஞ்செழியனும் காமராஜரை காண, அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே அமர்ந்த என்னை கண்டதும், அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன்; தழுவிக் கொண்டார். ... |
| 'சுனாமி' தாக்கிய போது கருணாநிதி எங்கிருந்தார்? முதல்வர் கருத்தை கண்டித்து தி.மு.க., வெளிநடப்பு Posted: சென்னை: ''தமிழகத்தை, 'சுனாமி' தாக்கியபோது, கருணாநிதி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார்,'' என, அமைச்சர் வளர்மதியும், ''சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த கருணாநிதி, தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க கூட செல்லவில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதாவும் கூறினார்.பெண்கள் திட்டம்: இதற்கு, பதில் அளிக்க அனுமதி தரவில்லை எனக்கூறி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:தி.மு.க.,வின் புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க., ஆட்சியின் போது, பெண்களுக்காக நிறைவேற்றிய திட்டங்கள் குறித்துப் பேசினார். தொடர்ந்து, 'சுனாமி' ... |
| Posted: "பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, பத்திரிகையாளர் வேத பிரகாஷ் வைத்திக் சந்தித்ததில், மத்திய அரசுக்கு, எந்தத் தொடர்பும் இல்லை. தனிநபர், மேற்கொண்ட காரியத்துக்காக, அரசை குறை சொல்வதில் அர்த்தமில்லை. காஷ்மீர் பிரச்னையில், மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டது, பா.ஜ.,வே,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மும்பை தாக்குதல் சம்பவத்தின், முக்கிய சதிகாரனான, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, யோகா குரு ராம்தேவுக்கு நெருக்கமான, பத்திரிகையாளர் வேத பிரகாஷ் வைத்திக், பாகிஸ்தானின் லாகூர் நகரில், சந்தித்துப் பேசிய விவகாரம், இரண்டாவது நாளாக நேற்றும், பார்லிமென்ட்டை ... |
| Posted: புதுடில்லி : ''தாமதமாகி வந்த, 1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டப் பணிகள், அடுத்த மாதம், 15க்குள் துவக்கப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிதின் கட்காரி தெரிவித்தார்.டில்லியில், நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:முந்தைய ஆட்சியில், பல சாலை திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு தேவையான, 10 சதவீத நிலம் கூட கையப்படுத்தப்படவில்லை. இது, சாலை போக்குவரத்துதுறைக்கு பெரும் பிரச்னையாக இருந்தது.நிலம் கையகப்படுத்தல், சுற்றுச் சூழல் அனுமதி பெறுதல், ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களை தர மறுத்தது, ... |
| ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக்க நடவடிக்கை: அமைச்சர் சதானந்த கவுடா தகவல் Posted: புதுடில்லி: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப் படவில்லை. சென்னை, ராயபுரம் ரயில் நிலையத்தை, மூன்றாவது ரயில் முனையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதம், லோக்சபாவில், கடந்த ஒரு வாரமாக நடந்தது. நேற்று இந்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்களை, 15,000 கோடி ரூபாய் மதிப்பில் அரசு தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றுவதற்கும் நேற்று லோக்சபாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.முன்னதாக, விவாதத்துக்கு பதில் அளித்து, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ... |
| பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது: 'பிரிக்ஸ்' மாநாட்டில் மோடி பேச்சு Posted: போர்டலிசா: பயங்கரவாதத்தை சிறு துளியளவு கூட சகித்து கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, 'பிரிக்ஸ்' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.பிரேசிலின் போர்டலிசா நகரில், 'பிரிக்ஸ்' மாநாடு நேற்று துவங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பயங்கரவாதம் தான், தற்போது சர்வதேச நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அது, சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கை தேவை. இந்த விஷயத்தில், ... |
| தமிழக கோரிக்கையை ஏற்க காவிரி டிரிபியூனல் கைவிரிப்பு: சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு உத்தரவு Posted: கடந்த, 2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள, தண்ணீர் ஒதுக்கீடு அளவு தொடர்பாக, சில விளக்கங்கள் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, காவிரி நடுவர் மன்றம் (டிரிபியூனல்) மறுத்து விட்டது. இதுதொடர்பாக, உரிய உத்தரவுகள் பெற, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படியும் தெரிவித்து உள்ளது.தமிழகம் - கர்நாடகா இடையேயான, காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 2007 பிப்ரவரி, 5ம் தேதி, தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், 'ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட அளவு தண்ணீரை, தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க ... |
| காந்தி படுகொலை ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: வெங்கையா Posted: புதுடில்லி: ''மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான ஆவணங்கள், பாதுகாப்பாக உள்ளன. தேவையற்ற ஆவணங்களை அழிக்கும் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி தவறான தகவலை பரப்பி வருகிறது,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மத்திய அமைச்சகங்களில் உள்ள, தேவையற்ற ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கை, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் அழிப்பு தொடர்பாக, சில வழிகாட்டிக் குறிப்புகள் உள்ளன. அதன்படியே, ஆவணங்கள் அழிப்பு நடைபெறுகிறது. அதேநேரத்தில், மகாத்மா காந்தி ... |
| கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?: வீரேந்திர கட்டாரியா காட்டம் Posted: புதுச்சேரி: புதுச்சேரி அரசு அழுத்தம் தந்ததால் தான், கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக, வீரேந்திர கட்டாரியா குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில், கவர்னர் வீரேந்திர கட்டாரியாவுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. கடந்த, 11ம் தேதி இரவு, கவர்னர் பதவியில் இருந்து வீரேந்திர கட்டாரியா நீக்கப்பட்டார்.இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது: கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான ஆணை வந்த பின், 13ம் தேதியன்றே கவர்னர் மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என, மத்திய உள்துறை தெரிவித்ததாக, தலைமைச் செயலர் சேட்டன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |