Tamil News | Online Tamil News |
- அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
- நாகாலாந்து கவர்னர் திடீர் ராஜினாமா
- ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் குறைவாக இருக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்
- மன்மோகன் மீது வழக்கு தொடர முடியாது: அமெரிக்க கோர்ட்டுக்கு நீதித்துறை பதில்
- அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒழுங்கு முறை சட்டம் இல்லை: விசாரணை கமிஷன் நீதிபதி பேட்டி
- கால்டாக்சி, ஆம்னி பஸ்களுக்கு சேவை வரி விதிப்பு: கட்டணம் உயருகிறதா?
- ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள்
- 'ஜெ., பிறந்த நாள் பரிசை வருமானமாக கருத வேண்டும்'
- கிடப்பில் போடப்பட்ட25 ரயில்வே திட்டங்கள்
- முதுகலை மருத்துவ மாணவர்களை கிராமப்புற பணிக்கு அனுப்ப திட்டம்
- ஒபாமா அழைப்பை பிரதமர் மோடி ஏற்பு: செப்டம்பரில் அமெரிக்கா பயணம்
- சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்: 'ஓடுகாலி' என மந்திரி கூறியதால் எதிர்ப்பு
| அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி Posted: புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை, ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.அரசியல் சட்டத்தின், 370வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. 'இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என, பா.ஜ., கட்சியினர் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.இந்நிலையில், மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.சமீபத்தில், இதுதொடர்பாக பேசிய, மத்திய ... |
| நாகாலாந்து கவர்னர் திடீர் ராஜினாமா Posted: திருவனந்தபுரம்;நாகாலாந்து கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்ட, வைக்கம் புருஷோத்தமன், 86, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார்.'மாஜி' காங்., அமைச்சர்:கேரள மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த புருஷோத்தமன், மாநில அமைச்சராக இருந்துள்ளார்; எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். முந்தைய, மன்மோகன் சிங் அரசு, இவரை, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மிசோரம் கவர்னராக நியமித்திருந்தது.கடந்த 6ல் இவர், நாகாலாந்து கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார்; கூடுதல் ... |
| ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் குறைவாக இருக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் Posted: புதுடில்லி:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழான சம்பளமானது, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள, குறைந்தபட்ச சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் சம்பளம், விவசாய தொழிலாளர்களுக்காக, கர்நாடக மாநில அரசு நிர்ணயித்துள்ள, குறைந்தபட்ச சம்பளத்தை விட, குறைவாக இருக்கக் கூடாது' என, 2011 செப்டம்பர், 23ல், கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், உச்ச ... |
| மன்மோகன் மீது வழக்கு தொடர முடியாது: அமெரிக்க கோர்ட்டுக்கு நீதித்துறை பதில் Posted: வாஷிங்டன்:'இந்திய முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் மீது இப்போதும், வழக்குகள் தொடர முடியாத அளவிற்கு சிறப்பு தடை அந்தஸ்து உள்ளது' என, அமெரிக்க நீதித்துறை, வாஷிங்டன் கோர்ட்டுக்கு தெரிவித்துள்ளது.இந்தியாவில், 1984ல், அப்போதைய பிரதமர் இந்திரா, தன் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து, டில்லியில் பல ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர், சோனியா மீது நியூயார்க் கோர்ட்டிலும், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் மீது, வாஷிங்டன் கோர்ட்டிலும், அமெரிக்கா வாழ் சீக்கியர் அமைப்புகள் சார்பில், மனித உரிமை ... |
| அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒழுங்கு முறை சட்டம் இல்லை: விசாரணை கமிஷன் நீதிபதி பேட்டி Posted: போரூர்: ''முறைகேடாக, கட்டடம் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒழுங்கு முறை படுத்தவும் சரியான சட்டமும் விதி முறைகளும் இல்லை. அத்தனை விதி முறைகளையும் நாம் அமைப்போம்,'' என, ஒருநபர் கமிஷன் தலைவர் ரகுபதி கூறினார்.கடந்த மாதம், 28ம் தேதி, சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 மாடி அடுக்குமாடி கட்டடம் குறித்து விசாரிக்க, ஒருநபர் கமிஷனை, தமிழக அரசு அமைத்தது.நேற்று காலை, 9:00 மணியளவில், அந்த கமிஷனின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி, இடிந்த கட்டடத்தை ஆய்வு செய்தார்.விசாரணை கமிஷன்:பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த பெரும் ... |
| கால்டாக்சி, ஆம்னி பஸ்களுக்கு சேவை வரி விதிப்பு: கட்டணம் உயருகிறதா? Posted: 'ஏசி' வசதியுள்ள கால்டாக்சி, ஆம்னி பஸ்களுக்கு சேவை வரி விதிப்பது, நடைமுறைக்கு வரும் போது, அந்த வாகனங்களின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.மத்திய பட்ஜெட்டில், 'ஏசி' வசதி கொண்ட ஒப்பந்த வாகனங்களுக்கு, (கான்ட்ராக்ட் கேரேஜ்) சேவை வரி விதிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்த வாகனங்களான, 'ஏசி' வசதியுள்ள கால்டாக்சி, ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு, இது பொருந்தும்.இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வரும்போது, 12.36 சதவீதம் சேவை வரியாக, அதன் உரிமையாளர்கள் செலுத்த வேண்டி வரும்.ஒப்பந்தம்:சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ... |
| ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் Posted: சட்டசபையில், எதிர்கட்சி கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக, வெளிநடப்பு செய்தது, ஆளும் கட்சியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடைசி நேரத்தில்...:லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்பு வரை, அ.தி.மு.க.,வுடன் தோழமை பாராட்டிய, கம்யூனிஸ்ட் கட்சியினரும், கடைசி நேரத்தில், கழற்றி விடப்பட்டனர்.தி.மு.க., - புதிய தமிழகம் - மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, ஒரு அணியாக போட்டி யிட்டன. தே.மு.தி.க., - பா.ம.க. ஆகியவை, பா.ஜ., கூட்டணி யில் இடம் பெற்றன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.தேர்தலில், 37 இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. பிற ... |
| 'ஜெ., பிறந்த நாள் பரிசை வருமானமாக கருத வேண்டும்' Posted: தமிழக முதல்வர், ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்த பணத்தை, அவரின் வருமானமாக கருத வேண்டுமென, அவரின் வழக்கறிஞர் குமார் வாதிட்டார்.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், 17வது நாளாக, அவரின் வழக்கறிஞர் குமார், நேற்று வாதிட்டார்.அவர் கூறியதாவது:தமிழக முதல்வராக பதவியேற்ற பின், தன், 44வது பிறந்த நாளை, 1992 பிப்ரவரி 24ல், ஜெயலலிதா கொண்டாடினார். இதற்காக, கட்சித் தொண்டர்கள், இரண்டு கோடி ரூபாயை, 'டிடி' எடுத்து அனுப்பினர். அதை, அவரின் வருமானமாக ஏற்று கொள்ள வேண்டும்; ஆனால், ஊழல் தடுப்பு போலீசார் ... |
| கிடப்பில் போடப்பட்ட25 ரயில்வே திட்டங்கள் Posted: புதுடில்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த, 25 ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தில் பதிலளித்த, மத்திய ரயில்வே அமைச்சர், சதானந்த கவுடா கூறியதாவது:கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டவற்றில், சில திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. மத்திய அரசின் அனுமதிக்காக அத்திட்டங்கள் காத்திருக்கின்றன. அவ்வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த, 25 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த, போதிய நிதி ஆதாரம் இல்லாததால், இன்னும் செயல்படுத்த ... |
| முதுகலை மருத்துவ மாணவர்களை கிராமப்புற பணிக்கு அனுப்ப திட்டம் Posted: புதுடில்லி:''முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை, கிராமப் புற மருத்துவ பணிக்கு அனுப்புவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:முதுகலை மருத்துவ படிப்பு முடித்தவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவது என, முந்தைய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.முந்தைய அரசின் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, தற்போதைய அரசு பரிசீலித்து வருகிறது. முதுகலை மருத்துவ படிப்பை ... |
| ஒபாமா அழைப்பை பிரதமர் மோடி ஏற்பு: செப்டம்பரில் அமெரிக்கா பயணம் Posted: புதுடில்லி:'அமெரிக்கா வர வேண்டும்' என, அந்நாட்டின் அதிபர், பராக் ஒபாமா கொடுத்தனுப்பிய கடிதத்தை, சிறப்பு தூதர், பர்ன்ஸ், பிரதமர் நரேந்திர மோடியிடம், நேற்று சமர்ப்பித்தார். இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'அதிபரின் அழைப்புக்கு நன்றி; இருவர் சந்திப்பு, திடமான விளைவு களை ஏற்படுத்துவதாகவும், இருதரப்பு உறவில், புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்க வேண்டும்' என்ற தன் விருப்பத்தை, பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.குஜராத்தில், 2002ல் மதக்கலவரம் நடந்தது. இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொண்ட வன்முறை ... |
| சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்: 'ஓடுகாலி' என மந்திரி கூறியதால் எதிர்ப்பு Posted: சென்னை: எம்.எல்.ஏ.,க்களை, 'ஓடுகாலி' என, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதை, சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என, சபாநாயகர் இருக்கையைச் சுற்றி நின்று, கோஷமிட்ட தி.மு.க.,வினர், சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று, கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க., - எம்.எல்.ஏ., துரைமுருகன், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மோகன்ராஜ் ஆகியோர், 'ஓடுகாலி என, வீட்டுவசதித் துறை அமைச்சர், வைத்திலிங்கம் பேசியதை, சபைக் குறிப்பில்இருந்து நீக்க வேண்டும். சபையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 12,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |