Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரியலூர் மாவட்டத்தில்ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு
- இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்கும் நாள் கூட்டம்
- அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல்
- குழிதோண்டியதில் தொலைத்தொடர்பு கேபிள் சேதம்
- கல்வி, திருமண உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல்
- ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
- அணவயல் பட்டவராயர் கோயில் குடமுழுக்கு
- "மானியத்துடன் கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம்'
- நீதிமன்றத்தை புறக்கணித்து மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்
- தஞ்சை, குடந்தையில் விழிப்புணர்வு பேரணி
- வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 233-வது திருநட்சத்திர மகோத்சவம்
- குடியரசுத் தலைவர் வருகை:ஆட்சியர் ஆய்வு
- ரயில் பயணியின் பையை திருட முயன்றவர் கைது
- விதர்பா விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்
- "மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்'
- திருச்சி காவல் உதவி ஆணையருக்கு பிடிவாரண்ட்
- குடந்தையில் "அம்மா' உப்பு விற்பனை தொடக்க விழா
- ரயில்வே பட்ஜெட் விவாதத்துக்கு தாமதமாக வந்த அமைச்சர்!
- ரயில்வே பட்ஜெட் விவாதத்துக்கு தாமதமாக வந்த அமைச்சர்!
- போலாவரம் பிரச்னை: அவசரச்சட்டத்திற்கு மக்களவை அங்கீகாரம் தருவதா? உச்ச நீதிமன்றத்தை அணுக சந்திரசேகர ராவ் முடிவு
- நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- போலாவரம் பிரச்னை: அவசரச்சட்டத்திற்கு மக்களவை அங்கீகாரம் தருவதா? உச்ச நீதிமன்றத்தை அணுக சந்திரசேகர ராவ் முடிவு
- கடவாசல் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு
- பாஜகவினர்கொண்டாட்டம்
- காவல் நண்பர்கள் விழிப்புணர்வு சைக்கிள் குழுவுக்கு வரவேற்பு
- அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இருவர் கைது
- ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு
- உணவுப் பாதுகாப்பு சட்டம்: நவீனுக்கு காங்கிரஸ் கேள்வி
- வெள்ளைச் சாத்து: பிச்சாண்டவர் வீதியுலா
- பிச்சையை பிரித்துக்கொள்வதில் தகராறு: பெண் அடித்துக் கொலை
- அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்வு
- தேசிய சட்டப்பள்ளியில் கலந்தாய்வு 59 பேருக்கு சேர்க்கை ஆணை
- கோடியக்கரை அருகே நாய்கள் கடித்து மான்குட்டி சாவு
- பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை
- மாற்றுத்திறனாளிகுழந்தைகளுக்கு பயிற்சி
- எம்ஜிஆர் சிலை சிமெண்ட் கட்டைகள்சேதம்; கம்பிகள் திருட்டு
- "தகவல் உரிமைச் சட்டம்: விரைவாகவும்,தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும்'
- மன்னார்குடி அரசுக் கல்லூரியில் தர நிர்ணயக் குழு ஆய்வு
- தாட்கோ திட்டத்தில் ஆதிதிராவிடர்கள் பயன் பெற விண்ணப்பிக்கலாம்
- உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித்தை நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரை
- நம்பெருமாளுக்கு 1000 படி அரிசியில் தளிகை
- பௌர்ணமி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
- தஞ்சாவூர்
- அமர்நாத்: 15ஆவது குழு பயணம்
- புதுக்கோட்டை
- "ரயில்வே பட்ஜெட் பிழையுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம்'
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய மக்களின் மனப்போக்கில் மாற்றம் தேவை: மேனகா காந்தி
- பங்குச் சந்தை: 348 புள்ளிகள் சரிவு
- மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் பத்திரமாக உள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
- "அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு 3 மாதங்களில் மத்திய உள்துறை ஒப்புதல்'
- பிரதமரின் முதன்மைச் செயலர் நியமனத்தில் சட்டரீதியிலான தடைகளை அகற்ற மசோதா
- கருப்புப் பணத்தை மீட்க எஸ்ஐடிக்கு ரூ.8.93 கோடி ஒதுக்கீடு
- மண் சரிந்து 5 தொழிலாளர்கள் சாவு
- நாகாலாந்து ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் ராஜிநாமா
- கட்டடம் இல்லை; தரையில் அமர்ந்து பாடம் பயிலும் மாணவர்கள்!
- 11 சத்துணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு
- எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- அம்மா திட்ட முகாம்
- வெளிநாட்டில் இறந்த கணவர் சாவில் சந்தேகம்
- சின்னியம்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி நிறைவு
- பேருந்து மரத்தில் மோதி விபத்து: 30 பேர் காயம்; ஓட்டுநர் கைது
- மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
- இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை
- ஆப்கன் அதிபர் தேர்தல் சர்ச்சைக்கு தீர்வு தேவை: ஜான் கெர்ரி வலியுறுத்தல்
- அனக்காவூரில் நாளை ரத்த தான முகாம்
- மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு
- மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்
- கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு
- இராக் மதத் தலைவர்களுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அமைதிப் பேச்சு
- களியக்காவிளையில் இன்று இலவச மருத்துவ முகாம்
- போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உதவத் தயார்
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
- ஓய்வூதியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற 41 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம்
- மரக்கன்று நடும் விழா
- பிரபல ஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலை
- மத்திய பட்ஜெட்டில் ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுக்கும் அறிவிப்பு இல்லை
- திற்பரப்பு பேரூராட்சி கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு
- தக்கலை புனித எலியாசியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- வடசேரி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்துக்கான இடம் தேர்வு
- வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- சர்வதேச தரத்தில் சுற்றுலா மேம்பட கன்னியாகுமரியில் விமான நிலையம்!
- பயங்கரவாதத் தலைவர் பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் உரை
- நாகர்கோவிலில் பூஸ்டர் பள்ளிகள்திட்ட தொடக்க விழா
- அரசு அருங்காட்சியகத்தை தூய்மைப்படுத்திய மாணவர்கள்
- குமரி அரசுப் பேருந்தின் பரிதாப நிலை
- தூத்துக்குடியில் 2 காவலர்கள் தாற்காலிக பணிநீக்கம்
- தேவிஸ்ரீ அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
- நாசரேத் அருகே மளிகைக் கடையில் ரூ.7 ஆயிரம் திருட்டு
- வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்
- கடந்த நிதியாண்டில் தங்கம் விலை 3.2 சதவிகிதம் குறைந்திருந்தது
- நவீன அறுவை சிகிச்சை: 8 மாணவர், மாணவிகள் தேர்வு
- ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
- தூத்துக்குடி ஆலயத்தில் நாளை வருஷாபிஷேகம்
- காத்மாண்டு-கொல்கத்தா இடையே புதிய விமான சேவை: ஸ்பைஸ்ஜெட் திட்டம்
- தூத்துக்குடியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்
- சவரித்தான்விளை கோயிலில் மகா கும்பாபிஷேகம்
- ஆறுமுகனேரியில் மின்அழுத்த குறைபாடு: மின்சாதனங்கள் சேதம்
| அரியலூர் மாவட்டத்தில்ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு Posted: 11 Jul 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்கும் நாள் கூட்டம் Posted: 11 Jul 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொது நியோகத் திட்ட குறைகேட்கும் நாள் கூட்டம் 3 இடங்களில் நடைபெறுகிறது. |
| அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 11 Jul 2014 12:33 PM PDT அரியலூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். |
| ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2014 12:32 PM PDT காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 12:32 PM PDT பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கூட்டுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| குழிதோண்டியதில் தொலைத்தொடர்பு கேபிள் சேதம் Posted: 11 Jul 2014 12:32 PM PDT புதுக்கோட்டையில் கால்வாய்க்காக குழிதோண்டியபோது தொலைத்தொடர்புத் துறையின் கேபிள் சேதமடைந்ததால் இணைப்புத் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடந்த 2 நாள்களாக அவதியுறும் நிலை ஏற்பட்டது. |
| கல்வி, திருமண உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 12:32 PM PDT கல்வி, திருமண உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா Posted: 11 Jul 2014 12:31 PM PDT : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகன்குளம் மேல்கரையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அணவயல் பட்டவராயர் கோயில் குடமுழுக்கு Posted: 11 Jul 2014 12:31 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் பட்டவராயர் அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "மானியத்துடன் கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம்' Posted: 11 Jul 2014 12:31 PM PDT தமிழக அரசால் கோழி வளர்ப்புக்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் மானியத்துடன் கோழி வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என |
| நீதிமன்றத்தை புறக்கணித்து மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் Posted: 11 Jul 2014 12:30 PM PDT தஞ்சாவூரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து, வழக்குரைஞர்கள் ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| தஞ்சை, குடந்தையில் விழிப்புணர்வு பேரணி Posted: 11 Jul 2014 12:30 PM PDT உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மாவட்டக் குடும்ப நலச் செயலகம் சார்பில் தஞ்சை, கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை |
| வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 233-வது திருநட்சத்திர மகோத்சவம் Posted: 11 Jul 2014 12:30 PM PDT ஸ்ரீ வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 233-வது திருநட்சத்திர மஹோத்சவத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் வெள்ளிக்க |
| குடியரசுத் தலைவர் வருகை:ஆட்சியர் ஆய்வு Posted: 11 Jul 2014 12:30 PM PDT தஞ்சாவூருக்கு குடியரசுத் தலைவர் வரவுள்ளதை முன்னிட்டு, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கோதண்டராமர் கோயிலில் ஆட்சியர் என். சுப்பையன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கும், |
| ரயில் பயணியின் பையை திருட முயன்றவர் கைது Posted: 11 Jul 2014 12:29 PM PDT தஞ்சாவூரில் ரயில் பயணியின் பையை திருட முயன்ற இளைஞரை ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| விதர்பா விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் Posted: 11 Jul 2014 12:29 PM PDT மகாராஷ்டிர மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் விதர்பா மண்டல விவசாயிகள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| "மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்' Posted: 11 Jul 2014 12:29 PM PDT மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: |
| திருச்சி காவல் உதவி ஆணையருக்கு பிடிவாரண்ட் Posted: 11 Jul 2014 12:29 PM PDT வன்கொடுமை தடுப்பு வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாத திருச்சி பொன்மலை குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையருக்கு தஞ்சாவூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை |
| குடந்தையில் "அம்மா' உப்பு விற்பனை தொடக்க விழா Posted: 11 Jul 2014 12:29 PM PDT கும்பகோணத்தில் அம்மா உப்பு விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை |
| ரயில்வே பட்ஜெட் விவாதத்துக்கு தாமதமாக வந்த அமைச்சர்! Posted: 11 Jul 2014 12:28 PM PDT ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அத்துறை அமைச்சர் சதானந்த கெளடாவும் இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவும் அவையில் இல்லாததால் எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். |
| ரயில்வே பட்ஜெட் விவாதத்துக்கு தாமதமாக வந்த அமைச்சர்! Posted: 11 Jul 2014 12:27 PM PDT ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அத்துறை அமைச்சர் சதானந்த கெüடாவும் இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவும் அவையில் இல்லாததால் எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். |
| Posted: 11 Jul 2014 12:26 PM PDT போலாவரம் அணைத் திட்டத்திற்காக தெலங்கானாவைச் சேர்ந்த 230 கிராமங்களை சீமாந்திரத்தில் சேர்க்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இது தெலங்கானாவில் கொநதளிப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் Posted: 11 Jul 2014 12:26 PM PDT நாகையை அடுத்த நாகூரில் உள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் பிரமோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2014 12:25 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Jul 2014 12:25 PM PDT போலாவரம் அணைத் திட்டத்திற்காக தெலங்கானாவைச் சேர்ந்த 230 கிராமங்களை சீமாந்திரத்தில் சேர்க்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இது தெலங்கானாவில் கொநதளிப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| கடவாசல் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு Posted: 11 Jul 2014 12:25 PM PDT சீர்காழி வட்டம், கடவாசல் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடவாசல் கீழத் தெருவில் உள்ளது திரௌபதி அம்மன் கோயில். இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூ |
| Posted: 11 Jul 2014 12:25 PM PDT பாஜகவின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை மன்னார்குடியில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
| காவல் நண்பர்கள் விழிப்புணர்வு சைக்கிள் குழுவுக்கு வரவேற்பு Posted: 11 Jul 2014 12:25 PM PDT பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் நண்பர்கள் குழுவினர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு சைக்கிள் பயணக் குழுவுக்கு நாகையில் வெள்ளிக்கிழமை |
| அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இருவர் கைது Posted: 11 Jul 2014 12:24 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்தின் நடத்துநரை தாக்கியதாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 11 Jul 2014 12:24 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் பாசன ஆறுகள், வாய்க்கால் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு செய்தா |
| உணவுப் பாதுகாப்பு சட்டம்: நவீனுக்கு காங்கிரஸ் கேள்வி Posted: 11 Jul 2014 12:24 PM PDT ஒடிஸாவில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாமல் தாமதம் செய்வது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| வெள்ளைச் சாத்து: பிச்சாண்டவர் வீதியுலா Posted: 11 Jul 2014 12:23 PM PDT கைலாசநாதர் கோயிலில் இருந்து ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பிச்சையை பிரித்துக்கொள்வதில் தகராறு: பெண் அடித்துக் கொலை Posted: 11 Jul 2014 12:23 PM PDT திருச்சி கோயில் வாசலில் பிச்சையாகக் கிடைத்த பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் வியாழக்கிழமை நள்ளிரவு அடித்துக் கொல்லப்பட்டார். |
| அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்வு Posted: 11 Jul 2014 12:23 PM PDT தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| தேசிய சட்டப்பள்ளியில் கலந்தாய்வு 59 பேருக்கு சேர்க்கை ஆணை Posted: 11 Jul 2014 12:23 PM PDT திருச்சி நவலூர் குட்டப்பட்டிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 59 பேருக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. |
| கோடியக்கரை அருகே நாய்கள் கடித்து மான்குட்டி சாவு Posted: 11 Jul 2014 12:22 PM PDT நாகை மாவட்டம், கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் தேடி வெளியேறிய புள்ளி மான்குட்டி நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. |
| பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை Posted: 11 Jul 2014 12:22 PM PDT சீர்காழி உப்பனாற்று கரையை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்பப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பொதுப்பணித் துறை அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். சட்டநாதபுரம் பகுதியை ஒட்டி உப்பனாறு உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களது கால்நடைகளை |
| மாற்றுத்திறனாளிகுழந்தைகளுக்கு பயிற்சி Posted: 11 Jul 2014 12:22 PM PDT நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சு, செவித் திறனற்ற குழந்தைகளுக்கு ஆரம்ப காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| எம்ஜிஆர் சிலை சிமெண்ட் கட்டைகள்சேதம்; கம்பிகள் திருட்டு Posted: 11 Jul 2014 12:21 PM PDT சீர்காழியில் எம்.ஜி.ஆர். சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளை சேதப்படுத்தி, அதிலிருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. |
| "தகவல் உரிமைச் சட்டம்: விரைவாகவும்,தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும்' Posted: 11 Jul 2014 12:21 PM PDT தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு விதிமுறைகளுக்குள்பட்டு விரைவாகவும், தெளிவாகவும் அலுவலர்கள் பதிலளிக்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட் |
| மன்னார்குடி அரசுக் கல்லூரியில் தர நிர்ணயக் குழு ஆய்வு Posted: 11 Jul 2014 12:21 PM PDT மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் தேசிய மதிப்பீடு தர நிர்ணயக் குழுவினர் வியாழக்கிழமை முதல் தங்களது முதல் 3 நாள் தர ஆய்வை தொடங்கினர். |
| தாட்கோ திட்டத்தில் ஆதிதிராவிடர்கள் பயன் பெற விண்ணப்பிக்கலாம் Posted: 11 Jul 2014 12:21 PM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித்தை நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரை Posted: 11 Jul 2014 12:20 PM PDT உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித் பெயரை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. |
| நம்பெருமாளுக்கு 1000 படி அரிசியில் தளிகை Posted: 11 Jul 2014 12:20 PM PDT ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பாவாடை நிகழ்ச்சியில், நம்பெருமாளுக்கு 1000 படி அரிசியில் தளிகை செய்யப்பட்டது. |
| பௌர்ணமி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் Posted: 11 Jul 2014 12:20 PM PDT பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
| Posted: 11 Jul 2014 12:19 PM PDT |
| Posted: 11 Jul 2014 12:19 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் கோயிலுக்கு 2,249 யாத்ரிகர்கள் அடங்கிய 15ஆவது குழுவினர் வெள்ளிக்கிழமை பயணத்தை தொடங்கினர். |
| Posted: 11 Jul 2014 12:19 PM PDT |
| "ரயில்வே பட்ஜெட் பிழையுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம்' Posted: 11 Jul 2014 12:16 PM PDT மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட், பிழைகளுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று முன்னாள் ரயில்வே இணையமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான அதீர் ரஞ்சன் செளத்ரி கூறினார். |
| பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய மக்களின் மனப்போக்கில் மாற்றம் தேவை: மேனகா காந்தி Posted: 11 Jul 2014 12:14 PM PDT "மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்' என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். |
| பங்குச் சந்தை: 348 புள்ளிகள் சரிவு Posted: 11 Jul 2014 12:13 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 348 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் குறியீடு 25,024 என்ற அளவில் நிலைத்தது. |
| மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் பத்திரமாக உள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் Posted: 11 Jul 2014 12:12 PM PDT மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
| "அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு 3 மாதங்களில் மத்திய உள்துறை ஒப்புதல்' Posted: 11 Jul 2014 12:11 PM PDT அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு உள்துறையின் பாதுகாப்பு தொடர்பான ஒப்புதலை 3 மாதங்களுக்குள் அளிக்க அந்த அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். |
| பிரதமரின் முதன்மைச் செயலர் நியமனத்தில் சட்டரீதியிலான தடைகளை அகற்ற மசோதா Posted: 11 Jul 2014 12:09 PM PDT பிரதமரின் முதன்மைச் செயலர் நியமனத்தில் உள்ள சட்டரீதியிலான தடைகளை அகற்றுவதற்காக மக்களவையில் ஒரு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. |
| கருப்புப் பணத்தை மீட்க எஸ்ஐடிக்கு ரூ.8.93 கோடி ஒதுக்கீடு Posted: 11 Jul 2014 12:08 PM PDT கருப்புப் பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அந்தத் துறைக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் ரூ.8.93 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. |
| மண் சரிந்து 5 தொழிலாளர்கள் சாவு Posted: 11 Jul 2014 12:08 PM PDT தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் மண் சரிந்து விழுந்ததில் 5 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| நாகாலாந்து ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் ராஜிநாமா Posted: 11 Jul 2014 12:07 PM PDT நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் வைக்கம் புருஷோத்தமன் (86) வெள்ளிக்கிழமை தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார். |
| கட்டடம் இல்லை; தரையில் அமர்ந்து பாடம் பயிலும் மாணவர்கள்! Posted: 11 Jul 2014 12:04 PM PDT போளூர் அருகேயுள்ள பெரியகரம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கின்றனர். |
| 11 சத்துணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு Posted: 11 Jul 2014 12:03 PM PDT தெள்ளாறு ஒன்றியத்துக்குள்பட்ட 11 பள்ளி சத்துணவு மையங்களுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரம் மதிப்பில் சமையல் எரிவாயு இணைப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2014 12:03 PM PDT மத்திய அரசின் பொது பட்ஜெட் அம்சங்களைக் கண்டித்து, எல்.ஐ.சி.யின் திருவண்ணாமலை கிளை அலுவலகம் எதிரே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 11 Jul 2014 12:03 PM PDT தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| வெளிநாட்டில் இறந்த கணவர் சாவில் சந்தேகம் Posted: 11 Jul 2014 12:02 PM PDT வெளிநாட்டில் இறந்ததாக தனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அவரது சடலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று ஆட்சியரிடம் இளம்பெண் புகார் கொடுத்தார். |
| சின்னியம்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி நிறைவு Posted: 11 Jul 2014 12:02 PM PDT தானிப்பாடியை அடுத்த சின்னியம்பேட்டை ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. |
| பேருந்து மரத்தில் மோதி விபத்து: 30 பேர் காயம்; ஓட்டுநர் கைது Posted: 11 Jul 2014 12:02 PM PDT செய்யாறு அருகே தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது Posted: 11 Jul 2014 12:02 PM PDT வந்தவாசி அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் கைது செய்யப்பட்டார். |
| இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை Posted: 11 Jul 2014 12:02 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| ஆப்கன் அதிபர் தேர்தல் சர்ச்சைக்கு தீர்வு தேவை: ஜான் கெர்ரி வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 12:02 PM PDT ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் முடிவு குறித்த அரசியல் சர்ச்சைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்காக முக்கிய இரு போட்டியாளர்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்படியும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார். |
| அனக்காவூரில் நாளை ரத்த தான முகாம் Posted: 11 Jul 2014 12:01 PM PDT செய்யாறை அடுத்த அனக்காவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. |
| மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு Posted: 11 Jul 2014 12:01 PM PDT பெரணமல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் இறந்தார். |
| Posted: 11 Jul 2014 12:00 PM PDT இலங்கையில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. |
| கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு Posted: 11 Jul 2014 12:00 PM PDT கணிதவியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்கலான கோட்பாட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த நிகில் ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனியல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். |
| இராக் மதத் தலைவர்களுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அமைதிப் பேச்சு Posted: 11 Jul 2014 11:59 AM PDT சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடையே நிகழ்ந்து வரும் மோதல்களால் இராக் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், ஷியா பிரிவு மதத் தலைவர்களை வாழும் கலை மைய நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அமெரிக்காவில் வியாழக்கிழமை சந்தித்து அமைதிப் பேச்சு நடத்தினார். |
| களியக்காவிளையில் இன்று இலவச மருத்துவ முகாம் Posted: 11 Jul 2014 11:56 AM PDT களியக்காவிளை சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் கிரேஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. |
| போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உதவத் தயார் Posted: 11 Jul 2014 11:56 AM PDT ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் போர் நிறுத்தத்துக்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். |
| இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை Posted: 11 Jul 2014 11:56 AM PDT திருவிதாங்கோடு அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இளம்பெண்ணின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். |
| ஓய்வூதியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற 41 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் Posted: 11 Jul 2014 11:56 AM PDT ஓய்வூதியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெற குமரி மாவட்டத்தில் 41 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 11 Jul 2014 11:56 AM PDT மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ.வில் வன மகோத்சவத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மாவட்ட தேசிய பசுமைப் படை ரூரல் அப்லிப்ட் சென்டர் மற்றும் அக்ரி கிளப் இணைந்து நடத்திய |
| பிரபல ஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலை Posted: 11 Jul 2014 11:56 AM PDT பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த யானையை அதன் தந்தத்துக்காக விஷம் வைத்து மர்ம நபர்கள் கொன்றனர். |
| மத்திய பட்ஜெட்டில் ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுக்கும் அறிவிப்பு இல்லை Posted: 11 Jul 2014 11:55 AM PDT மத்திய பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுக்க அறிவிப்புகள் வெளியாகவில்லையென குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். |
| திற்பரப்பு பேரூராட்சி கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 11 Jul 2014 11:55 AM PDT திற்பரப்பு பேரூராட்சிக் கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, வெள்ளிக்கிழமை 4 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| தக்கலை புனித எலியாசியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 11 Jul 2014 11:55 AM PDT தக்கலை புனித எலியாசியார் ஆலய குடும்பத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| வடசேரி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்துக்கான இடம் தேர்வு Posted: 11 Jul 2014 11:55 AM PDT நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. |
| வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2014 11:54 AM PDT நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஆராச்சர் நிலத்தில் ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். குளச்சலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மா |
| சர்வதேச தரத்தில் சுற்றுலா மேம்பட கன்னியாகுமரியில் விமான நிலையம்! Posted: 11 Jul 2014 11:54 AM PDT உலகத் தரத்துக்கு இணையாக கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவில் மேம்பட வேண்டுமானால் கன்னியாகுமரியில் விமான நிலையம் அவசியம் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| பயங்கரவாதத் தலைவர் பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் உரை Posted: 11 Jul 2014 11:54 AM PDT மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என கூறப்படும், தடை செய்யப்பட்ட லஷ்கர் இயக்கத் தலைவர் ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றியுள்ளார். |
| நாகர்கோவிலில் பூஸ்டர் பள்ளிகள்திட்ட தொடக்க விழா Posted: 11 Jul 2014 11:54 AM PDT மாணவ, மாணவியருக்கான பூஸ்டர் பள்ளிகள் திட்ட தொடக்க விழா நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு அருங்காட்சியகத்தை தூய்மைப்படுத்திய மாணவர்கள் Posted: 11 Jul 2014 11:54 AM PDT கன்னியாகுமரி அரசு அருங்காட்சிய வளாகத்தை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். |
| குமரி அரசுப் பேருந்தின் பரிதாப நிலை Posted: 11 Jul 2014 11:53 AM PDT கன்னியாகுமரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் பின்பக்க வாயில் படிக்கட்டுகள் முழுவதும் சேதமடைந்து காணப்பட்டதால் பயணிகள் முன்பக்க வாயில் வழியாக மட்டுமே ஏறி, இறங்கும் பரிதாப நிலை ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில், பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மிகவும் |
| தூத்துக்குடியில் 2 காவலர்கள் தாற்காலிக பணிநீக்கம் Posted: 11 Jul 2014 11:53 AM PDT நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்னரே தகவல் தெரிவித்ததாக இரண்டு காவலர்களை தாற்காலிக பணிநீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்.பி. மா. துரை உத்தரவிட்டுள்ளார். |
| தேவிஸ்ரீ அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 11 Jul 2014 11:53 AM PDT சாத்தான்குளம் தேவிஸ்ரீ அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மஹாகணபதி ஹோமம், அநுக்ஞை, எஜமான் வர்ணம், விக்னேஷ்வர பூஜை, |
| நாசரேத் அருகே மளிகைக் கடையில் ரூ.7 ஆயிரம் திருட்டு Posted: 11 Jul 2014 11:52 AM PDT நாசரேத் அருகே மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நாசரேத் அருகேயுள்ள திருமறையூரைச் சேர்ந்தவர் சிம்சன் (57). இவர் அங்குள்ள நிழற்குடை அருகில் |
| வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 11:52 AM PDT கயத்தாறு ஒன்றியம், கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கடந்த நிதியாண்டில் தங்கம் விலை 3.2 சதவிகிதம் குறைந்திருந்தது Posted: 11 Jul 2014 11:52 AM PDT கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் தங்கத்தின் சராசரி விலை 3.2 சதவிகிதம் குறைந்திருந்தது. 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.29,190 ஆக இருந்தது என மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| நவீன அறுவை சிகிச்சை: 8 மாணவர், மாணவிகள் தேர்வு Posted: 11 Jul 2014 11:52 AM PDT காது கோளாத மற்றும் வாய் பேச முடியாத 6 வயதுக்குள்பட்ட 8 மாணவர், மாணவிகள் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெள்ளிக்கிழமை சென்னைக்கு வழியனுப்பிவைத்தார். |
| ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 11 Jul 2014 11:51 AM PDT திருச்செந்தூர் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| தூத்துக்குடி ஆலயத்தில் நாளை வருஷாபிஷேகம் Posted: 11 Jul 2014 11:51 AM PDT தூத்துக்குடி மங்கள ஜனகணபதி ஆலயத்தில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது. |
| காத்மாண்டு-கொல்கத்தா இடையே புதிய விமான சேவை: ஸ்பைஸ்ஜெட் திட்டம் Posted: 11 Jul 2014 11:51 AM PDT காத்மாண்டு-கொல்கத்தா இடையே புதிய விமான சேவையை அடுத்த மாதம் முதல் துவக்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விமானம் மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுலாத் தலமான பக்டோக்ராவை இணைக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2014 11:51 AM PDT மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சவரித்தான்விளை கோயிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 11 Jul 2014 11:51 AM PDT நாசரேத் அருகே சவரித்தான்விளை அருள்மிகு இரட்டை சுடலைமாடசுவாமி - ஸ்ரீவனபேச்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆறுமுகனேரியில் மின்அழுத்த குறைபாடு: மின்சாதனங்கள் சேதம் Posted: 11 Jul 2014 11:50 AM PDT :ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட மின்அழுத்த குறைபாடு காரணமாக 50-க்கும் மேற்பட்ட டி.வி., மின்விசிறி மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |