Tamil News | Online Tamil News |
- அன்னிய செயற்கை கோள்களால் அரசுக்கு ரூ.320 கோடி வருமானம்
- வெற்றி, தோல்வி கட்சி வளர்ச்சியை நிர்ணயித்து விடாது: கருணாநிதி
- பொறுப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது: ஜெ.,
- பட்ஜெட் உரை ஐந்து நிமிடம் ஒத்திவைப்பு: பார்லி., வரலாற்றில் இதுவே முதல் முறை
- பா.ஜ., தேர்தல் அறிக்கை- பட்ஜெட் ஒப்பீடு
- அமோகம் ஐயா... அமோகம்!
- பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்ன?
- வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்: விவசாயிகள் வரவேற்பு
- சாக இருந்த பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து : மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
- ஜெட்லி தாக்கல் செய்த மோடி அரசின் முதல் பட்ஜெட்: நெருக்கடியை ஏற்படுத்தும் மானிய செலவு சுமைக்கு குறி
- உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமை கடுமையாக அதிகரிப்பு: தலைமை நீதிபதி லோடா வருத்தம்
| அன்னிய செயற்கை கோள்களால் அரசுக்கு ரூ.320 கோடி வருமானம் Posted: புதுடில்லி:அன்னிய நாடுகளின், 15 செயற்கை கோள்களை விண்ணிற்கு செலுத்தியதன் மூலம், இந்தியா வுக்கு, 320 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இதுதொடர்பாக, லோக்சபாவில் கூறியதாவது:கடந்த 2011ம் ஆண்டு முதல், இதுவரை, அன்னிய நாடுகளின் 15 செயற்கை கோள்களையும், நம் நாட்டின், 14 செயற்கை கோள்களையும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான - ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்ணில் செலுத்தி உள்ளது.அன்னிய நாடுகளின் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம், 320 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அத்துடன், வரும் 2020ம் ஆண்டு வரையிலான, ... |
| வெற்றி, தோல்வி கட்சி வளர்ச்சியை நிர்ணயித்து விடாது: கருணாநிதி Posted: சென்னை:''வெற்றி, தோல்வி கட்சியின் வளர்ச்சியை நிர்ணயித்து விடாது,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தங்கவேலுவின் இல்ல திருமண விழா நேற்று நடந்தது.அதில், கருணாநிதி பேசியதாவது:அரசியல் விழிப்புணர்ச்சி, இன்றைக்கு தமிழ் இனத்திற்கு ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. இன்னும் தமிழன் அரசியலில் விழிப்புறவில்லை. விழிப்புற்றால், போஸ்டர் தலைவர்களை அவன் இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்.தமிழகத்தில் இருக்கிற ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர புதிது, புதிதாக முளைக்கின்ற கட்சிகள், எல்லாம் போஸ்டர் ... |
| பொறுப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது: ஜெ., Posted: சென்னை: 'மத்திய அரசு பட்ஜெட், மிகவும் பொறுப்புணர்வுடன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.பொருளாதார நிலை:அவரது அறிக்கை:மத்திய பட்ஜெட், வளர்ச்சியை புனரமைத்தல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையை மேம்படுத்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ள, புதிய அரசு, உண்மையான அக்கறையுடன் இருக்கிறது என்பதை,பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.இந்த பட்ஜெட், மிகப் பொறுப்புடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கப்பூர்வமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.நிதிப் பற்றாக்குறையை ... |
| பட்ஜெட் உரை ஐந்து நிமிடம் ஒத்திவைப்பு: பார்லி., வரலாற்றில் இதுவே முதல் முறை Posted: புதுடில்லி : நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, முதுகு வலி ஏற்பட்டதால், பட்ஜெட் உரையின்போது, சபை, ஐந்து நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. பார்லி., வரலாற்றில் பட்ஜெட் உரையின்போது, சபை ஒத்தி வைக்கப்படுவது, இதுவே முதல் முறை.அசவுகரியமான சூழல்:மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 61, நேற்று காலை, 11:00 மணிக்கு, பட்ஜெட் உரையை வாசிக்கத் துவங்கினார். உரை துவங்கிய சில நிமிடங்களில், அவருக்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இருமுறை தண்ணீர் குடித்தார். 45 நிமிடங்கள் ஆனதும், உரையை நிறுத்தினார்.அவர், ஏதோ ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த, மத்திய ... |
| பா.ஜ., தேர்தல் அறிக்கை- பட்ஜெட் ஒப்பீடு Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலின் போது பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள், பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.* 100 புதிய நவீன நகரங்களை உருவாக்கும் திட்டம்.* மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதி கொண்ட இருப்பிடத்தை உறுதி செய்வது.* ரூர்பன் கருத்தாக்கத்தின் கீழ், கிராமப் பகுதிகளுக்கு நகர வசதிகளை அளிப்பது.* அதிவேக புல்லட் ரயிலின் வைரநாற்கர திட்டம்.* தொழிலாளர்கள் சார்ந்த ஜவுளி, உள்கட்டமைப்பு துறைகளை மேம்படுத்துவது.* பெண்குழந்தைகளை காப்பாற்றி கல்வி அளிக்கும் தேசிய திட்டம்.* மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வரிச்சலுகை மற்றும் அதிக வட்டி ... |
| Posted: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, 'சூப்பர்' திட்டங்களில் முக்கியமானவை: 'ஸ்மார்ட் சிட்டீஸ்' என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 100 புதிய நகரங்கள். இதில் ஒன்று, சென்னை அருகில் உள்ள பொன்னேரியில் அமைய உள்ளது; திட்டத்திற்காக 7,060 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அரசு செலவினங்களை குறைப்பதற்கு ஓர் ஆணையம். ஓராண்டிற்குள் அரசின் செலவுகளை குறைப்பது குறித்து, இந்த ஆணையம் அறிக்கை கொடுக்கும்.ஓராண்டிற்குள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, நாடு முழுவதும் ஒரே வரியை, (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்துவதில் அரசு உறுதி. இதன் மூலம் உள்நாட்டு வர்த்தகம் ... |
| பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்ன? Posted: காசநோய் நுண்ணறிவு மையம்: காசநோயாளிகளுக்கு, உயர் தர சிகிச்சையை வழங்கும் வகையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும், 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்' என்ற பெயரில், காசநோய் நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.பொன்னேரியில் 'ஸ்மார்ட் சிட்டி': தொழில் வளர்ச்சிக்காக, சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையில் அமைக்கப்படும், 'இன்டஸ்டிரியல் காரிடார்' என்ற சிறப்பு நெடுஞ்சாலை பகுதியில், சிறப்பு தொழில் நகரங்கள் உருவாக்குவது குறித்து 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு வருகிறது. ... |
| வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்: விவசாயிகள் வரவேற்பு Posted: பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:*காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக் கொள்கையால், அவற்றின் விலை மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சாகுபடி செலவு அதிகரித்து, விவசாயிகள் தவித்து வருகின்றனர்.'உரக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்' என, தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஆறுதல் தருகிறது.*விவசாய கடன்கள் வழங்க, எட்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு ... |
| சாக இருந்த பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து : மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் Posted: புதுடில்லி:''சாக இருந்த இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து போல், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேலும் பல தரப்பினரும், பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். எனினும், வழக்கம் போல், எதிர்க்கட்சியினர் குறை சொல்லவும் தயங்கவில்லை.பார்லிமென்டில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:சமுதாயத்தின் ... |
| ஜெட்லி தாக்கல் செய்த மோடி அரசின் முதல் பட்ஜெட்: நெருக்கடியை ஏற்படுத்தும் மானிய செலவு சுமைக்கு குறி Posted: புதுடில்லி : உறுதியான முதலீட்டு சூழலை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே தங்கள் இலக்கு என்று, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, தன் முதல் நிதி நிலை அறிக்கை மூலம், முதலீட்டாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் தெரிவித்து உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் நிதி நிலை அறிக்கையை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று, பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதில், 100 நாள் வேலை திட்டம், மானியங்கள் அதிகரிப்பு போன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் எதுவும் இல்லை. மாறாக, நாட்டின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் மானியங்களை, ''ஏழைகள் ... |
| உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமை கடுமையாக அதிகரிப்பு: தலைமை நீதிபதி லோடா வருத்தம் Posted: புதுடில்லி : ''உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்துஉள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், விரைவாக வழக்குகளை முடிக்க, மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்,'' என, தலைமை நீதிபதி லோடா கூறினார்.மரண தண்டனை பெற்ற வர்கள், தங்களின் தண்டனையை ஆயுளாக குறைக்கக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின், அரசியல் சட்ட, 'பெஞ்ச்' நேற்று விசாரித்தது.அப்போது, தலைமை நீதிபதி லோடா கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் வேலைப்பளு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |