Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Posted: 10 Jul 2014 12:51 PM PDT

இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப்பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விளம்பரங்களில் வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். பெண்கள் இயற்கை முறையில் அழகாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அது ...

காவியம் பிழைத்தது..

Posted: 10 Jul 2014 12:43 PM PDT


-
சலீம் – அனார்கலியையும்
மஜ்னு – லைலாவையும்
ரோமியோ – ஜூலியட்டையும்
அம்பிகாபதி – அமராவதியையும்
மறந்திருப்பார்கள்- அன்பே
உன்னைக் கண்டிருந்தால்..!

————————————

>ஷோபா
நன்றி: எனது போதி மரம் (கவிதைகள்)

புருசனை சமாளிக்க கட்டிப்பிடி வைத்தியம்...!

Posted: 10 Jul 2014 12:30 PM PDT

- கல்யாணப்பத்திரிகையிலாவது என் ஜோக் வரட்டும்'னு நினைச்சு பத்திரிகையின் பின்பக்கம் ஜோக் போட்டது தப்பாப் போச்சு..! - என்னாச்சு? - இப்படி 'கடி'க்கிறவரோட நான் எபட்டி வாழ முடியும்னு கல்யாணம் பொண்ணு ஓடிட்டா...! - >அமுதா கணேசன் - --------------------------------------------- - எங்க கடையில செருப்பு வாங்கினா 'காலைக் கடிக்காது!' இன்னும் என்ன யோசனை பண்றீங்க? - நீங்க சொல்ற விலை கையைக் கடிக்குதே...! - >பொன் பிரபாகரன் - ----------------------------------------- - சமைக்க மாட்டேன் ...

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Posted: 10 Jul 2014 12:15 PM PDT

மக்களவையில் புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் அமர்ந்திருந்தபோது, தலையை சாய்த்துக் கொண்டு கண்ணை மூடியபடி ராகுல் காந்தி இருப்பது மக்களவை தொலைக்காட்சியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, "விலைவாசி உயர்வு விவகாரத்தில் ...

வார இறுதிகள்…

Posted: 10 Jul 2014 11:10 AM PDT

- குழந்தைப்பருவத்தில் பேசிவிளையாட பெற்றோருக்காக கன்னிப்பருவத்தில் - சினிமாவுக்குச் செல்ல தோழிக்காக குடும்பப் பருவத்தில் ஊருக்குத் திரும்பும் கணவனுக்காக - முதுமைப் பருவத்தில் ஆஸ்பத்திரி போக பிள்ளைக்காக… - வாழ்வின் இறுதி வரை காத்துக்கிடக்கும் வார இறுதிகள் - ——————- >நாகேந்திரபாரதி (குங்குமம்)

"தியானத்தின் பலன்கள்"

Posted: 10 Jul 2014 11:08 AM PDT

1) வியாதிகளிலிருந்து நிவாரணம் 2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல். 3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல் 4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல் 5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல். 6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல். 7) ஞாபக சக்தி அதிகரிப்பு. இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல். 9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல். 10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு ...

மன அழுத்த பிரச்னைக்குத் தீர்வாகும் ஏலக்காய்

Posted: 10 Jul 2014 11:05 AM PDT

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிகப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. 1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை ...

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

Posted: 10 Jul 2014 11:01 AM PDT

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை ...

தவம்

Posted: 10 Jul 2014 10:56 AM PDT


-
உருட்டிப் பிடித்த
களிமண்ணை
சிறுகுச்சி உடைத்துக் கீறிய
குழந்தையின் கைகளில்
கண் திறந்தார் கடவுள்!

-
———————–
>கொ.மா.கோ.இளங்கோ
(குங்குமம்)

பனை

Posted: 10 Jul 2014 10:56 AM PDT

புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் ...

வாயில்...

Posted: 10 Jul 2014 10:47 AM PDT


-

மரணக்குகையில்
நுழையும் வசந்தகாலத்தை
பின்தொடர்வதில்லை
மலர்கள்

-

———————-
>ப.மதியழகன் (குங்குமம்)

சுடிதார்லதான் அவங்க அழகா இருக்காங்க...!

Posted: 10 Jul 2014 10:46 AM PDT

-- தலைவர் தன்னை புழல்ல போடச்சொல்லி ஜட்ஜ்கிட்டே சொல்றாரே...ஏன்? - அந்த ஜெயிலோடதான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதாம்..! - >பர்வின் யூனூஸ் - ---------------------------------- - நர்ஸூக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்தீங்களாமே... ஏன்? - யூனிபார்ம்ல அவங்க அழகு வெளிப்பட மாட்டேங்குது டாக்டர்..! - >அம்பை தேவா - ---------------------------------------- - யாரங்கே..? - நீங்கள்தான் மன்னா...அது..! கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கிறீர்கள்..! - >சிக்ஸ் முகம் - ------------------------------------------- - மதுரையிலேயும் ...

பூச்சாண்டிகள்

Posted: 10 Jul 2014 10:45 AM PDT


-

கடைசி வரையிலும்
அறிமுகம் ஆகாமலேயே
இருந்து விடுகிறார்கள்
குழந்தை பருவத்தின்
பூச்சாண்டிகள்!

-

——————–
>கி.சார்லஸ்
நன்றி: குங்குமம்)

இது எப்படி இருக்கு - நகைச்சுவை!

Posted: 10 Jul 2014 10:40 AM PDT

கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்... கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க... மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்... (ஐந்து நிடங்கள் கழித்து) கணவன் ...

விஜய் அரசியல் பிரவேசம்!

Posted: 10 Jul 2014 10:38 AM PDT

- விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. - தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். - இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்… அப்ப பார்க்கலாம்…' என்று, சூசகமாக அறிவித்துள்ளார். - ————————————-

புரிஞ்சுக்கவே முடியலையே..!

Posted: 10 Jul 2014 10:35 AM PDT

தெரு முனையில் பிள்ளையார் கோயிலில் பாடல் உரக்க ஒலித்தது. இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் காலையில் எழுந்த உடனேயே விநாயகர் பாடல் சி.டி.யை அப்பா போட்டுவிட்டார். பூஜை முடியும் வரை அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். - களிமண் விநாயகர் சிலையை வாங்க நானும், அப்பாவும் கடைத்தெருவுக்குச் சென்றோம். பிளாட்பாரம் முழுவதும் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் வீற்றிருந்தன. அதில் பல வண்ணம் பூசப்பட்ட சிலைகள் சூரிய ஒளிபட்டு மின்னிக் கொண்டிருந்தன. - முகம் களையாக உள்ள சிலையைப் பார்த்து ...

விநோதம்..

Posted: 10 Jul 2014 10:34 AM PDT


-
வில்லொன்றை
எடுத்து
விழி அம்பைத்
தொடுத்து
விழவைத்த
உன்னை – மனம்
விரோதியாய்
எண்ணாதது
விநோதமே..!

- —————————————
>ஷோபா
நன்றி: எனது போதி மரம் (கவிதைகள்)

உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!

Posted: 10 Jul 2014 10:33 AM PDT

- அந்த பிச்சைக்காரனுக்கு பக்கத்து தெருவிலே, நிறைய பிச்சை கிடைக்குது, கொடுத்து வச்சவன், இந்த தெருவிலேயும் இருக்கிறாங்களே... - விடு மச்சான், இக்கரைக்கு அக்கரை பிச்சையாத்தான் தெரியும்..! - ---------------------------------------- - இந்த டாக்டர் வீடு எதுவும் கட்டுகிறாரா..? - எதுக்கு கேட்கிறே? - ஆபரேசனுக்கு என்ன செலவாகும்னு கேட்டா, 'என்ன ஒரு கிச்சன், இரண்டு பாத்ரூம் கட்டுற' செலவுதான் வரும்னு சொல்றாரே..! - ------------------------------------ - பக்கத்து வீட்டுப் பையனை அம்மா ...

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Posted: 10 Jul 2014 10:30 AM PDT

--- பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா, மாமா! - நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து பேசறீங்க..? - >வி.ரேவதி - ——————————————– - உங்க கணவர் காணாமல் போய் ஒரு மாசமா ஆச்சுங்கறீங்க ஆனா இப்பத்தான் புகார் தர்றீங்க…அதுவரை என்னம்மா செஞ்சுகிட்டு இருந்தீங்க? - ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிட்டுகிட்டு இருந்தேன் இன்ஸ்பெக்டர்..! - >எல்.சிதம்பரம் - —————————————– - தலைவருக்கு வெளிநாட்டு மோகம் இருக்கலாம், அதுக்காக இப்படியா? - ஏன் என்ன பண்ணினார்? - எல்லோரும் ...

தேர்வு…

Posted: 10 Jul 2014 10:28 AM PDT


-

என் ஓட்டங்களைத்
தேர்ந்தெடுப்பது யார்
யாரோ
மூச்சிறைப்பது மட்டும்
எனக்கு!

-

———————-
>ஆதிசரவணன்
நன்றி: குங்குமம்)

முகப்பரு - கவிதை

Posted: 10 Jul 2014 10:27 AM PDT

- எகிப்தின் பிரமிடுகளைப் போன்ற என்… முகப்பருக்கள் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாக்கிறேன் ஏன் தெரியுமா? - உன்… சின்ன சின்ன சில்மிஷங்கள் உள்ளுக்குள் 'மம்மி'களாய்..! -——————————————- >ஷோபா நன்றி: எனது போதி மரம் (கவிதைகள்)

எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!

Posted: 10 Jul 2014 10:23 AM PDT

- - தலைவர் என்ன, தேர்தல் கமிஷனும், ஃபைனான்ஸ் கம்பெனியும் ஒண்ணுதான்னு சொல்றாரே..? - தலைவருக்கு டெபாசிட் கிடைக்கலையாம்...அதான்! - >வி.சாரதிடேச்சு - -------------------------------------------- - நீங்க இதே மாதிரி குடிச்சிங்கன்னா சீக்கிரம் செத்து போயிடுவீங்க...! - எனக்கு தண்ணில கண்டம் இல்லைன்னு ஜோசியர் சொல்லியிருக்கிறார், டாக்டர்...! - >வி.சாரதிடேச்சு - ------------------------------------------ - எதிரி மன்னனுக்கு நல்லா பாடம் புகட்ட வேண்டும் மன்னா...! - சிபிஎஸ்சி சிலபஸிலா, ...

நயன்தாரா – தெலுங்கு படவுலகம் அழைப்பு

Posted: 10 Jul 2014 10:22 AM PDT

- மகேஷ்பாபு, வெங்கடேஷ், நாகார்ஜுனா என, பலர் இப்போதும், நயன்தாராவை அரவணைத்து வருகின்றனர். அந்த ஹீரோக்கள், அழைப்பை ஏற்று தெலுங்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் - தற்போது, தமிழில் நடித்து வரும், தனி ஒருவன் மற்றும் இது நம்ம ஆளு படங்களுக்கு பின், தெலுங்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் நயன்தாரா. - ======================

சதிராடல்…

Posted: 10 Jul 2014 10:09 AM PDT


-
-
ஆயிரமாயிரம்
ஆண்டுகள் கடந்த பின்னும்
உலகத்தின்
ஏதோ ஒரு மூலையில்
இன்னும்
உருண்டு கொண்டுதான் இருக்கிறது
சகுனியின் தாயக்கட்டைகள்!

-
—————————-
>பாலு விஜயன்
நன்றி: குங்குமம்)

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Posted: 10 Jul 2014 10:06 AM PDT

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட ...

‘பீர்’ பால் கதைகள் பிடிக்கும்’ன்னார்..!

Posted: 10 Jul 2014 10:06 AM PDT

- ஆபிசுக்கு ஏன் இவ்வளவு லேட்டா வர்றீங்க? - வீட்டில சண்டை சார்..! - எங்கே..உடம்புல காயத்தை காட்டுங்க, அப்பத்தான் நம்புவேன்…! - >ஆர்.மணிகண்டன் - ———————————– - உற்சாக பான பிரியரிடம் , 'உங்களுக்கு என்ன கதை பிடிக்கும்'னு கேட்டியே…அதுக்கு அவரு என்ன சொன்னாரு..? - 'பீர்' பால் கதைகள் பிடிக்கும்'ன்னார்..! - ஸ்டேனியல் ஜூலியட் - —————————————– - டூ விலர் ஓட்டுறப்ப ஹெல்மெட் போடாட்டாலும் பரவாயில்ல, ஆனா குடிச்சுட்டு வூட்டுக்கு போறப்ப கட்டாயம் போடணும், ஏன்னா… மனைவி 'மூடு' எப்படின்னு ...

எங்க வீட்டு கிரைண்டரும் வாஷிங் மிஷினும் ரிப்பேர் ஆயிடுச்சு..!

Posted: 10 Jul 2014 10:05 AM PDT

- அவள்: எங்க வீட்டு கிரைண்டரும் வாஷிங் மிஷினும் ரிப்பேர் ஆயிடுச்சு..! - இவள்: உங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே? - ---------------------------------------- - உங்க பையனைக் காணலைன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டிருந்தீங்களே... என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? - ஏன்? - என் பொண்ணையும் காணலைன்னு சேர்த்துப் போட்டிருக்கலாமே! - >சி.ரகுபதி, போளூர். - --------------------------------------- பெண் 1: இந்த ஹேர் ஆயில் ரொம்ப மோசம். - பெண் ...

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Posted: 10 Jul 2014 09:24 AM PDT

- வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா... போசாம நிக்கிறீங்களே? - திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன். - ----------------------------------------- - பத்திரிகை ஆசிரியர்: என்னங்க போஸ்டர் கவர் மேலேயே கதையை எழுதி அனுப்பிட்டீங்க? - எழுத்தாளர்: கவர் ஸ்டோரி வேணும்னு கேட்பீங்களே! - ------------------------------------------- - என்னங்க இது! சமையல் நல்லாயிருக்குன்னு தானே சொன்னேன். உடனே உங்க மனைவி மயங்கி சாய்ந்துட்டாங்களே! - நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே ...

பெண்கள் குணம் – புரிந்து நடந்தால் எல்லாம் சுகமே…!

Posted: 10 Jul 2014 09:21 AM PDT

- நான் குண்டாக இருக்கிறேனா? - நான் குண்டாக இருக்கிறேனா? - - உண்மையை சொன்னால், இப்படி கேட்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் பெண்கள். தங்கள் உடல் எடை மீதும், அழகின் மீதும், அதிக கவனம் இருப்பது வாஸ்தவம் தான். ஆனால் தங்களின் ஆழ் மனது கூறிக் கொண்டே இருப்பதால், இக்கேள்வியை ஒரு ஆணிடம் பல முறை கேட்க முற்படுவர். - உண்மையில் குண்டாக ஆகிவிடுவதால், சும்மா மனதளவில் கொஞ்சம் தேற்றிக்கொள்ளவே அடிக்கடி இந்தக்கேள்வி கேட்பார்கள்…! - ஆண்கள் புத்திசாலித்தனமாக பதில் சொல்லி தப்பிக்க வேண்டும்..!! -

கருப்பு நிறப்பூ…!

Posted: 10 Jul 2014 09:16 AM PDT


-
உன்னை மட்டும்…
பார்க்காமல்
இருந்திருந்தால்
மற்றவர்களைப்
போலல்லவா
நானும்…
நம்பிக்கொண்டு
இருந்திருப்பேன்!
உலகில்…
கறுப்பு
நிறப்பூ
இல்லையென்று..!
-

==============================
>ஷோபா
நன்றி: எனது போதி மரம் (கவிதைகள்)

-

பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Posted: 10 Jul 2014 09:09 AM PDT


-

பதுங்கு குழி ரொம்ப சின்னதாக உள்ளதே ..!

Posted: 10 Jul 2014 09:08 AM PDT

- பதுங்கு குழி ரொம்ப சின்னதாக உள்ளதே அமைச்சரே...! - என்ன செய்வது மன்னா...தாங்கள் குறுநில மன்னன்தானே..! - >சிக்ஸ்முகம் - -------------------------------------------- - மகளிரணிக் கூட்டத்துக்கு ஆவலாகப் போன தலைவர், என் இப்படி அதிர்ச்சியாகி திரும்பறார்..? - பெண்கள் எல்லாம் மேக்கப் இல்லாம கூட்டத்துக்கு வந்திருந்தார்களாம்..! - .பெ.பாண்டியன் - --------------------------------------------- - தத்துவம் - என்னாதான் அதிர்ச்சியான செய்தின்னாலும் ஒருத்தருக்கு இதயம் 'சுக்கு நூறா'தான் உடையும். ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 10 Jul 2014 09:06 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Posted: 10 Jul 2014 09:06 AM PDT

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Posted: 10 Jul 2014 09:01 AM PDT

உலகின் மிக நீளமான திரைப்படத்தை உருவாக்கிவருகிறார் ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் வெபெர்க் (Anders Weberg). 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி திரையிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் 'Ambiancé'. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருடைய நீளம் மட்டும் 72 நிமிடங்கள்! இந்த டீஸர் ஜூலை 20-ஆம் தேதி வரைதான் ஆன்லைனில் இருக்கும். தற்போது உலகில் திரையிடப்பட்ட நீளமான படமாக கருதப்படுவது 240 மணிநேரம், அதாவது 10 நாட்கள் தொடர்ந்து ஓடும்  'Modern Times Forever' என்ற திரைப்படம். ஆனால், ஆண்டர்ஸ் ...

தன்னம்பிக்கை

Posted: 10 Jul 2014 08:56 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. ..!

Posted: 10 Jul 2014 08:51 AM PDT

- ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது. ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. - ————————————– - சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான். சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். – இதில் நீ யார்? - ———————————– - பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே. எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்! - ————————————— - தவறுகள் அனுபவங்களை கொடுக்கும். அனுபவங்கள் தவறுகளை குறைக்கும். - ————————————– - காசுதான் சத்தம் போடும், பணம்(நோட்டு) ...

அறையை அடைத்துக்கொண்டு தூங்குபவரா? ...இதைப்படிங்க!!!!

Posted: 10 Jul 2014 08:46 AM PDT

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல், மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். யோக வாழ்வியலின்படி , சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் ...

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

Posted: 10 Jul 2014 08:43 AM PDT

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- ...

உங்களுக்கு தெரியுமா?

Posted: 10 Jul 2014 08:39 AM PDT

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் ...

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Posted: 10 Jul 2014 08:36 AM PDT

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ...

அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம் - சிறுகதை

Posted: 10 Jul 2014 08:35 AM PDT

என் தந்தை மேல் பிரியமானவருக்கு... என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது... இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். 'கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல ...

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம்!

Posted: 10 Jul 2014 07:10 AM PDT

உலகம் முழுவதும் உள்ள ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவர்கள் பணிபுரியும் நாடுகளில் ஓரின திருமணத்துக்கு சட்ட அனுமதி இல்லாத போதும் ஐநா அங்கீகாரம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்&பெண் திருமணத்துக்கு உரிய அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓரின சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில நாடுகளில் இதற்கு சட்ட ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (55)

Posted: 10 Jul 2014 07:09 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™