மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாரதீய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம்: அமெரிக்க தூதருக்கு சம்மன்
- சசிதரூர் மனைவி சாவில் திருப்பம்: எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு
- ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
- ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இயக்கத்தில் 2 சென்னை வாலிபர்கள்
- திருவனந்தபுரம் அருகே மனைவி–குழந்தையை கொன்று வியாபாரி தற்கொலை
- வாரணாசியில் மோடி வெற்றி பெற்றது செல்லாது: அஜய் ராய் வழக்கு
- 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு
- மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்வு
- முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுட்காலம் வரை 8 அரசு பணியாளர்கள்: பீகார் உத்தரவு
- ரமலான் நோன்பிருக்கும் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள்: பஞ்சாப் அரசு உத்தரவு
- அமர்நாத் குகைக் கோயிலில் 4 நாட்களில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்
- 10 கிலோ தங்கத்தை திருடிச் சென்ற நகை தொழிலாளிகள் பிடிபட்டனர்
- வீட்டு வேலை செய்யவில்லை என்று தாய் திட்டியதால் தூக்கிட்டு சிறுமி தற்கொலை
- ஐதராபாத்தில் ஹவாலா கும்பல் கைது: ரூ. 1.90 கோடி பறிமுதல்
- காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழா: சிறப்பாக கொண்டாட குஜராத் முடிவு
- நண்பனுடன் கள்ளத்தொடர்பு: சந்தேகத்தில் மனைவியை கொன்றவர் தலைமறைவு
- டுவிட்டரில் இணைந்தார் பிரணாப் முகர்ஜி
- பீகாரில் நிதிஷ் கட்சியின் முக்கிய தலைவர் விலகல்: பா.ஜ.க.வில் இணைகிறார்
- ஆந்திராவும், தெலுங்கானாவும் மோதிக்கொள்வதை தடுக்க உள்துறை செயலாளருக்கு ராஜ்நாத் உத்தரவு
- நீதிபதிகள் நியமனத்தில் கோபால் சுப்ரமணியத்தை புறக்கணித்தது தவறு: தலைமை நீதிபதி
| பாரதீய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம்: அமெரிக்க தூதருக்கு சம்மன் Posted: 01 Jul 2014 11:14 PM PDT உலக நாடுகளை உளவு பார்க்கிற வேலையை அமெரிக்கா கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள், அரசு நிறுவனங்கள், முக்கிய அமைப்புகள் அமெரிக்காவின் உளவு வளையத்தில் வைக்கப்படுகின்றன. இதில் அரசியல் கட்சிகளும் தப்பவில்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியை அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இந்த |
| சசிதரூர் மனைவி சாவில் திருப்பம்: எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு Posted: 01 Jul 2014 10:41 PM PDT முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அவர் பிணமாக கிடந்ததுது தெரிய வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்தார். அதிக |
| ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு Posted: 01 Jul 2014 10:34 PM PDT சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளை ரெயில்வே போலீசார் அவமரியாதையாக நடத்துவதாக கூறி மாற்று திறனாளிகள் தெற்கு ரெயில்வே தலைமையகம் முன்பு நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்கள் பிரச்சினை தொடர்பாக தீர்வுகாண உதவும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இயக்கத்தில் 2 சென்னை வாலிபர்கள் Posted: 01 Jul 2014 10:20 PM PDT ஈராக்கில் முன்பு அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதிபராக இருந்த சதாம் உசேனை விரட்டியடித்து விட்டு ஷியா முஸ்லிம் பிரிவினரிடம் ஆட்சியை ஒப்படைத்தது. இதனால் சதாம் உசேன் ஆதரவாளர்களான சன்னி பிரிவு இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி ஷியா பிரிவு அரசாங்கத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இவர்களுடன் சிரியா நாட்டு தீவிரவாதிகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் இவர்களது தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த இயக்கம் தாக்குதல் நடத்தி அங்கு பணிபுரியும் இந்தியர்களை சிறை பிடித்த பிறகுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றி வெளி உலகுக்கு தெரியவந்தது. |
| திருவனந்தபுரம் அருகே மனைவி–குழந்தையை கொன்று வியாபாரி தற்கொலை Posted: 01 Jul 2014 09:49 PM PDT திருவனந்தபுரம் அருகே வைக்கம் உதயனாபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் பல சரக்கு கடை வைத்துள்ளார். இவரது மனைவி சவுமியா (27). இந்த தம்பதியின் மகன் சிவகார்த்திக் (4). இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ்பகுதியில் சுபாசின் தாய் தந்தையார் வசித்து வருகிறார்கள் |
| வாரணாசியில் மோடி வெற்றி பெற்றது செல்லாது: அஜய் ராய் வழக்கு Posted: 01 Jul 2014 09:26 PM PDT வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் நேற்று அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் |
| 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு Posted: 01 Jul 2014 08:17 PM PDT கடந்த 28-ந் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 33 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ராஜாராமன் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- |
| மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்வு Posted: 01 Jul 2014 07:51 PM PDT சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதை அடிப்படையாக |
| முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுட்காலம் வரை 8 அரசு பணியாளர்கள்: பீகார் உத்தரவு Posted: 01 Jul 2014 02:31 PM PDT பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரிகளாக பதவி வகித்தவர்களின் ஆயுட்காலம் வரை அவர்கள் அனவருக்கும் தலா ஒரு நேர்முக உதவியாளர், 2 குமாஸ்தாக்கள், ஒரு கார் டிரைவர் மற்றும் 4 எடுபிடி பணியாளர்களை அரசு சம்பளத்தில் வைத்துக் கொள்ள நேற்று நடைபெற்ற பீகார் மாநில மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. |
| ரமலான் நோன்பிருக்கும் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள்: பஞ்சாப் அரசு உத்தரவு Posted: 01 Jul 2014 02:05 PM PDT ரமலான் நோன்பை முன்னிட்டு சிறைக்குள் நோன்பு நோற்கும் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குமாறு பஞ்சாப் சிறைத்துறை மந்திரி சோஹன் சிங் தண்டால் உத்தரவிட்டுள்ளார். நோன்பிருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கு பால், பழம் மற்றும் தேவையான |
| அமர்நாத் குகைக் கோயிலில் 4 நாட்களில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம் Posted: 01 Jul 2014 01:49 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. |
| 10 கிலோ தங்கத்தை திருடிச் சென்ற நகை தொழிலாளிகள் பிடிபட்டனர் Posted: 01 Jul 2014 01:37 PM PDT மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வரும் வருண் மொஹைட் என்பவரிடம் வேலை செய்து வந்த நகைகள் செய்யும் தொழிலாளிகள் 4 பேர் கடந்த மாதம் 26-ம் தேதியன்று சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கத்துடன் தலைமறைவாகி விட்டனர். |
| வீட்டு வேலை செய்யவில்லை என்று தாய் திட்டியதால் தூக்கிட்டு சிறுமி தற்கொலை Posted: 01 Jul 2014 01:05 PM PDT மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா நகர் அல்மாஸ் காலனியில் வசித்து வரும் ஒரு பெண் துவைத்த துணியை காயப்போடாததால் எட்டாம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளை திட்டியுள்ளார். |
| ஐதராபாத்தில் ஹவாலா கும்பல் கைது: ரூ. 1.90 கோடி பறிமுதல் Posted: 01 Jul 2014 12:55 PM PDT ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்பு தனிப்படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் ஐதராபாத் சாலையில் வேகமாக சென்ற ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, காரினுள் இருந்த 5 பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது |
| காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழா: சிறப்பாக கொண்டாட குஜராத் முடிவு Posted: 01 Jul 2014 12:38 PM PDT தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி திரும்பி வந்த 100-வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை |
| நண்பனுடன் கள்ளத்தொடர்பு: சந்தேகத்தில் மனைவியை கொன்றவர் தலைமறைவு Posted: 01 Jul 2014 11:03 AM PDT வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் மனைவி புல்முனியுடன் வசித்து வரும் பாப்லு மர்மர் என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வந்தார். |
| டுவிட்டரில் இணைந்தார் பிரணாப் முகர்ஜி Posted: 01 Jul 2014 07:39 AM PDT அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்துக்கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். அந்த வகையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனில் இருந்து செய்திகள் மட்டுமின்றி தனது செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்வதற்காக இன்று சமூக |
| பீகாரில் நிதிஷ் கட்சியின் முக்கிய தலைவர் விலகல்: பா.ஜ.க.வில் இணைகிறார் Posted: 01 Jul 2014 07:09 AM PDT நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதையடுத்து அம்மாநில அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டதுடன் நிதிஷ்குமாரின் செல்வாக்கும் வெகுவாக சரிந்தது. அம்மாநில முதல் மந்திரி பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலக நேரிட்டது. அது மட்டுமல்லாமல் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக |
| ஆந்திராவும், தெலுங்கானாவும் மோதிக்கொள்வதை தடுக்க உள்துறை செயலாளருக்கு ராஜ்நாத் உத்தரவு Posted: 01 Jul 2014 07:03 AM PDT ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலை தடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இரு மாநில அரசுகளும் குடிநீர், பாசன நீர், மற்றும் மின்சாரம் தொடர்பாக மோதிக் கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது |
| நீதிபதிகள் நியமனத்தில் கோபால் சுப்ரமணியத்தை புறக்கணித்தது தவறு: தலைமை நீதிபதி Posted: 01 Jul 2014 06:23 AM PDT உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தம்மை புறக்கணித்ததற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கோபால் சுப்ரமணியம் கடுமையாக விமர்சித்திருந்தார். தனது நேர்மை மற்றும் சுதந்திரமான செயல்பாடு காரணமாகவே தன்னை அரசு குறிவைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |