Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted: 01 Jul 2014 03:57 AM PDT

solanum-nigrum

solanum-nigrumகீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. இப்போது அந்த மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போமா!!! முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும். காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது. சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இடைத் தேர்தலில் லிபரல் இரு இடங்களையும் தட்டிக்கொண்டுள்ளது!

Posted: 01 Jul 2014 03:53 AM PDT

trudeau

trudeauரொறன்ரோவில இரு தேர்தல் தொகுதிகளில் இடைத்தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. குறிப்பிட்ட தேர்தலில் இரு இடங்களிலும் லிபரல் கட்சியே வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரு தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்று வெற்றிபெற்றிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைநாள் நகர சபைக் கவுன்சிலரும் ஒலிபரப்பாளருமான Adam Vaughan என்பவர் Trinity-Spadina தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றார். இத் தொகுதியில் NDP கட்சியைச் சேர்ந்த ஒலிவியா பதவிவகித்திருக்கின்றார். ஒலிவியா தான் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக தனது பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து அங்கு வெற்றிடம் வந்திருக்கின்றது. தற்போது லிபரல் அந்தத் தொகுதியைத் தனதாக்கியிருக்கின்றது. Scarborough-Agincourt தொகுதியானது லிபரல் கட்சியைச் சேர்ந்த Jim Karygiannis பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடம் ஏற்பட்டது எனவும் அதற்கு Arnold Chan என்பவர் போட்டியிட்டிருக்கின்றார் எனவும் தெரியவருகிறது. தற்போது இதுவரையில் குறிப்பிட்ட இருவரும் தத்தமது தொகுதிகளில் அதிகப்படியான வாக்குக்களால் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈமான் அமைப்பு வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி!

Posted: 01 Jul 2014 03:49 AM PDT

iman-distributes-tn-nonbu-k

iman-distributes-tn-nonbu-kதுபாய் ஈமான் அமைப்பு ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தமிழகத்து நோன்புக் கஞ்சியினை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள குவைத் பள்ளியில் (லூத்தா ஜாமிஆ பள்ளி) வழங்கி வருகிறது. துபாயில் சனிக்கிழமை மாலை ரமலான் நோன்பு துவங்கியதையடுத்து ஞாயிறு மாலை முதல் 38 ஆண்டுகள் அமீரகத்தில் சமுதாயப் பணியாற்றி வரும் ஈமான் அமைப்பு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன், பேரீத்தம் பழம், தண்ணீர், ஆரஞ்சு, சமோசா உள்ளிட்டவற்றவற்றை நோன்பாளிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் ஃபிர்ஜ் முரார் பள்ளி மற்றும் ஈடிஏ அஸ்கான் அருகிலுள்ள பள்ளி ஆகியவற்றிலும் நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன், துணைத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், தகவல் தொடர்பு சாதிக் மற்றும் இக்பால், முஹம்மது முஸ்லிம், முஹம்மது இல்யாஸ் உள்ளிட்ட குழுவினர் நோன்பு திறப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தினமும் 4000க்கும் மேற்பட்டோருக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாட்டவர் அனைவரும் நோன்புக் கஞ்சியை பருகி இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். உக்ரைன் நாட்டில் இருந்து வருகை புரிந்த ஜேம்ஸ் எனும் சுற்றுலாப் பயணி ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இஃப்தார் பணிகளை வியந்து பாராட்டினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈராக்குக்கு மேலும் 300 ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!

Posted: 01 Jul 2014 03:45 AM PDT

iraq

iraqஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கான யுத்தத்துக்கு ஆலோசனகளை வழங்க மேலும் 300 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பான உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. அத்துடன் தாங்கள் கைப்பற்றிய சிரியா, ஈராக் பிரதேசங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டைப் பிரகடனப்படுத்தியும் உள்ளனர். இந்த நிலையில் ஈராக் அரசுக்கு ஆதரவாக உலக நாடுகள் களம் இறங்கி தீவிரவாதிகள் வசமுள்ள நகரங்களை மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது சிரியா திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் உள்ள திக்ரித் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடிப் பார்த்தது. இதற்கு அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்கள் வியூகம் வகுத்துக் கொடுத்தனர். ஆனாலும் அரச படைகளால் முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவும் தம் பங்குக்கு போர் விமானங்களை ஈராக்குக்கு வழங்கியுள்ளது. இவையும் விரைவில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போது 300 ராணுவ வீரர்களை ஆலோசனை வழங்கும் பணிக்காக ஈராக்குக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனால் அடுத்த ஓரிருநாட்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஈராக்கின் தாக்குதல் உக்கிரமடையக் கூடும் எனக் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™