Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் குண்டுவீச்சில் 2 கேரள ஊழியர்கள் பலி

Posted: 23 Jul 2014 10:52 PM PDT

கேரள மாநிலம் கோழிக் கோட்டையைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 52). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (54). இவர்கள் 2 பேரும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்

ரம்ஜான் நோன்பு இருந்தவருக்கு கட்டாய உணவு: சிவசேனா எம்.பி.க்கு எதிர்ப்பு வலுக்கிறது

Posted: 23 Jul 2014 10:47 PM PDT

டெல்லியில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் விருந்தினர் இல்லம் உள்ளது. மராட்டிய மாநில அரசுக்கு சொந்தமாக 139 அறைகளுடன் பிரமாண்டமான ''நியூ மகராஷ்டிரா சதன்'' எனும் இல்லம் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து டெல்லி செல்லும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மிக குறைந்த வாடகையில் அந்த இல்லத்தில் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி வருபவர்களுக்கு உணவு

கேரள அரசின் நடவடிக்கையால் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

Posted: 23 Jul 2014 10:43 PM PDT

கேரளாவில் கந்துவட்டி கொடுமைக்கு தற்கொலைகள் அதிகரித்து வந்தது. உச்ச கட்டமாக திருவனந்தபுரத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது

தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி

Posted: 23 Jul 2014 10:33 PM PDT

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாய் பேட்டை அருகே காக்கதியா என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள். வழக்கம் போல் இன்று காலையில் பஸ்சில் மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மாசாயிபேட்டையில் ரெயில்வே லெவல்கிராசிங் உள்ளது.

டிக்கெட் கேட்டதால் ஆத்திரம்: ரெயிலில் பெண் பரிசோதகர் மீது தாக்குதல்

Posted: 23 Jul 2014 10:20 PM PDT

ஐதராபாத்தில் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. ஐதராபாத் அருகே கடந்த 18–ந்தேதி ரெயில் சோதனையிட்ட பெண் டிக்கெட் பரிசோதகர் கீதாவை சில பெண் பயணிகள் தாக்கினார்கள். டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த அவர்களுக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்கள், பெண் ஊழியரை (டி.டி.இ) சரமாரியாக தாக்கி ரெயிலில் இருந்து கீழே தள்ளினார்கள்.

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரசார் 3 நாள் போராட்டம்

Posted: 23 Jul 2014 10:14 PM PDT

ஆந்திராவில் தேர்தலின் போது நிபந்தனையின்றி விவசாயிகள், மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்தார். ஆனால் தற்போது கடனை தள்ளுபடி செய்ய பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளார். இதேபோல் மகளிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வேன் என்று கூறிய அவர் தற்போது ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் கடன் மட்டுமே

ஐதராபாத்தில் படிக்கும் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவி கிடையாது: சந்திரசேகரராவ்

Posted: 23 Jul 2014 10:10 PM PDT

ஆந்திராவில் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு கடந்த காங்கிரஸ் அரசு நிதி உதவி வழங்கி வந்தது. இப்போது ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2 மாநிலத்துக்கு தனித்தனி முதல்–மந்திரிகள் பதவி ஏற்று உள்ளனர். தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் படிக்கும் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாது என்று தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ்

கேரளாவில் மின்சாரம் தாக்கி 3 ஊழியர்கள் பலி

Posted: 23 Jul 2014 09:18 PM PDT

திருவனந்தபுரம், ஜூலை. 24– கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி பகுதியில் ஒருவர் புதியதாக ஒரு வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களான ஷிபு (வயது 27), சுரேஷ் (32) மற்றும் ஒப்பந்தத்தாரர் ஜிபி (30) உள்பட 7 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தை நட்டபோது எதிர்பாராத விதமாக அந்த மின்கம்பம் மேலே சென்ற மின்கம்பியில் உரசியது. இதனால் அவர்கள் 7 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அக்கம் பக்கத்தவர்கள் அவர்கள் 7 பேரையும் காப்பாற்றி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷிபு, சுரேஷ், ஜிபி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.19 கோடி சத்துணவு ஊழல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி கைது

Posted: 23 Jul 2014 08:15 PM PDT

உத்தரபிரதேசத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் நடந்த ரூ.19 கோடி ஊழல் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சத்துணவு ஊழல் வழக்கு தொடர்பாக அலிகார் வளர்ச்சி மேம்பாட்டு துணை தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜே.பி.சிங்கை சி.பி.ஐ.

பாராளுமன்றத்துக்கு 4 நாட்கள் விடுமுறை

Posted: 23 Jul 2014 08:10 PM PDT

ரம்ஜான் பண்டிகை, 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படலாம் என்பதால் அன்று பாராளுமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டது. ரம்ஜானுக்கு ஏற்கனவே அரசு விடுமுறை அதற்கு முந்தைய நாளான 28-ந் தேதியும் பாராளுமன்றத்துக்கு விடுமுறை விட கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு வழங்கிய பரிந்துரையை ஏற்று, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 28-ந் தேதியும் விடுமுறை என்ற

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான மனு விசாரணை தொடங்கியது

Posted: 23 Jul 2014 08:05 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

இந்தியா உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது

Posted: 23 Jul 2014 05:41 PM PDT

2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

Posted: 23 Jul 2014 04:05 PM PDT

குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத் ரிபாடியா குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவையில் வனத்துறை மானிய கோரிக்கை மீது

சுனந்தா புஷ்கர் மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரமணியசாமி கோரிக்கை

Posted: 23 Jul 2014 01:32 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி தெற்குடெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்தநிலையில் சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சி.பி.ஐ தலைமையிலான

12வது மாடியில் இருந்து குதித்து பலியான 57 வயது பெண்

Posted: 23 Jul 2014 01:15 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள வைஷாலி பகுதியில் 57 வயதான பெண் ஒருவர் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று அதிகாலை வீணா என்ற அப்பெண் தனது கணவர் சதீஷுடன் நடைபயணம் சென்றார். பின்னர் கணவருக்கு முன்னதாக தனது வீட்டுக்கு

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி எம்.பி. புதிய மனு

Posted: 23 Jul 2014 12:42 PM PDT

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லி சி.பி.ஐ தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தி.மு.க எம்.பி. கனிமொழி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி, அவர் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு

Posted: 23 Jul 2014 12:33 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜனதா எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். 'மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்வி மையம் வெளியிட்டுள்ளது.

இரு மாணவிகளுடன் ஓடிப்போன பள்ளி முதல்வர்: இரண்டு ஆண்டு தேடலுக்கு பின் கைது

Posted: 23 Jul 2014 12:09 PM PDT

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், பள்ளியில் தங்கி படித்த இரு மாணவிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓட்டம்பிடித்தார். இது குறித்து விசாரித்த அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் நீண்ட தேடுதலுக்கு பின் பஞ்சாபில் வைத்து அவரை கைது செய்தனர். 52 வயதான தவால் திரிவேதி என்பவர் படாதரியில் உள்ள டாக்டர் தீப்சந்த் கார்டி இண்டர்நேஷனல் ஸ்கூலில் முதல்வராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் பள்ளியிலேயே

ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை: சென்னையில் கிலோ 60 ரூபாய்

Posted: 23 Jul 2014 11:11 AM PDT

வடமாநிலங்களில் பெய்யும் கனமழை காரமணமாக தலைநகர் டெல்லிக்கு தக்காளி வரத்து சரிவை சந்தித்துள்ளதால் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. அதே போல் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள போதிலும் வெங்காயத்தின் விலை இன்னும் குறைந்தபாடில்லை. டெல்லியில் வெங்காயத்தின் விலை ரூ.40 என்ற அளவிலும், சென்னையில் கிலோ ரூ.35 என்ற அளவிலும் வெங்காயத்தின் விலை உள்ளது. நுகர்வோர்

அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு

Posted: 23 Jul 2014 07:47 AM PDT

அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பார்பேட்டா பகுதியைச் சேர்ந்தவன் கருணா தாஸ். இவன் தன் வீட்டின் அருகே வசித்து வந்த 9 வயது சிறுமியை, கேரம் போர்டு விளையாடலாம் என்று கூறி நைசாக தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™