Tamil Star |
- வாலை ஆட்டிய சுதான்ஷுவுடன் மோதும் கௌதம் கார்த்திக்!
- வைரமுத்துவுக்கு கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை!
- அண்ணி கொடுத்த வரதட்சணை புகார்.. வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!
- திருட்டு வீடியோ பார்க்காதீங்க! – ரசிகர்களிடம் சூர்யா வேண்டுகோள்!
- மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் அறிமுகம்!
- இந்த கொடுமையெல்லாம் பார்த்தால் எப்படிங்க சிரிக்காமல் இருக்க முடியும்!
- குழந்தையோடு சேர்ந்து அழும் தந்தை…. அப்படி என்னதான் நடக்குது இங்கே?
- சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!
- ஷர்மாவைவிட ரஹானே ஆட்டம் சூப்பர்: இங்கிலாந்தின் ஸ்வான் பாராட்டு!
- இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு காரணங்கள் 7
- மீண்டும் பரவுகிறது ‘பிளேக்’… நோய்த் தாக்குதலுக்குள்ளான யூமென் நகருக்கு சீல்!
- பலியானவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைப்பு!
- அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன!
- இலங்கை வீசா வழங்கக் கூடாது! சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை!
- இணைந்து செயற்பட வியட்நாம் விருப்பம் – அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை: கரு ஜயசூரிய!
| வாலை ஆட்டிய சுதான்ஷுவுடன் மோதும் கௌதம் கார்த்திக்! Posted: 23 Jul 2014 05:07 AM PDT
அஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் வில்லனாக வந்தவர் பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் இந்திரஜித் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மகன் கலாபிரபு இயக்கும் இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக சோனாரிகா பொடோரியா நடித்து வருகிறார். படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் கௌதம் ஆக்ஷன் ஹீரோவாக வருகிறாராம். அவர் இந்த படத்தை தவிர்த்து சிப்பாய், வை ராஜா வை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான கடல் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வைரமுத்துவுக்கு கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை! Posted: 23 Jul 2014 05:04 AM PDT
கோவைக்கு வந்த இடத்தில் முதுகுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது மணிவிழாவை கோவையில் விழா நடத்திக் கொண்டாடினார் வைரமுத்து. இதற்கான பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். மேலும் 2 நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிக்காக மீண்டும் கோவை வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் நடத்தினர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்துவை அவரது இரு மகன்களும், மருமகள்களும் கூடவே இருந்து கவனித்துக் கொள்கின்றனர். ஆபரேஷனுக்கு முன்பு வீடியோவில் உரை முன்னதாக இன்று ஜெயகாந்தன் விழாவில் சென்னையில் வைரமுத்து பேசுவதாக இருந்தது. ஆனால் உடல் நல பாதிப்பு காரணமாக அதில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. இருப்பினும் உறுதியளித்தபடி தனது பேச்சு இடம் பெற வேண்டும் என்ற உறுதியால், அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து கொடுத்தார் வைரமுத்து. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வைரமுத்துவின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அண்ணி கொடுத்த வரதட்சணை புகார்.. வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு! Posted: 23 Jul 2014 04:32 AM PDT
கோர்ட் உத்தரவின் பேரில் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் கடந்த 1999 ஆம் ஆண்டு பல்லவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் மனக் கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்தப் பெண் தனது கணவரும் அவரது உறவினர்களும் பெற்றோரிடம் இருந்து அதிக வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி, ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது சகோதரி நடிகை ரம்பா, குடும்பத்தினர் மீது வரதட்சணைத் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்லவியின் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர் This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருட்டு வீடியோ பார்க்காதீங்க! – ரசிகர்களிடம் சூர்யா வேண்டுகோள்! Posted: 23 Jul 2014 04:29 AM PDT
ரசிகர்களின் கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். யாரும் திருட்டு டிவிடி பார்க்காதீர்கள் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார். சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கியுள்ள படம், 'அஞ்சான்.' இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது (ஒரு நாள் முன்னதாக). அவருக்கு தயாரிப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், யு.டி.வி.தனஞ்செயன் ஆகிய இருவரும் ஆளுயர மாலை அணிவித்தார்கள். வேண்டுகோள் விழாவில், சூர்யா பேசும்போது ரசிகர்களிடம் உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், "என் பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு மேல் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாளுக்காக சுவரொட்டிகள் அடித்து பணத்தை விரயம் செய்யாதீர்கள். அந்த பணத்தில், சக மனிதர்களுக்கு உதவுங்கள். இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துங்கள். காலைத் தொட்டு... திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். உங்கள் கால்களை தொட்டு கேட்கிறேன். 'சிங்கம்-2' படத்துக்கு மட்டும் 45 லட்சத்துக்கு மேல் திருட்டு வி.சி.டி. அடித்து இருக்கிறார்கள்,'' என்றார். பின்னர் சூர்யா மேடையில் நின்றபடி, குனிந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார். கேள்வி பதில் பின்னர் அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா சில கேள்விகளை கேட்டார். அதற்கு சூர்யா பதில் அளித்தார். படத்துக்கு படம் உங்கள் உடற்கட்டு மற்றும் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறீர்களே, எப்படி? பதில்: கதாபாத்திரங்களை வடிவமைப்பது இயக்குநர்கள்தான். பாலா, கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள் எனக்கான கதாபாத்திரத்தை தங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து இருப்பார்கள். அவர்கள் சொல்கிறபடி, தோற்றத்தை மாற்றிக் கொள்கிறேன். அஞ்சான் 'அஞ்சான்' படத்தில் உங்களுக்கு சவாலாக இருந்தது என்ன? பதில்: இயக்குநர் பாலா அண்ணன் சொல்வார். 'நடிக்கும்போது திரையில் சூர்யா தெரியக்கூடாதுடா. கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும்' என்பார். 'அஞ்சான்' படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இவற்றில் சூர்யா தெரியாமல், அந்த பாத்திரமாக மாறுவது சவாலாக இருந்தது. சமந்தா பற்றி உங்கள் ஜோடியாக நடித்த சமந்தா பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: படத்தில், ''ஏக் தோ தீன்'' என்ற பாடலை நான் சொந்த குரலில் பாடியிருக்கிறேன். அந்த பாடல் காட்சியை படமாக்கியபோது, சமந்தாவுக்கு நான் இந்தி சொல்லிக் கொடுத்தேன். சமந்தா எனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்தார். சமந்தா மிக சாதுர்யமானவர். மிக தெளிவானவர். ஒவ்வொரு நாளும் அவர் எப்போது படப்பிடிப்புக்கு வருவார்? என்று யூனிட்டே காத்திருக்கும். வழக்கமா படப்பிடிப்பு தளத்தில் தாடியோடு திரிபவர்கள் கூட சமந்தா வருகிறார் என்றால் அன்று பளபளவென ஷேவ் செய்துவிட்டு வருவார்கள்!This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் அறிமுகம்! Posted: 23 Jul 2014 04:20 AM PDT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் சார்ந்த ஒரு புதிய பட்ஜெட் கேன்வாஸ் ஸ்மார்ட்போனான, கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனை ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வளைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு கைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், அதே பெயரில் வேறு மாடல் நம்பரில் மற்றொரு ஸ்மார்ட்போனான கேன்வாஸ் ஃபயர் (A093) ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் இந்திய வளைதளத்தில் இந்த மாத தொடக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, இ-காமர்ஸ் இணைய தளம் வழியாக ரூ.6,999 விலையில் விற்பனைக்கு சென்றுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்கும் டூயல் சிம் (வழக்கமான சிம் + மைக்ரோ சிம்) சாதனம் ஆகும். மைக்ரோமேக்ஸ் போல்ட் A069, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்டிஸ், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A093), மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்கேஜ், மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் கோல்ட் போன்ற மற்ற கிட்கேட் சார்ந்த மைக்ரோமேக்ஸ் போன்களுடன் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் இணைகிறது. இந்த கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் (480x854 பிக்சல்) டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT6582M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன், பிளாக் மற்றும் கோல்ட், ஒயிட் மற்றும் கோல்ட், மற்றும் ஒயிட் மற்றும் சில்வர் ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது. கேன்வாஸ் ஃபயர் (A104) மைக்ரோமேக்ஸ் ஒரு 1900mAh பேட்டரி உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-USB உள்ளிட்டவை வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் அம்சங்கள்: டூயல் சிம் (வழக்கமான சிம் + மைக்ரோ சிம்), 4.5 இன்ச் (480x854 பிக்சல்) டிஸ்ப்ளே, ரேம் 1ஜிபி, 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT6582M) ப்ராசசர், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1900mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த கொடுமையெல்லாம் பார்த்தால் எப்படிங்க சிரிக்காமல் இருக்க முடியும்! Posted: 23 Jul 2014 04:05 AM PDT |
| குழந்தையோடு சேர்ந்து அழும் தந்தை…. அப்படி என்னதான் நடக்குது இங்கே? Posted: 23 Jul 2014 04:00 AM PDT |
| சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்! Posted: 23 Jul 2014 03:31 AM PDT
விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும். சரும கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? அதுமட்டுமல்லாமல் மஞ்சளை நீரில் கலந்து நாளுக்கு ஒரு முறை அதனை குடித்து வந்தால், இரத்தமானது சுத்தமாகும். குறிப்பாக மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பது பற்றி பார்ப்போம். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும் மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும். உதடுகள் கருமையடைந்து இருந்தால், மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து, உதட்டில் மட்டுமின்றி முகத்திலும் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், உதடுகள் அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும். சருமம் வெள்ளையாக வேண்டுமானால், மஞ்சள் தூளுடன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷர்மாவைவிட ரஹானே ஆட்டம் சூப்பர்: இங்கிலாந்தின் ஸ்வான் பாராட்டு! Posted: 23 Jul 2014 03:25 AM PDT
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றிக்கு இஷாந்த் ஷர்மா மட்டுமே காரணம் கிடையாது, அஜிங்ய ரஹானே சதம் அடித்ததுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று இங்கிலாந்து நாட்டின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்தார். இதுகுறித்து ஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதை மறுக்க முடியாது. அதே நேரம் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ஒன்று இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் அந்த காரணம். இங்கிலாந்து நினைத்ததை போலவே இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இதுபோன்ற ஒரு வெளிநாட்டு பிட்சில் ஆடி அனுபவம் இல்லாத ரஹானே, அழகான சதத்தை அடித்து, இந்தியாவை மீட்டு எடுத்தார். களமிறங்குவதற்கு முன்பாக கண்டிப்பாக ரஹானே தனது மனதிற்குள், இந்த பிட்சில் எப்படி ஆடப்போகிறோமோ என்று நினைத்திருப்பார். இதையும் மீறி சிறப்பாக ஆடிய ரஹானேதான் என்னை பொறுத்தளவில் ஆட்ட நாயகன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு காரணங்கள் 7 Posted: 23 Jul 2014 03:21 AM PDT
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி சாதனை வெற்றி பெற முக்கியமான ஏழு காரணங்கள் உள்ளன. கிரிக்கெட் என்பது ஒரு கூட்டு முயற்சிக்குறிய விளையாட்டு. இதில் ஒவ்வொரு தருணமுமே முக்கியமானதுதான். இருப்பினும் அதி முக்கிய தருணங்கள் 7 இவைதான். இரண்டாவது இன்னிங்சில் மிடில் ஆர்டர் சரிந்தபோது, 57 பந்துகளில் 68 ரன்களை எடுத்து சரிவில் இருந்து மீட்டார் ரவீந்திர ஜடேஜா. 7வது காரணத்தை சொல்லவே தேவையில்லை. இஷாந்த் ஷர்மாவின் மாயாஜால பந்து வீச்சுதான் அந்த காரணம். காலையில் மந்தமாக இருந்த பந்து வீச்சு சாப்பாட்டை முடித்துவிட்டு வந்ததும் அதகளமாக மாறியது. ஷார்ட் பிட்ச் வகை பந்துகளை வீசி இங்கிலாந்தை திணறச் செய்து வெற்றியை பறித்தார் இஷாந்த் ஷர்மா.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீண்டும் பரவுகிறது ‘பிளேக்’… நோய்த் தாக்குதலுக்குள்ளான யூமென் நகருக்கு சீல்! Posted: 23 Jul 2014 03:14 AM PDT
சீனாவில் பிளேக் என்னும் உயிர் கொல்லி நோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால், நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி சுமார் 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் யூமென் நகருக்கு சீல வைக்கப்பட்டுள்ளது. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்ற உயிர்க் கொல்லி நோய் உலகையே ஆட்டிப்படைத்தது. எலிகள் மூலம் பரவும் இந்த நோய்க்கு பல்லாயிரம் மக்கள் பலியானார்கள். விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்குப் பின்னர் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிக்கப் பட்டு பிளேக் நோய் அழிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த நோய் மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது. மொத்தத்தில் யூமென் நகரம் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலால் சீனாவின் மற்றப் பகுதி மக்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பலியானவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைப்பு! Posted: 23 Jul 2014 03:09 AM PDT
ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகரை அடைந்தது. இதையடுத்து உடல்கள் சிறப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு புரட்சிப்படை பிடியில் இருக்கும் டோனட்ஸ்கில் விழுந்தது. புரட்சிப்படையினர் உடல்களை ரயிலில் ஏற்றி டோரஸ் என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புரட்சிப்படையினர் உடல்களை தங்களிடம் ஒப்படைப்பார்கள் என்று உக்ரைன் அரசு எதிர்பார்த்தது. ரயிலில் வந்த உடல்கள் ஒரு பேக்டரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பெட்டிகளில் போடப்பட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புரட்சிப்படையினர் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஆதாரங்களை அழித்துவிட்டதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை உக்ரைன் படைக்கும், புரட்சிப்படைக்கும் இடையே சண்டை நடந்தது. புரட்சிப்படையினர் ஒரு பேருந்தில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் புரட்சிப்படையினர் தங்கள் பிடியில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் நடத்திய தாக்குதலில் 5 பொது மக்கள் பலியாகினர், 16 பேர் காயம் அடைந்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன! Posted: 23 Jul 2014 12:27 AM PDT
கொழும்பு , வடக்கு தொகுதியிலேயே இலங்கையில் உயர்கல்வியை பெற முடியாத பிள்ளைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனை கூறியுள்ளார். கொழும்பில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர், அதேபோல் பெரும் எண்ணிக்கையில் வறிய மக்களும் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த காலம் முழுவதும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ஷவின் கொழும்பு நகர அலங்காரத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர் மறைமுகமாக கூறியுள்ளதன் மூலம் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக கடும் தாக்குதலை தொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராஜபக்ஷ அரசின் கண்காட்சி அபிவிருத்தியை விமர்சித்து வரும் அரசின் கூட்டணிக் கட்சிகள் சில, ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்குமாறு பகிரங்கமாக விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை வீசா வழங்கக் கூடாது! சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை! Posted: 23 Jul 2014 12:16 AM PDT
நோர்வேஜியர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியைன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் இலங்கை அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு வீசா வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறெட் லோசெனும் கலந்து கொண்டிருந்தார். நோர்வேஜியர்களுக்கு வீசா வழங்கக் கூடாது என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததையடுத்து, அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இணைந்து செயற்பட வியட்நாம் விருப்பம் – அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை: கரு ஜயசூரிய! Posted: 23 Jul 2014 12:12 AM PDT
தமது நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட வியட்நாம் விருப்பம் வெளியிட்டுள்ளது. வியட்நாமிய உதவி பிரதமர் குயேன் சுவான் பிஹகு இதனை தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக வர்த்தக மற்றும் கடன் உட்பட்ட குற்றங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவராச்சியுடனான சந்திப்பின் போது வியட்நாம் உதவிப்பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் ஹனோயில் நடைபெற்றது. இதேவேளை வியட்நாம், 2014-2016 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற, இலங்கை உதவியளித்தமைக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை: கரு ஜயசூரிய நாட்டின் அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாடு சீரழிந்துள்ளது. இன்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமில்லை. சலுகைகள் பதவி உயர்வு பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகளை நாடுகின்றனர். இவ்வாறு அரசியல் சிபாரிசின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டவர்கள் கடமையை உரிய முறையில் செய்வதில்லை. நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் நாட்டில் பாரியளவில் அழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் வீதிகள், பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை. எனினும், 500 மில்லியன் ரூபாவில் அமைக்கக் கூடிய பாதை 1500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம். இவ்வாறு பணம் விரயமாக்கப்படும் போது அதனை எதிர்க்கின்றோம். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் சீரழிந்துள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளது. இந்த தவறுகளை திருத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும். அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி மீது புலி முத்திரை குத்தி, புலித் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது. நாடு நாளுக்கு நாள் அழிவுப்பாதையை நோக்கி நகர்கின்றது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அண்மையில் வியலுவ கரமெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














