Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய மந்திரிசபை மாற்றப்படுகிறது: மோடி ஆலோசனை

Posted: 18 Jul 2014 11:00 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரிசபை கடந்த மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. மோடியுடன் சேர்த்து மொத்தம் 45 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பிரதமர் மோடி மிகச் சிறிய மத்திய மந்திரி சபையை அமைக்கவே முடிவு செய்திருந்தார். ஆனால் இலாகாக்களை ஒருங்கிணைப்பதில் சர்ச்சை ஏற்பட்டதால் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய தீர்மானித்தார்.

வேட்டிக்கு தடைவிதிப்பது பண்பாட்டுக்கு எதிரானது: பாராளுமன்றத்தில் கேரள எம்.பி.கண்டனம்

Posted: 18 Jul 2014 10:51 PM PDT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும் வக்கீலும் வேட்டி அணிந்து இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் எழுப்பப்பட்டபோது, முதல் – அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கையில் வேட்டி அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட கிளப்புகளின்

கேரளாவில் பேய் விரட்டுவதாக சித்ரவதை: இளம்பெண் சாவு

Posted: 18 Jul 2014 10:50 PM PDT

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 56). இவரது மகள் அசீனா (27). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அசீனா மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது பெற்றோர் அவருக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த பயனும் இல்லாததால் மகளை வீட்டில் வைத்து

உ.பி.யில் இளம்பெண் கற்பழித்து கொலை: அரசு ஊழியர் மனைவியும் கற்பழிப்பு

Posted: 18 Jul 2014 10:39 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் நாள் தோறும் நடைபெற்ற வண்ணம் உள் ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் ஒரு சம்பவம் மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்கு பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக

திருப்பதி மலையில் திடீர் காட்டு தீ: 2 ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்

Posted: 18 Jul 2014 10:00 PM PDT

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 7–வது மைல் தொலைவில் மான் பூங்கா உள்ளது. இதன் அருகே உள்ள மலையில் உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது காற்றும் வேகமாக அடித்ததால் தீ மளமளவென வனப்பகுதியில் பிடித்து எரிந்து பரவ தொடங்கியது

டெல்லி: சர்வதேச விமான நிலையம் அருகே பட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொலை

Posted: 18 Jul 2014 09:36 PM PDT

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன்(30). டாக்சி டிரைவரான இவர், நேற்று பிற்பகல் இந்திரா காந்தி சர்வதேச விமான

வீடு புகுந்து கற்பழிக்க முயன்ற தொழிலாளியை இளம்பெண் அடித்துக்கொன்றார்

Posted: 18 Jul 2014 09:33 PM PDT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கூடுபள்ளி மண்டலம் அத்திநத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாதன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவார். கணவர் சென்ற பின் ரேணுகா, தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருப்பார்.

காடுவெட்டி குரு விடுதலை எதிப்பு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted: 18 Jul 2014 02:10 PM PDT

பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. வன்னியர் சங்க தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு, கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய தடுப்பு காவலை மத்திய அரசு மூன்று முறை ரத்து செய்தது.

சவுதி சிறையில் வாடிய 40 இந்தியர்கள் நாடு திரும்பினர்

Posted: 18 Jul 2014 08:23 AM PDT

சவுதி அரேபிய சிறையில் ஓராண்டுக்கும் மேலாக வாடிய 40 இந்திய தொழிலாளர்கள் இன்று நாடு திரும்பினர். மெக்காவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்த 40 இந்தியர்கள், அந்த நிறுவனத்தில் நடந்த விபத்து தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு 2 மாத சிறைத்தண்டனை பெற்றனர். ஆனால்,

சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற மத்திய அரசு தீவிரம்: ஜெட்லி

Posted: 18 Jul 2014 07:17 AM PDT

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக வங்கி கணக்கு வைத்துள்ள நபர்களின் பட்டியலை பெறுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசியதாவது:-

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்

Posted: 18 Jul 2014 07:05 AM PDT

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு

மும்பையில் வணிக வளாக தீ விபத்து: தீயணைப்பு வீரர் ஒருவர் பலி

Posted: 18 Jul 2014 06:03 AM PDT

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகமான லோட்டஸ் வணிக பூங்காவில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 22க்கும் மேற்பட்ட தளங்களை கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 21வது மாடியில் முதலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் அது 20வது மாடிக்கு பரவியதாகவும் தகவல் வந்தது. உடனே 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு

நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 18 Jul 2014 04:56 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ.

கட்சியின் செயல்பாடுகளால் திக்குமுக்காடிவிட்டோம்: டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் புலம்பல்

Posted: 18 Jul 2014 04:09 AM PDT

கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது. தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைக்காததால் பா.ஜ.க ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார்.

அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் முன்னாள் மந்திரிகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 18 Jul 2014 03:25 AM PDT

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பின்பும் பல முன்னாள் மத்திய மந்திரிகள் தாங்கள் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்யாமல் உள்ளனர். இது குறித்து முன்னாள் தணிக்கைத்துறை தலைவரான வினோத் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆட்சி மாறிய பின்பும்

வசீகர குரலால் பெண்ணாக நடித்து இளைஞரை காதலிக்க வைத்த ஆண்

Posted: 18 Jul 2014 02:58 AM PDT

17 வயதான கிஷோர் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்புர் நகருக்குட்பட்ட பாலிகா பகுதியில் வசித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த பெண்ணின் செல்போன் நம்பரை கிஷோரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்ட கிஷோரை அப்பெண்ணின் வசீகர குரல் வெகுவாக கவர்ந்தது.

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காபூல் செல்லும் விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ்ஜெட்

Posted: 18 Jul 2014 02:46 AM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு செல்லும் விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்தது. காபூல் விமான நிலையம் மீது கடந்த 3-ம் தேதி தீவிரவாதிகள் ராக்கெட்

அனைத்து நிலக்கரி சுரங்கங்கள் வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசு மனு

Posted: 18 Jul 2014 12:55 AM PDT

கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட சுரங்க லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும்

மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது

Posted: 18 Jul 2014 12:32 AM PDT

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

காசா தாக்குதல் பற்றி விவாதிக்க மறுப்பு: எதிர்க்கட்சிகள் அமளியால் மேல்–சபை ஒத்திவைப்பு

Posted: 18 Jul 2014 12:22 AM PDT

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சபையில் விவாதம் நடத்த அனுமதிக்க கூடாது என்று வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் மேல்–சபை தலைவர் அன்சாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் மேல்– சபை நிகழ்ச்சி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™