Tamil Star |
- ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்போன் ரூ.11,990 விலையில் அறிமுகம்!
- 2-வது டெஸ்ட் : இந்தியா 295 ரன்களுக்கு ஆல் அவுட்!
- ஆப்ரிக்கா 455/9 டிக்ளேர்!
- நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களைக் குறைக்க முடிவு!
- தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் : பான் கீ மூன் வலியுறுத்தல்!
- போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
- கிழக்கு வான் பரப்பில் பயணிக்க வேண்டாம்: இலங்கை விமான சேவைகளுக்கு எச்சரிக்கை!
- ஷேக் படுகொலை வழக்கு! தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது!– பிரிட்டன்
- விசாரணைக் குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது: ஐ.நா திட்டவட்டம்!
- விமானங்கள் ஒரே தினம், ஒரே மாதம் வெவ்வேறு ஆண்டுகளில் வெடித்து சிதறின! உள்ளிருக்கும் மர்மம் என்ன?
- தொண்டு நிறுவனங்களின் உரிமைகள் முடக்கப்படக் கூடாது! இலங்கை அரசாங்கத்திடம் கனடா கோரிக்கை
- அதிபர் ஒபாமாவிற்கு விஷம் அனுப்பிய பெண்ணுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை!
| ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்போன் ரூ.11,990 விலையில் அறிமுகம்! Posted: 18 Jul 2014 06:27 AM PDT
ஒபி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான ஒபி ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்போனை ரூ.11,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது Snapdealல் கிடைக்கிறது. ஒபி ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் (ஒரு வழக்கமான சிம் மற்றும் பிற மைக்ரோ சிம்) சாதனம் ஆகும். இதில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயக்குகிறது. இது 294ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் ரேம் 1GB உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் (MT6592) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. ஒபி ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்ஃபோனில், எல்இடி ப்ளாஷ் மற்றும் 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. சாதனத்தில் ஒரு 1800mAh Li அயன் பேட்டரி அடங்கும். இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-USB, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், மைக்ரோ-USB, மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்ஃபோனில் 145x75x8.4mm பரிமாணங்களுடன் வருகிறது. ஒபி ஆக்டோபஸ் S520 ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்: இரட்டை சிம், 294ppi பிக்சல் அடர்த்தி, 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் (MT6592) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு, எல்இடி ப்ளாஷ் மற்றும் 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-USB, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், மைக்ரோ-USB, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1800mAh Li அயன் பேட்டரி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2-வது டெஸ்ட் : இந்தியா 295 ரன்களுக்கு ஆல் அவுட்! Posted: 18 Jul 2014 06:13 AM PDT
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 295 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அஜிங்யா ரகானே சதமடித்து அசத்தினார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 103, புவனேஷ்வர் குமார் 36, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து பந்து வீச்சில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 06:10 AM PDT
இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டுமினி ஆட்டமிழக்காமல் 100 ரன் விளாசினார். காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில் (ஜூலை 16-20), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்திருந்தது. அல்விரோ பீட்டர்சன் 34, டீன் எல்கர் 103, டுபிளெஸ்சிஸ் 80, கேப்டன் அம்லா 11, டிவில்லியர்ஸ் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். குவின்டான் டி காக் 17, ஸ்டெயின் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டெயின் 3 ரன் மட்டுமே எடுத்து லக்மல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டி காக்குடன் டுமினி ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த டி காக் 51 ரன் எடுத்த நிலையில் (90 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து டுமினி - பிலேண்டர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. பிலேண்டர் 27 ரன் எடுத்து மேத்யூஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னி மார்கெல் உறுதியாக கம்பெனி கொடுக்க, டுமினி சதத்தை பூர்த்தி செய்தார். மார்கெல் 22 ரன் எடுத்து தில்ருவன் பெரேரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 455 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. டுமினி 100 ரன் எடுத்து (206 பந்து, 10 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4, சுரங்கா லக்மல் 3, ஹெராத், மேத்யூஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. கவுஷல் சில்வா 8, தரங்கா 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களைக் குறைக்க முடிவு! Posted: 18 Jul 2014 06:03 AM PDT
மைக்ரோசாப்ட் நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்நிறுவனத்தில் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய ஆள்குறைப்பு பணி இதுவாகும். மேலும் இந்த ஆள்குறைப்பு தாக்கம் இந்தியாவில் குறைவாக இருக்கும் என்ற கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் இந்நிறுவனம் மேற்கொள்ளும் அதிகபட்ச ஆள்குறைப்பு இதுவாகும். நோக்கியா நிறுவனத்தை வாங்கியுள்ள இந்நிறுவனம் அதில் 12,500 பேரை நீக்க உள்ளது. 2013 ஜூன் 30 நிலவரப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 58 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். 41 ஆயிரம் பேர் பிற நாடுகளில் உள்ள இந்நிறுவன கிளைகளில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் மட்டும் நோக்கியா பணியாளர்கள் உள்பட மொத்தம் 6,500 பேர் உள்ளனர். ஆள்குறைப்பு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்காது என்று அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் : பான் கீ மூன் வலியுறுத்தல்! Posted: 18 Jul 2014 05:59 AM PDT
அப்பாவி பொதுமக்கள் பலியாவதால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தி உள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் எல்லை பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு காசா நகரில் உள்ள ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் வீடுகளை குறி வைத்து ராக்கெட்கள் வீசப்பட்டன. இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். 'அப்பாவி மக்கள் பலியாவதால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும். அதுபோல, மக்களை கேடயமாக பயன்படுத்துவதை ஹமாஸ் தீவிரவாதிகள் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வசதியாக 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்றிரவு அறிவித்தது. இஸ்ரேலின் 5 மணி நேர போர் நிறுத்தத்தை தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் காசா துறைமுக பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியேறினர். இதற்கிடையில், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து வான்வழி மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்! Posted: 18 Jul 2014 05:51 AM PDT
போர்த்துக்கல் பிரதமர் பெற்ரோ பஸோஸ் கொயல்ஹோ (Pedro Passos Coelho) எதிர்வரும் 20ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு ஒருநாள் விஜயம் மேற்கொள்ளும் இவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்கவுள்ளார். கிழக்குத் தீமோரில் இருந்து அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி கோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகத்திலுள்ள போர்த்துக்கீச கல்லறையையும் பார்வையிடவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிழக்கு வான் பரப்பில் பயணிக்க வேண்டாம்: இலங்கை விமான சேவைகளுக்கு எச்சரிக்கை! Posted: 18 Jul 2014 05:36 AM PDT
உக்ரைனின் கிழக்கு வான் பிராந்தியத்தில் பயணிக்க வேண்டாம் என இலங்கை விமான சேவைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலேசிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் சுட்டு விழுத்தப்பட்டமையை அடுத்து இலங்கையின் சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இவ் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விமான சேவைகள் தாமாகவே நிலைமையை உணர்ந்து சில நாட்களுக்கு முன்பிருந்தே இந்த வான் பரப்பை விட்டு விலகி வேறு வழியில் பயணிப்பதாக அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் மலேசிய விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷேக் படுகொலை வழக்கு! தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது!– பிரிட்டன் Posted: 18 Jul 2014 05:31 AM PDT
பிரிட்டன் பிரஜை குராம் ஷேக் படுகொலை வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் அளிக்கப்பட்டது. தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்ததீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது என பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் அறிவித்துள்ளார். நீதியை நிலைநாட்டுவதற்காக குராம் ஷேக்கின் உறவினர்களும் நண்பர்களும் கடினமான பயணமொன்றை மேற்கொண்டனர். இந்தப் பயணம் வெற்றியளித்துள்ளது. இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் நேர்மையுடனும், தொழில்சார் பண்புடனும் நடந்து கொண்டுள்ளது. தீர்ப்பு தொடர்பிலான அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என ஜோன் ரான்கீன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விசாரணைக் குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது: ஐ.நா திட்டவட்டம்! Posted: 18 Jul 2014 03:47 AM PDT
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில்லியிடம் இலங்கை ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவ் ஊடகம் எழுப்பிய பெரும்பான்மையான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சான்ட்ரா பெய்டாஸ் செயற்பட உள்ளார் என்ற விபரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை விசாரணைக் குழுவின் நிபுணத்துவ ஆலேசானை வழங்கும் குழுவில், பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியூசிலாந்து நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் அங்கம் வகிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானங்கள் ஒரே தினம், ஒரே மாதம் வெவ்வேறு ஆண்டுகளில் வெடித்து சிதறின! உள்ளிருக்கும் மர்மம் என்ன? Posted: 18 Jul 2014 03:42 AM PDT
அமெரிக்காவில் நியுயோர்க்கிலிருந்து புறப்பட்ட ரான்ஸ் வேல்ட் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 800 பறப்பை மேற்கொண்டு 12 நிமிடத்தில் 1996ம் ஆண்டு யூலை 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியது. அதனை பல அமெரிக்கர்களும் பார்த்திருந்தனர். விமானம் வெடிப்பதற்கு முன்னர் நிலத்திலிருந்து வானிற்கு தீப்பிழம்புடன் கூடிய ஒரு பொருள் சென்றதை கண்டதாக அவர்கள் சாட்சியம் சொன்னார்கள். ஆனாலும் இன்றுவரையும் அது மூடுமந்திரமாகவே இருக்கிறது. அதுபோலவே இன்றும் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே யூலை மாதம் 17ம் திகதி உக்கிரேனில் இன்னொரு விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது என லங்காசிறியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் கனடாவிலிருக்கும் திரு.சுதர்மா அவர்கள் இன்றைய விமான விபத்துப் பற்றிக் குறிப்பிடும் போது தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொண்டு நிறுவனங்களின் உரிமைகள் முடக்கப்படக் கூடாது! இலங்கை அரசாங்கத்திடம் கனடா கோரிக்கை Posted: 18 Jul 2014 03:37 AM PDT
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமைகள் முடக்கப்படக் கூடாது என கனடா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது விவகாரங்களில் பங்கேற்றல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என கனேடிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்கள் ஊடகங்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்ற கட்டுப்பாடு ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் சிவில் அமைப்புக்கள் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். வலவூட்டப்பட்ட சிவில் சமூகக் கட்டமைப்பு, ஜனநாயக கட்டமைப்பின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நிலைமைகளை கனடா தொடர்ந்தும் உன்னிப்பாக கண்காணிக்கும் என ஒபராய் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் அரசசார்பற்ற அமைப்புகளின் சட்டபூர்வமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கனடா கடும் கவலை வெளியிட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான மற்றும் பொதுவிடயங்களில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மதிக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார். சிவில் அமைப்புகளை ஊடகங்களுடன் தொடர்புகளை தவிர்க்குமாறு உத்தரவிடுவதும், அரசசார்பற்ற அமைப்புகளையும், அதன் பணியாளாகளையும் தொடர்ச்சியாக துன்புறுத்துவதும் ஜனநாய கொள்கைக்கு முரணாணது என கனடாவின் வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிபர் ஒபாமாவிற்கு விஷம் அனுப்பிய பெண்ணுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை! Posted: 18 Jul 2014 03:33 AM PDT
அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் (36), டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்டார். பின்னர், அது பொய் என தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெக்காஸ் நீதிமன்றம், நடிகை ஷனானுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, 3.67 லட்சம் டாலர் அபராதமும் விதித்து நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











