மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சாலையோரம் தூங்கிய பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறி 12 பேர் பலி
- கட்காரி வீட்டை தொடர்ந்து ராஜ்நாத், சுஷ்மா வீடுகளிலும் ஒட்டு கேட்கும் கருவி?: மத்திய அரசு மறுப்பு
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் அமைச்சரின் ரூ.100 கோடி சொத்து பறிமுதல்
- டெல்லியில் தீவிரவாதி கைது: நாசவேலை முறியடிப்பு
- ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு
- திருப்பதிக்கு விடுமுறை நாட்களில் வரவேண்டாம்: விஐபி பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்
- பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மதானியுடன் உம்மன்சாண்டி சந்திப்பு
- திருவனந்தபுரத்தில் அரசு பஸ்–லாரி மோதல்: மார்த்தாண்டம் டிரைவர் பலி
- டீசல் விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை
- ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு
- தாமதமான விமானப் பயணத்திற்கான முழு கட்டண தொகையை திருப்பி தர உத்தரவு
- மதக் கலவரச் சாவுகளில் உத்தரப்பிரதேசம் முதலிடம்
- மேகாலயாவில் ஒரே ஆண்டில் வயிற்றுப்போக்குக்கு 92 ஆயிரம் குழந்தைகள் பலி
- லஷ்கர் இ தொய்பா முக்கிய தலைவன் டெல்லியில் கைது
- சிவில் சர்வீசஸ் தேர்வு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ராஜ்நாத் சிங் உறுதி
- முலாயம் கட்சி பெண் தலைவரை சுட்ட முன்னாள் கணவர் தற்கொலை
- பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசாருக்கு உதவும் வகையில் சிறப்பு திறன் வளர்ச்சி மையம்
- ஊழியர்கள் தாமதமாக வருவதை தவிர்க்க பயோமெட்ரிக் சாதனம்: வெங்கையா
- டபாஸ் பாலுக்கு சிக்கல்: 72 மணி நேரத்திற்குள் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- ராம்பூரில் பயங்கர கோஷ்டி மோதல்: 3 பேர் சாவு
| சாலையோரம் தூங்கிய பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறி 12 பேர் பலி Posted: 28 Jul 2014 11:07 PM PDT பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ பக்தர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகார் என்ற இடத்தில் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனி பஸ்சில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அதிகாலையில் அவுரங்காபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முப்பா சில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பஸ்சை நிறுத்தி விட்டு பக்தர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தனர். இது டெல்லி – |
| கட்காரி வீட்டை தொடர்ந்து ராஜ்நாத், சுஷ்மா வீடுகளிலும் ஒட்டு கேட்கும் கருவி?: மத்திய அரசு மறுப்பு Posted: 28 Jul 2014 10:55 PM PDT மத்திய மந்திரி நிதின்கட்காரி வீட்டில் அதிசக்தி வாய்ந்த ஒட்டு கேட்கும் கருவி கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. வெளிநாடுகளின் உளவுத்துறை அந்த ஒட்டு கேட்கும் கருவியை பொருத்தியதாக சந்தேகம் எழுந்தது. இதை மத்திய அரசு மறுத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரது வீடுகளிலும் |
| ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் அமைச்சரின் ரூ.100 கோடி சொத்து பறிமுதல் Posted: 28 Jul 2014 10:33 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006–08ம் ஆண்டுகளில் மதுகோடா தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. அவரது மந்திரி சபையில் அனோஸ் இக்கா என்பவர் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் பதவி ஏற்ற சில மாதங்களுக்குள் அனோஸ் இக்கா ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கி குவித்து விட்டதாக பரபரப்பு குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டன. அந்த குற்றச்சாட்டுக்களை அனோஸ் |
| டெல்லியில் தீவிரவாதி கைது: நாசவேலை முறியடிப்பு Posted: 28 Jul 2014 10:13 PM PDT தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் நடமாட்டத்தை போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு டெல்லி சாராய் கலே கான் என்ற இடத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் சந்தேக நபர் ஒருவன் பிடிபட்டான். போலீசார் அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவன் பெயர் அப்துல் சுபான் குரேஷி என்றும், 42 வயதான இவன் |
| ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு Posted: 28 Jul 2014 10:08 PM PDT கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது. இந்த கும்பல் தொழில் அதிபர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை படம் பிடித்து அதை இண்டர்நெட்டில் |
| திருப்பதிக்கு விடுமுறை நாட்களில் வரவேண்டாம்: விஐபி பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் Posted: 28 Jul 2014 09:56 PM PDT திருப்பதி கோவிலில் சமீப நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக உள்ளது. அதோடு வி.ஐ.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் கூட்டத்தை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் திணறி வருகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் அடுத்த மாதம் 8–ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி ஆயுதபூஜை நடக்கிறது. அதற்கு அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு நாட்களாகிறது. இதேபோல் சுதந்திரதினமான ஆகஸ்டு |
| பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மதானியுடன் உம்மன்சாண்டி சந்திப்பு Posted: 28 Jul 2014 09:45 PM PDT கேரளாவில் உள்ள பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் மீது கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2008–ல் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக |
| திருவனந்தபுரத்தில் அரசு பஸ்–லாரி மோதல்: மார்த்தாண்டம் டிரைவர் பலி Posted: 28 Jul 2014 09:34 PM PDT மார்த்தாண்டம் மேல்புறத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). லாரி டிரைவர். இவர் மார்த்தாண்டத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் சென்றார். லாரியின் மேல் 3 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். லாரி இன்று காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் அருகே பாப்பணங்கோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், எதிரே வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதின. |
| டீசல் விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை Posted: 28 Jul 2014 08:40 PM PDT ஒவ்வொரு மாநிலங்களும் டீசலுக்கு ரூ.7-க்கு மேல் வரி விதித்துள்ளதால் இதை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.57.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மும்பையில் ரூ.66.01-க்கும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளில் ரூ.65.99-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் ரூ.62.64-க்கும், தமிழ்நாட்டில் ரூ.61.70-க்கும், மத்திய பிரதேசத்தில் ரூ.63.94- |
| ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு Posted: 28 Jul 2014 07:57 PM PDT பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் |
| தாமதமான விமானப் பயணத்திற்கான முழு கட்டண தொகையை திருப்பி தர உத்தரவு Posted: 28 Jul 2014 07:51 PM PDT இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக தாமதமான விமானப் பயணத்திற்கான கட்டணத் தொகையைத் திருப்பித் தருமாறு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ம் தேதியன்று இந்நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்ஜி 419 என்ற விமானம் இரண்டு குழந்தைகள் உட்பட 172 பயணிகளுடன் மும்பையிலிருந்து டெல்லி புறப்படத் தயாராக இருந்தது. |
| மதக் கலவரச் சாவுகளில் உத்தரப்பிரதேசம் முதலிடம் Posted: 28 Jul 2014 12:36 PM PDT மதக் கலவரச் சாவுகளில் இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான ஆய்வறிக்கையில், 'இந்தியாவில் மத சுதந்திரத்துக்கான உரிமைகளுக்கு போதிய சட்ட பாதுகாப்பு இருந்து, |
| மேகாலயாவில் ஒரே ஆண்டில் வயிற்றுப்போக்குக்கு 92 ஆயிரம் குழந்தைகள் பலி Posted: 28 Jul 2014 11:47 AM PDT இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கடந்த (2013) ஒரே ஆண்டில் மட்டும் வயிற்றுப்போக்குக்கு 92 ஆயிரம் குழந்தைகள் பலியான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரேநாளில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான முறை தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பது அல்லது அன்றாட |
| லஷ்கர் இ தொய்பா முக்கிய தலைவன் டெல்லியில் கைது Posted: 28 Jul 2014 10:33 AM PDT லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான அப்துல் சுபான் டெல்லியில் கைது செய்யப்பட்டான். முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்டுபிடித்து, மூளைச் சலவை செய்து தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்துவதில் கைதேர்ந்தவனான சுபான், இதற்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் பயங்கரமான ஆபத்தை விளைவிக்கக் |
| சிவில் சர்வீசஸ் தேர்வு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ராஜ்நாத் சிங் உறுதி Posted: 28 Jul 2014 07:33 AM PDT மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு முறையை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் யுபிஎஸ்சி அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திய ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடந்துகொண்டிருப்பதாகவும், ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவிற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை |
| முலாயம் கட்சி பெண் தலைவரை சுட்ட முன்னாள் கணவர் தற்கொலை Posted: 28 Jul 2014 07:19 AM PDT உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ அருகில் உள்ள ராம் நகரில் வசித்து வரும் சமாஜ்வாதி கட்சியின் பெண் தலைவரான 40 வயது மல்லிகாவை அவரது முன்னாள் கணவரான 45 வயது இஸ்மாயில் துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மனைவி மல்லிகாவுக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகப்பட்ட இஸ்மாயில், இரண்டு வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் மல்லிகாவின் வீட்டிற்கு வந்த இஸ்மாயில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தனது நாட்டுத் துப்பாக்கியால் மல்லிகாவை சுட்டார். பின்னர் தானும் தனது தலையில் சுட்டுக்கொன்டார். உடனடியாக |
| பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசாருக்கு உதவும் வகையில் சிறப்பு திறன் வளர்ச்சி மையம் Posted: 28 Jul 2014 06:58 AM PDT நக்சலைட் தாக்குதலில் பாதிப்புக்குள்ளான சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சிறப்பு திறன் வளர்ச்சி மையம் அமைத்துள்ளது. 'ஊனமுற்றோருக்கான மையம்' என்ற இந்த மையத்தை நேற்று மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை தலைமை அதிகாரி திலிப் திரிவேதி தொடங்கி வைத்தார். இந்த மையம் எச்.சி.எல். பவுண்டேசனின் கீழ் இயங்கும் சமூக பொறுப்புணர்வு கார்ப்பரேட்டுடன் இணைந்து |
| ஊழியர்கள் தாமதமாக வருவதை தவிர்க்க பயோமெட்ரிக் சாதனம்: வெங்கையா Posted: 28 Jul 2014 06:54 AM PDT மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சரான வெங்கையா நாயுடு தனது துறைக்கான அதிகாரிகளை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரவேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். தனது நிர்மாண் பவன் அலுவலகத்திற்கு திடீரென வந்த அவர், ஏகப்பட்ட அதிகாரிகள் தங்களது இருக்கைகளில் இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். பலர் வேலைக்கே வரவில்லை என்பதையும் அவர் தெரிந்துகொண்டார். உடனடியாக அனைவரையும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருமாறு அவர் உத்தரவிட்டார். |
| டபாஸ் பாலுக்கு சிக்கல்: 72 மணி நேரத்திற்குள் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Jul 2014 05:54 AM PDT மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான டபாஸ் பால் (வயது 55) கட்சி கூட்டம் ஒன்றில் பேசும்போது, எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசியதுடன், தங்கள் கட்சியினரை தாக்கினால் மார்க்சிஸ்ட் கட்சி பெண் உறுப்பினர்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி தமது கட்சி இளைஞர்களிடம் கூறுவேன் என்றும் கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு தீங்கு செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து தொண்டர்களை உசுப்பேற்றிய பால், வேறு வகையான மிரட்டல்களையும் விடுத்ததாக |
| ராம்பூரில் பயங்கர கோஷ்டி மோதல்: 3 பேர் சாவு Posted: 28 Jul 2014 05:11 AM PDT உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ராம்பூரில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று பக்கத்து வீட்டுக்காரரின் இடத்தின் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே இடப்பிரச்சினை இருந்ததால் இது சண்டைக்கு வழிவகுத்தது. வாய்த்தகராறில் ஆரம்பித்த இந்த சண்டை மோதலாக மாறியது. இரு தரப்பினரும் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டனர். இதில் ஒரு குடும்பத்தில் 2 பேரும், இன்னொரு குடும்பத்தில் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |