Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


டெஸ்ட் டிராவில் முடிந்தது தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா!

Posted: 28 Jul 2014 11:01 PM PDT

champion

championஇலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அணி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை வென்றது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. காலே சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்று 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 2வது டெஸ்ட் கொழும்பு, சிங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 421 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி தோல்வியை தவிர்க்க போராடியது. தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. பிலேண்டர் 27, இம்ரான் தாஹிர் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹெராத் 5, தில்ருவன் பெரேரா 3 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 165 ரன் விளாசிய ஜெயவர்தனே ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்க வேகம் ஸ்டெயின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 7 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா சதீஷ் குமார் பளுதூக்குதலிலும், ஜித்து ராய் துப்பாக்கி சுடுதலிலும் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து பதக்க பட்டியலில் இந்திய அணி கனடாவை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்தை பிடித்தது. இந்தியா இதுவரை 7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது. மல்யுத்த போட்டிகளில் கணிசமான பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலப்பு குழு பேட்மிண்டன் போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரிடம் போராடி தோற்றது. ஒற்றையர் ஆட்டங்களில் பாருபள்ளி காஷ்யப், பி.வி.சிந்து வெற்றி பெற்ற நிலையில் ஆண்கள் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் இந்தியா தோற்று வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டது. ஆண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு 3வது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோசல் 5-11, 11-6, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் பீட்டர் பார்க்கரிடம் தோற்று பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார். ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. ஆண்கள் குத்துச்சண்டை லைட் ஹெவி 81 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர் சுமித் சங்வான் தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் மனோஜ் குமார் 64 கிலோ எடை பிரிவில் கால் இறுதிக்கு முன்னேறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் ஜித்து ராய்!

Posted: 28 Jul 2014 10:42 PM PDT

kaman-wealth

kaman-wealthஸ்காட்லாந்து நாட்டில் நடந்து வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரின் ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர்கள் ஜித்து ராய் தங்கப் பதக்கமும், குர்பால் சிங் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர். இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஜித்து ராய் (26 வயது, லக்னோ) 194.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். மற்றொரு இந்திய வீரர் குர்பால் சிங் (34 வயது, பதிண்டா) 187.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டெனியல் ரெபச்சோலி (34 வயது) 166.6 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாரன் பொடென்ட் (52 வயது) 204.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடும் நெருக்கடி கொடுத்த ககன் நரங் 203.6 புள்ளிகள் பெற்று நூலிழையில் தங்கத்தை நழுவவிட்டார். இங்கிலாந்தின் கென்னத் பார் (182.0 புள்ளி) வெண்கலம் வென்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானங்கள் இனி காணாமல் போகாது, ஏவுகணை தாக்காது!.. பெயரை மாற்ற முடிவு!!

Posted: 28 Jul 2014 10:30 PM PDT

malaysian-airlines

malaysian-airlinesஅடுத்தடுத்து விபத்துகளில், சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும், மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பயணிகளிடம் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. இதுவரை அந்த விமானத்தில் பயணித்த 239 பயணிகள் மற்றும் ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இம்மாதம், ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17, உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உலக அளவில் மதிப்பு குறை ஏற்பட்டுள்ளது. அந்த பெயரை கேட்டாலே பயணிகள் அலறியடித்து ஓடுகிறார்கள். எனவே ஏர்லைன்ஸ் பெயரை மாற்றி உலக அளவில் மீண்டும் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், "ஏர்லைன்ஸ் பெயரை மாற்றுவது, ரீபிராண்ட் செய்வது போன்ற பல திட்டங்கள் கைவசம் உள்ளன. தற்போது தினமும் 50 ஆயிரம் பயணிகளை மலேசியன் ஏர்லைன்ஸ் ஏற்றிச்செல்கிறது. 20 ஆயிரம்பேர் ஊழியர்களை கொண்ட நிறுவனம் இது" என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனப்படுகொலை.. காஸா பலி எண்ணிக்கை 1,100

Posted: 28 Jul 2014 10:25 PM PDT

gaza

gazaபாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையில் பலியானோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது.

படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 5,100. இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஸா பகுதிகள் மீது கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் உக்கிரமான போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. உலக நாடுகள் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இந்த உக்கிரப் போரில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் 1,100 பேர் பலியாகி உள்ளனர். 5,100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாக சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 52 இஸ்ரேல் வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இரண்டு முறை யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியிட்டும் போர் முடிவுக்கு வரவில்லை. இரவும் பகலும் பாராமல் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனிடையே காஸா மீதான போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல! நவநீதம்பிள்ளை கருத்து!

Posted: 28 Jul 2014 10:19 PM PDT

Navipillai

Navipillaiமுன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிராகரித்துள்ளார். அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற டோக் டு அல் ஜெசீரா நிகழ்ச்சியின் போது நவநீதம்பிள்ளை தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். ஐக்கிய நாடுகள் சபையில் நவநீதம்பிள்ளையின் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த சாட்சிகளின் தகவல்கள் அடிப்படையிலேயே தமது அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நவநீதம்பிள்ளை இதன்போது குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் நெருங்கிய தொடர்பு: அமெரிக்கா

Posted: 28 Jul 2014 10:10 PM PDT

gotabaya-bbs

gotabaya-bbsஇலங்கை அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையின் ஊடகம் ஒன்றை கோடிட்டு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பொதுபலசேனாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுபலசேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. மிருக படுகொலை, ஹலால் சான்றிதழ் உட்பட்ட விடயங்களை முன்வைத்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் மதசுதந்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள போதும், சில இடங்களில் இந்த சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாட்சியங்களின்படி பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்கா தூதரகம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதுடன், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது என்றும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்!

Posted: 28 Jul 2014 09:38 PM PDT

Dilan-Perera

Dilan-Pereraஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும்(Show) என்று அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த விசாரணையின் முடிவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் செய்ய முடியாததை நவநீதம்பிள்ளை வேறு வழிகளால் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே அரசாங்கம் இந்த முயற்சியை முழுமையாக நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையில் அனைத்து பொறிமுறைகளும் இருக்கும் போது ஏன்? வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் தொடுத்த வழக்கு! நாளை தீர்ப்பு!

Posted: 28 Jul 2014 09:33 PM PDT

vicki

vickiவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான தீர்ப்பு நாளை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜூலை 30ம் திகதி தீர்ப்பை அறிவிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தனது வேலையில் தலையிடுகிறார் எனவும், தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். நேற்றைய விசாரணையின் போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண பிரதம செயலாளர் விடுமுறை எடுப்பதாக இருந்தாலோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தாலோ முதல்வருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், அத்துடன், மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு பிரதம செயலாளர் கீழ்படிந்து நடக்க வேண்டும், மாகாணசபையின் செயற்பாடுகளைக் குழப்பாத வண்ணம் அவரின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டி வாதிட்டார். மேலும், புதிய செயலாளர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் போது தன்னுடைய அனுசரணையுடன் நியமிக்க வேண்டும் என்ற தமது சட்டபூர்வமான கோரிக்கையானது எதிர்காலத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை சட்டத்தரணி சுமந்திரன் மூலம் நீதிமன்றுக்கு உறுதிப்படுத்தினார். மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமின் தயாசிறி, பிரதம செயலாளரின் தொழிலுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாகாண சபையின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும், விஜயலட்சுமியின் தொழில் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் பி.பீ. அலுவிகார கொண்ட குழுமத்தின் முன்னிலையில் நேற்றைய தினம் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இவ்வழக்கு மீதான தீர்ப்பு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என மூவர் கொண்ட நீதியரசர் குழாம் தெரிவித்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலின் மனைவியான ஊர்வசி!

Posted: 28 Jul 2014 03:54 AM PDT

kamal

kamalதமிழ் திரையுலகின் கௌரவம் கமல்ஹாசன் அவர்கள் தான். இவர் படத்திற்கு படம் தன் முகம், மொழி என மாற்றி நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துவார். தற்போது விஸ்வரூபம்-2 படத்தில் பிஸியாக நடித்து மற்றும் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதோடு உத்தம வில்லன் பட வேலைகளையும் பார்த்து வர, இரண்டில் எந்தப்படம் முதலில் வரும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. தற்போது உத்தம வில்லன் படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது, இதில் நடிகை ஊர்வசி தான் கமலின் மனைவியாக நடிக்கிறாராம். மேலும் படத்தில் ஊர்வசிக்கும், கமலுக்கும் இடையே நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் படத்தில் ஸ்ரீ தேவி கதாபாத்திரம் கசிந்தது!

Posted: 28 Jul 2014 03:50 AM PDT

vijay-sridevi

vijay-srideviஇந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் ஸ்ரீ தேவி தான். ரஜினி, கமல், சிரஞ்சீவி, அனில் கபூர் என்று அனைத்து மாநில முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தார்.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவர் விஜய்யை தத்தெடுத்து வளர்க்கும், வளர்ப்பு தாயாக நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted: 28 Jul 2014 03:32 AM PDT

almonds

almondsதற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் வளமாக நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.

இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா?

அதிலும் கொலட்ஸ்ரால் உடலில் அதிகம் இருந்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உடலில் சீக்கிரம் வந்துவிடும்.

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்களின் சீரான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது.

ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படலங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலானது உற்பத்தி செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும் என்பதில்லை.

அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரைவில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியிருக்கும்.

எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் குறைவாக நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வர வேண்டும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய வழிகள்!!!

இங்கு கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

மிகவும் பிரபலமான உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டுமின்றி, இவை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.

மற்ற நட்ஸ்களை விட, பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறைவு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக்கும் போது ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டில் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதென்ன ஸ்மார்ட் உணவுகள் என்று கேட்கிறீர்களா?

அது வேறொன்றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூபெர்ரி, பச்சை இலைக் காய்கறிகள், பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணிமைக்கும் நேரத்தில் சிதையும் பனிப்பாறையின் அழகிய காட்சி

Posted: 28 Jul 2014 03:16 AM PDT

Iceberg-collapse-in-Bay-of-Exploits,-Newfoundland,-Canada

Iceberg-collapse-in-Bay-of-Exploits,-Newfoundland,-Canada

This posting includes an audio/video/photo media file: Download Now

முதன் முதலாக நீச்சல் பழகும் புலிக்குட்டியின் சுவாரஸ்யக் காட்சி!

Posted: 28 Jul 2014 03:12 AM PDT

Tiger-Cub-Swim-Test

Tiger-Cub-Swim-Test

This posting includes an audio/video/photo media file: Download Now

படகில் சென்றவருக்கு திமிங்கிலம் கொடுத்த பேரதிர்ச்சி!

Posted: 28 Jul 2014 03:07 AM PDT

Kayak-levantado-por-ballena-en-Puerto-Madryn

Kayak-levantado-por-ballena-en-Puerto-Madryn

This posting includes an audio/video/photo media file: Download Now

பிச்சைகாரரிடம் கைவரிசையைக் காட்டும் பெண்…. வேடிக்கை பார்க்கும் மக்கள்!

Posted: 28 Jul 2014 03:00 AM PDT

Stealing-From-The-Homeless-Social-Experiment

Stealing-From-The-Homeless-Social-Experiment

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடிய பெண்ணின் சொக்க வைக்கும் தமிழ் பாடல்!

Posted: 28 Jul 2014 02:55 AM PDT

Canadian-Girl-Singing-Why-This-Kolaveri-Di

Canadian-Girl-Singing-Why-This-Kolaveri-Di

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்படும் பிரெட் லீ!

Posted: 28 Jul 2014 02:40 AM PDT

brett-lee

brett-leexஇந்திய வீரர்கள் வேகப் பந்துவீச்சைப் பயப்பட்ட காலம் போய் விட்டது. இப்போதுள்ள இளம் வீரர்கள் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டு ஆடுகின்றனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதி வேக பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். தற்போது இங்கலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் வேகப் பந்துகளை திறம்பட சமாளிப்பது அதைத்தான் காட்டுகிறது என்றும் லீ புகழாரம் சூட்டியுள்ளார். தற்போதுள்ள இந்திய அணி தன்னை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் கூறியுள்ள லீ, அச்சமின்றி ஆடுகிறார்கள் இந்த வீரர்கள் என்றும் பாராட்டியுள்ளார். தற்போதைய இந்திய அணி சிறப்பாக உள்ளது. வீரர்கள் அச்சமின்றி ஆடுகின்றனர். இப்படிப்பட்ட அணி சிறிது காலத்திற்கு முன்பு வரை இல்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் வருகிற பந்துகளை சரியாக கணித்து ஆடுகிறார்கள் இவர்கள். நான் சிறப்பாக ஆடுவேன் என்ற நூறு சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் ஆடுகிறார்கள். சிறப்பாகவும் செய்கிறார்கள். சரி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவைத் திட்டினாரே அது பற்றி என்ன சொல்றீங்க என்று லீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஸாரி, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியலை. அதை நான் பார்க்கவும் இல்லை. மீடியாக்கள்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எது நடந்திருந்தாலும், அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டும் என்பதே எனது கருத்து. கிரிக்கெட் பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும் என்றார் லீ.

This posting includes an audio/video/photo media file: Download Now

77கி பிரிவில் 149கி பளு தூக்கி தங்கம் வென்ற தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம்!

Posted: 28 Jul 2014 02:25 AM PDT

satish-sivalingam

satish-sivalingamகிளாஸ்கோடு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்து கிளாஸ்கோடு நகரில் 71 நாடுகள் பங்கேற்கும் 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்திய சார்பில் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை செய்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

சிவலிங்கமும் கடந்த 1985 முதல் 87 வரை தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஜெபல்பூர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

தற்போது இவர் விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக உள்ளார். தந்தை வழியில் தானும் பளுதூக்கும் வீரராக வேண்டும் என்ற லட்சியத்திலேயே வளர்ந்த, சதீஷ்குமார் 'முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்ற குறளை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சாதனை புரிந்துள்ளார்.

சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த போதே, அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார்.

அப்பயிற்சி கூடம் மூலமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சதீஷ்குமார், பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.

அதன் பின்னர் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல்ஹக்கீம் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தார். படித்து கொண்டே பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் நேற்று காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். சதீஷ்குமார் 149 கிலோ பளுவைத் தூக்கி புதிய சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் சதீஷ் சிவலிங்கம் பற்கேற்பது இதுதான் முதல் முறையாகும். முதல் முறையிலேயே அவர் தங்கத்தைத் தட்டிச் சென்று அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க டாக்டருக்கும் நோய் தாக்கியது!

Posted: 28 Jul 2014 02:13 AM PDT

ebola

ebolaலைபீரியாவில், அதி பயங்கரமான எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு அந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இதுகுறித்து வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சமரிதான்ஸ் பர்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவின் மோன்ரோவியா நகரில் உள்ள மருத்துவமனையில் எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு டாக்டர் கென்ட் பிரான்ட்லி சிகிச்சை அளித்து வந்தார்.

தற்போது அவருக்கும் எபோலா தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

டாக்டர் பிரான்ட்லி, எங்களது அமைப்பின் மருத்துவ இயக்குநராக இருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பயங்கரமான வைரஸாக இந்த எபோலா வைரஸ் கூறப்படுகிறது.

உலகின் பல பகுதிகளில் தற்போது உள்ள அதி பயங்கரமான அபயாகரமான வைரஸ்களில் இதுவும் ஒன்றாகும். பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எபோலா தாக்கி பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் எபோலா தாக்கிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் இது அதிக அளவில் பரவி வருவதுதான்.

33 வயதான பிரான்ட்லி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லைபீரியாவில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கி 672 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரபு நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்!

Posted: 28 Jul 2014 02:09 AM PDT

saudi-arabia-celebrates-eid-today

saudi-arabia-celebrates-eid-todayஈகை திருநாளாம், ரம்ஜான் இந்தியாவில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு பெருவிழாவாகும். இஸ்லாமிய நாட்காட்டியில், 9வது மாதம், ரம்ஜான் மாதம். இது ஈகை மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், சூரிய உதயத்திற்கு சற்று முன் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை, நாள் தோறும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒரு மாத நோன்பு முடியும் நாளில், ரம்ஜான் விழா கொண்டாடப்படும். ரம்ஜான் விழா, சந்திரனின் பிறை தோன்றுவதை வைத்து முடிவெடுக்கப்படும். இந்தியாவில் செவ்வாய்க்கிழமையான நாளை பிறை தோன்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இஸ்லாமிய மார்க்க கமிட்டியினர் ஞாயிறன்று வெளியிட்டனர். இதேபோல, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் வாழும் இஸ்லாமியர்களும் இன்றுதான், ரம்ஜான் கொண்டாட்டப்படுகிறது. அதே போல குவைத், லெபனான், கத்தார், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அந்த நாடுகளின் இஸ்லாமிய மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் கொடுத்தும், அண்டை, அயலார் வீடுகளுக்கு உணவுகளை அளித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இன்னும் பிறை தெரியாத காரணத்தால் இந்தியாவை போலவே அங்கும் நாளைதான் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே தமிழகம் உட்பட இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் இஸ்லாமியர்கள் பலரும், தாயகம் திரும்பி தங்கள் குடும்பத்தோடு ரம்ஜானை கொண்டாடி வருகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™