Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழு கூட்டம் இன்று தேக்கடியில் நடக்கிறது

Posted: 16 Jul 2014 10:53 PM PDT

தமிழக– கேரளா எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது தொடர்பான கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் கேரளா மாநிலம் தேக்கடியில் இன்று பிற்பகல் நடக்கிறது.

கேரளாவில் சூறாவளி காற்றுடன் கனமழை: பம்பை ஆற்றில் வெள்ள அபாயம்

Posted: 16 Jul 2014 10:49 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அங்கு மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை பெய்தது. 60 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது

காங். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்யவில்லை: டெல்லி பாஜக தலைவர் பேட்டி

Posted: 16 Jul 2014 10:45 PM PDT

டெல்லி சட்டசபைக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் 36 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதால் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 28 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர்

உத்தரகாண்ட்டில் பலத்த மழை: ராம்தேவ்–400 சீடர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

Posted: 16 Jul 2014 10:37 PM PDT

இமயமலை பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவிடாது பெய்த பேய் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பாதையில் சாலைகளும், கேதார்நாத் கோவிலும் சேதம் அடைந்தது. அங்கு சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

11 மாடி கட்டிட விபத்து: பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஜெகன்மோகன் உதவி

Posted: 16 Jul 2014 10:37 PM PDT

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த மாதம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். உயிர் இழந்தவர்களில் பெரும் பாலோனோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 15 பேர் விஜயநகரத்தைச் சேர்ந்தவர்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயநகரம்

திருப்பதி கோவிலில் இன்று ஆனிவார ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து

Posted: 16 Jul 2014 10:20 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆனி வார ஆஸ்தானம் விழா நடந்தது. கோவிலின் வரவு–செலவு கணக்குகளை பகவானிடம் சமர்ப்பிப்பதே இந்த விழாவின் சிறப்பாகும். இதையொட்டி மூலவர், உற்சவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவிலின் சாவிக் கொத்துக்கள் பகவான் முன்பு படைக்கப்பட்டது. திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர்

ரோஜாவை முற்றுகையிட்டு தெலுங்கு தேசம் தொண்டர்கள் ரகளை

Posted: 16 Jul 2014 10:04 PM PDT

ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார். நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சித்தூர் எம்.பி. சிவபிரசாத் வரவில்லை. அவர் வர முடியாததால் மன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கவுன்சிலர்கள்

2 நாள் சுற்றுப்பயணம்: ஜனாதிபதி நாளை கேரளா வருகை

Posted: 16 Jul 2014 09:21 PM PDT

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (18–ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரணாப் முகர்ஜி மங்களூர் விமானம் நிலையம்

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கியில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முதலிடம்

Posted: 16 Jul 2014 08:49 PM PDT

வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. குறைந்த கடன் தொகையாளர்களிடம் கெடுபிடியுடன் நடந்துகொள்ளும் வங்கிகள் பெரிய அளவிலான கடனாளர்களிடம் கண்டிப்புடன் இருப்பதில்லை என்ற கருத்து வெளியில் தோன்றியதே இதற்குக் காரணமாகும். இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் 4,022 கோடி கடன்பாக்கியுடன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடத்

கருணை கொலையை சட்டபூர்வமாக்க மத்திய அரசு எதிர்ப்பு

Posted: 16 Jul 2014 08:27 PM PDT

சுப்ரீம் கோர்ட்டில், 'காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு நோயாளி, குணமடைய மாட்டார் என்று ஒரு மருத்துவ நிபுணர் கருதினால், செயற்கை சுவாச கருவிகளை அகற்றி, அவர் மரணம் அடையும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அந்த நோயாளியின் நோய் வேதனை நீடிக்கவே செய்யும். கவுரவமாக

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 16 Jul 2014 02:26 PM PDT

வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் சமுதாய

இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு

Posted: 16 Jul 2014 01:53 PM PDT

வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் புதிய கவர்னராக கோஹ்லி பதவி ஏற்றார்

Posted: 16 Jul 2014 01:33 PM PDT

நாட்டுக்கு புதிய பிரதமரை தந்த குஜராத் மாநிலத்தின் 24-வது கவர்னராக ஓ.பி.கோஹ்லி நேற்று பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு மத்தியில் பதவி ஏற்ற பிறகு சில மாநிலங்களை சேர்ந்த கவர்னர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ரூ. 19 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: தெலுங்கானா அரசு அறிவிப்பு

Posted: 16 Jul 2014 12:49 PM PDT

ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானா பகுதிக்குட்பட்ட விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய வீரர் பலி

Posted: 16 Jul 2014 10:08 AM PDT

காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. உடனே இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

ராணுவ வாகனம் மோதி 7 பேர் பலி: காஷ்மீரில் நாளை பிரிவினைவாதிகள் பந்த்

Posted: 16 Jul 2014 07:50 AM PDT

காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் ராணுவ டிரக்கும் பயணிகள் வேனும் மோதிக்கொண்டதில் கர்ப்பிணிப் பெண் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி பொதுமக்களை கலைத்தனர்.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை சந்தித்த வைதிக் மீது தேசத்துரோக வழக்கு

Posted: 16 Jul 2014 06:33 AM PDT

டெல்லியில் இப்போது பரபரப்பாக பேசப்படும் நபர் வேத பிரதாப் வைதிக். பத்திரிகையாளரான இவர் இதுவரை பல பிரமுகர்களை சந்தித்துள்ளார். அப்போதெல்லாம் அவரைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. திடீர் என்று வைதிக்கும், பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது. ஹபீஸ் சயீத் மும்பை தாக்குதல்

காஷ்மீரில் வேன் மீது ராணுவ வாகனம் மோதல்: 7 பேர் பலி

Posted: 16 Jul 2014 06:05 AM PDT

காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீ நகரின் புறநகர் பகுதியில் ராணுவ டிரக்கும் வாடகை வேனும் மோதிக்கொண்டதில் கர்ப்பிணிப் பெண் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஹரீஷ் ராவத் டிஸ்சார்ஜ்

Posted: 16 Jul 2014 05:53 AM PDT

ஹெலிகாப்டர் பயணத்தின்போது காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டேராடூனிலிருந்து கடந்த மாதம் டெல்லிக்கு ஹெலிகாப்டரில் சென்று

மோடியின் பொருளாதார கொள்கை என்னை ஈர்த்தது: பில் கிளிண்டன்

Posted: 16 Jul 2014 05:21 AM PDT

ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கிளிண்டன் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார். அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இன்று பார்வையிட்ட அவர் லக்னோவுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™