Tamil Star |
- போஸ் குடுத்து கோர்ட் பிரச்சனையை இழுக்கும் எமி ஜாக்சன்!
- நட்சத்திரப் பட்டாளத்தில் சேர்ந்துள்ள புதிய நட்சத்திரம்!
- பீட்சா வரட்டும் நான் யார் என்று தெரியும்: நடிகை பார்வதி ஓமனக்குட்டன்!
- லட்சுமிமேனன் பாடலுக்கு இனியா டான்ஸ் ஆடுகிறார்!
- யப்பா என்ன ஆட்டம்டா சாமி…. பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க!
- அடப்பாவிங்களா… இப்படி எல்லாமா வண்டி ஓட்டுவீங்க?
- தனது குரலினால் கௌதமியை உருக வைத்த உலகநாயகன் கமல்…. நீல வானம் நீயும் நானும்!
- இப்படி அவஸ்தைப்படுறியே இதெல்லாம் உனக்கு தேவையா மா?
- இது சூட்கேஸ்ஸா அல்லது ஸ்கூட்டரா?… விவசாயின் அசத்தலான கண்டுபிடிப்பு
- முதலையை வம்புக்கு இழுக்கும் பூனையார்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை!
- முதல் முறையாக கோவாவில் தூரந்த் கோப்பை கால்பந்து!
- உலக சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு!
- நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!
- பங்கேற்கும் வாய்ப்பு: அபெக் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு!
- கூட்டத்தில் பங்கேற்க முடியாது: விக்னேஸ்வரன் மஹிந்தவுக்கு அறிவித்தார்! தெளிவாக கூறவில்லை என்கிறார் சிவஞானம்
- இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது!
- தொடரும் அழுத்தம்: இராணுவ தளபதியின் கவலை- இராணுவ வீரர் கைது!
- நாடுகள் அமைப்பு புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது!
- தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை!
| போஸ் குடுத்து கோர்ட் பிரச்சனையை இழுக்கும் எமி ஜாக்சன்! Posted: 16 Jul 2014 03:05 AM PDT
பிரிட்டன்ல பொறந்து, தமிழ்நாட்டுல நடிக்க வந்த இந்த எமி ஜாக்சன் பொண்ணு அட்டகாசம் தாங்க முடியலைங்கோவ்! டாப்லெஸ்ஸா போஸ் குடுத்து, செய்தி பத்திரிக்கைகளில் டாப் இடத்தை பிடிச்சுருக்கு இந்தப் பொண்ணு. (எமி ஜாக்சன் ஹாட் கேலரி) பாஸ் மாடல் மேனேஜ்மெண்ட் அப்படிங்கற லண்டன் கம்பெனிக்குதான் பொண்ணு இப்படி போட்டோ ஷூட்க்கு அரைகுறையா போஸ் குடுத்துருக்கு. ரொம்ப அழகான பொண்ணான எமி இயக்குனர் ஷங்கரோட "ஐ" படத்துல விக்ரமோட சேர்ந்து ஹீரோயினா நடிச்சு வருது. இந்த போட்டோக்கு மேக்-அப் சுசி கிளார்கி, சிகை அலங்காரம் பேட்ரிக் செய்துருக்காங்கலாம். 22 வயசு பொண்ணான எமி, இப்படி போஸ் குடுக்கறது மொத தடவை இல்லை அப்படிங்கறதும் குறிப்பிடத்தக்க விஷயம். ஆனா, எமியோட இந்த முடிவு தமிழ்நாட்டில் அவருக்கு எதிரா பெரிய பிரளயத்தை கிளப்பவும் சான்ஸ் இருக்கு. இயக்குனர் விஜய்யோட "மதராசபட்டினம்" படத்தில நடிச்ச எமி, அவரோட இன்னொரு படமான "தாண்டவம்"லையும் நடிச்சுது. தமிழ்ல மூணாவதா எமி நடிக்கற "ஐ" படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பிடிச்சுதரும் அப்படினு தமிழ் சினிமா உலகத்துல பேசிக்கறாங்க. அதுக்குள்ள இந்த பொண்ணு எந்த வீண்வம்புலையும் மாட்டிக்காம இருந்தா சரிதான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நட்சத்திரப் பட்டாளத்தில் சேர்ந்துள்ள புதிய நட்சத்திரம்! Posted: 16 Jul 2014 02:48 AM PDT
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தில் பிரபுவும் நடிக்கிறார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மைசூரில் துவங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்துக்கு சென்றது. தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் முடிந்துள்ளன. மைசூரில் பூஜை போட்டு படத்தை துவங்கினர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் ஒருவர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். ரஜினியும், பிரபுவும் சேர்ந்து ஏற்கனவே குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த வெற்றிக் கூட்டணி லிங்காவிலும் தொடர்கிறது. ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் சோனாக்ஷி சின்ஹா அர்ஜுன் கபூருடன் நடிக்கும் தேவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார். லிங்கா படத்தில் விஜயகுமார், ராதாரவி, சந்தானம், ஆர். சுந்தர்ராஜன், மனோபாலா, கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ் கில் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீட்சா வரட்டும் நான் யார் என்று தெரியும்: நடிகை பார்வதி ஓமனக்குட்டன்! Posted: 16 Jul 2014 02:43 AM PDT
பார்வதி ஓமனகுட்டனை நினைவு இருக்கிறதா? இல்லை என்றால் நினைவுபடுத்துவோம். அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் இந்த பார்வதி ஓமனக்குட்டன். 2008ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற பார்வதி இந்தியில் யுனைடெட் சிக்ஸ் என்ற படத்தில் நடித்தார். படம் ஓடவில்லை. அதன் பிறகே தமிழுக்கு வந்தார். பில்லா 2 பெரிய படம், பெரிய நடிகர் என்று நினைத்து நடித்தார் பார்வதி. ஆனால் படத்தில் அவர் பெயர் அளவுக்கே ஹீரோயினாக வந்து சென்றார். பில்லா 2 படத்தை அடுத்து பார்வதி தனது தாய் மொழியான மலையாளத்தில் கேக்யூ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு எந்த படமும் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. நல்ல கதாபாத்திரம் கிடைக்காதா என்று ஏங்கிய பார்வதிக்கு விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டார். பீட்சா படத்தின் கதை அருமை. நான் பீட்சா தமிழ் படத்தை பார்த்து அசந்துவிட்டேன். பீட்சா இந்தி ரீமேக் வந்தால் நான் வெறும் மாடல் மட்டும் அல்ல என்னால் நன்றாக நடிக்கவும் முடியும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் பார்வதி. இந்தியிலும் பீட்சா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படும் இந்த படம் தான் தனது திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் பார்வதி ஓமனக்குட்டன். This posting includes an audio/video/photo media file: Download Now |
| லட்சுமிமேனன் பாடலுக்கு இனியா டான்ஸ் ஆடுகிறார்! Posted: 16 Jul 2014 02:36 AM PDT
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் இமான் இசையில் முதன் முறையாக பாடகியாகியுள்ளார் நடிகை லட்சுமிமேனன். இந்தப்பாடலுக்கு முதலில் முன்னாள் நீலப்பட நடிகையும், தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் ஆடுவார் என முதலில் தகவல்கள் வெளியானது. பின்னர், அப்பாடலுக்கு சன்னி லியோன் ஆடவில்லை நீது சந்திரா ஆடுகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது சன்னி லியோனுமில்லை, நீது சந்திராவும் இல்லை அப்பாடலுக்கு நம்ம 'வாகை சூடவா' நாயகி இனியா தான் ஆடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் ஜோடி சேரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இப்படத்தில் இன்னொரு ராஜாவாக சூரி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடலொன்றை நடிகர் இமான் இசையில் லட்சுமிமேனன் பாடிக் கொடுத்தார். அப்பாடலுக்கு திரையில் யார் ஆடப்போகிறார்கள் என்பதில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது அப்பாடலுக்கு இனியா நடிக்கப் போவதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இப்பாடலை சென்னை - திண்டுக்கல் சாலையில் அலங்கரிக்கப் பட்ட லாரியில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும். இப்பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் பிருந்தா இயக்குகிறார். இனியாவிற்கு ஆபாசமில்லாத வகையில் என்னமாதிரியான ஆடை கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார். சன்னி லியோன், நீது சந்திரா பெயர்களைப் பரிசீலனை செய்த நீங்கள், கடைசியில் இனியாவைத் தேர்வு செய்ததெப்படி என்ற கேள்விக்கு, 'நன்கு முகபாவனைகளைக் கொடுக்கும் நடிகையைத் தேடி வந்தேன். இனியா முறைப்படி நடனம் கற்றவர். எனவே, இப்பாடலுக்கு அவர் நடனமாடினால் ஆபாசமாக இருக்காது எனக் கருதியதால் அவரைத் தேர்வு செய்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| யப்பா என்ன ஆட்டம்டா சாமி…. பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க! Posted: 16 Jul 2014 01:15 AM PDT |
| அடப்பாவிங்களா… இப்படி எல்லாமா வண்டி ஓட்டுவீங்க? Posted: 16 Jul 2014 01:10 AM PDT |
| தனது குரலினால் கௌதமியை உருக வைத்த உலகநாயகன் கமல்…. நீல வானம் நீயும் நானும்! Posted: 16 Jul 2014 01:07 AM PDT |
| இப்படி அவஸ்தைப்படுறியே இதெல்லாம் உனக்கு தேவையா மா? Posted: 16 Jul 2014 01:04 AM PDT |
| இது சூட்கேஸ்ஸா அல்லது ஸ்கூட்டரா?… விவசாயின் அசத்தலான கண்டுபிடிப்பு Posted: 16 Jul 2014 01:02 AM PDT |
| முதலையை வம்புக்கு இழுக்கும் பூனையார்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை! Posted: 16 Jul 2014 12:57 AM PDT |
| முதல் முறையாக கோவாவில் தூரந்த் கோப்பை கால்பந்து! Posted: 16 Jul 2014 12:42 AM PDT
தூரந்த் கோப்பை கால்பந்து போட்டித் தொடர், முதல் முறையாக கோவாவில் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1888ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகின் 3வது பழைமையான கால்பந்து போட்டி ஆகும். தொடர்ந்து 127வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த போட்டியை தகுதி சுற்று மற்றும் பிரதான சுற்று என இரண்டு பிரிவுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா பகுதிக்கான இந்திய ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. தகுதி சுற்றில் கோவாவை சேர்ந்த உள்ளூர் கிளப் அணிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த சுற்றில் 12 முதல் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும். டெல்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த தொடர், முதல் முறையாக கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்..This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு! Posted: 16 Jul 2014 12:16 AM PDT
பிரேசில் நாட்டில் நடந்த 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் பைனலில், அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். பெர்லின் நகரில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சாதனை வீரர்களை, பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு! Posted: 16 Jul 2014 12:13 AM PDT
பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார். ஃபோடாலிசாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியா, ரஷ்யா இடையிலான சிறப்பு வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறினார். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, எரிசக்தி, வர்த்தகம் முதலீடு உள்ளிட்ட துறைகளில் ரஷிய அதிபருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறிய மோடி இந்தியா சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யா உதவி செய்ததை சுட்டிக்காட்டி பாராட்டினார். டெல்லியில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அப்போது இரு தலைவர்களும் தெரிவித்தனர் புதினின் இந்தியா பயணத்தின் போது ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தை பார்வையிட வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். இது நல்ல யோசனை என புதினும் ஆமோதித்தார். அணுசக்தி திட்டம் இந்தியா, ரஷ்யா உறவின் அடையாளமாக திகழ்வதாக புதின் அப்போது கூறினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என புதின் வலியுறுத்தி பேசியதற்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பங்கேற்கும் வாய்ப்பு: அபெக் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு! Posted: 16 Jul 2014 12:09 AM PDT
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் போர்டலிசாவுக்கு வந்துள்ள இரு தலைவர்களும், நேற்று சந்தித்து பேசினர். அப்போது சர்வதேச அமைப்புகளின் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது. அப்போது, சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற உள்ள அபெக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மோடிக்கு சீன அதிபர் அழைப்பு விடுத்தார். இதன் மூலம் உறுப்பு நாடாக இல்லாத நிலையி லும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவுக்கான அமைப்பு கடந்த 1989ல் தொடங்கப்பட்டது. பசிபிக் மண்டலத்தில் இந்தியா இல்லாததால், இந்த அமைப்பில் சேர முடியவில்லை. உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி இந்தியா கோரி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2011ல் அமெரிக்காவின் ஹோனலூலு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிலையில் அபெக் கூட்டத்தில் கலந்து கொள்ள, கூட்டத்தை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் சீனா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது . இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது:சீனாவின் இந்த அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். நவம்பரில் நடைபெறும் கூட்டத்துக்கான தேதிகள் தெரியவந்ததும் அது குறித்து முடிவு செய்யப்படும். வரும் நவம்பரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு, சார்க் உச்சி மாநாடு ஆகியவை நடைபெற உள்ளன. இருப்பினும் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பாக சீனாவின் அழைப்பு அமைந்துள்ளது என்றார் அக்பருதீன்.இதனிடையில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக இணையும்படி இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்தது. ஆசியா மற்றும் சீனாவில் மேற்கொள்ள உள்ள திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதற்கு இந்த வங்கியை தொடங்குவது என்று கடந்த அக்டோபரில் சீனா அழைப்பு விடுத்திருந்தது. தற்போது அதில் நிறுவன உறுப்பினராக சேரும்படி, மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jul 2014 12:03 AM PDT
நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் விக்னேஸ்வரனும் உள்ளடங்குகிறார். எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது என்று விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமக்கு உறுதியளித்தபடி வடக்கின் ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார். எனினும் தற்போது அதனை அவர் மீறிவிட்டார் என்று விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே அவருடைய அமைச்சரவை பகிஸ்கரிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை வேலைப்பளு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை: முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு வேலைப்பளு காரணமாக தன்னால் கலந்து கொள்ள முடியாதுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 12வது அமர்வு நேற்று இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடன் கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் பத்து விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஆனால் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றுக்காவது தனது அனுசரணையைத் தந்திருந்தால் எங்களுக்கு வசதியாக இருந்திருக்கும். நான் வசதி என்ற சொல்லை தான் கூறுகின்றேன். ஆனால் அதுகூட இன்னும் செய்துதரப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சில விடயங்களைக் குறிப்பிட்டோ அல்லது அதற்கு மாறாகவோ நாம் செயற்படவில்லை. முதலமைச்சர்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டிருந்தது. ஆனால், எனக்கு அக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடந்த வாரம் முதலமைச்சர்களுக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள் அக்கூட்டம் நடைபெறும் என திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் எனக்குப் பல வேலைகளும் கடமைகளும் இருப்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என கடிதம் அனுப்பியிருக்கின்றேன். ஆகவே, எங்களுக்குள்ளே அது சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதைப் போல் நாங்களும் ஒத்துப்போகின்றோம். ஆனால் எங்களுக்குக் கூறுகின்ற எந்தவொரு விடயமும் செய்துதரப்படவில்லை என்றார். அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பது அல்லது பங்கேற்காமை குறித்து வடமாகாண முதலமைச்சர் தெளிவாக எதனையும் தெரிவிக்கவில்லை நாளை நடைபெறவுள்ள இலங்கையின் அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைத்தமைக்கு அமைய தாம் செல்லப் போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெளிவாக கூறவில்லை என்று வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்கள் தொடர்பில் நேற்று வட மாகாணசபையில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். எனினும் அதில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து தெளிவாக எதனையும் கூறவில்லை என்று சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில இணையம் ஒன்று விக்னேஸ்வரன் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றும், அதற்காக வருத்தம் தெரிவித்து ஜனாதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தமிழ்வின் கேட்ட போதே சிவஞானம் இந்தத் தகவலை வெளியிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது! Posted: 15 Jul 2014 11:57 PM PDT
தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயம் தொடர்பிலும், அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் தொடர்பிலும் சர்வதேசத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக இந்தியாவின் ஜி பார்த்தசாரதி, ரமேஸ் பண்டாரி, நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசுசி அகாசி போன்ற பலரும் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சிகள் யாவும் இறுதியில் சாத்தியப்படவில்லை. எனினும் இந்தியாவின் தலையீட்டால் உருவான 13வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் இன்னும் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ரமபோஸாவின் விஜயமானது சர்வதேசத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினையை தாமே தீர்த்துக்கொண்ட நாடு என்ற வகையில் தென்னாபிரிக்கா சிறப்பு பெறுகிறது. இலங்கையை பொறுத்தவரை உள்நாட்டு தீர்வு ஒன்று வலியுறுத்தப்படுகின்ற போதும் அதற்கான வாய்ப்புகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ரமபோஸாவின் தலையீட்டுக்கும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். எனினும் அரசியலில் விரோதத்தை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஈபிடிபியும் ரமபோஸாவின் தலையீட்டை வரவேற்கின்றன. இந்தநிலையில் சர்வதேச விசாரணையும் இலங்கை மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமது பிரச்சினைக்கு தாமே தீர்வை காண வேண்டிய நிலை இலங்கைக்கு சவாலாக உள்ளது. மறுபுறத்தில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவுக்கு சென்று இலங்கையின் தற்போதைய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவின் நிலைப்பாட்டையும் அறிந்து வந்துள்ளார். எனவே இலங்கையில் அடுத்து வரும் காலங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கும் என்று அந்த ஆங்கில இதழ் எதிர்வு கூறியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடரும் அழுத்தம்: இராணுவ தளபதியின் கவலை- இராணுவ வீரர் கைது! Posted: 15 Jul 2014 11:53 PM PDT
மனிதாபிமான நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் இன்னும் குறையவில்லை என இராணுவ தளபதி பிரிகேடியர் லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சாதாரண முறையில் அன்றி மனிதாபிமான முறையில் யுத்தத்தை நிறைவு செய்தோம். பௌத்த தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் செயற்பட்டோம். எனினும் இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு அழுத்தங்கள் இன்றும் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இராணுவ தளபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கையில் இடப்பெற்றதாக கூறப்படும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை குழு தனது பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். இராணுவ தளபதியின் கருத்து வெளியாகிறது. பஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இராணுவ வீரர் கைது பஸ்ஸில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னேரிய இராணுவ முகாமில் பணியாற்றும் இந்த சந்தேக நபர் ஹபரணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து தியசேன் புர வரை பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ்லிம் பயணித்த இராணுவ வீரர் பஸ்ஸூக்குள் வைத்து மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். மாணவி இது குறித்து தனது தொலைபேசி மூலம் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடரந்து, பஸ்ஸை வழி மறித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாடுகள் அமைப்பு புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது! Posted: 15 Jul 2014 11:48 PM PDT
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்தே ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இத் தகவலை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. கடலில் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து மீளவும் நாடு கடத்தும் செயன்முறை, புகலிடக் கோரிக்கையாளர் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என தெரிவித்துள்ளது. கடலில் வைத்து புகலிடக் கோரிக்கையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது நியாயமானதாக அமையாது என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் வோல்கர் டுருக் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் உலகின் ஏனைய நாடுகளுக்கு பிழையான செய்தியை சொல்லக் கூடுமென அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். புகலிக் கோரிக்கையாளர்களை கையாளும் கடும்போக்கு சட்டத்தினை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை! Posted: 15 Jul 2014 11:39 PM PDT
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்மையில் பாதுகாப்பு அமைச்சினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது தொடடர்பாக உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பஸாகீ தெரிவித்துள்ளார். தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டமைந்த நாடு என தெரிவித்த அவர், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்றன முடக்கப்படுவது இந்த ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடுமென சுட்டிக்காட்டியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















