மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்த ஏர்- இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள்
- ரெயில்களில் பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: சதானந்த கவுடா
- பட்ஜெட்டில் வரி விதிப்பு: குளிர்பானம் விலை ரூ.4 உயர்கிறது
- மோடி அலையை சிதறடிக்க வேண்டும்: ராஜ்தாக்கரே ஆவேசம்
- போலாவரம் அணை திட்டத்துக்கு எதிர்ப்பு: தெலுங்கானாவில் பந்த்
- பொது மக்களை சந்திக்க சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர்ராவ் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம்
- பணக்கார ஆண்களிடம் விபசாரம்: கோடிக்கணக்கில் பணம் பறித்த கும்பல் கைது
- ரூ 1.14 கோடி பதுக்கிய பாஜக எம்.பி. பதவி பறிப்பு?: வேட்புமனுவில் தவறான தகவல்
- ஈராக்கில் சிக்கியுள்ள 10,000 இந்தியர்களை மீட்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- திருப்பதி மலையில் அபாயகரமான 103 மரங்களை வெட்ட தேவஸ்தானம் முடிவு
- அசாமில் நிலநடுக்கம்
- தவறான வாக்குறுதி அளித்து மோடி பிரதமராகிவிட்டார்: ராஜ்தாக்கரே ஆவேசம்
- 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் வழங்குங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
- திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு போராட்டம்: பா.ஜனதாவினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
- கிளார்க்கை போல கவர்னர்களை இடமாற்றம் செய்வதா?: வக்கம் புருஷோத்தமன் ஆவேசம்
- நாடு திரும்பிய கேரள நர்சுகளின் மன உறுதியை பாராட்டிய உம்மன்சாண்டி
- ஜாமீனில் மதானி விடுதலை: கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி வரவேற்பு
- மீன்பிடித்துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்
- தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை பலப்படுத்த வேண்டியுள்ளது: அமித் ஷா
- பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமீன்
| நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்த ஏர்- இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் Posted: 11 Jul 2014 11:45 PM PDT மேற்கு வங்காளத்தில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தை நோக்கி நேற்று நண்பகலில் 120 பயணிகளுடன் ஏர் இந்தியா-879 என்ற விமானம் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் டெல்லி செல்லும் இண்டிகோ விமானமும் விமான நிலையத்திலிருந்து புறப்பட விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விமானத்திலும் 130 பயணிகள் பயணம் செய்தனர். இரு விமானங்களுக்கும் 30000 அடி உயரத்தில் |
| ரெயில்களில் பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: சதானந்த கவுடா Posted: 11 Jul 2014 11:42 PM PDT டெல்லி மேல்–சபையில் ஜெயாபச்சன் எம்.பி. கேள்வி நேரத்தின்போது, ரெயில்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து ரெயில் மந்திரி சதானந்த கவுடா கூறியதாவது:– நாடு முழுவதும் ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு போடப்படும். இதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையில் கூடுதலாக 4,000 பெண்கள் சேர்க்கப்படுவார்கள். ஏற்கனவே 17,000 ரெயில்வே பாதுகாப்பு |
| பட்ஜெட்டில் வரி விதிப்பு: குளிர்பானம் விலை ரூ.4 உயர்கிறது Posted: 11 Jul 2014 11:41 PM PDT மத்திய பட்ஜெட்டில் குளிர்பானங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குளிர்பானங்கள் மீது இந்த அளவுக்கு வரி உயர்த்தப்பட்டது இல்லை. எனவே இந்த தடவை குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. வரி உயர்வு காரணமாக குளிர்பானம் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.600 |
| மோடி அலையை சிதறடிக்க வேண்டும்: ராஜ்தாக்கரே ஆவேசம் Posted: 11 Jul 2014 11:36 PM PDT பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய நவ நிர்மான் சேனா பா.ஜனதாவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் மோடி அலையால் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மும்பையில் மராட்டிய நவ நிர்மான் சேனா ஆலோசனை கூட்டம் நடந்தது. |
| போலாவரம் அணை திட்டத்துக்கு எதிர்ப்பு: தெலுங்கானாவில் பந்த் Posted: 11 Jul 2014 11:10 PM PDT ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்படுவதற்கு முன்பாக மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள போலாவரத்தில் நீர்பாசன அணை மற்றும் மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தில் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தின் 200 கிராமங்களையும், சில மண்டலங்களையும் ஆந்திராவுடன் |
| பொது மக்களை சந்திக்க சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர்ராவ் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் Posted: 11 Jul 2014 11:06 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இருமாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு பதவி ஏற்ற முதல்– மந்திரிகள் தங்கள் மாநில வளர்ச்சிக்கு அதிரடி திட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆந்திரா மாநில முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஒவ்வொரு துறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வருகிறார். |
| பணக்கார ஆண்களிடம் விபசாரம்: கோடிக்கணக்கில் பணம் பறித்த கும்பல் கைது Posted: 11 Jul 2014 10:59 PM PDT கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் தாமஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கொச்சி வந்த தாமஸ் உதவி போலீஸ் கமிஷனர் நிசாந்தினியிடம் புகார் மனு கொடுத்தார். அதில் ஆலப்புழை வெண்ணிலா கோல்டன் பகுதியை சேர்ந்த பிந்து தாமஸ் (32), தாஸ் (29), வக்கீல் சனிலான் (43), பரவூர் தாமஸ் (41) ஆகிய 4 பேரும் 4 மாதங்களுக்கு முன் கொச்சி வந்தபோது என்னை அணுகினர். அப்போது பிந்து தாமஸ் விபசார அழகி என்றும் அவரிடம் உல்லாசமாக இருக்க விரும்பினால் அனுபவிக்கலாம் என்று கூறினர். பிந்து தாமசின் அழகில் மயங்கிய நான் சபலத்தால் உல்லாசத்துக்கு ஒப்புக்கொண்டேன். |
| ரூ 1.14 கோடி பதுக்கிய பாஜக எம்.பி. பதவி பறிப்பு?: வேட்புமனுவில் தவறான தகவல் Posted: 11 Jul 2014 10:54 PM PDT பீகார் மாநிலம் நவதா தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் கிரிராஜ்சிங். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் பீகாரில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த போது நிதிஷ்குமார் தலைமையிலான மந்திரி சபையில் கால்நடை துறை மந்திரியாக இருந்தார். பீகாரில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்த பிறகு அவர் |
| ஈராக்கில் சிக்கியுள்ள 10,000 இந்தியர்களை மீட்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 10:46 PM PDT ஈராக்கில் சிக்கியுள்ள 10,000 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஈராக்கில் தீவிரவாதிகள்– ராணுவத்துடனான சண்டையால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். சமீபத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட திக்ரித் நகரில் பணிபுரிந்த 46 கேரள நர்சுகள் பத்திரமாக மீட்கபபட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். |
| திருப்பதி மலையில் அபாயகரமான 103 மரங்களை வெட்ட தேவஸ்தானம் முடிவு Posted: 11 Jul 2014 10:33 PM PDT திருப்பதி மலையில் வைகுண்ட கியூ காம்ளக்ஸ் அருகே சில நாட்களுக்கு முன்பு மழை காரணமாக பழமையான தைல மரம் சரிந்து விழுந்தது. இதில் ஒரு பக்தர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தேவஸ்தானம் திருமலையில் பக்தர்களை மிரட்டும் வகையில் அபாயகரமாக நிற்கும் மரங்களை கணக்கெடுத்து வெட்ட முடிவு செய்தது. |
| Posted: 11 Jul 2014 10:27 PM PDT அசாமில் இன்று காலை 5.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நல்பாரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. 3.8 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. அசாமின் வடக்கு பகுதியில் பூமிக்கு அடியில் 5 கி.மீட்டர் தூரத்தில் நில |
| தவறான வாக்குறுதி அளித்து மோடி பிரதமராகிவிட்டார்: ராஜ்தாக்கரே ஆவேசம் Posted: 11 Jul 2014 10:25 PM PDT வருகிற சட்டசபை தேர்தலில் மோடி அலையை சிதறடிக்க வேண்டும் என்று ராஜ்தாக்கரே பேசினார். பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய நவ நிர்மான் சேனா பா.ஜனதாவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் மோடி அலையால் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மும்பையில் மராட்டிய நவ |
| 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் வழங்குங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: 11 Jul 2014 10:13 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– டெல்லியில் கடந்த 3–6–2014 அன்று நான் உங்களை சந்தித்து பேசிய போது தமிழ்நாட்டின் தேவைக்குரிய அம்சங்கள் கொண்ட ஒரு மனுவை அளித்தேன். அந்த மனுவில், தமிழ்நாட்டுக்கு மாதம் ஒன்றுக்கு தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணையை முழுமையாக வழங்க |
| திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு போராட்டம்: பா.ஜனதாவினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு Posted: 11 Jul 2014 10:05 PM PDT கேரளாவில் தனியார் கல்லூரிகள் அரசுக்கு வழங்கும் இடங்கள் எண்ணிக்கையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், தனியார் கல்லூரிகளிடம் அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் பாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி முன்னேற முயன்றனர். |
| கிளார்க்கை போல கவர்னர்களை இடமாற்றம் செய்வதா?: வக்கம் புருஷோத்தமன் ஆவேசம் Posted: 11 Jul 2014 09:45 PM PDT மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்றதும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டனர். இதில், உத்தரபிரதேச கவர்னர் ஜோஷி, மேற்கு வங்காள கவர்னர் நாராயணன், சத்தீஷ்கர் கவர்னர் சேகர் தத், நாகலாந்து கவர்னர் அஸ்வினி குமார், கோவா கவர்னர் வான்சூ ஆகியோர் பதவி |
| நாடு திரும்பிய கேரள நர்சுகளின் மன உறுதியை பாராட்டிய உம்மன்சாண்டி Posted: 11 Jul 2014 09:42 PM PDT ஈராக் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் ஒவ்வொருவராக நாடு திரும்பி வருகிறார்கள். ஈராக்கின் திக்ரித் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கேரளாவைச் சேர்ந்த 45 பேர் மற்றும் தூத்துக்குடி மோனிஷா |
| ஜாமீனில் மதானி விடுதலை: கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி வரவேற்பு Posted: 11 Jul 2014 09:38 PM PDT கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி பெங்களூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை கேரள மாநில முதல்–மந்திரி உம்மன்சாண்டி வரவேற்றுள்ளார். ரம்ஜான் மாதத்தில் அவர், விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தெரிவித்தார். கேரள மாநில உள்துறை ம |
| மீன்பிடித்துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல் Posted: 11 Jul 2014 08:06 PM PDT மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- மீன் உற்பத்தியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறது. மூன்று கோடி மீனவர்களைப் பெற்றிருக்கிற நம் நாட்டில்... 13 மாநிலங்களில் சுமார் 8 ஆயிரத்து 118 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரையைப் பெற்றிருக்கிறோம். கடந்த ஆண்டில் மீன்கள் உள்ளிட கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் நம் நாடு ஈட்டிய |
| தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை பலப்படுத்த வேண்டியுள்ளது: அமித் ஷா Posted: 11 Jul 2014 01:51 PM PDT பா.ஜ.க.வின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமித் ஷா நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்தார். தலைநகர் அகமதாபாத்தில் குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென், அவரது அமைச்சரவை சகாக்கள், மாநில பா.ஜ.க. தலைவர் ஆர்.சி. .ஃபல்டு மற்றும் ஆயிரக்கனக்கான பா.ஜ.க.வினர் அவரை வரவேற்றனர். |
| பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமீன் Posted: 11 Jul 2014 01:30 PM PDT பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டுகள் வெடித்தது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். 4 வருடங்களாக பெங்களூர் சிறையில் உள்ள மதானிக்கு நீரிழிவு, 2 கண்களிலும் பார்வை கோளாறு உள்பட பல நோய்கள் உள்ளது. இதனைத் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |