Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முதன்முதலாக கடலில் விடப்படும் கப்பல் தோல்வியில் முடியும் காட்சி…..

Posted: 11 Jul 2014 11:30 PM PDT

Ouch-Boat-Launch-Fail-Takes-Out-Cameraman

Ouch-Boat-Launch-Fail-Takes-Out-Cameraman

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு உடலை ஆளும் இரு முகங்கள்…. கதையல்ல நிஜம்!

Posted: 11 Jul 2014 11:27 PM PDT

CREEPY-WORLD-Edward-MordrakeThe-Man-With-Two-Faces

CREEPY-WORLD-Edward-MordrakeThe-Man-With-Two-Faces

This posting includes an audio/video/photo media file: Download Now

நீருக்குள் சென்ற பாம்பை தூக்கிச் செல்லும் கழுகு…. மிக அரிய காட்சி!

Posted: 11 Jul 2014 11:22 PM PDT

World's-Deadliest-Eagle-vs-Toxic-Snake

World's-Deadliest-Eagle-vs-Toxic-Snake

This posting includes an audio/video/photo media file: Download Now

எக்ஸ்பீரியா சி3 மற்றும் எக்ஸ்பெரிய சி3 டூயல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

Posted: 11 Jul 2014 11:17 PM PDT

Sony-Xperia-ZU-Ultra-leak-3

Sony-Xperia-ZU-Ultra-leak-3சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா சி3 மற்றும் எக்ஸ்பெரிய சி3 டூயல் ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. சோனி எக்ஸ்பீரியா சி3 மற்றும் எக்ஸ்பெரிய சி3 டூயல் ஸ்மார்ட்போன்கள் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஜப்பனீஸ் நிறுவனமான சோனி, முதலில் சீனா சந்தையில் தொடங்கி, ஆகஸ்ட் 2014 முதல் உலக அளவில் தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது. எக்ஸ்பெரிய சி3 ஸ்மார்ட்போனில் பிராவியா எஞ்சின் 2 ஆதரவுடன் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் ஹச்டி Triluminos டிஸ்ப்ளே துணைபுரிகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் Adreno 305 ஜி.பீ.யூ உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் இணைந்த 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா கொண்டுள்ளது. சோனியின் முதல் எல்இடி ப்ளாஷ் இணைந்த 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருக்கிறது. சுப்பீரியர் ஆட்டோ, போர்ட்ரெய்ட் ரீடச் v.2, டைம்ஷிப்ட்-பர்ஸ்ட், பிக்சர் எஃபக்ட்ஸ், மூவி க்ரியேட்டர், சோசியல் லைவ், ஸ்வீப் பனோரமா மற்றும் பயனர்கள் சிறியதாக 6 நொடி வீடியோக்கள் பிடிக்க மற்றும் ஸ்மார்ட்ஃபோனில் இருந்து நேரடியாக பகிர்ந்து கொள்ள உதவும் வைன் அப்ளிக்கேஷன் போன்ற மற்ற சில அம்சங்களை முன் மற்றும் பின்புற கேமராவில் சேர்க்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பெரிய சி3 ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு ஆதரிக்கிறது. இதில் ஒரு 2500mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் 4G LTE, ப்ளூடூத் 4.0 Wi-Fi, ஜிபிஎஸ், GLONASS, Wi-Fi,, மற்றும் USB சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு விருப்பங்களை உள்ளடக்கியுள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் 156x78.5x7.6mm மெஷர்ஸ் மற்றும் 150 கிராம் எடையுடையது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோன் ப்ளக், வைட் மற்றும் மின்ட் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. சோனி எக்ஸ்பீரியா சி3 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் ஹச்டி Triluminos டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், Adreno 305 ஜி.பீ.யூ, 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர், எல்இடி ப்ளாஷ் இணைந்த 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, எல்இடி ப்ளாஷ் இணைந்த 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 4G LTE, ப்ளூடூத் 4.0 Wi-Fi, ஜிபிஎஸ், GLONASS, Wi-Fi, USB சார்ஜிங், ஆண்ட்ராய்டு 4.4, 2500mAh பேட்டரி, 150 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

அபார பந்துவீச்சு முதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்!

Posted: 11 Jul 2014 11:10 PM PDT

india

indiaஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து திணறியது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 457 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் முரளி விஜய் 146 ரன் எடுத்து (361 பந்து, 25 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் டோனி 82 ரன் விளாசினர் (152 பந்து, 7 பவுண்டரி). கடைசி விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடிய புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஜோடி 111 ரன் சேர்த்து சாதனை படைத்தது. புவனேஷ்வர் 58 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஷமி 51 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 3, பிராடு, ஸ்டோக்ஸ் தலா 2, பிளங்கெட், மொயீன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன் எடுத்திருந்தது. கேப்டன் அலஸ்டர் குக் 5 ரன் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.சாம் ராப்சன் 20, கேரி பேலன்ஸ் 15 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தனர். ராப்சன் 59 ரன், பேலன்ஸ் 71 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினர். அனுபவ வீரர் இயான் பெல் 25 ரன் எடுத்து இஷாந்த் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார். அடுத்து வந்த மொயீன் அலி 14, மேட் பிரையர் 5 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் ஜோ ரூட் - பிராடு ஜோடி 8வது விக்கெட்டுக்கு அணியை மீட்க போராடியது. 81 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்திருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரை இறுதியில் ஜெர்மனி அணியிடம் அடைந்த படுதோல்வி!

Posted: 11 Jul 2014 11:05 PM PDT

Louis philip

Louis philipஅரை இறுதியில் ஜெர்மனி அணியிடம் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகப் போவதில்லை என்று பிரேசில் பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் ஸ்கோலரி திட்டவட்டமாக கூறியுள்ளார். எதிரணி வீரரை கடித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரெஸ் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அந்நாட்டு கால்பந்து சங்கம் சார்பில் பிபாவிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை பிபா ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று நிராகரித்தது. எங்கள் அணிக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் உடனடியாக 3வது இடத்துக்கான மோதலில் விளையாடுமாறு கூறுவது நியாயமில்லை. அர்ஜென்டினா அணியுடன் நடந்த அரை இறுதியில் கூடுதல் நேரம், பெனால்டி ஷூட் அவுட் என்று கடுமையான போராட்டத்துக்கு ஆளானதால் சோர்வடைந்த நிலையில் உள்ள வீரர்கள், இந்த போட்டிக்கு முழு அளவில் தயாராக முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்திக்க நேரிடும் என அஞ்சுகிறேன்' என்று நெதர்லாந்து அணி பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது பயிற்சியாளருடன் குறைந்தபட்சம் ஒரு வீரராவது இடம்பெற வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்ற தவறியதகாக, அர்ஜென்டினா அணிக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக பிபா அறிவித்துள்ளது. ஜெர்மனி வீழ்த்த முடியாத அணியல்ல என்று அர்ஜென்டினா அணியின் முன்னாள் நட்சத்திரம் டீகோ மரடோனா கூறியுள்ளார். அர்ஜென்டினா வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று வாழ்த்து தெரிவித்த அவர், இறுதிப் போட்டியின்போது மரகானா ஸ்டேடியத்துக்கு செல்லப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸியை கோல் அடிக்க விடாமல் முடக்குவதற்கு ரகசிய வியூகம் வகுத்துள்ளதாக ஜெர்மனி துணை பயிற்சியாளர் ஹான்சி பிளிக் தெரிவித்துள்ளார். எதிரணி வீரரின் கால் லேசாக பட்டாலே கீழே விழுந்து படுகாயம் அடைந்தது போல நடிக்கும் வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தால் மட்டும் போதாது. அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் துணை தலைவர் ஜிம் பாய்ஸ் ஆலோசனை கூறியுள்ளார். ரியோ டி ஜெனிரோ மரகானா ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணியுடன் நடக்க உள்ள இறுதிப் போட்டியின்போது, பிரேசில் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஜெர்மனி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம்!

Posted: 11 Jul 2014 10:57 PM PDT

japan-sunami

japan-sunamiஜப்பானின் பசுபிக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் உள்ள நமி பகுதியில் அதிகாலை 4.22 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதை அமெரிக்க புவியியல் மையம் உறுதிபடுத்தியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கடலில் 1 மீட்டர் தூரத்திற்கு ராட்சத அலைகள் சீறிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோர பகுதிகளில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹயாட்டி நகர மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்ள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் தகுந்ந ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என டோக்கியோ மின்உற்பத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011&ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழும்பில் இருவர் பலி- மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அரசாங்கம்!

Posted: 11 Jul 2014 10:53 PM PDT

dead-body

dead-bodyகொழும்பில் நேற்று நள்ளிரவுக்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார். கொழும்பு, மோதர என்ற இடத்தில் குழு ஒன்று தந்தையையும் மகனையும் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது தந்தை பலியானார். இதனையடுத்து பலியானவரின் தரப்பினர் மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படுபவரின் தாயாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மக்கள் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவதனை அரசாங்கம் அனுமதிக்கின்றதா? மக்கள் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவதனை அரசாங்கம் அனுமதிக்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. போலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை சரியானதே என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பொது மக்கள் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்த அரசாங்கம் அனுமதிக்கின்றதா? நெருக்கடியான நிலைமைகளின் போது கூட, குறைந்தபட்ச அதிகாரத்தையே பயன்படுத்த வேண்டுமென்பது பொலிஸாரின் ஒழுக்க விதிகளில் ஒன்றாகும். இவ்வாறான ஓர் நிலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது சரியானது என உயர்கல்வி அமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு எப்படி துப்பாக்கிச் சூடு நடத்துவது. அந்த அதிகாரத்தை யார் வழங்கினார்கள். கெரில்லா தலைவர்கள் போன்று மக்களின் தலைகளில் போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது. உயர்கல்வி அமைச்சர் போலிஸாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார் இது நகைப்பிற்குரியது என அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். அண்மையில் திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் "ஒரு நபருக்கு மற்றுமொரு நபர் கத்தியால் குத்துகின்றார். அந்த இடத்திற்கு போலிஸ் உத்தியோகத்தர்கள் செல்கின்றனர். போலிஸ் உத்தியோகத்தர் மீதும் மதுபோதையில் இருந்த நபர் கத்தியால் குத்துகின்றார். தன்னுடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த போது, சக போலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றார். இது மிகவும் சரியானதே" என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை மீனவர்களுக்காக தமிழக மீனவர்கள் குரல்!

Posted: 11 Jul 2014 10:46 PM PDT

fisherman

fishermanஇலங்கை மீனவர்கள் ஆந்திர பிரதேச நீதிமன்றத்தினால் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டமை குறித்து தமிழக மீனவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் சார்பில் மீனவர் சங்க தலைவர் அருளம்பவம் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படு;ம் போது அவர்கள் நிரபராதிகளாகவே விடுவிக்கப்படுகின்றனர். எனினும் கடந்த வியாழக்கிழமையன்று ஆந்திர பிரதேச நீதிமன்றத்தினால் விடுதலை உத்தரவு பெற்ற 41 இலங்கை மீனவர்களுக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழக மீனவர் சங்க பிரதிநிதி அருளம்பலம் இந்த நீதிமன்ற தீர்ப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினையை தீர்க்க உதவாது என்று குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆளுநர் பதவிக்காலம் நீடிப்பு! ஜனாதிபதியின் வாக்குறுதி மீறப்பட்ட மற்றுமொரு சம்பவம்!!

Posted: 11 Jul 2014 10:40 PM PDT

vikneswaran_mahinda

vikneswaran_mahindaவடமாகாண ஆளுநராக ஜ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், கடுமையாகச் சாடியுள்ளார். தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன என்பதை இது புலப்படுத்துகின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் அவரையே ஆளுநராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நியமித்திருப்பது குறித்துக் கேட்ட போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது: புதிய ஆளுநர் குறித்து கடந்த ஜனவரி 2 ம் திகதி ஜனாதிபதி எனக்கு வாக்குறுதியளித்திருந்தார். சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த உடனடியாகவே இராணுவப் பின்னணியைக் கொண்டிராத ஒருவரை ஆளுநராக நியமிப்பதாக ஜனாதிபதி அப்போது வடமாகாண முதல்வரிடம் வாக்குறுதியளித்திருந்தார். உத்தரவுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடிய ஒருவரை தன்னுடைய அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஜனாதிபதி தேடியிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலுள்ள தன்னுடைய குடும்பத்தவர்களுடன் இணைந்து கொள்வதை எதிர்பார்த்திருந்த சந்திரசிறி ஜனாதிபதிக்கு உதவுவதற்கு வரவேண்டியவராக இருந்துள்ளார். அதேவேளை, வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக இது அமைந்துள்ளது. தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதையும் இது புலப்படுத்துகின்றது. இவ்வாறு விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பதவிக்காலம் நீடிப்பு! சர்வதேசத்திடம் முறையிடப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

Posted: 11 Jul 2014 10:27 PM PDT

mavai senathirajaaa

mavai senathirajaaaவடமாகாண ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இராணுவத் தொடர்பில்லாத சிவில் அதிகாரி ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார்.

வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையையும் மக்களின் ஆணையையும் மதிக்காத அரசாங்கத்தின் நடவடிக்கையால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பையும் இராணுவத் தலையீட்டையும் எதிர்த்து பெருமளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உதவியை நாடப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் மீண்டும் பல தடைகளை தாண்டி பிரம்ரன் நகரில் ஈழம் சாவடி!

Posted: 11 Jul 2014 12:09 AM PDT

Eelam

Eelamகனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் பிரம்ப்டன் மாநகரில் கரபிராம்(carabram)நிகழ்வுகளில் தமிழர் கலை பண்பாட்டு வாழ்வை பிரதிபலிக்கும் கண்காட்சியும் நடன இசை நிகழ்ச்சிகளும் பிரம்ப்டன் சொக்கர் சென்டரில் ( டிக்ஸ்சி – சண்டல்வூட் பார்க்வே சந்தியில்)

வருகின்ற வெள்ளிகிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில்( ஐ_லை மாதம் 11 12 13 திகதிகளில்) நடைபெறவிருக்கின்றது.

வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்) ஏனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் பிரம்டன் வாழ்தமிழ் மக்கள் பிரம்ட்ன் தமிழ் ஒன்றியம் சார்பாக இரண்டாம் வருடமாக இம்முறையும் தமிழ் கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு பிரதிபலிக்கும் வகையில் வெகு சிறப்பாக ஆயத்தங்களை செய்துள்ளார்கள்.

கடந்த வருடம் கரபிராம் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழம் சாவடிக்கு 8000 க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் தரிசித்து தமிழர் கலை பண்பாட்டினை அறிந்து கொள்வதிலும் தமிழரின் சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பி உண்பதிலும் இசை நடன நிகழ்வுகளில் ஆர்வமுடன் கண்டு களிப்பதிலும் திருப்தி அடைந்தார்கள்.

கனடாவின் மத்திய மாநில நகர அரசுகளிலிருந்தும் பல நாடாள மன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதோடு விடுமுறைக்கென் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்களும் ஈழம் சாவடியை தரிசித்து ஆதரவு வழங்கினார்கள்.

இந்த வருடமும் பாரிய அளவில் தமிழர் கலை பண்பாடு இலக்கியம் தமிழர் மருத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகைகளில் கண்காட்சியும் உணவு உடை தொடர்பான பல சாவடிகளும் சிறந்த நடனக் கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பல இசைக்குழுக்களின் இசைநிகழ்ச்சிகளும் சிறுவருக்கான பொழுது போக்கு விளையாட்டுக்களும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் அனைவரையும் ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து விழாவை சிறப்பிக்க அழைக்கிறார்கள் பிரம்பன் வாழ் ஒன்றிய மக்கள்.

வாருங்கள் பாருங்கள் மகிழ்ந்து செல்லுங்கள்

விழா நிகழ்வுகள்

ஐீலை 11 2014 (வெள்ளிக்கிழமை) மாலை 6:00 தொடக்கம் இரவு 12:00 மணி வரை

ஐீலை 12 2014 (சனிக்கிழமை) மதியம்; 12:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை

ஐீலை 13 2014 (ஞாயிறுக்கிழமை) நண்பகல் 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 வரை

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டன் பயணம் செல்லும் கத்தி படக்குழு!

Posted: 10 Jul 2014 11:59 PM PDT

kathi

kathiகத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது.

பிறகு, பினாமி இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகள் வெளியானதும் உலகத் தமிழர்களிடமிருந்து கத்தி படத்துக்கும், விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்தன.

குறிப்பாக, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மத்தியில் கொதிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கத்தி படத்திற்கு சிக்கல் அதிகமாகும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்காக இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழா விரைவில் லண்டனில் நடைபெறுகிறது. அந்தவிழாவில கலந்து கொள்ள விஜய், சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே லண்டன் செல்கின்றனர்.

இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. லைகா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் மற்றும் முருகதாஸ் விளக்கம் கொடுத்தாலும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்அதை ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில் அவர்களது குடும்பவிழாவுக்கு விஜய் செல்ல இருப்பது பிரச்சனையை மீண்டும் ஊதிவிட்டதாகிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™