Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமர்நாத் யாத்திரை: 1765 யாத்ரீகர்ளுடன் 22-வது குழு ஜம்முவிலிருந்து பயணம்

Posted: 17 Jul 2014 11:16 PM PDT

வருடந்தோறும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்ரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதுவரை 39258 பேர் ஜம்முவில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் ஜம்முவில் இருந்து மேலும் 1,765 பேர் கொண்ட யாத்ரீகர் குழு தனது பயணத்தை

மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கு: அமெரிக்கா உதவியை நாடிய இத்தாலி

Posted: 17 Jul 2014 11:10 PM PDT

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடற்கரை அருகே பயணித்துக் கொண்டிருந்த இத்தாலியக் கப்பலின் வீரர்கள் அங்கு மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டுவிட கைது செய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேசக் கடல் எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இந்தியாவிற்கு விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்த இத்தாலி அரசு சர்வதேச நீதிமன்ற விசாரணையைக் கோரியிருந்தது.

ஒடிசாவில் தீவிரமாக தேடப்பட்ட முக்கிய நக்சல் தலைவர் கைது

Posted: 17 Jul 2014 10:45 PM PDT

ஒடிசாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய நக்சல் தலைவரான சப்யசச்சி பாண்டா அம்மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக போலீசாரின் கையில் சிக்காமல் அவர் தப்பி வந்துள்ளார். கடந்த 2008ல் காந்தமாலில் கொலை செய்யப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான லக்ஷ்மானந்தா சரஸ்வதி மற்றும் அவரது சீடர்கள் கொலை வழக்கிலும் தொடர்புடைய பாண்டா மீது 30 கொலை வழக்குகள்

மலேசிய விமானம் மீது ஏவுகணை தாக்குதல்: 2 மணி நேரம் முந்தியதால் மோடி விமானம் தப்பியது

Posted: 17 Jul 2014 10:40 PM PDT

295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்தபோது 239 பேருடன் மாயமாகி விட்டது. கடலுக்கு அடியில் பல இடங்களில் தேடியும் அந்த விமானத்தின் கதி என்ன

கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?: சந்திரபாபு நாயுடுவை வழிமறித்து பெண்கள் சரமாரி கேள்வி

Posted: 17 Jul 2014 10:09 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மாதம் ஒரு மாவட்டத்தில் 2 நாள் யாத்திரை சென்று பொது மக்களை சந்திப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசன்னபாளையம், பையன்ன கூடம், கொய்ய கூடம் ஆகிய கிராமங்களுக்கு சென்று மாநிலத்தின் தற்போதைய நிலையை விளக்கினார். நரசன்ன பாளையத்தில் இருந்து கொய்யகூடம் செல்லும் வழியில் கிராம

மினி பஸ் கவிழ்ந்து 2 பெண்கள் பலி: அதிர்ச்சியில் காங்.தலைவர் சாவு

Posted: 17 Jul 2014 09:56 PM PDT

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லுண்டிநகரைச் சேர்ந்தவர் மொய்தீன்குட்டி. இவரது மனைவி குஞ்சீவி(வயது 55). அதே பகுதியைச் சேர்ந்த முகமது மகள் முபசீரா(22). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். சாலையம் என்ற பகுதியில் இருந்து பரப்பனங்காடி என்ற இடத்துக்கு நேற்று மாலை மினி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் குஞ்சீவி, முபசீரா மற்றும் 78 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் அரியலூர் அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தவில்லை: ராஜ்நாத் சிங்

Posted: 17 Jul 2014 09:08 PM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் ஆட்சி நடத்தி விட்டு பதவி விலகினார். இதையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போது அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்வெளியை தவிர்க்க இந்திய விமானங்கள் முடிவு

Posted: 17 Jul 2014 08:22 PM PDT

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கொடூர

பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்

Posted: 17 Jul 2014 08:17 PM PDT

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக பிரேசில் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியை வந்தடைந்தார். பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி வங்கி தொடங்குவது, அந்த வங்கிக்கு இந்தியா 6 ஆண்டுகளுக்கு தலைவராக நீடிப்பது என்ற வெற்றிகரமான அறிவிப்புக்கு பிறகு, பிரேசில் அதிபர் டில்மா

வேளாண்மைக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் இலவசமாக ஒரு டிராக்டர்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Posted: 17 Jul 2014 03:52 PM PDT

வேளாண் பயன்பாடுகளுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் இலவசமாக ஒரு டிராக்டர் வழங்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று விவாதத்தின்போது தர்மபுரி தொகுதி பா.ம.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன். சமூகப் பாதுகாப்புத் துறை, வேளாண்துறை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம்

சர்ச்சையை ஏற்படுத்திய சயீத்-வைதிக் சந்திப்பு: ஒதுங்கிக்கொண்டது பாகிஸ்தான்

Posted: 17 Jul 2014 08:22 AM PDT

மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை, பாகிஸ்தானில் பத்திரிகையாளர் வைதிக் சந்தித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பிய நிலையில், இந்த சந்திப்புக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா விளக்கம் அளித்தார்.

உத்தரகாண்டில் கனமழை: ஆற்று மணலை துரிதமாக அகற்ற முதல்வர் உத்தரவு

Posted: 17 Jul 2014 07:30 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மலைப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சர்தாம் யாத்திரை சென்றுள்ள பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?

Posted: 17 Jul 2014 07:00 AM PDT

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ ரெயிலில் அதிரடி கட்டணக் குறைப்பு

Posted: 17 Jul 2014 06:23 AM PDT

புதுடெல்லியில் இருந்து இந்திரா காந்தி விமான நிலையம் வழியாக துவாரகா செக்டார்-21 ரெயில் வரை கடந்த ஆண்டு ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கு செல்லும் ஏராளமான பயணிகள் மட்டுமின்றி தினசரி பணிக்கு செல்லும் பயணிகளும் இதன்மூலம் பயனடைந்து வந்தனர்.

வெளிநாட்டு சிறைகளில் 5900 இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

Posted: 17 Jul 2014 06:14 AM PDT

வெளிநாட்டு சிறைகளில் 5900 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக சவுதியில் மட்டும் 1400 பேர் சிறையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் 71 இந்தியர்கள் தங்கள் பதவிக்காலத்தை முடித்துவிட்டதாக

ஹபீஸ் சயீத்-வைதிக் சந்திப்பு இந்திய தூதரகத்திற்கு தெரியாது: சுஷ்மா விளக்கம்

Posted: 17 Jul 2014 05:31 AM PDT

பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாபா ராம்தேவின் உதவியாளராக இருந்தவரும் பத்திரிகையாளருமான வேத பிரதாப் வைதிக் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது இந்தூர் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி யமுனை நதியில் 22 வடிகால்கள் மூலம் கழிவுகள் கலப்பு: மத்திய அரசு

Posted: 17 Jul 2014 05:14 AM PDT

யமுனை நதி டெல்லியில் நுழைந்ததும் 22 வடிகால்களில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று யமுனை செயல்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் இதனை தெரிவித்தார்.

டெல்லியில் மின்கட்டணம் 8.32 சதவீதம் உயர்ந்தது

Posted: 17 Jul 2014 04:46 AM PDT

டெல்லியில் 8.32 சதவிகித அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதனால் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் மக்களுக்கு மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடித்துள்ளது. அம்மாநிலத்தில்

பெண்களிடம் அநாகரிகமாக நடந்த ராஜஸ்தான் மந்திரி மகன் மீது வழக்கு

Posted: 17 Jul 2014 04:31 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 155 கி.மீ தொலைவில் உள்ள ஆல்வாரில் இரண்டு பெண்களிடம் அம்மாநில மந்திரியின் மகன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அம்மாநில உணவு மந்திரியான ஹேம் சிங் மடானா என்பவரின் மகன்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் இயக்க பெண் கமாண்டர் சரண்

Posted: 17 Jul 2014 04:07 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பெண் கமாண்டர் சரண் அடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை காவல்துறையும், எல்லை பாதுகாப்பு படையும் தீவிரப்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கான்கர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™