Tamil Star |
- திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதை ‘ ஜித்தன் 2′
- ஆன்மீக ஈடுபாடு தன்னுடைய மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் எஸ் டி ஆர்!
- புறம்போக்கு என்றால் பொதுவானது!
- ஜெய் நடிக்கும் புதிய படம் !!!
- சோப்ராவின் மேரிகோம் பர்ஸ்ட் லுக்… மிரண்ட பாலிவுட்!
- வைரமுத்துவுக்கு கிடைத்த 6 தேசிய விருதுகள்!
- அஜித் படம் பட்டைய கிளப்பும்: அருண் விஜய்!
- அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம்!
- ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளை பூசணிக்காய்!
- கடைகளில் தூங்கியவர் முதல் இழந்தார்….. பாட்டுக்கு அர்த்தம் சரியாகத் தான் இருக்குது!
- இந்த விஷப் பரீட்சையெல்லாம் தேவைதானா?
- இவ்வளவு காலமா எங்க பாஸ் இருந்தீங்க?.
- திமிங்கிலத்தின் மேல் தரையிறங்க முற்பட்ட சீ பிளேன்!
- கண்கூடாக தெரியும் நிலநடுக்கத்தின் பாதிப்பு!
- ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750!
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் சதம் விளாசினார் எல்கர்!
- இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் லார்ட்சில் இன்று!!
- இந்தியா – பிரேசில் இடையேயான மூன்று ஒப்பந்தங்கள்!
- ஐநா கோரிக்கையை ஏற்று 5 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்!
- கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்!
| திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதை ‘ ஜித்தன் 2′ Posted: 17 Jul 2014 09:24 AM PDT
பிரபலமான நடிக நடிகையர் நடிக்கும் போதுதான் சில கதாபாத்திரங்கள் ஜெயிக்கும். அப்பொழுது தான் அந்த கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும்' என்கிறார் அறிமுக இயக்குனர் ராகுல் பரம ஹம்சா,அவர் கூற்றை நிரூபிக்கவே ராகுலின் இயக்கத்தில் தற்போது 'ஜித்தன்' ரமேஷ் நாயகனாக நடிக்கும் ' ஜித்தன் 2' படத்தில் முக்கிய வேடங்களில் இனியா, வி .டி .வி. கணேஷ், தம்பி ராமயா,ஜே பி , மயில் சாமி,மற்றும் சோனா நடித்து உள்ளனர்.புது முக நாயகி ஸ்ருதி இந்த படத்தில் அறிமுகமாகிறார்'. 'திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதைகளுக்கு எப்பொழுதும் அந்த படத்தின் போஸ்டர்ஸ் பிரதானமாக இருக்கும் . அவ்விதமே 'ஜித்தன் 2' படத்தின் போஸ்டர்கள் பார்ப்பவர் எல்லோரையும் கவர்ந்து வெற்றிக்கு கட்டியம் கூறும்' என்று கூறினார் ராகுல். .This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆன்மீக ஈடுபாடு தன்னுடைய மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் எஸ் டி ஆர்! Posted: 17 Jul 2014 09:17 AM PDT
எஸ் டி ஆர் சமீபமாக தன்னுடைய சிந்தனையிலும் செயலிலும் அபரிதமான மாற்றங்களை கொண்டு வருகிறார். ஆன்மீக ஈடுபாடு தன்னுடைய மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் தீவிரமாக நம்புகிறார். அதில் அதி முக்கியமானதாக அவர் செய்து இருப்பது தன்னுடைய பட்டமான ' young super ஸ்டார்' என்னும் பட்டதை துறப்பதுதான், ' இந்த தேவை அற்ற சுமைகளை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளேன். என்னுடைய திரை வாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன்.என்னுடைய இமேஜ் , அது என்னுடைய ரசிகர்கள் இடையே ஏற்படத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் ' முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள் ' வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன். திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி , எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்கான முதல் வழியாகும்.என்னுடன் என்றென்றும் இருக்கும் , இருக்க போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புறம்போக்கு என்றால் பொதுவானது! Posted: 17 Jul 2014 09:11 AM PDT
புறம்போக்கு என்றால் பொதுவானது, யாருக்கும் உரிமையானது அல்ல என்று பொருள். இதுவரை கண்டிராத நடிக நடிகையர் தேர்வு,தூரம் பல சென்று இயற்கையின் இன்னல்கள் இடையே படமாக்க படும் கதை, ஆகியவை ' புறம்போக்கு' படத்தின் முக்கிய தூண்களாகும். இன்று சென்னையில் 'புறம்போக்கு' படத்தின் முக்கிய கட்ட காட்சி அமைப்புக்காக நாற்பத்தி ஐந்து நாட்கள் நடக்க கூடிய படப்பிடிப்பு துவங்கியது. சிறைசாலை கூட இப்படிமிருக்குமோ என பிரமிக்க வைக்கும் ஒரு மாபெரும் அரங்கம் ஒன்று சென்னை பின்னி மில்ஸ் படப்பிடிப்பு தளத்தில் நிர்மாணிக்க பட்டது.. பல வருடங்களுக்கு முன்னர் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய' சந்திர லேகா' படம் எப்படி அந்த நடன காட்சியில் வரும் அரங்கமைப்புக்காக வெற்றி பெற்றதோ அந்த வரவேற்பை புறம்போக்கு' படத்துக்காக அமைக்க பட்ட சிறை சாலை அரங்கும் பெரும் என ஆருடம் கூறுகின்றனர் திரை உலக பிரமுகர்கள். தான் ஈடுபட்டு வரும் எந்த காரியத்திலும் சிரத்தையோடு முயற்சி எடுக்கும் இயக்குனர் ஜனநாதன், தன்னுடைய கண்களால் வடிவமைத்து கைகளால் மெருகேற்றும் கலை இயக்குனர் செல்வகுமாருடன் இணைந்து இந்த மாபெரும் அரங்கை நிர்மாணித்து உள்ளார். ஒளிபதிவாளர் ஏகாம்பரம் அந்த பிரம்மாண்டமான் அரங்கையும் , அதில் படமாக்க படும் அந்த காட்சிகளையும் நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இந்த பிரமாண்டத்துக்கு மேலும் பெருமை சேர்க்க , அறுநூறுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் மிக முக்கியமான இந்த காட்சியில் ஆர்யாவும் ஷ்யாமும் கலந்துக் கொண்டனர். விஜய் சேதுபதி மற்றும் கார்த்திகா ஆகியோர், அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்துக்கு தேவையான பட்சத்தில் செலவை பற்றி அஞ்சாமல் , திரைப்படத்தின் தரமே முக்கியம் என கருதும் UTV நிறுவனத்தினர் ஏராளமான பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஆகஸ்ட் மாத இறுதியில் UTV நிறுவனத்தினர் படப்பிடிப்பு அரங்கிற்கு ஊடக துறையினரை அழைத்து சென்று இந்த பிரமாண்ட அரங்கை சுற்றி காட்ட உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2014 09:03 AM PDT
சிறந்த படம் என எல்லோராலும் பாரட்ட பட்ட ' வாயை மூடி பேசவும்' , சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் 'வடகறி 'ஆகிய படங்களை வழங்கிய வருண் மணியனின் Radiance media , தரமான படங்கள் தயாரித்து வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் அடுத்த படம் தற்போது முடிவாகி உள்ளது. உதயம் N H 4 படத்தை இயக்கிய இயக்குனர் மணிமாறன் கதை,திரை கதை அமைத்து இயக்க சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் Film Department என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் பெயரிட படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் துவங்குகிறது. பிரபல ஒளிபதிவாளரும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் இயக்குனருமான வேல்ராஜ் இந்த படத்தின் ஒளிபதிவாளர் ஆவார்.' திறமைகளின் சங்கமம் படத்தின் வெற்றியை நிச்சயிக்கும்.எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இந்த படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர் தயாரிப்பாளர்கள் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடை பெற்று வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோப்ராவின் மேரிகோம் பர்ஸ்ட் லுக்… மிரண்ட பாலிவுட்! Posted: 17 Jul 2014 04:00 AM PDT
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து பாலிவுட்டே மிரண்டு போயிருக்கிறது. அழகு பதுமையாக இதுவரை நடித்து வந்த பிரியங்கா சோப்ரா. மேரிகோம் படத்தில் நடிப்பு ராட்சஷியாக உருவெடுத்திருக்கிறார் என்று பாலிவுட் பட உலகினர் பேசிக்கொள்கின்றனர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. ஓமங் குமார் இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும் கேலியும் கிண்டலும் செய்தது பாலிவுட். மேரிகோமின் தோற்றத்துக்கும், பிரியங்காவின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. மேரிகோம் உடல் இரும்பு மாதிரி உருண்டு திரண்டு சிக்ஸ் பேக்குடன் இருக்கும். பிரியங்காவின் உடம்பு மென்மையானது என்ற விமர்சனங்கள் வந்தது. கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடம்பில் சிக்ஸ் பேக் கொண்டு வந்துள்ளார் பிரியங்கா. இப்போது நடித்தும் முடித்து விட்டார். மேரி கோம் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கான் நடிகர்களுடன் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த பிரியங்காவுக்கு தேசிய விருது எட்டாக்கனியாகவே இருந்தது. மேரிகோம் மூலம் அதனை எட்டிவிடுவார் என்கிறார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வைரமுத்துவுக்கு கிடைத்த 6 தேசிய விருதுகள்! Posted: 17 Jul 2014 03:49 AM PDT
கடந்த 13ம் தேதி கவிஞர் வைரமுத்து தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கவிப்பேரரசு என சிறப்பிக்கப் படும் வைரமுத்துவின் பிறந்த தினம், தமிழ் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டது. மிகச் சிறந்த பாடல்களை எழுதியதற்காக இதுவ முதல் மரியாதை படத்தில் வரும் 'பூங்காத்து திரும்புமா.....' என்ற பாடல் தான் முதன் முதலில் வைரமுத்துவுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரோஜா படத்தில் வரும், 'சின்னச் சின்ன ஆசை...' பாடல் தேசிய விருதுக்குத் தேர்வானது. மூன்றாவது தேசிய விருது பெண் சிசுக் கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியான கருத்தம்மா படத்தில் வரும், 'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்குக் கிடைத்தது. நான்காவது தேசிய விருதை சங்கமம் படத்தில் வரும் 'முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்..' என்ற பாடல் வாங்கிக் கொடுத்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே..' பாடல் மூலம் ஐந்தாவது முறையாக தேசிய விருது கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் வரும், 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே' பாடல் வைரமுத்துவுக்கு ஆறாவது தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அஜித் படம் பட்டைய கிளப்பும்: அருண் விஜய்! Posted: 17 Jul 2014 03:40 AM PDT
அஜித்தோடு நான் நடித்து வரும் படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஜித் நடித்து வரும் 55வது திரைப்படத்தில் அவருடன், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை கெளதம்மேனன் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அனுஷ்கா, அஜீத் டூயட் காட்சிகள் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா சென்றுள்ள த்ரிஷா சென்னை திரும்பிய பின், அஜித் - த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். அஜீத்துடன் தான் நடித்து வரும் வேடம் குறித்து இதுவரை எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருந்தார் அருண்விஜய். ஆனால் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடித்து வருகிறார். என்று விருதுகள் வழங்கும் விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார். இந்நிலையில் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், " கெளதம் சார் படத்தில் நான் என்ன வேடத்தில் நடித்து வருகிறேன் என்பதை விளக்கி கூற முடியாது. ஆனால் கண்டிப்பாக ஆச்சர்யமாக இருக்கும். சமீபத்தில் தயாரிப்பாளர் ரத்னம் விருது வழங்கும் விழாவில் என்னுடைய வேடம் குறித்து கூறினார். அந்த அரங்கமே சத்தமிட்டதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அஜித் சார் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "இப்படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும்" என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம்! Posted: 17 Jul 2014 03:30 AM PDT
திரைப்பட இயக்குநர் கவிகாளிதாஸ் உடல்நலக் கோளாறு காரணமாக திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 45. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். இவருடைய மனைவி பிரியா (25), இவர்களுக்கு மூன்று வயதில் அஷ்மிதா என்ற குழந்தை உள்ளது. அஜீத் பட இயக்குநர் நடிகர் அஜீத் நடித்த 'உன்னைக்கொடு என்னை தருவேன்' என்ற படத்தை கவிகாளிதாஸ் இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சித்து பிளஸ்2, பாரிஜாதம், சொக்கத்தங்கம்' போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய 'பீமாபுரம் பெல்லாடு' என்ற படத்திற்கு கதை வசனமும் எழுதி உள்ளார். படம் இயக்கத்திட்டம் தற்போது பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜயை வைத்து 'ராஜகுமாரனும், மந்திரிமார்களும்' என்ற படத்தை இயக்க கவிகாளிதாஸ் முயற்சித்து வந்தார். இந்தநிலையில்தான் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக சென்னை டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்த கவிகாளிதாஸ், சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தியூர் வீட்டில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அந்தியூர் கொல்லபாளையத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு கவிகாளிதாஸ் அழைத்து வரப்பட்டார். மோசமான உடல்நிலை இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கவிகாளிதாசின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அந்தியூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் கவிகாளிதாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாலை அந்தியூர் பெரிய ஏரியில் கவிகாளிதாசின் உடல் எரியூட்டப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளை பூசணிக்காய்! Posted: 17 Jul 2014 03:13 AM PDT
பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன் நற்குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பலரும் அதை ஒரு காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதி லிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே! ''டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்'' எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ''ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு 'ஆஷ் கார்டு' என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. 'கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்' என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும். பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத் தவிர்க்கலாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...'' என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத் தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார். எப்படி சமைப்பது? பூசணி பத்தையை நறுக்கிய பிறகு கழுவாமல், முழு பத்தையையும் கழுவி விட்டு, பிறகு சின்ன துண்டுகளாக நறுக்கி சமைக்கவும். பூசணிக்காய் சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் மற்ற காய்கறிகளைப் போல நீண்ட நேரம் சமைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் வெந்துவிட்டால், அது கரைந்து, கூழாகி விடும். பூசணிக்காய்க்கென தனி ருசி கிடையாது. அத்துடன் சேர்க்கிற மற்ற பொருட்களின் மணத்தையும் ருசியையும் தானும் கிரகித்து அப்படியே பிரதிபலிக்கக் கூடியது. எனவே, பூசணிக்காயை சூப், கூட்டு, பாயசம், அல்வா, கிரேவி என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். நறுக்கிய பூசணிக்காயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனாலும், அதை அதிக பட்சம் 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவதே நல்லது. பூசணித் தகவல்கள் மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி கொண்டதாம் பூசணி. ஆயுர்வேதத்தில் மனநோய்களுக்கான மருந்துத் தயாரிப்பில் பூசணிக்காயின் பங்கு பிரதானமானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. அல்சர் பாதித்தவர்களுக்கு பூசணிக்காய் சாறு கொடுக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள், ரத்த தொடர்பான நோய்கள், சிறுநீரகப் பாதை தொடர்பான நோய்கள், சிறுநீரகக்கல் போன்றவற்றுக்கும் பூசணிக்காய் பலன் தருகிறது. பூசணிக்காயின் அத்தனை பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அடிபட்ட காயத்தின் மேல் பூசணி இலையைத் தேய்த்தால் சீக்கிரமே ஆறும். பூசணி விதைக்கு, குடல் புழுக்களை அகற்றும் சக்தி உண்டாம். எப்படி வாங்குவது? இப்போதெல்லாம் பூசணி பத்தையாகக் கிடைக்கிறது. அதன் சதைப் பகுதி வெள்ளையாக, மஞ்சள் படராமல், நிறம் மாறாமல் இருக்கவேண்டும். முழு பூசணிக்காயாக வாங்குவதென்றால் கெட்டியாக இருக்க வேண்டும். நல்ல கனமான, அழுத்தமான காய் சிறந்தது. ''டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்'' எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ''ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு 'ஆஷ் கார்டு' என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. 'கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்' என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும். பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத் தவிர்க்கலாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...'' என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத் தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார். ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் அளித்த இரு ஆரோக்கிய ரெசிபிகளையும் பாரம்பரிய ரெசிபியான காசி அல்வாவையும் செய்து காட்டுகிறார் சமையல்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி. பூசணிக்காய் கூட்டு என்னென்ன தேவை? சின்ன துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் - 4 கப், உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - தாளிக்க. அரைப்பதற்கு.. தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், அரிசி - அரை டீஸ்பூன் (எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்) அல்லது காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - சிறிது (மிளகாய் முதல் மிளகு வரை வறுத்து, அத்துடன் பொட்டுக்கடலையை அப்படியே சேர்த்து அரைக்கவும்). எப்படிச் செய்வது? பூசணிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் அரைக்கக் கொடுத்துள்ளதில் முதல் வகையையும் தேங்காயைத் தவிர்க்க விரும்புவோர் இரண்டாவது முறையிலும் அரைத்துக் கொள்ளவும். வெந்த காயை அடுப்பில் வைத்து, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும். பூசணிக்காய் சூப் என்னென்ன தேவை? பூசணிக்காய் - 1 பெரிய பத்தை, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, பெரிய வெங்காயம் -1, பயத்தம் பருப்பு (தேவையானால்) - 1 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால் (தேவையானால்) - 1 கரண்டி, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி சின்னதாக நறுக்கவும். அவரவர் விருப்பப்படி பயத்தம் பருப்பு சேர்த்தோ, தவிர்த்தோ, பூசணிக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன் அளவாகத் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் 2 விசில் வேக வைக்கவும். அதிலுள்ள தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, வெந்ததை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அரைத்த விழுதுடன், தனியே எடுத்து வைத்துள்ள தண்ணீரைச் சேர்த்து மறுபடி சூடாக்கவும். கெட்டியாக கிரீமி சூப் போல வேண்டுமென்பவர்கள், இந்தக் கட்டத்தில் சூப்பில் 1 கரண்டி பால் சேர்க்கலாம். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். நம் எல்லோருக்கும் 3 வேளை சாப்பாடு அவசியம். அது தவிர ஒவ்வொரு உணவுக்கு இடையிலும் ஏதாவது கொறிக்கிற பழக்கம் இருக்கிறது. அதைத் தவிர்க்க நினைத்தாலும் முடியாத வர்கள் இந்த மாதிரி ஆரோக்கியமான சூப்புக்கு மாறலாம். பாரம்பரிய ரெசிபி: காசி அல்வா என்னென்ன தேவை? வெள்ளை பூசணி (துருவியது ) - 2 கப், சர்க்கரை - 1 1/2 கப் , நெய் - 1 கப், பாதாம் பருப்பு - 5, முந்திரிப் பருப்பு - 10, பால் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி கலர் - 1 சிட்டிகை, ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன். எப்படிச் செய்வது? பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். துருவியதைக் கையால் நன்கு பிழிந்து, அதில் உள்ள நீரை எடுத்து விடவும். கேசரி கலரை சிறிது தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள வெள்ளை பூசணி துருவலைச் சேர்த்து நிறம் மாறி, மிருதுவாகும் வரை வதக்கவும். அடிப் பிடிக்காமல் கவனமாக வதக்க வேண்டும். சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கிளறவும். சர்க்கரை கரைந்து கெட்டியாக ஆரம்பிக்கும். நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வரும்போது கேசரி கலர் சேர்க்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அல்வா பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டு துருவிய பாதாம் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடைகளில் தூங்கியவர் முதல் இழந்தார்….. பாட்டுக்கு அர்த்தம் சரியாகத் தான் இருக்குது! Posted: 17 Jul 2014 02:48 AM PDT |
| இந்த விஷப் பரீட்சையெல்லாம் தேவைதானா? Posted: 17 Jul 2014 02:28 AM PDT |
| இவ்வளவு காலமா எங்க பாஸ் இருந்தீங்க?. Posted: 17 Jul 2014 02:25 AM PDT |
| திமிங்கிலத்தின் மேல் தரையிறங்க முற்பட்ட சீ பிளேன்! Posted: 17 Jul 2014 02:18 AM PDT |
| கண்கூடாக தெரியும் நிலநடுக்கத்தின் பாதிப்பு! Posted: 17 Jul 2014 02:13 AM PDT |
| ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750! Posted: 17 Jul 2014 02:04 AM PDT
இந்திய மார்க்கெட்டில், ஹைஃபை வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்கக்கூடிய பைக்காக இருப்பதால், அப்பர் மிடில் கிளாஸ் மக்களை டார்க்கெட் செய்து, இந்த ஸ்ட்ரீட் 750 பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது ஹார்லி. அமெரிக்காவுக்கு வெளியே முதல்முறையாக தயாரிக்கப்படும் ஒரே ஹார்லி பைக் இந்த ஸ்ட்ரீட் 750 பைக்தான். பார்க்கிங் செய்திருக்கும்போதும் சரி, சாலையில் பறக்கும்போதும் சரி, தனி அடையாளத்துடன் உள்ளது ஸ்ட்ரீட் 750. முன்பக்க கறுப்பு வண்ண ஒற்றை கவசத்துக்கு பின்னால், பிரம்மாண்ட கிளியர் லென்ஸ் ஹெட்லைட் இடம் பிடித்திருக்கிறது. ஒற்றை டயலில் ஸ்பீடோ மீட்டர் அனலாக் மீட்டராகவும், ஓடோ, டிரிப் மீட்டர்கள் டிஜிட்டலிலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோல் இருப்பை காட்டும் இன்டிகேட்டர் இல்லை. அதற்கு பதிலாக, பெட்ரோல் குறிப்பிட்ட அளவு குறைந்து ரிஸர்வுக்கு வரும்போது, ஒளிர்ந்து எச்சரிக்கை செய்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குகளில், வலது மற்றும் இடதுபக்க இண்டிகேட்டர் சுவிட்சுகள் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளது. ஆனால், ஸ்ட்ரீட் 750 பைக்கில், நம்ம ஊர் பைக்குகளைப்போலவே இடது பக்கத்திலேயே இண்டிகேட்டர் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது, பட்ஜெட் ஹார்லி என்பதால்,'டே டைம் ரன்னிங் லைட்ஸ்' இதில் இல்லை. ரியர் வியூ கண்ணாடி மிகவும் சிறியதாக இருப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் கண்ணாடியில் முழுமையாக தெரியவில்லை. பைக்கின் பின்பக்கத்தை பார்த்தாலே, இது ஹார்லி என்பதை கண்டுபிடிக்க, தனித்துவமான டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் பில்டு குவாலிட்டி சூப்பர். ஹார்லியின் புதிய வி-ட்வின் இன்ஜினுடன் வெளிவருகிறது ஸ்ட்ரீட் 750. லிக்விட் கூல்டு, ட்வின் சிலிண்டர், 749 சிசி., பியூல் இன்ஜெக்ஷன் இன்ஜின் கொண்ட இது, ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுகளை கொண்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8,000 ஆர்.பி.எம்.-ல் 56.3 பி.எச்.பி சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச டார்க் 4,000 ஆர்.பி.எம்.-ல் 6.62 கே.ஜி.எம் ஆக உள்ளது. ஹார்லி டேவிட்சனுக்கே உரிய வகையில் இதில் டிரைவ் செயின் கிடையாது. பெல்ட் மூலமாகத்தான் பின் வீலுக்கு பவர் கடத்தப்படுகிறது. இதனால், சத்தம் அதிகமாக இல்லை என்பதோடு, செயினை அடிக்கடி அட்ஜஸ்ட் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த ஹார்லி, 0-60 கி.மீ வேகத்தை 2.45 விநாடிகளில் கடக்கிறது. க்ரூஸர் பைக்கான இது, 160 கி.மீ வேகத்தை 18.52 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இதன் அதிகபட்ச ஸ்பீடு மணிக்கு 177 கி.மீ. எவ்வளவு வேகமாக ஓட்டினாலும் அதிர்வுகள் இல்லாத பைக் இது. 130 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் ரிலாக்ஸ்-ஆக பறக்கமுடிகிறது. 55 கி.மீ வேகத்தில் செல்லும்போதுகூட இன்ஜினில் எந்த தடங்கலும் இல்லை. இதனால், நகருக்குள் ஓட்டுவதும் எளிது. சீட் உயரம் குறைவாக இருப்பதால், உயரம் குறைவான நபர்கள்கூட எளிதாக அமர்ந்து ஓட்டமுடியும். ஹார்லியின் எடை 222 கிலோ. நகருக்குள் லிட்டருக்கு 18.7 கி.மீ., நெடுஞ்சாலையில் 21.3 கி.மீ மைலேஜ் தருகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் சதம் விளாசினார் எல்கர்! Posted: 17 Jul 2014 01:29 AM PDT
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் எல்கர் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. காலே மைதானத்தில் நேற்று முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. பீட்டர்சன், டீன் எல்கர் துவக்க ஜோடி விரைவாக ரன் சேர்த்தது. பீட்டர்சன் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளெஸ்சிஸ் ஒருமுனையில் பொறுமையாக ஆட, எல்கருக்கு அதிரடியாக ரன் சேர்த்தார். இருவரும் அரை சதம் அடித்தனர்.தொடர்ந்து அபாரமாக ஆடிய எல்கர் டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்த நிலையில் எல்கர் 103 ரன்னில் லக்மல் பந்தில் ஆட்டமிழந்தார். 220 ரன்களுக்கு 2 விக்கெட் என வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி இருந்த போது, ஆட்ட நேரம் முடியும் தருவாயில் அடுத்தடுத்து விக்கெட்டுக¬ பறிகொடுத்து தடுமாறியது. ஆம்லா 11 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டு பிளெஸ்சில் 80 ரன்னில் வெளியேறினார். 90வது ஓவரில் டிவில்லியர்ஸ் (21) ஆட்டமிழந்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களுடன் இருந்தது. டி காக் 17, ஸ்டெய்ன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் பெரேரா, லக்மல் தலா 2 விக்கெட்டும், ஹெராத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் லார்ட்சில் இன்று!! Posted: 17 Jul 2014 01:25 AM PDT
ஆண்டர்சன்-ஜடேஜா பிரச்னைக்கு நடுவே நடக்கும் போட்டி என்பதால் கூடுதல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து, 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நாட்டிங்ஹாம் ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்திய கேப்டன் டோனியும், இங்கிலாந்து கேப்டன் குக்கும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், லார்ட்ஸ் ஆடுகளம் உயிரோட்டத்துடன் கூடிய பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போட்டியில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் சராசரியாக 315 ரன்கள் எடுக்க முடியும். ஆனால், 2010 முதல் 2014ம் ஆண்டு வரையிலான போட்டிகளை கணக்கில் கொண்டால் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 403 ரன்களாக உள்ளது. எனவே, பேட்டிங்குக்கும் லார்ட்ஸ் மைதானம் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அணியை தேர்வு செய்வதில் கேப்டன் டோனிக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இளம் பந்துவீச்சாளர் பின்னியின் வேகம் எடுபடவில்லை. 144 ஓவர்களை இந்திய அணி வீசிய போதும் கூட அவருக்கு வெறும் 10 ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், 2வது இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த போது, பின்னி 78 ரன் எடுத்து அணியை இக்கட்டில் இருந்து காப்பாற்றினார். இதனால், பின்னியை தொடர்ந்து விளையாட வைப்பதா அல்லது அவருக்கு பதிலாக அஷ்வினை களமிறக்குவதா, அல்லது ஜடேஜாவை ஓரம் கட்டுவதா என நேற்று பலத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஜடேஜா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பேட்டிங்கில் 25, 31 ரன்கள் எடுத்துள்ளார். ஆனாலும், பின்னி, ஜடேஜா இருவரில் ஒருவருக்கு பதிலாக ஆஷ்வின் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. குறிப்பாக, கோஹ்லி 2 இன்னிங்சிலும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார். எனவே, கோஹ்லி இம்முறை அதிக ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதே போல, ரகானே, புஜாரா, தவான் ஆகியோரும் அணிக்கு வலுவான ஸ்கோரை பெற்றுத்தர வேண்டிய நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் நமது பந்துவீச்சாளர்கள் திணறினர். அந்த தவறையும் திருத்திக் கொண்டு விளையாடினால், லார்ட்சில் வெற்றியை ருசிக்கலாம். ஏற்கனவே, ஆண்டர்சன்& ஜடேஜா இடையே ஏற்பட்ட பிரச்னை இரு அணி வீரர்கள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதால், லார்ட்ஸ் டெஸ்டில் நிச்சயம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய நேரப்படி இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ராசியில்லாத மைதானம் லண்டன் லார்ட்ஸ் மைதானம் இந்திய அணிக்கு ராசியே இல்லாததது. இங்கு விளையாடிய 16 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1986ல் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்தை வென்றுள்ளது. 4 டெஸ்ட்கள் டிராவில் முடிந்துள்ளன. மற்ற 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா – பிரேசில் இடையேயான மூன்று ஒப்பந்தங்கள்! Posted: 17 Jul 2014 01:16 AM PDT
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்பை சந்திக்க அதிபர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் உற்ச்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேசிகொண்டனர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுச் சூழல் உள்ளிட்ட மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐநா கோரிக்கையை ஏற்று 5 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்! Posted: 17 Jul 2014 01:12 AM PDT
ஐ.நா. வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில், 5 மணி நேரத்திற்கு தாக்குதலை நிறுத்திக் கொள்ள இஸ்ரேலிய படைகளும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 9 நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் 226 பேர் பலியாகியுள்ளனர். காஸா கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் பலியாகினர். இதனையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் செரி, மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேல் தரப்பிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோல், ஹமாஸ் தரப்பிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வியாழன் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை தாக்குதலை நிறுத்திக் கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய படைகளும் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், இந்த 5 மணி நேரத்தில் ஹமாஸ் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் நிச்சயமாக தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்! Posted: 17 Jul 2014 01:06 AM PDT
அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அந்தவகையில் விரைவில் அரச தரப்பிலிருந்து நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா இரண்டு தரப்புடனும் நடததிய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க மட்டத்தில் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சை நடத்துவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் தீர்வு ஒன்றை நோக்கி செல்வதற்கும் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷாவிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின்போது கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்கு தயாரா என்று சிறில் ரமபோஷா வினவியிருந்தார். இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதாக அதன்போது ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவந்த இருதரப்பு பேச்சுக்கள் 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முறிவடைந்தது. இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்த அரசாங்கம் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்தால்தான் தீர்வு சாத்தியம் என்று கூறிவந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் தீர்வை நோக்கி செல்வதற்கான செயற்பாட்டை ஆரம்பிக்க கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து ஆளும் கட்சி பரிசீலித்துவருவதாக தெரியவருகின்றது. கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேரடிப் பேச்சு விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்சவிடம் வினவிய போது பதிலளித்த அவர் கூட்டமைப்புடன் தீர்வு விடயம் தொடர்பில் இருதரப்பு பேச்சுக்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தற்போது இல்லை. சில விட்டுக்கொடுப்புக்களுடன் இந்த விடயத்தை அணுகுவதற்கு தயார் என்ற விடயத்தை உறுதிபடுத்தினார். அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த விடயம் குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது, அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு வர முடியாது என்று கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவந்தால் வேறு ஒரு புதிய வேலைத்திட்டத்துக்கு செல்வது குறித்தும் ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















