மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நர்சுகளை மீட்டு வர மிகவும் போராடினோம்: வெளியுறவுத்துறை அதிகாரி அக்பரூதீன் பேட்டி
- 9-ம் வகுப்பு மாணவி கோரிக்கையை ஏற்ற முதல்-மந்திரி சவுகான்
- கர்நாடகாவுக்கு ராஜகோபால் கவர்னர் ஆகிறார்
- ஆந்திராவில் தெலுங்குதேசம்–ஒய்எஸ்ஆர்காங். தொண்டர்கள் மோதல்: துப்பாக்கி சூடு
- நர்சுகள் உள்பட 183 பேரை ஏற்றி வந்த சிறப்பு விமானம் மும்பை வந்தடைந்தது
- அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம்: நரேந்திர மோடி வாழ்த்து
- கங்கையை சுத்தம் செய்யும் பணியில் மோடி அரசுக்கு உ.பி. ஒத்துழைப்பு கொடுக்கும்: ஆசம் கான்
- கோவா ஆளுநர் பி.வி.வான்ஷூ ராஜினாமா
- பீகாரில் ஆக்சிடோசின் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடு
- எளிதாக்கப்படும் பாஸ்போர்ட் டெலிவரி
- மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் வை-பை வசதி
- தீவிரவாதிகளின் ராக்கெட் வீச்சில் டெல்லி விமானம் தப்பியது
- கால்பந்து போட்டியில் பங்குபெற அமெரிக்கா செல்லும் ஜார்கண்ட் பெண்கள்
- முல்லை பெரியாறு பிரச்சினை: ஜனாதிபதியிடம் முறையிட உம்மன்சாண்டி முடிவு
- உணவுப்பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அருண் ஜெட்லி எச்சரிக்கை
- டெல்லி-கான்பூர் வழித்தடத்தில் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிக நிறுத்தம்
- மேற்கு வங்காள சட்டசபைக்குள் புகைப்படம் எடுத்த விஞ்ஞானியால் பரபரப்பு
- ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் நாளை கேரளா வருகின்றனர்
- மதுரை பல்கலை. துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
- சமையல் எரிவாவு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்
| நர்சுகளை மீட்டு வர மிகவும் போராடினோம்: வெளியுறவுத்துறை அதிகாரி அக்பரூதீன் பேட்டி Posted: 04 Jul 2014 11:32 PM PDT ஈராக் தீவிரவாதிகளின் மரண பிடியில் இருந்து 46 இந்திய நர்சுகள் மீட்கப்பட்டது எப்படி என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீது அக்பரூதீன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:– ஈராக்கில் 46 இந்திய நர்சுகள் திக்ரித் நகரில் சிக்கி கொண்ட தகவல் கிடைத்த நாள் முதலே, நாங்கள் அவர்கள் பற்றி கண்காணித்துக் கொண்டிருந்தோம். தீவிரவாதிகள் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க |
| 9-ம் வகுப்பு மாணவி கோரிக்கையை ஏற்ற முதல்-மந்திரி சவுகான் Posted: 04 Jul 2014 10:50 PM PDT மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவி மைமோனாகான். கிராமத்தில் வசிக்கும் இந்த மாணவி அருகில் உள்ள ஊருக்கு தினமும் சென்று படித்து வந்தார். மாணவியின் கிராமத்தில் சாலை வசதிகள் இல்லை. இதையடுத்து அவள் முதல் – மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு கடிதம் எழுதினாள். அதில் எங்கள் ஊருக்கு ரோடு போட்டுக் கொடுங்கள் என்று கூறியிருந்தாள். அந்த கடிதத்துக்கு பதில் இல்லை. |
| கர்நாடகாவுக்கு ராஜகோபால் கவர்னர் ஆகிறார் Posted: 04 Jul 2014 10:36 PM PDT மத்திய அரசு சில மாநில கவர்னர்களை நீக்கி விட்டு, புதிய கவர்னர்களை நியமனம் செய்ய ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்யும்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவர்னர்கள் மத்திய உள்துறையால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவை ஏற்று உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், நாகலாந்து மாநில கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கி சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாக நேரிட்டதால் மேற்கு வங்கம், கோவா மாநில கவர்னர்களும் பதவியில் இருந்து விலகினார்கள். |
| ஆந்திராவில் தெலுங்குதேசம்–ஒய்எஸ்ஆர்காங். தொண்டர்கள் மோதல்: துப்பாக்கி சூடு Posted: 04 Jul 2014 10:23 PM PDT ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் தேர்தல் நடந்து வருகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. கடப்பா மாவட்டம் நும்மனமடுகு நகராட்சியில் மோதலில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். இந்த நகராட்சியில் |
| நர்சுகள் உள்பட 183 பேரை ஏற்றி வந்த சிறப்பு விமானம் மும்பை வந்தடைந்தது Posted: 04 Jul 2014 09:48 PM PDT ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 நர்சுகளை ஏற்றி வரும் போயிங் 777 ரக 'ஏர் இந்தியா' சிறப்பு விமானம் மும்பை வந்தடைந்தது. முன்னதாக, ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 46 இந்திய நர்சுகளும் போர் பதற்றமற்ற எர்பில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். |
| அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம்: நரேந்திர மோடி வாழ்த்து Posted: 04 Jul 2014 09:30 PM PDT அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம்: நரேந்திர மோடி வாழ்த்து |
| கங்கையை சுத்தம் செய்யும் பணியில் மோடி அரசுக்கு உ.பி. ஒத்துழைப்பு கொடுக்கும்: ஆசம் கான் Posted: 04 Jul 2014 09:30 PM PDT புனித நதியான கங்கை மாசுபட்டு வருவதை தடுப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. கங்கை நதியை சுத்தப்படுத்த ஆர்வமாக இருக்கும் மோடி அரசுக்கு உத்தரபிரதேச மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று மத்திய மந்திரி ஆசம் கான் தெரிவித்துள்ளார். கங்கையில் கழிவுநீர் திறந்து விடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி உத்தரபிரதேச சட்டசபையில் இன்று பா.ஜனதா உறுப்பினர் ஷயம்தேவ் ராய்சவுத்ரி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். |
| கோவா ஆளுநர் பி.வி.வான்ஷூ ராஜினாமா Posted: 04 Jul 2014 09:29 PM PDT கோவா மாநில ஆளுநர் பி.வி.வான்ஷூ இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த மாநில ஆளுநர்களை மாற்ற திட்டமிட்டது. இதுதொடர்பாக அந்த ஆளுநர்களுக்கு உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி அழைப்பும் விடுத்திருந்தார். அந்த அழைப்பை பெற்றபிறகு கோவா மாநில ஆளுநர் பி.வி.வான்ஷூ (63) இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளார். |
| பீகாரில் ஆக்சிடோசின் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடு Posted: 04 Jul 2014 09:29 PM PDT பீகார் மாநிலத்தில் கால்நடைகள் அதிக பால் கொடுக்கவும், காய்கறிகள் நல்ல பருமனாக விளையவும் ஆக்சிடோசின் என்ற மருந்தை சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சட்டசபையில் இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அப்துல் பாரி சித்திக்கி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர்(பொறுப்பு) விஜய் சவுத்ரி, ஆக்சிடோசின் மருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். |
| எளிதாக்கப்படும் பாஸ்போர்ட் டெலிவரி Posted: 04 Jul 2014 09:29 PM PDT இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதென்பது இதுநாள்வரை நீண்ட காலம் பிடிக்கக்கூடியதாகவும், சிக்கலான நடைமுறைகளைக் கொண்டதாகவும் இருந்தது. வெளிவிவகார அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரியின் ஆலோசனையின்பேரில் மும்பை அலுவலகம் சிக்கலான நடைமுறைகளை விடுத்து விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்கான |
| மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் வை-பை வசதி Posted: 04 Jul 2014 09:29 PM PDT மும்பையில் கடந்த மாதம் மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், லிப்ட்டுகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகள் பயணிகளின் நலனுக்காக செய்யப்பட்டு உள்ளது |
| தீவிரவாதிகளின் ராக்கெட் வீச்சில் டெல்லி விமானம் தப்பியது Posted: 04 Jul 2014 09:29 PM PDT ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் சுமார் 100 பயணிகளுடன், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பகல் 11.40 மணிக்கு காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்ப தயாரானது. |
| கால்பந்து போட்டியில் பங்குபெற அமெரிக்கா செல்லும் ஜார்கண்ட் பெண்கள் Posted: 04 Jul 2014 09:29 PM PDT இந்தியாவில் பழங்குடி மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.வறுமை சூழ்நிலை காணப்படும் இங்கு வீட்டு வேலைகளுக்காகவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்காகவும் பெண்கள் கடத்தப்படுவது என்பது சகஜமாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனரான பிரான்ஸ் கஸ்ட்லரால் தோற்றுவிக்கப்பட்ட யுவா என்ற அமைப்பு அங்குள்ள பெண்களின் முன்னேற்றத்துக்கு செயல்பட்டு வருகின்றது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை |
| முல்லை பெரியாறு பிரச்சினை: ஜனாதிபதியிடம் முறையிட உம்மன்சாண்டி முடிவு Posted: 04 Jul 2014 05:31 AM PDT தென் தமிழக விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாக கூறி கேரள அரசு பொய் பிரசாரம் செய்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், அணை பலமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை இப்போது இருக்கும் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். |
| உணவுப்பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அருண் ஜெட்லி எச்சரிக்கை Posted: 04 Jul 2014 04:40 AM PDT உணவுப்பொருட்கள் விலையேற்றத்திற்கு காரணமான பதுக்கல்காரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உறுதி அளித்தார். உணவுப்பொருட்கள் பதுக்கலை தடுப்பது மற்றும் சந்தையில் பெருட்கள் கிடைப்பதை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மாநில உணவுத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உணவுப் பொருட்கள் பதுக்கலைத் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. பின்னர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:- |
| டெல்லி-கான்பூர் வழித்தடத்தில் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிக நிறுத்தம் Posted: 04 Jul 2014 03:51 AM PDT பராமரிப்பு பணி காரணமாக டெல்லியில் இருந்து கான்பூருக்கு செல்லும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருப்தபாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களுக்காக டெல்லி-கான்பூர் வழித்தடத்தில் இரண்டு வாரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்பின்னர் வழக்கமான விமானங்கள் இயக்கப்படும் என்று கான்பூர் விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் நேகி தெரிவித்துள்ளார். இதுபோன்று பராமரிப்பு பணிகளுக்காக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். |
| மேற்கு வங்காள சட்டசபைக்குள் புகைப்படம் எடுத்த விஞ்ஞானியால் பரபரப்பு Posted: 04 Jul 2014 03:44 AM PDT மேற்கு வங்காள மாநில சட்டசபைக்குள் மூத்த விஞ்ஞானி ஒருவர் தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் இன்று இடதுசாரி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ரபி ரஞ்சன் சாட்டர்ஜி பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் மூத்த விஞ்ஞானியான ஹஸ்ரா, தனது செல்போனில் சபை நிகழ்வை புகைப்படம் எடுத்தார். |
| ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் நாளை கேரளா வருகின்றனர் Posted: 04 Jul 2014 03:28 AM PDT ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். |
| மதுரை பல்கலை. துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை Posted: 04 Jul 2014 02:59 AM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என்று கூறியும், இந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் மதுரை பேராசிரியர்கள் கே.பி.ஜெயராஜ், ஐ.இஸ்மாயில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனத்தை கடந்த மாதம் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினர். |
| சமையல் எரிவாவு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம் Posted: 04 Jul 2014 02:47 AM PDT டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக மாதந்தோறும் 40 முதல் 50 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் விலை சர்வதேச சந்தை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பைப் பொறுத்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் விலையை உயர்த்துவது தொடர்பாக கிரித் பாரிக் குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தவும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 250 ரூபாய் உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் விலையை உயர்த்த பெட்ரோலியத் துறை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |