Tamil Star |
- அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் வெளிவிவகாரத்துறை அமைச்சிற்கு அழைக்கப்பட்டார்!
- பார்ரியின் வடபகுதியில் அதிர வைக்கும் வாகனமொன்றிற்குள் எரிந்த மூவரின் உடல்கள்!
- ஈராக் எல்லைகளில் குவியும் சவுதி அரேபியாவின் துருப்புகள்!
- 10 அடிப்படை யோக முத்திரைகளும்… அவைகளின் உடல் நல பயன்களும்!
- குஷியாக இருக்கும் யானைக்கு மட்டும் கோபம் வந்தால் இது தான் கதி!
- இன்றைய டெக்னாலஜி கூட இவருக்கு ஈடாகாது.. நெகிழவைக்கும் காட்சி!
- பெண்ணாக பிறந்து ஆணாக வாழ்ந்து வரும் பெண்!
- இணையத்தால் இப்படியும் நடக்கலாம்…. ஆண்களே மிகவும் கவனம்!
- சாம்சங் எஸ் 5 மினி!
- முதல் டெஸ்ட் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்!
- பைனலில் குவித்தோவா விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி!
- ஷாப்பிங் மாலில் வீட்டு வேலைக்கு பெண்கள் விற்பனை!
- தீவிரவாதிகளிடம் சிக்கிய 46 இந்திய செவிலியர்கள் விடுவிப்பு!
- முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
- வன்முறை சம்பவங்களின் தடயங்களை மறைக்க கோத்தபாய நடவடிக்கை?
- இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
- தாமரை செடிகளிலிருந்து டீசல் தயாரிக்கும் இலங்கை!
- கனடா-ஒன்றாரியோ சிம்மாசனப் பிரசங்கத்தில் முதலீடுகளுக்கு முக்கியத்துவம்!
- வாசிங்டன் விமானநிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! தொலைபேசிகள், பாதணிகள் மீளாய்வு செய்யப்படும்
| அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் வெளிவிவகாரத்துறை அமைச்சிற்கு அழைக்கப்பட்டார்! Posted: 04 Jul 2014 11:19 PM PDT
தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரச சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாக தகவல்களைப் பெறும் நோக்கிலேயே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் சர்வதேச நிதியுதவி வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டின் அரச சார்பற்ற அமைப்பொன்றிற்கு 190 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கலந்துரையாடியதுடன் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை அழைத்து இதற்கான எதிர்ப்பினை வெளியிட தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. வாக்காளர் கல்வி ஊடாக தேர்தல் ஒத்துழைப்பு' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறு யுஎஸ்எயிட் நிறுவனம் வெளியிட்டிருந்த பத்திரிகை விளம்பரத்தை அடுத்து, அதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது. இந்த சூழ்நிலையில், சிவில் அமைப்புகளுக்கு இன்று வௌ்ளிக்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள யுஎஸ்எயிட் நிறுவனம், குறித்த நிகழ்ச்சித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பார்ரியின் வடபகுதியில் அதிர வைக்கும் வாகனமொன்றிற்குள் எரிந்த மூவரின் உடல்கள்! Posted: 04 Jul 2014 11:15 PM PDT
இது சம்பந்தமாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 5.40-மணியளவில் ஒறொ-மெடொன்ரெவில் வாகனம் ஒன்று தீப்பிடித்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தீ அணைக்கப்பட்ட பின்னர் வாகனத்திற்குள் அதிகாரிகள் கண்டுபிடித்தது 3-மனித உடல்கள் என நம்ப பட்டுள்ளது. வாகனத்தின் உள்ளே காணப்பட்ட உடல்களுடன் வாகனம் மேலதிக விசாரனைக்காக ரொறொன்ரோ தடய அறிவியல் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிரேத பரிசோதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீ அதிக வெப்பமாக இருந்தபடியால் தங்களால் வாகனத்தின் மாடல் என்னவென்பதை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் ஆனால் லைசென்ஸ் தகடு ஒன்ராறியோவைச் சேர்ந்ததென அதிகாரிகள் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். இந்த உடல்கள் கல்கரியில் காணாமல் போன 5-வயது சிறுவன் மற்றும் அவனது பேரன் பேத்தி ஆகியோரது என நம்பமுடியாதெனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்ற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை. இது சம்பந்தமாக தகவல்கள் தெரிந்தவர்கள் குறிப்பிட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அவதானித்தவர்கள் எவராவது இருப்பின் புலன்விசாரனையாளர்களுடன் 1-888-310-1122. என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக் எல்லைகளில் குவியும் சவுதி அரேபியாவின் துருப்புகள்! Posted: 04 Jul 2014 11:11 PM PDT
கிட்டத்தட்ட 30 ஆயிரம் படைகள்வரையில் குவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவு ISIS. தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி கடந்த ஒரு மாதமாக கடுமையாக சண்டையிட்டுஇ முக்கிய நகரங்களை பிடித்து வருகின்றனர். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டும்இ அமெரிக்கா இன்னும் ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர் எனத் தெரிகிறது . கடந்த வாரம் இ தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க மன்னர் அப்துல்லா சபதம் செய்திருந்த நிலையில் இந்த தொலைபேசி பேச்சு நடந்துள்ளது எனத் தெரிகிறது . தொலைபேசி பேச்சின்போதுஇ ஈராக்கில் தீவிரவாதிகள் கை ஓங்கி வருவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும்இ ஈராக்கில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சவூதி அரேபியா 500 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருப்பதற்கு ஒபாமா நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. ஈராக்குடன் சவூதி அரேபியா 800 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வெளியிட்ட அல்அரேபியா TV .இ "ஈராக்இ சிரிய எல்லைகளை பாதுகாப்பற்ற நிலையில் விட்டு விட்டுஇ ஈராக் படைகள் தங்கள் நிலைகளை கைவிட்டு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சவூதி அரேபிய வீரர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்" என கூறியது. எல்லையிலிருந்து 2இ500 ஈராக் வீரர்கள் திரும்பிச்சென்ற வீடியோ காட்சிகளையும் இந்த டெலிவிஷன் ஒளிபரப்பியது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 10 அடிப்படை யோக முத்திரைகளும்… அவைகளின் உடல் நல பயன்களும்! Posted: 04 Jul 2014 05:04 AM PDT
உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது. யோகா ஒரு பழமையான கலை என்று நம் இந்திய வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முனிவர்களின் ஞானம் மற்றும் தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் கலவையான யோகா, மற்ற உடற்பயிற்சிகளை விட உங்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். யோகா என்றால் வெறும் ஆசனங்களும் இருக்கைகளும் மட்டுமல்ல. சிலருக்கு மட்டும் தெரிந்த முத்திரைகளும் கூட யோகாவில் உள்ளது. இந்த யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்! ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும். அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!! அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள். அடிப்படையான யோகாசன முத்திரைகளையும் அதனால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பயன்களையும் இப்போது பார்க்கலாமா? அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும். உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரையாகும். உட்காரும் போது, நிற்கும் போது அல்லது படுக்கும் போது, அந்த நாளில் எந்நேரம் வேண்டுமானாலும் இதை செய்யலாம். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும். உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை; இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும். இந்த யோகாசன முத்திரை உடலில் உள்ள நீர் தனிமத்தை சமநிலைப்படுத்துவதற்காக செய்வதாகும். மேலும் உங்கள் அழகை மேம்படுத்த இந்த முத்திரை உதவும். உங்கள் உடலில் உள்ள நீரோட்டம் நன்றாக வைப்பதாலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் உங்கள் சருமம் மின்னிடும். வாழ்க்கையை குறிக்கும் முத்திரை இது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முத்திரை இது. இந்த யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும். அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. இந்த முத்திரையினால் கிடைக்கும் உடல்நல பயன்கள் - இரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். சைபர் அல்லது சூன்ய முத்திரை என்பது உங்கள் காதுகளுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளை போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் கூட இது உதவும். சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படையாகும். சூரியனின் ஆற்றல் திறனை பெறுவதற்கு இந்த முத்திரையை விடியற்காலையில் செய்ய வேண்டும். இந்த முத்திரை ஆண்களின் விரைக்குறியை குறிக்கும். அதனால் தான் என்னவோ உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது இது. இந்த முத்திரை உங்கள் ஆண்மையை அதிகரித்து, சளி சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சனைகளை போக்கும். பல்துறை முத்திரையான அனேகமாக அனைவருக்குமே பயனை அளிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான் முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரக கோளாறுகளை கையாள உதவும் இம்முத்திரை. அதே போல் மலம் கழித்தலையும் சீராக்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குஷியாக இருக்கும் யானைக்கு மட்டும் கோபம் வந்தால் இது தான் கதி! Posted: 04 Jul 2014 04:56 AM PDT |
| இன்றைய டெக்னாலஜி கூட இவருக்கு ஈடாகாது.. நெகிழவைக்கும் காட்சி! Posted: 04 Jul 2014 04:54 AM PDT |
| பெண்ணாக பிறந்து ஆணாக வாழ்ந்து வரும் பெண்! Posted: 04 Jul 2014 04:51 AM PDT |
| இணையத்தால் இப்படியும் நடக்கலாம்…. ஆண்களே மிகவும் கவனம்! Posted: 04 Jul 2014 04:44 AM PDT |
| Posted: 04 Jul 2014 04:37 AM PDT
சாம்சங் நிறுவனம் சமீப காலமாக எலக்ட்ரானின் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னேறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகுதான் சாம்சங் தயாரிப்புகள் பிரபலமடைந்தது என்றே கூறலாம். செல்போன் தயாரிப்பு முன்னணியில் இருக்கும் பிளாக்பெரி, ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணையாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சாம்சங் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கேலக்சி வகை போன்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஐபோனுக்கு இணையான தொழில்நுட்பங்களில் கேலக்சி போன்கள் வெளியானது. கடைசியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5க்கு இணையாக கேலக்சி எஸ் 5 மாடல் ஸ்மார்ட் போனை வெளியிட்டது. ஆனால் சாம்சங் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு இதன் விற்பனை இல்லை. இந்நிலையில் எஸ்-5 மாடல் போனில் ஒரு சில மாற்றங்களை செய்து எஸ்-5 மினி வகை ஸ்மாட்போன்களை அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் ஆயத்தமாகியுள்ளது. கேலக்சி எஸ்-5 மினி ஸ்மார்ட் போன் 4.5 இன்ச் அளவில் வெளியாக உள்ளது, இதில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி வரை இன்பில்ட் மெமரி ஆகியவையும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்த வரையில் நவீன வரவான ஆன்டிராய்டு கிட்கேட் உள்ளது. செல்போனின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டின் வசதிக்காக பிங்கர் பிரிண்ட் சென்சார் பிரத்தியோகமாக இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க வசதியாக இதில் 8 எம்பி பின்பக்க கேமராவும், 2.1 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இது மட்டுமல்லாமல் பிற ஸ்மார்ட் போன்களில் இருப்பது போல ஜிபிஎஸ் நேவிகேஷன், ஜி-சென்சார், ஈ-மெயில் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. சாம்சங் கேலக்சி எஸ்5-மினி விலை குறித்து முழுமையான தகவல்களை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த ஸ்மாட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் போன் அறிமுகப்படுத்த, ஏற்கனவே அறிமுகப்படுத்திய கேலக்சி எஸ்5யின் விலை அதிகமாக இருந்ததாலும், குறைவாக விற்று வருவதாலும், சில மாற்றங்களை செய்து கேலக்சி எஸ்-5 போனை காட்டிலும் குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல் டெஸ்ட் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்! Posted: 04 Jul 2014 04:33 AM PDT
இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய 12 வீரர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 13வது வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இங்கிலாந்து அணி: அலஸ்டர் குக் (கேப்டன்), சாம் ராப்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, மேட் பிரையர், கிறிஸ் ஜோர்டான், ஸ்டூவர்ட் பிராடு, லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோகஸ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பைனலில் குவித்தோவா விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி! Posted: 04 Jul 2014 04:30 AM PDT
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். அரை இறுதியில் சக செக். வீராங்கனை லூசி சபரோவாவுடன் நேற்று மோதிய குவித்தோவா, கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (8-6) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர், சபரோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டு 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்களில் சிமோனா ஹாலெப்பை (ரோமானியா) வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரேடக் ஸ்டெபானக் (செக்.) ஜோடி (5வது ரேங்க்) 3-6, 7-6 (7-5), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் டேனியல் நெஸ்டர் - நேனட் ஜிமான்ஜிக் (செர்பியா, 3வது ரேங்க்) ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷாப்பிங் மாலில் வீட்டு வேலைக்கு பெண்கள் விற்பனை! Posted: 04 Jul 2014 04:06 AM PDT
சிங்கப்பூரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை விற்பதைப் போல, வீட்டு வேலைக்கும் பெண்கள் கூவி கூவி விற்கப்படுகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் மையப் பகுதியில் புக்கித் திமா என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்குள்ள கடை ஒன்றில் வீட்டு வேலை செய்ய, சமையல் செய்ய, துணி அயர்ன் செய்ய, குழந்தைகளையும் வயதானவர்களையும் பார்த்துக் கொள்ள இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளனர். பெண்களின் கழுத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பள தொகை எழுதி தொங்க விடப்பட்டு உள்ளது. வீட்டு வேலைக்கு பெண்களை ஏலத்தில் எடுத்து செல்வதும் நடைபெறுகிறது என்றும் கடைக்காரர்கள் கூறுகின்றனர். இந்த பெண்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள் சொன்ன வேலையை மறுக்காமல் செய்கின்றனர் என்றும், பர்மிய பெண்கள் தகராறு செய்கின்றனர் என்றும் வாடிக்கையாளர்கள் புகார் கூறுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் இதுபோன்று வீட்டு வேலைக்கு பெண்களை விற்பது புதிய நிகழ்வாக கருத முடியாது. பல ஆண்டுகளாக வீட்டு வேலைக்கு பெண்களை விற்கும் தொழில் நடைபெற்று வருகிறது. என்று குடிபெயர்ந்தவர்களின் மறுவாழ்வு மற்றும் மனிதாபிமான உதவி அமைப்பின் தலைவர் ஜோலோவன் வாம் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீவிரவாதிகளிடம் சிக்கிய 46 இந்திய செவிலியர்கள் விடுவிப்பு! Posted: 04 Jul 2014 04:02 AM PDT
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 46 செவிலியர்களையும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளதை செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது. ஈராக்கில் நடக்கும் உள்நாட்டு போரின் காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திக்ரித் மருத்துவ மனையில் பணியாற்றி வந்த இந்திய செவிலியர்கள் 46 பேரையும் தீவிரவாதிகள் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மோசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். தீவிரவாதிகளின் பிடியில் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர் மோனிசாவும் சிக்கியிருந்தார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் ஆவார். இதனிடையே இந்திய செவிலியர்களை விடுவிக்க தீவிரவாதிகள் ஒத்துக்கொண்டதாக கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த சையோனா என்ற செவிலியர் தமது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தூத்துகுடியை சேர்ந்த மோனிசா அளித்த தகவலில் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், வாகனம் ஒன்றில் விமான நிலையம் நோக்கி பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். திக்ரித்தில் இருந்து மொசூலில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 46 செவிலியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! Posted: 04 Jul 2014 03:56 AM PDT
இலங்கையினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாக இந்திய புலனாய்வுத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவினை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருகின்றமை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருந்தது. இதற்கிடையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையை பயன்படுத்தி கடல்மார்க்கமாக தென்னிந்தியாவுக்கு ஊடுறுவுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும் என்ற அச்சத்தில் இந்தியா இருப்பதாகவும் இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய அவதானம் செலுத்தி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு செல்வதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வன்முறை சம்பவங்களின் தடயங்களை மறைக்க கோத்தபாய நடவடிக்கை? Posted: 04 Jul 2014 03:52 AM PDT
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட இனவாத மோதல்களின் பின்னர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே, அழிவடைந்த கட்டிடங்களை சுத்தப்படும் பணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தினரை ஈடுபடுத்தியிருந்தார். இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் இந்த பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சம்பவங்கள் நடந்தமைக்கான சாட்சிய தடயங்களை அழிப்பதற்காகவா பாதுகாப்புச் செயலாளர் முன்கூட்டியே சுத்தப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தினார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். தீவைப்பு சம்பவம் ஒன்று நடைபெற்ற பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரசாயன பகுப்பாவாளர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக்கான பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னரே இந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். எனினும் இந்த சட்ட நடவடிக்கை பின்பற்றப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சாட்சியங்களை மறைக்கும் முயற்சியாக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில், கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட அழிவுகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரசாயன பாகுப்பாய்வு அறிக்கை பெறவேண்டும் எனவும் இதனால் சுத்தப்படுத்தும் பணிகளை நிறுத்துமாறும் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டார். அதேவேளை சம்பவத்தின் கொல்லப்பட்டவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் எனினும் குறுகிய மரண விசாரணையில் வாளால் வெட்டப்பட்டதால் மரணம் சம்பவித்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய சட்ட வைத்திய அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம் Posted: 04 Jul 2014 03:28 AM PDT
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் " இராணுவமே நீ உன் வீட்டுக்குப் போ, நான் என் வீட்டுக்குப் போவதற்கு", "எங்கள் நிலம் வேண்டும்", "இராணுவமே எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாமரை செடிகளிலிருந்து டீசல் தயாரிக்கும் இலங்கை! Posted: 04 Jul 2014 03:25 AM PDT
இலங்கையில் நீர் நிலைகளில் வளரும் ஆகாயத் தாமரை செடிகள் மூலம் டீசல் தயாரிக்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாக, வர்த்தகம் மற்றும் கைத்தொழிற்துறை பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். களுத்துறை நாவுல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருளுக்காக நாட்டில் செலவிடப்படும் பணத்தை குறைப்பதற்காக ஆகாயத் தாமரை செடியில் இருந்து டீசல் தயாரிக்கும் வெற்றிகரமான முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த தயாராக இருகின்றேன். 75 தொன் ஆகாயத் தாமரை செடியில் இருந்து 24 ஆயிரம் லீற்றர் டீசல் தயாரிக்க முடியும். தென் ஆப்பிரிக்காவின் அபிவிருத்தித் திட்டமாக ஜனாதிபதியுடன் பேசி இலங்கையில் அதனை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் காணப்படும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான நீர் செடிகள் மூலம் எரிபொருள் தயாரிக்க முடிந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என தான் நம்புவதாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா-ஒன்றாரியோ சிம்மாசனப் பிரசங்கத்தில் முதலீடுகளுக்கு முக்கியத்துவம்! Posted: 04 Jul 2014 12:18 AM PDT
பெரும்பான்மைப் பலத்துடன் தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சியானது தனது சிம்மாசனப் பிரசங்கத்தை வியாழக்கிழமை ரொறன்ரோவில் நிகழ்த்தியிருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் லிபரல் கட்டுப்பாட்டுடன் செலவீனங்களை மேற்கொள்வதாக வாக்குறதியளித்திருக்கின்றது எனத் தெரிகிறது. குறிப்பிட்ட சிம்மாசனப் பிரசங்கமானது லிபரல் கட்சியினால் எழுதப்பட்டு டுவ.-Lt.-Gov. David Onley என்பவரால் வாசிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைன் கத்லீனது கருத்தின்படி அடுத்த சகாப்தத்திலும் அதற்கு அப்பாலும் கனடிய அரசினது முக்கியமான குறிக்கோளாக 12.5 பில்லியன் பற்றாக்குறை நிதி நிலமையை முற்றாக மாற்றுதல் வேண்டும் என்பது இருக்கின்றது எனத் தெரிகிறது. அத்துடன் கனடியப் பொருளாதாரமானது வளர்வதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அதுமட்டுமல்ல, பொதுக் கட்டுமானப் பணிகள், கூட்டுத்தாபன நன்கொடைகள், மற்றும் தொழில் திறன்களை வளர்க்கும் திட்டங்கள் என்பனவற்றில் அதிகளவு கவனம் செலுத்துப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. வைன் கத்லீன் பொதுக்கட்டுமானப் பணிகளில் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்வதனால் கனடியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லிபரிலினால் பொதுசேவையில் பணிக்குறைப்பினை மேற்கொள்ளாமலே சமப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. லிபரல் வழங்கிய இந்த உரையானது மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் காணப்பட்டுள்ளதென்ற கருத்து நிலவுவதாகத் தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாசிங்டன் விமானநிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! தொலைபேசிகள், பாதணிகள் மீளாய்வு செய்யப்படும் Posted: 04 Jul 2014 12:14 AM PDT
வாசிங்டன்- வெளியிடங்களில் இருந்து யு.எஸ்சிற்குள் வரும் நேரடி விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு துறையினரின் அறிக்கைகளின் பிரகாரம் வெளியிடப்பட்ட அல் குவைடாவுடன் இணைந்த தீவிரவாத கும்பல்களின் அதிகரித்த பயமுறுத்தல்கள் காரணமாக மொபைல் போன்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பன கடுமையான திரையிடல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற இடங்களில் இருந்து யு.எஸ். வரும் நேரடி விமானங்களில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Apple Inc.நிறுவனத்தினரால் செய்யப்பட்ட iPhones மற்றும் Samsung Electronics Co Ltd.யினரின் Galaxy phones உட்பட்ட சிமாட் போன்கள் தனிமை படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். அரேபிய தீபகற்பத்தில் உள்ள யேமனை தளமாக கொண்ட அல் கொய்டா தீவிரவாதிகள் தொலைபேசிகளை எவ்வாறு வெடிபொருள் சாதனங்களாக மாற்றலாம் என்பதற்கான விடைகளை கண்டுள்ளதால் தாங்கள் அச்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததோடு இதனை தடுக்கும் பொருட்டு சோதனைகளை பலப்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கண்டிறிய கடினமான வெடிகுண்டுகளை சப்பாத்திற்குள் வைத்து தயாரித்திருக்கலாமெனவும் தாங்கள் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பயணிகளால் கொண்டு வரப்படும் ஏனைய எலக்ரோனிக் சாதனங்களும் கடுமையான மீளாய்வு செய்யப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















