ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கலந்து இருக்கிறது kalanthu irukkirathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
- ரசித்தவை!
- வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்
- பினாங்கில் 12 வயது மாணவனுக்கு ஜெஇ (Japanese என்செப்ஹளிடிஸ் வைரஸ்!
- இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- ஹைக்கூ
- நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)
- குமரி மாவட்டத் தமிழ்...
- ஆயுதப் போராளிகள் பட்டியலில் மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளரின் பெயர்
- ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !
- பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
- அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
- மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி
- நம் அன்றாட கடமைகள்...
- அருள் மழை பொழிந்திடுவாய்!
- என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)
- ரமணியின் கவிதைகள்
- இந்தியாவின் அதிவேகமான ரெயில்: டெல்லியில் இன்று சோதனை ஓட்டம்
- தெய்வம் இருப்பது எங்கே?
- காதலிக்கு ஒரு கடிதம்
- ஒழுக்கத்தின் உயர்வு
- எல்லாம் நீ
- செசெ வின் மீண்டும் மீண்டும்
- ஏப்ரல் முதல் தேதியிலா?
- இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?
- மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்?
- மரியாதை - குட்டிக்கதை
- உலகச் செய்திகள்!
| கலந்து இருக்கிறது kalanthu irukkirathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை Posted: 03 Jul 2014 12:36 PM PDT " கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் ! " கலந்து இருக்கிறது அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில் உன் சுவாசம் !! " கலந்து இருக்கிறது அந்த குயிலில் இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!! ---------------------------------------------------------------------------------------------------- " kalanthu irukkiRathu antha nilavil un mugam ! " kalanthu irukkiRathu antha thenRalil intha megaththil intha kaaRtRil un suvaasam !! " kalanthu irukkirathu antha kuyilil ... |
| Posted: 03 Jul 2014 11:47 AM PDT ![]() |
| வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Posted: 03 Jul 2014 11:17 AM PDT கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் ... |
| பினாங்கில் 12 வயது மாணவனுக்கு ஜெஇ (Japanese என்செப்ஹளிடிஸ் வைரஸ்! Posted: 03 Jul 2014 11:08 AM PDT பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், "அச்சிறுவன் ... |
| இது எப்படி இருக்கு - நகைச்சுவை! Posted: 03 Jul 2014 11:05 AM PDT கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்... கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க... மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்... (ஐந்து நிடங்கள் கழித்து) கணவன் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 03 Jul 2014 11:04 AM PDT ![]() |
| மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Posted: 03 Jul 2014 10:54 AM PDT மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! இயக்கம் : திரு. N.இராகவன் ! தயாரிப்பு; திரு. N.லிங்குசாமி ! நடிப்பு : விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் ! ***** குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிக நல்ல படம். மஞ்சப்பை கொண்டு செல்வது வழக்கொழிந்து நெகிழிப்பையில் வாங்கி வரும் காலம் இது. அது போல அரிய பொக்கிசங்களான தாத்தாக்களை மதிக்காத காலம் இது. இந்தப்படம் பார்த்தால் தாத்தாக்களின் மீதான மதிப்பு கூடும் என்று அறுதியிட்டு கூறலாம். இந்தப்படத்தின் மையக்கரு, முதியோரை ... |
| Posted: 03 Jul 2014 10:46 AM PDT ஹைக்கூ கருத்தரிக்காமலே குழந்தை பெற்றது. குப்பைத்தொட்டி! என்ன வேண்டுதலோ? ஒற்றைக்காலில் தவம். மரம்! உரிக்க உரிக்க கண்கள் உகுக்கிறது கண்ணீர். வெங்காயம்! வானில் உயரப் பறக்கும் உயிரில்லாப் பறவை. விமானம்! - கவிஞர் பா.பார்த்தசாரதி, |
| நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Posted: 03 Jul 2014 10:44 AM PDT நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) அநீதி அழித்திடு. ஆணவம் தவிர். இல்லார்க்கு ஈ. ஈசனைப் பணி. உண்மை உரை. ஊரோடு சேர். எளிமை சிறப்பு. ஏக்கம் விலக்கு. ஐயம் அகற்று. ஒழுக்கம் கடைபிடி. ஓசையின்றி உதவிடு. ஔவை வழி நட. -பா.பார்த்தசாரதி, |
| Posted: 03 Jul 2014 06:14 AM PDT குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ் 2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் ... |
| ஆயுதப் போராளிகள் பட்டியலில் மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளரின் பெயர் Posted: 03 Jul 2014 06:10 AM PDT ஆயுதப் போராளிகள் பட்டியலில் மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளரின் பெயர் – அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர்,ஜூலை 3 – ஆயுதப் போராளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து மலேசியர்களில், ஒருவர் மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தற்போது தெற்கு பிலிப்பைன்சில் பதுங்கியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது. இது குறித்து தேசிய காவல் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், "டாக்டர் மாஹ்முட் ஹமாட் (வயது 36) (எ) அபு ஹன்சாலா என அடையாளம் காணப்பட்டிருக்கும், அந்த மலாயாப் ... |
| Posted: 03 Jul 2014 06:09 AM PDT ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ? நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை ... |
| பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Posted: 03 Jul 2014 06:08 AM PDT நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி ரிஸல்மானை மீண்டும் நியூசிலாந்திடமே ஒப்படைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூரே மெக்குலிக்கு, மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் தகவல் தெரிவித்தார். மேலும், மலேசியா மற்றும் நியூசிலாந்து இடையிலான நல்லுறவுக்கு சான்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ... |
| அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை... Posted: 03 Jul 2014 06:06 AM PDT அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை... 1. வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது. 2. கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது. 3. அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது. 4. பசுவுக்கு புல்லும், வைக்கோலும் கொடுப்பது. 5. சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல். 6. வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல். 7. திண்பண்டம் நல்கல். 8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது. 9. அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது. 10. அனாதைப்பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது. 11. ... |
| மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி Posted: 03 Jul 2014 06:05 AM PDT பிரதமர்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மா சியு கியோங் தேசிய இந்து அறவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பி.இராமசாமி கூறுகிறார். "இந்துக்களுக்கு இப்படியோர் இழிவா? அப்பொறுப்பைக் கவனித்துக்கொள்ள இந்தியர்களில் தகுதியானவர்கள் எவருமில்லையா?", என பினாங்கின் 2-வது துணை முதலமைச்சருமான அவர் வினவினார். "அப்பொறுப்பை ஏன் மஇகா தலைவர்களிடம் ஒப்படைக்கவில்லை? இச்செயலின்வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்நாட்டில் ... |
| Posted: 03 Jul 2014 05:49 AM PDT நம் அன்றாட கடமைகள்... அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடமைகள் சில இங்கே........... அதிகாலையில் துயிலெழுதல். விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி,குளித்து விட்டு ,நெற்றியில் திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் படித்து விட்டு பின்,பள்ளி,கல்லூரி பாடங்களை படிக்க வேண்டும். தாய்,தந்தையரை மதித்து நடக்க வேண்டும். நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை ... |
| Posted: 03 Jul 2014 05:34 AM PDT அருள் மழை பொழிந்திடுவாய்! (எனை இப்புவி தந்து கவி தந்த கலியுக தெய்வம் அய்யா வைகுண்டரை வேண்டுவதாக அமைத்த பாடல்...) நான் எடுத்த பிறவிதனை நன்றாக்கித் தந்தவரே... நாள்தோறும் நவின்றிடுவேன் நாவினிக்க நும் புகழை... அன்பு வழி தந்தவரே அகிலத்தை ஆள்பவரே அடிபணிந்து வணங்கி நின்றேன் அடியேனைக் காத்திடுவாய். நற்கல்வி தந்து எனை நல்வாழ்வு வாழ வைத்தாய். உலகுக்கு உனை உரைக்க உன் மகன் எனை பணித்தாய். பூமாலை சூட்டி நின்றேன் பாமாலை பாட வைத்தாய். பாமாலை இயற்ற வைத்து அப்பாவாலே ஏற்றி வைத்தாய். என்றும் உன் ... |
| என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Posted: 03 Jul 2014 05:31 AM PDT என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) வளைந்து நெளிந்து செல்கிறது அழகான ஒற்றையடிப் பாதை. என்னவளின் உச்சி வகிடு! காந்தங்களுக்கு இரு துருவங்கள் உண்டாம்; இரு புருவங்கள் கண்டேன். என்னவளின் கண்கள்! தரையைத் தொட்டு விடும் தூரத்தில் விழுதுகள். என்னவளின் எழில்மிகு கூந்தல்! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 03 Jul 2014 05:15 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| இந்தியாவின் அதிவேகமான ரெயில்: டெல்லியில் இன்று சோதனை ஓட்டம் Posted: 03 Jul 2014 04:52 AM PDT டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு மிகக்குறைவான நேரத்தில் செல்லும் இந்தியாவிலேயே அதிவேகமான ரெயிலை இந்திய ரெயில்வே இன்று சோதனை ஓட்டம் நடத்தியது. சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செலுத்தப்பட்டது. வழக்கமாக டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், விரைவில் அறிமுகமாகவுள்ள அதிவேக ரெயி்ல் மூலம் வெறும் 30 நிமிடங்களிலேயே ஆக்ராவுக்கு சென்று விடலாம். இந்த அதிவேக ரெயில் 5400 குதிரை சக்தி கொண்ட எலக்ட்ரிக் என்ஜினால் இணைக்கப்படுகிறது. ... |
| Posted: 03 Jul 2014 04:46 AM PDT கோடிப் பணத்தை வாரி யிறைத்தாலும் தேடியந்தத் தெய்வம் வராது - தினம் பாடிப்பாடிப் பால்பழம் தந்தாலும் - நீ கேட்ட வரத்தைத் தந்து விடாது வாடும் ஏழையின் வாட்டத்தைப் போக்கும் உள்ளத்தில் தெய்வம் வலம்வருமே - அவர் நாளும் ஆற்றும் சேவையில் கலந்து நன்றிக்கு வித்தாய்ச் பயன் தருமே! ஆசை சகதியில் ஆடிக் களிக்கும் அற்பர்க்கு உண்மை புரியாது - என்றும் காசைப் பெரிதாய் மதிக்கும் மூடர் கண்ணுக்கு அந்தத் தெய்வம் தெரியாது! |
| Posted: 03 Jul 2014 04:42 AM PDT அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில் இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ... |
| Posted: 03 Jul 2014 04:37 AM PDT ஒழுக்கம் என்பது உரமாகும் - நம் அறிவுக்கு அதுவே அரணாகும் விழுப்பம் தந்து வாழ்க்கைக்கே - நல்ல ஏற்றம் நல்கிடும் வரமாகும் ஒழுக்கம் இல்லா வாழ்வினிலே - என்றும் உயர்வுக்கு இடமே இருக்காது இலக்கு இல்லாப் பாதையாகும் - அது துடுப்பு இல்லாத் தோணியாகும் ஒழுக்கம் பேணா அறிவினால் - பல வழுக்கள் வாழ்வில் சேர்ந்திடுமே இழிந்த பிறப்பாய் மாறிடுமே - பிறர் பழிக்கும் படியாய் ஆகிடுமே ஒழுக்கம் என்னும் கவசத்தை - எந்தப் பொழுதும் கையிற் கொள்வாயே உலகம் உன்னை வாழ்த்திடுமே - ஓர் உத்தமன் என்றே வணங்கிடுமே! |
| Posted: 03 Jul 2014 04:34 AM PDT பூவின் சிரிப்பில் இறைவன் புழுவின் நெளிவில் இறைவன் அருவியின் தெரிப்பில் இறைவன் ஆகாய விரிப்பில் இறைவன் எல்லாம் எல்லாம் இறைவன் ஆசரம வாசிக்கு உன்னைக் கண்ட நாள் முதலாய் அடியவனுக்கோ உள்ளம் சொல்லும் எல்லாம் நீ நீ நீ என்று. |
| Posted: 03 Jul 2014 04:31 AM PDT மீண்டும் மீண்டும் தாளாது தயங்காது முன்னேறு தடை எல்லாம் துகளாகும் முன்னேறு வீர விளையாட்டு களமும் இதுதான் மதி நுட்ப விளையாட்டு களமும் இதுதான்[தாளாது... பொழுதெல்லாம் உனக்காக முன்னேறு புறம் காட்ட எண்ணாதே முன்னேறு சோதனைகள் சோதித்து பார்க்க வேண்டும் சாதனையை மெய்யாக்கி காட்ட வேண்டும்[பொழுதெல்லாம்... சோம்பல்களை தாள்ளி வைத்து முன்னேறு எதிலும் சுருசுருப்பாய் நாட்டத்தோடு முன்னேறு கானல் செயல் உன்னை விட்டு விலகி போகும் கனவு கொண்ட காச்சி எல்லாம் நடந்தே தீரும்[சோம்பல்களை... தலைகனத்தை ... |
| Posted: 03 Jul 2014 04:29 AM PDT உமக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும் மறந்து போவதற்கு. அலுவலகம் போகும் புருஷனுக்கு தயார் செய்து கையசைத்து பொய்யாக வேணும் புன்னகைத்து... பிள்ளைகள் எழுப்பி குளிக்கச் செய்து தலைவாரி உடை மாற்றி பள்ளி வண்டிக்குள் தள்ளி திரும்ப... சொந்த பந்தம் பாத்திரம் பட்ஷணம் அக்கம் பக்கம் மேலுக்கேனும் ஒரு நிமிட நலம் விசாரிப்பு... ரேஷன் கடை மளிகைப் பொருள் துவைத்து முடிக்க பூசை புணஷ்காரம் ஏதேனும் என்றால் செய்து வைக்க... பசியை மறந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் இடையில் கொஞ்சம் அருந்திக் ... |
| இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்? Posted: 03 Jul 2014 04:10 AM PDT மாபெரும் மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது சென்னையில். மொத்த இடத்தையும் தூர்த்து வாரும்போது இறந்தவர் எண்ணிக்கை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். பணத்தாசை பிடித்த அதிகாரிகள், பேராசை பிடித்த பில்டர்கள் சேர்க்கையால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. காற்று, மழை, இடி, மின்னல்... என்று இயற்கையைக் குறை சொல்லித் தப்பிக்கவே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் மூலமாக தங்களது சுயநலச் செய்கைகளை மறைக்கிறார்கள். ஆனால், பிணவாடையை மிஞ்சியதாக ஊழல் வாடையை வெளியில் கொண்டுவந்துவிட்டது ... |
| மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Posted: 03 Jul 2014 03:51 AM PDT ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா? சேவைத்துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும்? உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH). நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. "இந்திய மருத்துவப் பராமரிப்புத் ... |
| Posted: 03 Jul 2014 03:21 AM PDT ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து... ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து... ஐயா.. ... |
| Posted: 03 Jul 2014 03:12 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

