Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

Posted: 03 Jul 2014 01:27 PM PDT

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் புதன்கிழமை இரவு (ஜூலை 2) லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கான வாய்ப்பை மத்திய அரசு தடுத்து விட்டது: கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 03 Jul 2014 01:20 PM PDT

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய வாய்ப்பை மத்திய அரசு தடுத்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பி.இ: 27ஆயிரம் இடங்களை இயக்குநரகத்திடம் ஒப்படைத்த கல்லூரிகள்

Posted: 03 Jul 2014 01:18 PM PDT

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் முன்னரே 100-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேரமாட்டார்களோ என்ற அச்சத்தில் தங்களிடமுள்ள 27 ஆயிரம் நிர்வாக ஒதுக்கீடு பொறியியல் இடங்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்துள்ளன.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள நலன்களுக்கே முன்னுரிமை: உம்மன்சாண்டி பிடிவாதம்

Posted: 03 Jul 2014 01:14 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் நலன்களுக்கே முன்னுரிமை அளித்து, மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

ரூ.117 கோடியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள்

Posted: 03 Jul 2014 01:01 PM PDT

தமிழகத்தில் ரூ.117 கோடியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் அண்மையில் அவற்றை திறந்தார்.

புதிய ஆளுநர்கள் விரைவில் நியமனம்: ராஜ்நாத் சிங்

Posted: 03 Jul 2014 12:45 PM PDT

மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி: பாகிஸ்தான்

Posted: 03 Jul 2014 12:44 PM PDT

பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், "காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி' என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு துணை ராணுவத்தின் பாதுகாப்பில் நாடாளுமன்ற வளாகம்

Posted: 03 Jul 2014 12:43 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற துணை ராணுவப்படையினர் நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை: சிவராஜ் சிங் சௌஹான்

Posted: 03 Jul 2014 12:42 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

தில்லியில் தேர்தலை நடத்த உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் "ஆம்ஆத்மி' கோரிக்கை

Posted: 03 Jul 2014 12:41 PM PDT

தில்லி சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் "ஆம் ஆத்மி' கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்தார்.

நாடு முழுவதும் 660 "நிர்பயா' மையங்கள் திறக்க முடிவு

Posted: 03 Jul 2014 12:37 PM PDT

தில்லியில் ஓடும் பஸ்ஸில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்ணின் நினைவாக நாடுமுழுவதும் 660 "நிர்பயா' மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு 1% நுகர்வோருக்கே பாதிப்பு: மத்திய அரசு

Posted: 03 Jul 2014 12:34 PM PDT

மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.16.50 உயர்த்தப்பட்டு 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு 1 சதவீத நுகர்வோரையே பாதித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

Posted: 03 Jul 2014 12:33 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 4) ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் 24 மணி நேரத்திற்குள் 2ஆவது முறையாக தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 03 Jul 2014 12:33 PM PDT

மணிப்பூர் மாநிலம் பிஷன்பூர் மாவட்டத்தில் ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

இந்திய கலாசாரத்தில் கேளிக்கை விடுதிகளுக்கும், மதுவுக்கும் முக்கிய பங்கு உண்டு: பாஜக எம்எல்ஏ

Posted: 03 Jul 2014 12:32 PM PDT

""மதம் மற்றும் கலாசாரம் என்ற பெயரில் கோவாவில் கேளிக்கை விடுதிகளுக்கும், மதுபானங்களுக்கும் தடை விதிக்கக் கூடாது. இந்திய கலாசாரத்தில் அவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு'' என்று அந்த மாநில பாஜக எம்எல்ஏ விஷ்ணு வாஹ் தெரிவித்துள்ளார்.

மோடியுடன் அமெரிக்க எம்.பி. சந்திப்பு

Posted: 03 Jul 2014 12:30 PM PDT

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பி. ஜான் மெக்கெயின், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

இந்தியாவுடனான நல்லுறவு பாதிப்படையாது: அமெரிக்கா

Posted: 03 Jul 2014 12:29 PM PDT

பாஜகவை என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்ததாக வெளிவந்துள்ள செய்தியால் இந்தியாவுடனான நல்லுறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போலீஸார் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

Posted: 03 Jul 2014 12:28 PM PDT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கேளிக்கை விடுதி ஒன்றில் பின்னிரவு வரை தொடர்ந்த விருந்தை தடுத்ததற்காக போலீஸார் இருவரை தாக்கியதாக ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி.-யில் எரிவாயுக் கசிவு

Posted: 03 Jul 2014 12:23 PM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காசனபள்ளியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் புதன்கிழமை சிறிய அளவிலான எரிவாயுக் கசிவு ஏற்பட்டது.

கொத்தடிமைகள் 16 பேர் மீட்பு

Posted: 03 Jul 2014 12:22 PM PDT

வந்தவாசி அருகே கொத்தடிமைகளாக இருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர். மேலும், அவர்களுடன் இருந்த 10 குழந்தைகளும் மீட்கப்பட்டன.

செயல்விளக்க வயல் விழா

Posted: 03 Jul 2014 12:22 PM PDT

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு விவசாயிகளிடையே கரும்பு பயிர் பின் செய் நேர்த்தி குறித்து செயல் விளக்க வயல் விழா ஆரணியை அடுத்

ரத்த தான முகாம்

Posted: 03 Jul 2014 12:21 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த கண்ணக்குறுக்கை அருண வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு 25 தராசுகள், 78 எடைக் கற்கள் பறிமுதல்

Posted: 03 Jul 2014 12:21 PM PDT

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு முறைகேடுகள் காணப்பட்ட 25 தராசுகள், 78 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

Posted: 03 Jul 2014 12:21 PM PDT

திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ஜூலை 5 மின் தடை

Posted: 03 Jul 2014 12:20 PM PDT

செங்கம் 110 கே.வி. துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி

ஸ்ரீ தேரடி விநாயகர் கோயிலில்நாளை கும்பாபிஷேக ஆண்டு விழா

Posted: 03 Jul 2014 12:20 PM PDT

செங்கம் ஸ்ரீ தேரடி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவின் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா சனிக்கிழமை (ஜூலை 5) சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அஞ்சலகத்தில் இன்று ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 03 Jul 2014 12:20 PM PDT

திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

பெண்ணைத் தாக்கிய வழக்கு: விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

Posted: 03 Jul 2014 12:19 PM PDT

பெண்ணைத் தாக்கிய வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தகராறு: இளைஞர் கைது

Posted: 03 Jul 2014 12:18 PM PDT

வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்(28), ராமச்சந்திரன் (35). வந்தவாசி-திண்டிவனம் சாலை, நடுக்குப்பம் கூட்டுச் சாலை அருகே ராமச்சந்திரன் பைக்குடன் கடந்த சனிக்கிழமை நின்று கொண்டிருந்தாராம்.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினிகள்

Posted: 03 Jul 2014 12:18 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட நம்பேடு, பத்தியாவரம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும், விலையில்லா மடிக்கணினிகளையும் எம்எல்ஏ

திருவண்ணாமலையில் மண்டல விளையாட்டு அலுவலகம் தொடக்கம்

Posted: 03 Jul 2014 12:18 PM PDT

திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விளையாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்: விவசாயி கைது

Posted: 03 Jul 2014 12:18 PM PDT

திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு (வி.ஏ.ஓ.) கொலை மிரட்டல் விடுத்ததாக, விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

தங்கக் காசுகள் தருவதாகக் கூறி பணம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

Posted: 03 Jul 2014 12:18 PM PDT

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நகை வியாபாரி ஸ்ரீநாத் (31). இவர் அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து செல்வாராம். அப்போது கோயில் ஊழியர் வெங்கடேசன் என்பவருக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 03 Jul 2014 12:17 PM PDT

ஆரணி லூம் சிட்டி அரிமா மற்றும் அரிவையர் சங்கங்கள்  சார்பில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட வீரர்-வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்'

Posted: 03 Jul 2014 12:17 PM PDT

தமிழக அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட வீரர்-வீராங்கனைகள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று தமிழக

அரசு மருத்துவக் கல்லூரியில் 84 மாணவ, மாணவியர் சேர்ப்பு

Posted: 03 Jul 2014 12:17 PM PDT

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து 2-வது ஆண்டாக, முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் 84 மாணவ-

மோதல்: 2 பேர் கைது

Posted: 03 Jul 2014 12:16 PM PDT

வழி தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலவச பல் சிகிச்சை முகாம்

Posted: 03 Jul 2014 12:16 PM PDT

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச பல் பரிசோதனை முகாமில், 1,500 மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 700 மாணவர்களுக்கு பல் சொத்தை சரிசெய்தல், சுத்தம் செய்தல், மருந்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள்

பெண்ணுக்கு மிரட்டல்: சிவசேனை எம்எல்ஏ மீது வழக்கு

Posted: 03 Jul 2014 12:16 PM PDT

"பலர் முன்னிலையில் உனது ஆடைகளைக் களைந்து, உன்னைத் தாக்குவேன்' என பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக சிவசேனை கட்சி எம்எல்ஏ பிரகாஷ் பாலா சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய- சீன ராணுவ தளபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை

Posted: 03 Jul 2014 12:16 PM PDT

எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்தல், புதிய எல்லை பாதுகாப்புத் திட்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

Posted: 03 Jul 2014 12:11 PM PDT

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

பாகிஸ்தானிலிருந்து 75,000 பேர் ஆப்கனில் தஞ்சம்

Posted: 03 Jul 2014 12:11 PM PDT

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பயங்ரகவாதிகளுக்கு எதிராக ராணுவம் நிகழ்த்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் 75,000 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

வள்ளம் மோதி  மீனவர் சாவு

Posted: 03 Jul 2014 12:11 PM PDT

கொல்லங்கோடு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது வள்ளம் மோதி மீனவர் உயிரிழந்தார்.

திற்பரப்பு அருவியில் பெண் தற்கொலை முயற்சி

Posted: 03 Jul 2014 12:10 PM PDT

திற்பரப்பு அருவிப் பகுதியில் வியாழக்கிழமை  இளம் பெண் குதித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மியான்மரில் வகுப்புக் கலவரம்: 2 பேர் பலி

Posted: 03 Jul 2014 12:10 PM PDT

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலேவில் புத்த - முஸ்லிம் மதப் பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சூறைக்காற்று: அகதிகள் முகாமில் வீடு இடிந்தது

Posted: 03 Jul 2014 12:10 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் சூறைக்காற்று காரணமாக வியாழக்கிழமை வீடு இடிந்து விழுந்தது. இதில் இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

சுங்கான்கடை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்?

Posted: 03 Jul 2014 12:10 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை குளத்தில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டுனீசியா: கண்ணிவெடியில் சிக்கி 4 ராணுவத்தினர் சாவு

Posted: 03 Jul 2014 12:10 PM PDT

டுனீசியாவின் வடமேற்கில், அல்ஜீரிய நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியில் கண்ணி வெடியில் சிக்கி அந்நாட்டு ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

டிராக்டர், பைக் மோதல்: ஊழியர் சாவு

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

சுசீந்திரம் அருகே தேரூரில் டிராக்டர் மீது பைக் மோதியதில் வலை கம்பெனி ஊழியர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இறந்தார்.

சிரியா ரசாயன ஆயுதங்கள் அமெரிக்கக் கப்பலுக்கு மாற்றம்

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

சிரியாவிலிருந்து கடைசி கட்டமாக ரசாயன ஆயுதங்களை ஏற்றி வந்த டென்மார்க் கப்பலிலிருந்து அமெரிக்க கப்பலுக்கு அந்த ஆயுதங்களை மாற்றும் பணி நிறைவடைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மார்த்தாண்டத்தில் தடம் மாறி இயக்கப்பட்ட 6 சிற்றுந்துகள் பறிமுதல்

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

மார்த்தாண்டத்தில் தடம் மாறி இயக்கப்பட்ட 6 சிற்றுந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை  பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவிலில்எலைட் வகுப்புக்கு தனிக் கட்டடம்

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு பள்ளி வளாகத்தில் எலைட் வகுப்புக்கென தனிக் கட்டடம் கட்டப்படுகிறது.

பனை மரங்கள் வெட்டி கடத்தல்

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

கருங்கல் அருகே உள்ள பருத்திவிளை பகுதியில்  பனை மரங்களை வெட்டி கடத்திய  மர்மநபர்க

சவூதியில் மெர்ஸ் வைரஸ் தாக்குதல்: ஹஜ் பயணத்தை தவிர்க்குமாறு பிலிப்பின்ஸ் அரசு அறிவுறுத்தல்

Posted: 03 Jul 2014 12:09 PM PDT

சவூதி அரேபியாவில் மெர்ஸ் வைரஸ் (மிடில் ஈஸ்ட் ரெஸிப்ரேட்டரி சிண்ட்ரோம் வைரஸ்) வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தை தவிர்க்குமாறு பிலிப்பின்ஸ் அரசு தன்னாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

"மொழிபெயர்ப்பின்போது மூல மொழியின் புனிதத்துவம் போற்றப்பட வேண்டும்'

Posted: 03 Jul 2014 12:08 PM PDT

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தேசியக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

குமரியில் செம்மண் எடுக்க கட்டுப்பாடு முடங்கிய செங்கல் சூளைகள்: வேலை இழக்கும் தொழிலாளர்கள்-தி.ராமகிருஷ்ணன்-

Posted: 03 Jul 2014 12:08 PM PDT

குமரி மாவட்டத்தில் செம்மண் எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அகதிகளை இலங்கை திருப்பி அனுப்பக்கூடாது

Posted: 03 Jul 2014 12:08 PM PDT

""இலங்கையிலுள்ள பாகிஸ்தானின் அகமதியா முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு தீர்மானிக்கும் வரை, அவர்களை இலங்கை நாடு கடத்தக்கூடாது'' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா

Posted: 03 Jul 2014 12:08 PM PDT

சுங்கான்கடை அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவையொட்டி படி பூஜை நடைபெற்றது.

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 85 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 03 Jul 2014 12:08 PM PDT

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 85 மாணவ, மாணவியரின்  சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இந்த

குமரி கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு

Posted: 03 Jul 2014 12:07 PM PDT

கன்னியாகுமரி சுற்று வட்டார கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவேகானந்த கேந்திரத்தில் இன்று அன்ன பூஜை

Posted: 03 Jul 2014 12:07 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 112 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்ன பூஜை நடைபெற உள்ளது.

எல்லைச் சாவடியை மீட்டது உக்ரைன் ராணுவம்

Posted: 03 Jul 2014 12:07 PM PDT

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ரஷிய எல்லையையொட்டி அமைந்துள்ள டொல்ஸான்ஸ்கி எல்லைச் சாவடியை ராணுவம் மீட்டது.

தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்} ஆசிரியர்கழக ஆலோசனைக் கூட்டம்

Posted: 03 Jul 2014 12:07 PM PDT

மாதம் ஒரு முறை பெற்றோர்} ஆசிரியர் கழகத்தை தலைமை ஆசிரியர்கள் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுயஉதவிக் குழுக்களுக்கு தனி குறைதீர் கூட்டம்: 9 இல் தொடக்கம்

Posted: 03 Jul 2014 12:07 PM PDT

குமரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்காக தனியாக குறை தீர்க்கும் கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு குறைந்து வருகிறது

Posted: 03 Jul 2014 12:06 PM PDT

கூடங்குளம் அணு உலைக்கு மக்களிடையே எதிர்ப்பு குறைந்து வருகிறது என கூடங்குளம் அணுமின் நிலைய கூடுதல் தலைமைப் பொறியாளரும்,  பொதுமக்கள் விழிப்புணர்வுக் குழு தலைவருமான காளிராஜன் கூறினார்.

குடிநீர் கோரி அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Posted: 03 Jul 2014 12:06 PM PDT

இலுப்பையூரணி பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெபம்

Posted: 03 Jul 2014 12:05 PM PDT

குரும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் திறப்பின் வாசல் ஜெபக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

Posted: 03 Jul 2014 12:05 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு:கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jul 2014 12:05 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கதிரேசன் கோயில் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்

ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா தீர்த்தவாரி

Posted: 03 Jul 2014 12:05 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் 25ஆவது ஆனி உத்திரத் திருவிழாவில் வியாழக்கிழமை தீர்த்தவாரி சிறப்பு அபிஷேகம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக் கூட்டம்

Posted: 03 Jul 2014 12:04 PM PDT

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். மாநில

பேரூராட்சிப் பகுதிகளை வருவாய் கிராமத்தில் இணைக்க கோரிக்கை

Posted: 03 Jul 2014 12:04 PM PDT

ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை, ஆறுமுகனேரி வருவாய் கிராமத்தில் இணைக்க வேண்டுமென பாஜக கோரிக்கை

நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 03 Jul 2014 12:04 PM PDT

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

விளாத்திகுளம், கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 03 Jul 2014 12:04 PM PDT

பட்டா உத்தரவுகளை பொதுமக்களுக்கு உடனடியாக வழங்குவதற்காக சார்பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்

லிட்டில் இந்தியா கலவரம்: மேலும் ஒரு இந்தியருக்கு சிறை

Posted: 03 Jul 2014 12:04 PM PDT

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மேலும் ஒரு இந்தியருக்கு 9 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோஷ்டி மோதல்: 7 பேர் மீது வழக்கு

Posted: 03 Jul 2014 12:03 PM PDT

சாத்தான்குளம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (58). இவர், சாத்தான்குளம் அ

விளாத்திகுளம் அருகே கார் மோதி பெண் சாவு

Posted: 03 Jul 2014 12:03 PM PDT

விளாத்திகுளம் அருகே எப்போதும்வென்றானில் கார் மோதிய விபத்தில் தனியார் நூற்பாலை பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனவளர்ச்சி குன்றியோருக்கு மதிய உணவு

Posted: 03 Jul 2014 12:03 PM PDT

தூத்துக்குடியில் உள்ள ஜிஆர்டி ரெஜென்சி ஹோட்டலின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி பள்ளியில்  263 மாணவிகளுக்கு மடிக்கணினி

Posted: 03 Jul 2014 12:03 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 263 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்.

மரக்கன்றுகள் வழங்கும் விழா

Posted: 03 Jul 2014 12:02 PM PDT

கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கம், இந்திய பசுமை இயக்கம் சார்பில், மரக்கன்று நடும் விழா மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் எம்.பி. நன்றி தெரிவிப்பு

Posted: 03 Jul 2014 12:02 PM PDT

தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, காயல்பட்டினத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் பெறலாம்'

Posted: 03 Jul 2014 12:02 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவனங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்

Posted: 03 Jul 2014 12:01 PM PDT

இராக்கில் புதிய அரசை விரைவில் ஏற்படுத்த வேண்டும்

Posted: 03 Jul 2014 12:00 PM PDT

இராக்கில் புதிய அரசை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் சவூதி மற்றும் இராக் தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

83 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றடைந்த கடிதம்: அமெரிக்காவில் வினோதம்

Posted: 03 Jul 2014 11:58 AM PDT

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது தாயாருக்கு கடந்த 1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம், 83 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சென்றடைந்தது.

பாகிஸ்தானுக்கு தினந்தோறும் 2,000 டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி

Posted: 03 Jul 2014 11:57 AM PDT

பாகிஸ்தானில் உருளைக்கிழங்கிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு தினந்தோறும் 1,500 முதல் 2,000 டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேனி நான்கு முனை சந்திப்புச் சாலையில் வேகத் தடை அமைக்க கோரிக்கை

Posted: 03 Jul 2014 11:56 AM PDT

தேனி, என்.ஆர்.டி.நகர் நான்கு முனை சந்திப்பு சாலையில் போக்குவரத்து குளறுபடி மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு வேகத் தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வேன் மோதி சிறுவன் சாவு

Posted: 03 Jul 2014 11:56 AM PDT

கடமலைகுண்டு அருகே பள்ளியில் விளையாடிய சிறுவன் மீது வேன் மோதியதில் தலைநசுங்கி உயிரிழந்தார்.

மாட்டுத்தோலை புலித்தோல் என ஏமாற்றியவர் கைது

Posted: 03 Jul 2014 11:55 AM PDT

மாட்டுத்தோலை புலித்தோல் போல் வரைந்து, ஏமாற்றி விற்க முயன்றவரை மேகமலை சரணாலய அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஊருக்குள் வந்த கடமான் மீட்பு

Posted: 03 Jul 2014 11:55 AM PDT

ஆண்டிபட்டி அருகே செந்நாய் விரட்டியதில் ஊருக்குள் வந்த கடமானை, பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். டாணா தோட்டம் பகுதியில் வியாழக்கிழமை காலை சுமார்

தலைமறைவான பரோல் கைதி சிறையில் அடைப்பு

Posted: 03 Jul 2014 11:54 AM PDT

திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி அடுத்துள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்தவர் க.சிவக்குமார்(எ) குமார். 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடர்புடைய இவர், சிறை தண்டனை

போடியில் திருமணமான பெண் மாயம்

Posted: 03 Jul 2014 11:54 AM PDT

போடி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி சந்திரலேகா (31). இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன், யாழினி என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தந்தை வீட்டுக்குச்

தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jul 2014 11:54 AM PDT

வத்தலகுண்டில் தொலைதொடர்பு சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத் தலைவர்கள் பெரியசாமி, ராமலிங்கம், தலைமை வகித்தனர்.

கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது

Posted: 03 Jul 2014 11:53 AM PDT

திண்டுக்கல் பகுதியில் பட்டப்பகலில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடர்புடையவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரசு விருதுபெற்ற மருத்துவருக்குப் பாராட்டு

Posted: 03 Jul 2014 11:53 AM PDT

தமிழக அரசு விருதுபெற்ற காரைக்குடி மருத்துவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரனுக்கு பல்வேறு மருத்துவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பாராட்டுத் தெரி வித்தனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், தனியார் மருத்துவர் பிரிவில் சிறந்

மானாமதுரை - சிவகங்கை அரசு நகர் பேருந்துகளை மருத்துவக்கல்லூரி வழியாக சென்றுவர கம்யூ. கோரிக்கை

Posted: 03 Jul 2014 11:53 AM PDT

மானாமதுரையிலிருந்து சிவகங்கை சென்று திரும்பும் அரசு நகர் பேருந்துகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என

அரசுப் பேருந்து மோதி வியாபாரி சாவு

Posted: 03 Jul 2014 11:51 AM PDT

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வியாழக்கிழமை சாலையோரம் மிக்ஸர் வண்டியை தள்ளிச் சென்றவர் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில்

வயலக கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

Posted: 03 Jul 2014 11:51 AM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தானம் அறக்கட்டளை வட்டார வயலக கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வயலக கூட்டமைப்பு தலைவர்

ராமநாதபுரம் அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 03 Jul 2014 11:51 AM PDT

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் தமிழ், வணிகவியல் துறையில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணிக்கு இம்மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அக்கல்லூரியின் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 03 Jul 2014 11:50 AM PDT

திருவாடானை தாலுகா தொண்டி அருகே முசிலான் தோப்பில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யபட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™