Tamil News | Online Tamil News |
- அடுக்குமாடி கட்டட சட்ட, விதிமுறைகளில் விரைவில் மாற்றம்: கட்டடங்கள் இடிந்தால் இனி அதிகாரிகள் தான் பொறுப்பு
- இந்திய நர்ஸ்கள் 46 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்
- மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்
- மாதந்தோறும் சந்தித்து அறிக்கை அளிக்க உத்தரவு: உள்கட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம்
- பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் தமிழக அதிகாரிகளுக்கு மறுப்பு
- இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் மதுபானம்: சொல்கிறார் கோவா பா.ஜ., - எம்.எல்.ஏ.,
- 'உயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவையா?'
- 'சடுகுடு' ஆட்டத்தில் மதுரை காமராஜ் பல்கலை: கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி
- கை, கால் இழந்தாலும் பரவாயில்லை; காகம் மீண்டது போல் உயிரோடு வந்தால் போதும்'
| Posted: புதுடில்லி: ''அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும். அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தால், அதற்கு அதிகாரிகளே, இனி பொறுப்பேற்க வேண்டியது நேரிடும்,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு, டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: டில்லி மற்றும் சென்னையில், சமீபத்தில், அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதற்கு நகர்ப்புற திட்டமிடல் துறையே காரணம் ... |
| இந்திய நர்ஸ்கள் 46 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல் Posted: ஈராக்: ஈராக்கின், திக்ரித் நகர மருத்துவ மனையில் பதுங்கியிருந்த இந்திய நர்ஸ்கள், 46 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், நேற்று கடத்திச் சென்றனர். கடந்த மாதம், 10ல் இருந்து, உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்கள் நிலைமை, இப்போது மிகவும் மோசமாகியுள்ளது. கொடூரமான பயங்கரவாதிகள், அந்த பெண்களை என்ன செய்ய உள்ளனர் என்பதும் தெரியாததால், பெரும் பீதி நிலவுகிறது.கடந்த மாதம் 7ல், ஈராக் அரசுக்கு எதிராக கடும் சண்டையை துவக்கிய, அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 10ல், திக்ரிக் நகரை கைப்பற்றினர். அந்நகர மருத்துவமனைகளில் பணியாற்றிய, தமிழகம் மற்றும் ... |
| மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம் Posted: புதுடில்லி: நாட்டின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம், நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், டில்லியிலிருந்து, 99 நிமிடத்தில், ஆக்ரா நகர் சென்றடைந்தது. இது, ரயில்வே துறையில், மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.இதுவரை, டில்லி - போபால் இடையே இயக்கப்படும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தான், அதிவேக ரயிலாக கருதப்பட்டது. இந்த ரயில், மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு அதிவேக ரயிலின் சோதனை ஓட்டத்தை, இந்திய ரயில்வே துறை, நேற்று வெற்றிகரமாக நடத்தியது. 10 பெட்டிகளுடன், நேற்று காலை, 11:15 மணிக்கு, ... |
| மாதந்தோறும் சந்தித்து அறிக்கை அளிக்க உத்தரவு: உள்கட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் Posted: புதுடில்லி: நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி, நான்கு துறைகளின் அமைச்சர்கள், மாதம் ஒருமுறை தன்னை வந்து சந்தித்து, மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உள்கட்டமைப்பில், முக்கிய பங்கு வகிக்கும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை, பா.ஜ., முன்னாள் தலைவரான நிதின் கட்காரியிடம் உள்ளது. அந்த துறைக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய, அரசு தயாராக இருப்பதாக ... |
| பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் தமிழக அதிகாரிகளுக்கு மறுப்பு Posted: கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள நீர்பிடிப்பு பகுதியான முல்லைக்கொடிக்கு, மழையளவு எடுப்பதற்காக படகில் சென்ற தமிழக பொதுப்பணித்துறையினருக்கு அனுமதி மறுத்து, கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைக்கொடிக்கு செல்ல கேரள வனத்துறை திடீர் தடைவிதித்திருப்பதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ., தொலைவில் பெரியாறு அணை உள்ளது. அணையில் இருந்து 16 கி.மீ., தொலைவில் முல்லைக்கொடி என்ற இடம் உள்ளது. இந்த ... |
| இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் மதுபானம்: சொல்கிறார் கோவா பா.ஜ., - எம்.எல்.ஏ., Posted: பனாஜி: கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.அதிரடி அறிவிப்பு: கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல்வதும், மதுபானக் கூடங்களுக்கு செல்வதும், இந்திய கலாசாரத்திற்கு எதிரானது' ... |
| 'உயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவையா?' Posted: சென்னை: ''சென்னையில், 11 மாடி கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து வைத்துள்ள, ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவைதானா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு, பக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில், சிறு இடம் கூட பாக்கியில்லாமல், வரிசையாக, அ.தி.மு.க., அமைச்சர்கள் மிகப் பெரிய ப்ளக்ஸ் போர்டுகளில், முதல்வரை வானளாவப் புகழ்ந்து வைத்துள்ளனர். சாலையில் செல்வோர், அதில் மோதியவாறு சென்று ... |
| 'சடுகுடு' ஆட்டத்தில் மதுரை காமராஜ் பல்கலை: கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி Posted: மதுரை: ஏழை மாணவர்களின் அடித்தள கல்விக்கு அச்சாரமிட்டு மறைந்தவரின் கனவை தாங்கி நிற்கும், மதுரை காமராஜ் பல்கலையில், துணைவேந்தருக்கும், ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் நடக்கும் 'சடுகுடு' ஆட்டத்தால், மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது கவலையளிக்கிறது.தமிழக உயர் கல்வித்துறை வரலாற்றில் துணைவேந்தர் ஒருவரின் பதவி தொடர்பான சர்ச்சை, கோர்ட் வரை சென்று, 'நியமனம் செல்லாது' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிப்படி, ஒருவர் துணைவேந்தராக தேர்வு பெற, அவர் பத்து ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க ... |
| கை, கால் இழந்தாலும் பரவாயில்லை; காகம் மீண்டது போல் உயிரோடு வந்தால் போதும்' Posted: சென்னை: காகம் உயிர் தப்பியது போல், கை, கால் இழந்தாலும் பரவாயில்லை; என் கணவர் உயிரோடு வந்தால் போதும்,'' என, சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த பெண் சாந்தி கதறி அழுதார்.சென்னை, மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி, நேற்று ஆறாவது நாளாகவும் நீடித்தது. இறந்தோரின் எண்ணிக்கை, 58 வரை சென்றுள்ளது. இவற்றில், பாதிக்கும் மேலான உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கணவரைக் காணோம்; அண்ணனைக் காணோம் என, பலரும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்து, பிணக் குவியல்களை பார்த்து வருகின்றனர்.இதுபோன்று, தன் கணவரைத் தேடி வந்த, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 04,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |