மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜார்க்கண்ட் காட்டுப்பகுதியில் முக்கிய நக்சல் கமாண்டர் சுட்டுக்கொலை
- அசாமில் போலீஸ் நிலையம் எதிரில் சைக்கிள் குண்டு வெடித்து ஒருவர் பலி
- பீகாரில் தண்டவாளம் வெடி வைத்து தகர்ப்பு: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தப்பியது
- விவசாய கடன் தள்ளுபடிக்கு நிபந்தனை: ரோஜா கண்டனம்
- திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிலைகள்: பக்தர்கள் வேதனை
- காஷ்மீரில் பனி பொழிவில் சிக்கி பலியான ராணுவ வீரர் உடல் 7 மாதத்திற்கு பிறகு மீட்பு
- நரேந்திர மோடியுடன் கொரிய அதிபர் தொலைபேசியில் பேச்சு
- தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமனம்
- இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்
- மாணவிகள் குளிப்பதை படமெடுத்து பாலியல் தொல்லை தந்த பள்ளி முதல்வர்
- சர்ச்ச்சையில் சிக்கிய நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க கடிதம் எழுதிய மன்மோகன்
- இறுதிக்கட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான புதிய கொள்கை: மத்திய அரசு
- கொட்டை இல்லாத மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார்: ப்ரீத்தி ஜிந்தா பகீர் தகவல்
- ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதிய ஆதாரமுள்ளது-அட்டர்னி ஜெனரல்
- சிறுமி கற்பழிப்பு மட்டும் தான் செய்தியா?: கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற கேள்வி
- மேற்கு வங்காளத்தை அச்சுறுத்தும் மூளையழற்சி நோய்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
- கோவா சட்டசபைக்கு வேட்டி அணிந்து வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.
- கட்ஜு குற்றச்சாட்டு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை: மன்மோகன் சிங்
- சுப்ரதா ராயை பரோலில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
| ஜார்க்கண்ட் காட்டுப்பகுதியில் முக்கிய நக்சல் கமாண்டர் சுட்டுக்கொலை Posted: 22 Jul 2014 11:21 PM PDT ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இவர்களை களையெடுக்கும் முயற்சியில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கிய நக்சல் தளபதியாக செயல்பட்டு வரும் ஒருவன் குண்ட்டி மாவட்டத்தின் லிம்பா- சோசோகுட்டி |
| அசாமில் போலீஸ் நிலையம் எதிரில் சைக்கிள் குண்டு வெடித்து ஒருவர் பலி Posted: 22 Jul 2014 10:32 PM PDT அசாம் மாநிலம் கோல் பாரா மாவட்டத்தில் கிரிஷானி என்ற இடத்தில் போலீஸ் நிலையம் முன்பு இன்று காலை 8.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு அங்கு நின்றிருந்த ஒரு சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஒருவர் பலியானார். அவர் பெயர் முஜிபுர் ரகுமான். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் |
| பீகாரில் தண்டவாளம் வெடி வைத்து தகர்ப்பு: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தப்பியது Posted: 22 Jul 2014 10:30 PM PDT பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் கயா அருகே உள்ள இஸ்மாயில்பூர்- ரபிகஞ்ச் நிலையங்களுக்கிடையே நேற்று பின்னிரவு புவனேஸ்வர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததால் ரெயில்களின் பாதுகாப்பு உறுதிபடுத்த அந்த ரெயிலுக்கு முன்னே அதே தண்டவாளத்தின் மீது சிறிது தூரத்தில் ஒரு பைலட் ரெயில் |
| விவசாய கடன் தள்ளுபடிக்கு நிபந்தனை: ரோஜா கண்டனம் Posted: 22 Jul 2014 10:07 PM PDT ஆந்திர மாநிலத்தில் தற்போது மீண்டும் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதியின் போது எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு, கடன் தள்ளுபடிக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தார். |
| திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிலைகள்: பக்தர்கள் வேதனை Posted: 22 Jul 2014 09:44 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. இவ்வளவு வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் முகப்பு வாயில் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள் சிதிலமடைந்து |
| காஷ்மீரில் பனி பொழிவில் சிக்கி பலியான ராணுவ வீரர் உடல் 7 மாதத்திற்கு பிறகு மீட்பு Posted: 22 Jul 2014 09:34 PM PDT கேரள மாநிலம் வெஞ்ஞாறமூடு பகுதியை சேர்ந்தவர் சுனேஷ் (வயது 50). ராணுவ வீரரான இவர் காஷ்மீர் பகுதியில் உள்ள குப்புவாடா பகுதியில் 89–ம் பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 26–ந் தேதி சுனேஷ் மற்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தை |
| நரேந்திர மோடியுடன் கொரிய அதிபர் தொலைபேசியில் பேச்சு Posted: 22 Jul 2014 09:10 PM PDT கொரிய நாட்டின் அதிபர் பார்க் ஜியுன்-ஹையே, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பொதுத்தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியா-கொரியா இடையேயான நட்புறவை அனைத்து துறைகளிலும் விரிவுபடுத்தவும் விருப்பம் தெரிவித்தார். |
| தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமனம் Posted: 22 Jul 2014 08:07 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27 வயதான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம் Posted: 22 Jul 2014 04:44 PM PDT இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி 17 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளார். இதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100-வது நாளின்போது அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார். இந்த திட்டம் கடந்த 10-ந் தேதி இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் |
| மாணவிகள் குளிப்பதை படமெடுத்து பாலியல் தொல்லை தந்த பள்ளி முதல்வர் Posted: 22 Jul 2014 03:16 PM PDT பெங்களூர் அருகே உள்ள அனேக்கல் தாலுகாவை சேர்ந்த பள்ளியின் முதல்வர் ஒருவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்தது. போதை தலைக்கேறிய பின் மாணவிகளிடம் அவர்களது தலையணையை எடுத்து வரச்சொல்லி கனவுகளில் மிதப்பது அவரது வாடிக்கை. 52 வயதான மல்லிகார்ஜுன் கார்கே என்ற காமக்கொடூரனின் லீலைகள், குழந்தைகள் நல ஆணைய குழுவினர் பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்தது. ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமின் கதவுகளின் தாழ்ப்பாள்களை கழற்றியதுடன் மாணவிகள் குளிப்பதையும் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளான் இந்த காமுகன். பள்ளி வளாகத்தில் இந்த முதிய |
| சர்ச்ச்சையில் சிக்கிய நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க கடிதம் எழுதிய மன்மோகன் Posted: 22 Jul 2014 02:55 PM PDT நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குறிப்பிட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தபோதும், அப்போதைய மாநில அரசின் தலையீட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு பின்னர் அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக கட்ஜு புகார் கூறியிருந்தார். |
| இறுதிக்கட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான புதிய கொள்கை: மத்திய அரசு Posted: 22 Jul 2014 11:20 AM PDT மூத்த குடிமக்களின் நலன் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அரசு அவர்களின் நலன் தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கைகளை வகுத்து வருவதாக கூறியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் சமூக நீதித் துறைக்கான மத்திய இணை அமைச்சர் சுதர்ஷன் பகத் பதிலளிக்கையில், மூத்த குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் சமூக நீதித் துறையுடன் இணைந்து மற்ற அமைச்சகங்களும் செயல்படுகின்றன என்றும், அவர்களின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் தற்போதைய மக்கள் தொகையின் அமைப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக |
| கொட்டை இல்லாத மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted: 22 Jul 2014 11:12 AM PDT நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும் அல்போன்சா ஆகியவற்றை கலப்பினம் செய்து கொட்டையில்லா மாம்பழத்தை தாங்கள் விளைவித்துள்ளதாக கூறினார். இதற்கு சிந்து என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இதனை விளைவிக்கும் சோதனை முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். தங்களது முயற்சி வெற்றி பெறுவதுடன், கொட்டையில்லா மாம்பழங்களின் தரத்தையும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக மிகுந்த |
| எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார்: ப்ரீத்தி ஜிந்தா பகீர் தகவல் Posted: 22 Jul 2014 10:53 AM PDT மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது நெஸ் வாடியா தன்னிடம் அத்து மீறி நடந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்புகார் தொடர்பாக வாடியாவை விசாரித்த போலீசார் அவரை இதுவரை கைது செய்யாமல் இருக்கின்றனர். ப்ரீத்தி தனது புகார் தொடர்பாக கடந்த மாதம் மும்பை போலீசாரிடம் வாக்குமூலமும் |
| ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதிய ஆதாரமுள்ளது-அட்டர்னி ஜெனரல் Posted: 22 Jul 2014 10:24 AM PDT ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி பரபரப்பு புகார்களை அளித்தார். அதில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும் ஏர்செல்லை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தன்னை அவர் நிர்ப்பந்தப்படுத்தியதாக அவர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்தார். ஏர்செல், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் உடனடியாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் |
| சிறுமி கற்பழிப்பு மட்டும் தான் செய்தியா?: கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற கேள்வி Posted: 22 Jul 2014 10:03 AM PDT பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தினர். நான்காவது நாளான நேற்று போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். நேற்று மாலை பெங்களூர் நகர காவல் ஆணையாளரான ராகவேந்திர ஆராட்கரும் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமி கற்பழிப்பு விவகாரம் குறித்து இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். |
| மேற்கு வங்காளத்தை அச்சுறுத்தும் மூளையழற்சி நோய்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Posted: 22 Jul 2014 08:25 AM PDT மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் மூளையழற்சி நோயின் தாக்கம் குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை கேட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மூளையழற்சி எனப்படும் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் வடக்கு வங்காளத்தில் இரண்டு வாரங்களில் 67 பேர் இறந்துள்ளனர். வடக்கு பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நோய்த் |
| கோவா சட்டசபைக்கு வேட்டி அணிந்து வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. Posted: 22 Jul 2014 06:24 AM PDT கோவா சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பா.ஜனதா எம்.எல்.ஏ. விஷ்ணு வாக் வேட்டி அணிந்து வந்தார். கடற்கரையில் ஆபாசமான பிகினி உடை அணிந்து வருவதற்கு தடை விதிக்க வேண்டும் எனறு அமைச்சர் சுதின் தவாலிகர் வலியுறுத்தினார். பிகினி உடை இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார். |
| கட்ஜு குற்றச்சாட்டு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை: மன்மோகன் சிங் Posted: 22 Jul 2014 06:02 AM PDT தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பி வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
| சுப்ரதா ராயை பரோலில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 22 Jul 2014 05:15 AM PDT சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயை ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடியை வழங்கவில்லை என சகாரா நிறுவனம் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஆஜராகாமல் இருந்த சகாரா நிறுவன தலைவர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |