Tamil Star |
- கடத்தல் வளையத்தைச் சேர்ந்த 20-அங்கத்தவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
- கமலின் த்ரிஷ்யம் ரீமேக்குக்கு தடை!
- நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்!
- விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்!
- பாடகர் அவதாரமெடுத்த சூர்யா!
- இந்த உச்சக்கட்ட யுத்தத்தில் வெல்லப்போவது யார்?
- இந்த தம்மாத்துண்டு காருக்குள்ளே 18 பேரா?…. உலகசாதனை படைத்த குழு
- கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் அறிமுகம்!
- லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுக்கு பின் இந்தியா சாதனை!
- இங்கிலாந்து 95 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
- மனித உரிமை மீறல்கள் : ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு!
- மீனவர்களின் 57 படகுகளை விடுவிக்க பாக். பிரதமர் உத்தரவு!
- கடும்போக்கு கொள்கையில் மாற்றம்! இலங்கை அகதிகளுக்கு விசா வழங்கப்படுமா?
- கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் பதில் மனு!
- இலங்கையின் புதிய தூதுவராகிறார் அசேல வீரக்கோன்!
- பேராசிரியர் அமெரிக்காவில் மர்மக்கொலை! போலீஸார் தீவிர விசாரணை!
| கடத்தல் வளையத்தைச் சேர்ந்த 20-அங்கத்தவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்! Posted: 22 Jul 2014 10:33 PM PDT
ஹமில்ரனை அடிப்படையாக கொண்ட பெரிய ஆள்கடத்தல் வளையத்தைச் சேர்ந்த 20-அங்கத்தவர்கள் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இந்த 20-பேர்களும் Domotor-Kolompar என்ற வளையத்தைச் சேர்ந்தவர்களென கூறப்பட்டுள்ளது. Domotor-Kolompar குடும்பம் அவர்களது தாய் நாடான ஹங்கேரியில் இருந்து ஆட்களை ஹமில்ரன் பகுதியில் வேலை மற்றும் நல்ல வாழ்க்கை வசதி போன்றனவற்றை ஏற்படுத்தி தரலாமென கூறி கனடாவிற்க கொண்டு வந்தனரென அதிகாரிகள் கூறினர். ஆனால் இதனை நம்பி கனடா வந்தவர்கள் போதுமான உணவு இன்றி கொடூரமான வாழ்க்கை வாழ்வதாகவும் கட்டுமான பணிகளில் சம்பளமின்றி வேலை செய்ய பலவந்தப்படுத்தப் பட்டதாகவும் அறியப்படுகின்றது. இவர்களின் அப்பட்டமான துஷ்பிரயோகத்திற்கு எங்கள் குடிவரவு அமைப்பில் ஒரு வலுவான பதில் தேவைப்படுகின்றதென பொது பாதுகாப்பு அமைச்சர் Steven Blaney செய்தியாளர் மகாநாட்டில் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். இத்தகைய கொடுமையான வெறுக்கத்தக்க மனித கடத்தல் குற்றத்தை செய்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் Domotor-Kolompar குடும்பம் என கருதப்பட்டதாகவும் பின்னர் கடத்திவரப்பட்டு பாதிப்படைந்த ஒருவர் தப்பியோடி பொலிசாரிடம் சென்ற பின்னர் இவர்கள் ஆள் கடத்தும் வளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 2012-மே தொடக்கம் 2014-மே மாதத்திற்கிடைப்பட்ட கால கட்டத்தில் குறிப்பிடப்பட்ட 20 தனி நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வளையத்தின் தலைவரும் அவரது மகனும் 9-வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேக நபர்களின் வீட்டு பேஸ்மன்டில் பாதிக்கப் பட்டவர்கள் குடிவைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் அதுவும் மிஞ்சிய மற்றும் சிறிய கிராப் துண்டுகளுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தவர்களாவர். இவர்களில் ஒருவருமே தற்சமயம் கனடாவில் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கமலின் த்ரிஷ்யம் ரீமேக்குக்கு தடை! Posted: 22 Jul 2014 06:29 AM PDT
மலையாள ப்ளாக்பஸ்டர் த்ரிஷ்யம் படத்தை தமிழில் கமல்ஹாஸனை வைத்து ரீமேக் செய்ய கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. அரபு நாடுகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. கன்னடத்தில் பி வாசு இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில், "த்ரிஷ்யம் படம் நான் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கதைக்கான உரிமை என்னிடம்தான் உள்ளது. ரீமேக் செய்யும் உரிமையும் எனக்கேதான். என் அனுமதி பெறாமல் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, த்ரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்! Posted: 22 Jul 2014 06:27 AM PDT
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறாராம் சிம்பு. சிம்பு தான் அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறி வருகிறார். அவருக்கு அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்நிலையில் அவர் கௌதம் மேனனை அணுகி அஜீத் படத்தில் தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார். இது அஜீத்துக்கு தெரியவர அவர் கௌதமிடம் சிம்பு என்னுடன் நடிக்க நீண்ட காலமாக ஆசைப்படுகிறார் இந்த படத்தில் நடிக்க வைக்கலாமே என்று தெரிவித்தாராம். அதற்கு கௌதமும் சரி என்று கூறியிருக்கிறார். படத்தில் சிம்புவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லையாம். அதனால் ஒரு பாடலில் அஜீத்துடன் சேர்ந்து ஆட வைக்கப் போகிறார்களாம். இதன் மூலம் சிம்புவின் நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது. அண்மை காலமாக சிம்பு விஜய்யுடனும் நெருக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்! Posted: 22 Jul 2014 06:21 AM PDT
தானாக விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் தயாரித்தும் வந்தார். இந்நிலையில் தான் ஆபாச பட உலகில் இருந்து பாலிவுட்டுக்கு தாவிவிட்டார். நான் விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்தேன் என்றார் சன்னி லியோன். என் படங்களை நானே இயக்கி, வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன் என்று சன்னி தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை வந்த சன்னி இங்கு தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Jul 2014 05:42 AM PDT
அஞ்சான் படம் மூலம் பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் நடிகர் சூர்யா. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. அதற்கு பதில் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று சென்னை சத்யம் அரங்கில் திரையிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன், சூரி, வித்யூத் ஜம்வால் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பார்த்திபன், சசி, தயாரிப்பாளர்கள் கேயார், அபிராமி ராமநாதன், ஞானவேல்ராஜா, மதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் சூர்யா பேசுகையில், "சிங்கம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள படத்தில் நடிக்கணும்னு நினைச்சேன். அப்பொழுதுதான் லிங்குசாமி என்னிடம் நான்கு கதைகளை தயார் செய்துவந்து சொன்னார். நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நிறைய ரசிகர்கள் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த உச்சக்கட்ட யுத்தத்தில் வெல்லப்போவது யார்? Posted: 22 Jul 2014 05:37 AM PDT |
| இந்த தம்மாத்துண்டு காருக்குள்ளே 18 பேரா?…. உலகசாதனை படைத்த குழு Posted: 22 Jul 2014 05:34 AM PDT |
| கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் அறிமுகம்! Posted: 22 Jul 2014 05:25 AM PDT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் சார்ந்த ஒரு புதிய பட்ஜெட் கேன்வாஸ் ஸ்மார்ட்போனான, கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனை ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வளைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு கைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், அதே பெயரில் வேறு மாடல் நம்பரில் மற்றொரு ஸ்மார்ட்போனான கேன்வாஸ் ஃபயர் (A093) ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் இந்திய வளைதளத்தில் இந்த மாத தொடக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, இ-காமர்ஸ் இணைய தளம் வழியாக ரூ.6,999 விலையில் விற்பனைக்கு சென்றுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்கும் டூயல் சிம் (வழக்கமான சிம் + மைக்ரோ சிம்) சாதனம் ஆகும். மைக்ரோமேக்ஸ் போல்ட் A069, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்டிஸ், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A093), மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்கேஜ், மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் கோல்ட் போன்ற மற்ற கிட்கேட் சார்ந்த மைக்ரோமேக்ஸ் போன்களுடன் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் இணைகிறது. இந்த கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் (480x854 பிக்சல்) டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT6582M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன், பிளாக் மற்றும் கோல்ட், ஒயிட் மற்றும் கோல்ட், மற்றும் ஒயிட் மற்றும் சில்வர் ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது. கேன்வாஸ் ஃபயர் (A104) மைக்ரோமேக்ஸ் ஒரு 1900mAh பேட்டரி உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-USB உள்ளிட்டவை வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் (A104) ஸ்மார்ட்போன் அம்சங்கள்: டூயல் சிம் (வழக்கமான சிம் + மைக்ரோ சிம்), 4.5 இன்ச் (480x854 பிக்சல்) டிஸ்ப்ளே, ரேம் 1ஜிபி, 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT6582M) ப்ராசசர், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1900mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுக்கு பின் இந்தியா சாதனை! Posted: 22 Jul 2014 05:18 AM PDT
இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தது. டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295, இங்கிலாந்து 319 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. இந்தியா 2வது இன்னிங்சில் 342 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 319 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று ஜோ ரூட் - மொயீன் அலி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தபோது இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால், இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் அச்சுறுத்தும் பவுன்சர் பந்துவீச்சை சமாளிக்க முடியா மல் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 95 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். இஷாந்த் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணி 28 ஆண் டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் வென்று சாதனை படைத்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலாந்து 95 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! Posted: 22 Jul 2014 05:07 AM PDT
இஷாந்த் ஷர்மாவின் அச்சுறுத்தும் பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 223 ரன்னுக்கு சுருண்டு 95 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இஷாந்த் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 295 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன் குவித்து 24 ரன் முன்னிலை பெற்றது. இந்தியா 2வது இன்னிங்சில் 342 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. முரளி விஜய் 95, தவான் 31, புஜாரா 43, கேப்டன் டோனி 19, ஜடேஜா 68, புவனேஸ்வர் குமார் 52 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 319 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 28 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து நம்பிக்கையுடன் முன்னேறியது. மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் 3 விக்கெட் விழுந்ததால், அந்த அணி திடீர் சரிவை சந்தித்தது. நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட் இருக்க, கடைசி நாளில் அந்த அணிக்கு 214 ரன் தேவைப்பட்டதால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜோ ரூட் 14, மொயின் அலி 15 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்க்க, ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாக திரும்பியது. இந்த நிலையில், உணவு இடைவேளைக்கு சில நிமிடம் முன்பாக இஷாந்த் வீசிய அற்புதமான பவுன்சருக்கு பயந்து மட்டையை வைத்து தடுக்க முயன்ற மொயீன் அலி புஜாரா வசம் பிடிபட்டார். அவர் 39 ரன் எடுத்து (147 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், இஷாந்த் அதிவேக பவுன்சர் பிரம்மாஸ்திரத்தை வீசி தாக்குதலை தொடர்ந்தார். நாங்கள் பார்க்காத பவுன்சரா? இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று அசகாய சூரர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயன்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முயன்று அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பிரையர் 12, ஸ்டோக்ஸ் 0, ஜோ ரூட் 66 ரன் (146 பந்து, 7 பவுண்டரி) ஆகியோர் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை தானம் செய்ய, இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 173 என்ற என்ற வலுவான நிலையில் இருந்து 201 ரன்னுக்கு 8 விக்கெட் என பரிதாப நிலையை எட்டியது. அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராடும் இஷாந்த் வேகத்தில் பலியானார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன் எடுத்த நிலையில், ஜடேஜாவின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட் ஆக, இங்கிலாந்து 88.2 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பிளங்க்கெட் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து கடைசி 50 ரன்னுக்கு 6 விக்கெட் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 7 விக்கெட் (23-6-74-7), முகமது ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இஷாந்த் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனித உரிமை மீறல்கள் : ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு! Posted: 22 Jul 2014 05:03 AM PDT
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. தீர்மானத்தின் படி இலங்கையில் இறுதி போரின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவுக்கு ஏற்கனவே இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவும் மறுத்து வருகிறது, தற்போது இந்தியாவும் அக்குழுவுக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை குழு இந்தியாவில் விசாரணை நடத்துவதை தடுக்கும் வகையில் விசா மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய தெற்கு ஆசிய நாடுகள் மனித உரிமை ஆணைய விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீனவர்களின் 57 படகுகளை விடுவிக்க பாக். பிரதமர் உத்தரவு! Posted: 22 Jul 2014 04:58 AM PDT
கடந்த மே மாதம் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்திய மீனவர்களிடம் கைபற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்படவில்லை. பாகிஸ்தான் கைப்பற்றிய படகுகளை மீட்டு தர வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 9 பேர் கொண்ட இந்திய பிரதிநிதிகள் குழு கடந்த 18ம் தேதி பாகிஸ்தான் சென்றது. கராச்சியில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 57 படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு அவற்றை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குழுவினர் படகுகளை ஆய்வு செய்தனர். சிறிய பழுதுகள் உள்ளதைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை முழுமையாக சரி செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். பிரதமர் நவாஸ் உத்தரவின் பேரில் 57 படகுகளும் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படகுகள் அனைத்தும் செப்டம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடும்போக்கு கொள்கையில் மாற்றம்! இலங்கை அகதிகளுக்கு விசா வழங்கப்படுமா? Posted: 22 Jul 2014 04:54 AM PDT
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கடும்போக்குக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், படகு மூலம் வந்த சிறுவனுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டு கப்பலொன்றில் ஏறி 16 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த சிறுவன், மெல்பேர்னில் வாழ்ந்து வருகிறான். குறித்த எத்தியோப்பிய சிறுவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடிய ஸ்கொட் மொரிசன், சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விபரித்துள்ளார். சிறுவனின் சார்பில் பிரபல சட்டத்தரணி டேவின் மாண் வாதாடியிருந்தார். விசாக்கள் இல்லாமல் அவுஸ்திரேலியாவை அடைந்த ஏனைய அகதிகள் தொடர்பிலும் இதே நிலைப்பாட்டை அனுசரிக்குமாறு மாண் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுததார். விசா இல்லாமல் வருபவர்களும் தம் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வெண்டுமென சட்டத்தரணி மாண் குறிப்பிட்டார். ஆனால், படகில் தஞ்சம்கோரிச் சென்ற இலங்கை அகதிகள் தொடர்பில் மொரிசன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கின்றது. அதிகளவான இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில், மொரிசனின் இந்த மாற்றமானது அரசாங்கத்தின் கடும்போக்கு தன்மைக்கு எதிரான வழக்குகளின் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மொரிசனின் உத்தரவு தமது உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எத்தியோப்பிய சிறுவன் தெரிவித்துள்ளான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் பதில் மனு! Posted: 22 Jul 2014 04:49 AM PDT
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு எதிராக புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டு உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அண்மையில் கைது செய்யப்பட்ட 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களையும் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதித்திருந்தது. மூன்று நாட்களுக்கு அரசாங்கத்தரப்பு நியாயங்களை விளக்கும் வகையில் பதில் மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு அமைய இன்றைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. இலங்கை அகதிகளை எப்படியோ இலங்கைக்கு திருப்பியனுப்பும் கடும்போக்கு கொள்கையை இந்த அரசாங்கம் கை விடும் எண்ணம் இல்லை என்பது மிகவும் தெட்ட தெளிவாக விளங்குகின்றது. இவர்களின் நிலையை அரசாங்கம் எப்படியோ மூடி மறைக்க பார்க்கின்றது இவர்களின் நிலை என்ன என்பது இதுவரைக்கும் மர்மமான நிலையே காணப்படுகின்றது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நடுக் கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் மொரிசன் இதுவரைக்கும் உறுதிபடுத்தவும் இல்லை இவர்களின் நிலைதான் என்ன என்பது ஒரு புரியாத புதிராக உள்ளமை குறிப்பிடத்ததக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையின் புதிய தூதுவராகிறார் அசேல வீரக்கோன்! Posted: 22 Jul 2014 04:43 AM PDT
அத்துடன் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரொட்னி பெரேரா, பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இந்த இரண்டு நியமனங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேராசிரியர் அமெரிக்காவில் மர்மக்கொலை! போலீஸார் தீவிர விசாரணை! Posted: 22 Jul 2014 04:35 AM PDT
அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த டொரண்டோ பேராசிரியர் ஒருவர் கடந்த வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டார். டொரண்டோவை சேர்ந்த Dan Markel என்பவர் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள Florida State University என்ற பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளியன்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. Tallahassee காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மரணம் அடைந்த பேராசிரியர் Dan Markel உடல் டொரண்டோவிற்கு அனுப்பப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















