Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மியான்மரில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 பேர் பலி

Posted: 02 Jul 2014 10:58 PM PDT

மியான்மரில் கடந்த 2012ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரமானது இப்போதும் ஆங்காங்கே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. நேற்று முன்தினம் அங்குள்ள இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் ஏற்பட்ட ஒரு மோதலில் இரண்டு பேர் பலியானதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் இன்று ராணுவத்துடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடும் துப்பாக்கி சண்டை

Posted: 02 Jul 2014 10:39 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்கிறார். ஜம்முவில் பல்வேறு கட்சித் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்துப் பேசும் அவர், கத்ரா, ஸ்ரீநகர், உரி, ஆகிய நகரங்களுக்கு செல்ல திட்ட மிட்டுள்ளார். உரி நகரில் அவர் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

திருப்பதியில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்கும் முறை ரத்து

Posted: 02 Jul 2014 10:30 PM PDT

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி விடுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டியதுள்ளது. அதோடு தள்ளு முள்ளும் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க திருமலை தேவஸ்தானம் நேற்று அதிரடி முடிவை நேற்று முதல் அமுல்படுத்தியது. இதன்படி சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மதுபான விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம்: போலீஸ்காரர்களை தாக்கிய காங். எம்எல்ஏ

Posted: 02 Jul 2014 10:24 PM PDT

கர்நாடக மாநிலம் பாகல்கோடு மாவட்டம் உனகுந்தா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த கசப்பானவர் (வயது42). இவர் தனது பிறந்த நாளையொட்டி பெங்களூரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுத்தார். விடிய விடிய மது விருந்து தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குமேல் பெங்களூரில் மது விருந்துக்கு தடை செய்யப்பட்டு

திருவனந்தபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி: பெண் கைது

Posted: 02 Jul 2014 09:03 PM PDT

திருவனந்தபுரம் பாலராமபுரத்தில் செயல்படும் ஒரு பிரபலமான நகை கடைக்கு சொந்தமான 'கனகநிதி' என்ற நிதி நிறுவனம் மூலம் சீட்டு நடத்தப்பட்டது. 25 மாதம் பணம் கட்ட வேண்டிய அந்த சீட்டுக்கு உறுப்பினர்கள் 5 மாதம் கட்டிய உடனே கவர்ச்சிகரமான தொகை போனசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் இந்த சீட்டில் சேர்ந்து பணம்

2ஜி வழக்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா 2-வது நாளாக சாட்சியம்

Posted: 02 Jul 2014 05:15 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா நேற்று இரண்டாவது நாளாக தனது சாட்சியத்தை பதிவு செய்தார். அப்போது அவர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தார்.

சசிதரூரின் மனைவி மரணம்: டாக்டரின் புகாருக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு

Posted: 02 Jul 2014 05:09 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி தன்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மந்திரிகள் 2 பேர் கட்டாயப்படுத்தியதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர்குப்தா புகார் தெரிவித்து இருந்தார்.

கொல்கத்தா மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் விரிசல்: போக்குவரத்து பாதிப்பு

Posted: 02 Jul 2014 02:42 PM PDT

கொல்கத்தா மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் நேற்றிரவு ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்த்தில் பாதிப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி சாலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் சரி செய்யப்படும் வரை ஒரு மணி நேரம் அப்பாதை வழியாக ரெயில்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

காஷ்மீர் தேர்தலில் பா.ஜ.க. ஜெயித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்: உமர் சவால்

Posted: 02 Jul 2014 02:27 PM PDT

ஜம்மு- காஷ்மீர் சட்டசபைக்கு இந்த ஆண்டிறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள பா.ஜ.க., அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் திட்டம் குறித்து காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

டெல்லி மான் பூங்கா மரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தொங்கிய வாலிபரின் பிணம்

Posted: 02 Jul 2014 02:06 PM PDT

தெற்கு டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் உள்ள ஏ.என்.ஜா பூங்கா உள்ளது. மிகப் பெரிய நிலபரப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவின் ஒரு பகுதியில் மான்கள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பூங்காவின் அப்பகுதி மான் பூங்கா என்றழைக்கப்படுகிறது.

கொல்கத்தாவில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதி கைது

Posted: 02 Jul 2014 01:51 PM PDT

ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான். வங்காளதேசத்தில் உள்ள மிர்பூர் பகுதியை சேர்ந்த ஸஹித் ஹுசேன்

டெல்லி சட்டசபையை கலைக்க கோரிக்கை: ஜனாதிபதியை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

Posted: 02 Jul 2014 12:56 PM PDT

டெல்லி முதல் மந்திரி நாற்காலி 'சுட்டு விட்டதால்' பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை வீழ்த்தி எம்.பி.யாகும் ஆசைக் கனவுடன் அவரை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, மூக்கை உடைத்துக் கொண்டார்.

குற்றங்களின் தலைநகராக மாறிய டெல்லி: ஓராண்டில் 1636 கற்பழிப்பு-517 கொலைகள்

Posted: 02 Jul 2014 12:33 PM PDT

நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி குற்றங்களின் தலைநகரமாகவும் மாறி வருகிறது. 2012-ம் ஆண்டு டெல்லியில் 706 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த (2013) ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்கை விட கூடுதலாக அதிகரித்து, 1636 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கட்டிடம், மதில் சுவர் இடிந்து விழுந்து குழந்தை - சிறுவன் பலி

Posted: 02 Jul 2014 12:25 PM PDT

மத்திய டெல்லியில் உள்ள ஆனந்த் பிரபாத் பகுதியில் பலவீனமான வகையில் கட்டப்பட்டிருந்த 2 அடுக்கு வீடு நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடிந்து பக்கத்தில் உள்ள ஓட்டு கொட்டகை வீட்டின் மீது விழுந்ததில் வர்ஷா என்ற 2 வயது குழந்தை பலியானது.

அமித்ஷாவுக்கு இசட்–பிளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

Posted: 02 Jul 2014 12:07 PM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான அமித்ஷாவுக்கு அதிக அளவு மிரட்டல் இருப்பதைத் தொடர்ந்து அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கான இசட்–பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்து இருப்பதாக உள்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய மந்திரிகள் பா.ஜ.க. தலைமையகத்துக்கு தினமும் செல்ல ஏற்பாடு

Posted: 02 Jul 2014 11:59 AM PDT

மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ளும் விதமாக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்துக்கு மத்திய மந்திரிகள் இனி தினமும் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய

சவுதி சிறையில் அடைபட்டிருக்கும் 40 இந்தியர்களின் குடும்பத்தினர் சுஷ்மாவுடன் சந்திப்பு

Posted: 02 Jul 2014 11:17 AM PDT

தண்டனை காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியா நாட்டின் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தங்களது உறவினர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து மனு அளித்தனர்.

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக்.தீவிரவாதிகள் முயற்சி முறியடிப்பு

Posted: 02 Jul 2014 10:14 AM PDT

காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை நம் நாட்டின் ராணுவ வீரர்கள் இன்று முறியடித்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தின் ஓரத்தில் உள்ள

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த மேற்பார்வைக் குழு அமைப்பு

Posted: 02 Jul 2014 07:16 AM PDT

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 7-ம் தேதி அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, மேற்பார்வைக் குழு அமைத்து

அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த அரசு உறுதியாக உள்ளது: ரவி சங்கர் பிரசாத்

Posted: 02 Jul 2014 06:59 AM PDT

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் உறுதி அளித்தார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™