ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆபத்தான பரோட்டா!
- 'ஜெயலலிதா எனக்கு அக்கா!''
- விண்டோஸ் 7 விந்தைகள்
- வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது - 21-7-1954
- ஈராக்கில் 1800 ஆண்டுகள் பழமையான கிருஸ்துவ தேவாலயம் தீ வைத்து எரிப்பு
- 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
- உலகச் செய்திகள்!
- JE (Japanese Encephalitis) வைரஸ்!
- ஹாலிவுட்டில் பாடிய தமிழ் இளைஞர்
- ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்!
- ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை
- நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!
- காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மரணம்
- இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
- ரசித்தவை!
- என்னுயிர் நின்னதன்றோ...!
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- அடடா என்ன கண்டுபுடிப்பு...
- நெற்றிக்காசு!
- மனைவி சண்டையும், ஒரு பியரும்!
- நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
- சமூக தள, மின் அஞ்சல் கணக்குகளை மூடிடும் வழிகள்
- விகாரையில் பௌத்த பிக்கு தூக்கிட்டு தற்கொலை
- ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும்
- தணிக்கைக்குழு உறுப்பினராக பிஸியானார் நடிகை குயிலி!
- உருசியாவில் காமராஜர்..
- வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம்
- காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...)
- சைக்கிள் திருட்டின் தலைநகரமாய் விளங்கும் ஜேர்மனி
- நாய் குரைத்தமைக்கும் பொலிஸில் முறைப்பாடு; அதனை விற்குமாறு பொலிஸார் உத்தரவு
- சிவாஜி சிறந்த புகைப்படங்கள்...
- யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்
- உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். ...கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்
- இந்தியா...
- ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)
- இடம் மாறுகிறது பி.பி.ஸி. தமிழோசை!
- கனடா - அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்.
- நடிகர் 'காதல்'தண்டபாணி காலமானார்
| Posted: 20 Jul 2014 03:43 PM PDT பெரும்பாலான சைவ மற்றும் அசைவ ஓட்டல்களில் உணவுப்பொருளாக பரோட்டா விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது. காரணம் மக்கள் மனதில் அந்த அளவுக்கு ஒரு இடத்தினை பிடித்த உணவாக உள்ளது அது. தமிழகத்தில் சிறு கிராமங்களிலும் நிச்சயம் பரோட்டா கிடைக்கும். பல குடும்பங்களில் குழந்தைகளின் இரவு நேர உணவாக அது உள்ளது. இதுபோல அனைத்து வயதினரும் விரும்பும் பரோட்டா ஒரு நல்ல உணவு அல்ல என்கிறார்கள் டாக்டர்கள். அது குறித்த ஆய்வுகளும் அதையே கூறுகின்றன. நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் ... |
| Posted: 20 Jul 2014 03:36 PM PDT கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்' என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது! ஜெயராமன் - சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில் தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத் தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். ... |
| Posted: 20 Jul 2014 03:29 PM PDT விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, ... |
| வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது - 21-7-1954 Posted: 20 Jul 2014 03:27 PM PDT வியாட்நாமின் தியான் பியான் பூ பிரதேசத்தை பாரிஸ் 1953-ம் ஆண்டு ஆக்கிரமித்து ராணுவத்தளத்தை அமைத்திருந்தது. வியட்நாமை பிரெஞ்சு காலணித்துவத்திலிருந்து விடுவிப்பதற்கான விடுதலைப்போராட்டத்தை வியட்நாமிய சுதந்திர போராட்ட ஒன்றியம் என்ற பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பு அப்போது நடத்தி வந்தது. அந்த அமைப்பின் விடுதலை ராணுவமாக வியட்மின் என்ற அமைப்பு செயற்பட்டது. பிரெஞ்சு படைகளுக்கு ஜெனரல் கஸ்த்திரி என்பவர் பொறுப்பாக இருந்தார். அந்த பிரதேசம் 6-க்கும் மேற்பட்ட மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருந்து. எல்லா மலைக்குன்றுகளிலும் ... |
| ஈராக்கில் 1800 ஆண்டுகள் பழமையான கிருஸ்துவ தேவாலயம் தீ வைத்து எரிப்பு Posted: 20 Jul 2014 03:25 PM PDT ஈராக்கில் 'ஐ.எஸ்.' போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இஸ்லாமிய நாடு உருவாக்கியுள்ளனர். அந்நாட்டின் மிகப்பெரிய 2–வது நகரமான மொசூலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டும். சிறப்பு வரி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மொசூல் நகரை விட்டு வெளியேற வேண்டும். மீறினால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்தனர். இதை அங்குள்ள ... |
| 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம் Posted: 20 Jul 2014 03:23 PM PDT பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 6 வயது பள்ளிக் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில், கற்பழித்த கயவர்கள் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது குழந்தையை, பள்ளி ஊழியர்கள் சிலரே கற்பழித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் பள்ளி முன் பெற்றோர்கள் குவிந்தனர். கூட்டம் திரளாக ... |
| Posted: 20 Jul 2014 03:15 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| JE (Japanese Encephalitis) வைரஸ்! Posted: 20 Jul 2014 03:14 PM PDT பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், "அச்சிறுவன் ... |
| ஹாலிவுட்டில் பாடிய தமிழ் இளைஞர் Posted: 20 Jul 2014 12:16 PM PDT ஆர்குட்டிற்கு 'குட்-பை' சொல்லும் இந்த நேரத்தில், 'ஹிப் ஹாப் தமிழா' இசைக் குழு உருவாவதற்கு அதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறது என்பதைக் கட்டாயம் சொல்ல வேண்டியிருக்கிறது. 2005-ல் ஆதி , ஜீவா என்னும் இரண்டு இசைப் பிரியர்களைஆர்குட்தான் இணைத்திருக்கிறது. 2005-ல் ஆரம்பித்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைப் பயணம், இப்போது சர்வதேச எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கிறது. ஆதி, நடுத்தரத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இசை ஆல்பம், ஹிப் ஹாப் எல்லாம் அவரது புதிய அடையாளங்கள். பள்ளிக்காலம் முதலே ... |
| ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்! Posted: 20 Jul 2014 12:08 PM PDT [size=12] இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், பவர் ஸ்டார் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் எமி செய்த ஒரு விஷயம் ஷங்கரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது, ஏனென்றால் இவர் தற்போது மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை தட்டியுள்ளார். இது ஷங்கருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து எமி 'உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்து விட்டது. இனிமேல் என்னை அதிகாரம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை. ... |
| ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை Posted: 20 Jul 2014 12:05 PM PDT [size=10]உலகக் கோப்பை கால்பந்து நிறைவு விழா நிகழ்ச்சியில் ஷகிரா.[/size] [size=10]ஷகிராவின் ஃபேஸ்புக் பக்கம்[/size] பிரபல பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரதுஅதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் 10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பிரபலம் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் இவ்வளவு லைக் பெறுவது இதுவே முதன்முறை. இது குறித்து பத்திரிக்கைகளிடம் பேசிய ஷகிரா, "இந்த மைல் கல்லை எட்டியதை நான் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். சமூக ஊடகங்கள், குறிப்பாக, ஃபேஸ்புக், என்னைப் ... |
| நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது! Posted: 20 Jul 2014 12:03 PM PDT உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம். மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். இவர் அடுத்து இயக்கப்போகும் நாடகத்தில் காதலை மைய்யமாக கொண்டு உருவாக்கிவருகிறார். இதில் ரேஷ்மியை இளம் வயதில் காதலிக்கும் இளைஞராக, தங்கள் மகனையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இந்தக்காட்சியில் லிப்லாக் சீன் வேண்டும் ... |
| காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மரணம் Posted: 20 Jul 2014 12:00 PM PDT [size=14]காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய 'காதல்' படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்தார். அதில் வரும் ''வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்'' பாடலில் கானா உலகநாதனுடன் இயல்பாக நடித்து ... |
| இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்! Posted: 20 Jul 2014 11:56 AM PDT கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் ... |
| Posted: 20 Jul 2014 11:40 AM PDT ![]() |
| Posted: 20 Jul 2014 11:33 AM PDT இந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா? என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்? காதல் வயப்பட்டதன் விளைவோ? ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் ... |
| Posted: 20 Jul 2014 11:22 AM PDT எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| Posted: 20 Jul 2014 10:56 AM PDT ![]() |
| Posted: 20 Jul 2014 10:42 AM PDT - காசு கடவுள் படைத்ததல்ல... ஆனாலும், காசை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறான் மனிதன்! - காசை, 'நாணயம்' என்றான் அந்நாள் மனிதன்! நாணயம் பார்த்தால் நாணயம் வராதென்கிறான் இந்நாள் மனிதன்! - படிக்காதவன் காசுக்கு அலைகிறான்...படித்தவன் டாலருக்கு அலைகிறான்! - காசில்லாதவன் தூசுக்குச் சமம் உண்மைதான்... ஆனாலும், நெற்றிக்காசு கூட நிரந்தரமில்லை என்பதுதானே நிதர்சனம்! - நேர்வழியில் வராத காசு நெற்றியிலும் ஒட்டாதென்பதை எப்போது உணரப் போகிறோம்? - -------------------------------- — ... |
| Posted: 20 Jul 2014 10:37 AM PDT மனைவி சண்டையும், ஒரு பியரும்! (ஒரு டாஸ்மாக் பாரில்) "தம்பி!! ஒரு பீர்!" "என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?" "அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!" "பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!" "அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா" "போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?" "அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!" |
| நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... Posted: 20 Jul 2014 10:35 AM PDT நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன் நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள். |
| சமூக தள, மின் அஞ்சல் கணக்குகளை மூடிடும் வழிகள் Posted: 20 Jul 2014 07:21 AM PDT உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே ... |
| விகாரையில் பௌத்த பிக்கு தூக்கிட்டு தற்கொலை Posted: 20 Jul 2014 07:06 AM PDT அளுத்கம, கொடல்ல தம்மிக்காராம விகாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று (19) இரவு 11.30 மணியளவில் விகாரையில் உள்ள அறை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பேருவல, வலபன பரமரனீயாராம விகாரையில் இருந்த குறித்த பிக்கு நேற்று மாலை தம்மிக்காராம விகாரைக்கு சென்றுள்ளார். தம்மிக்காராம விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டது எனவும் தனது பெற்றோரை ... |
| ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Posted: 20 Jul 2014 06:50 AM PDT ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 26.07.2014 சனிக்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் புனர்பூசம் நட்சத்திரம் அமைந்திருப்பதால் மிகவும் சிறப்பானதாக கணிக்கப்பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக ... |
| தணிக்கைக்குழு உறுப்பினராக பிஸியானார் நடிகை குயிலி! Posted: 20 Jul 2014 06:14 AM PDT - சினிமாவில் நடித்து வந்த நடிகை குயிலிக்கு சென்சார் போர்டில் மெம்பராகும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்த குயிலி, அத்தனை பிஸியிலும் சென்சாருக்கு படம் திரையிடப்படும்போது தனக்கு அழைப்பு வந்தால் தவறாமல் கலந்து கொள்வார். தற்போது வாரம் வாரம் சுமார் 4 படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல சென்சார்போர்டு மெம்பர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குயிலி, கமீலா நாசர் போன்ற ஒரு சில மெம்பர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். எனவே வெளியாகும் அத்தனை படங்களையும் ... |
| Posted: 20 Jul 2014 05:59 AM PDT உருசியாவில் காமராஜர்.. |
| வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம் Posted: 20 Jul 2014 05:54 AM PDT வேலூரை சேர்ந்த பாரதிய ஜனதா மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உள்ளிட்ட இந்து பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தீவிரவாதிகள் 3 பேரையும் கர்நாடக போலீசார் கடந்த 16–ந்தேதி பெங்களூர் அழைத்து சென்றனர். பின்னர் ... |
| காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...) Posted: 20 Jul 2014 05:49 AM PDT காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...) |
| சைக்கிள் திருட்டின் தலைநகரமாய் விளங்கும் ஜேர்மனி Posted: 20 Jul 2014 05:48 AM PDT ஜேர்மனியில் சைக்கிள்கள் அதிகளவில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரம் போல் மிகுதியாக நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கணிசமானவர்களை மட்டுமே பொலிசார் பிடித்துள்ளனர். மேலும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நாள் ஒன்றிற்கு மட்டும் 7 மிதிவண்டிகள் திருடப்படுவதாகவும் ஆனால் பலர் புகார் கொடுக்க முன் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ... |
| நாய் குரைத்தமைக்கும் பொலிஸில் முறைப்பாடு; அதனை விற்குமாறு பொலிஸார் உத்தரவு Posted: 20 Jul 2014 05:46 AM PDT நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் ... |
| சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... Posted: 20 Jul 2014 05:45 AM PDT சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... |
| யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் Posted: 20 Jul 2014 05:43 AM PDT யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch) Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166, E-mail:info@sivantempel-dortmund.de www.sivantempel-dortmund.de ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம் Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, http://www.kamadchi-ampal.de Tel.: +49 2388 302223 Fax.+49 2388 302224 ... |
| Posted: 20 Jul 2014 05:41 AM PDT பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 'துணிச்சலான தாயார்' என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் ... |
| Posted: 20 Jul 2014 05:40 AM PDT இந்தியா... ![]() |
| ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Posted: 20 Jul 2014 05:34 AM PDT மகனே! கல்வி கற்று வந்திடுவாய்... கனவுடனே காத்திருக்க, நீ கானலாய் ஆனதென்ன! அதிகாலையில் சோறூட்டி கைகழுவி விட்டேனே, பதிலுக்கு விட்டாயோ நீயும் கைகழுவி! ஒரு கீறல் உன்னுடம்பில் ஒத்திடாத நான், உனை பெரும் உலைதனிலே விட்டதென்ன! கண்ணே! என்றழைத்தால் கல்விதான் கண்ணம்மா கற்று வருவேன் பெரியவனாய்... நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?! கன்னக்குழி அழகு பார்த்து கண்பட்டு போயிடுமே! கரிதடவி விடுவேனய்யா... யார் கண் பட்டதுவோ நீ பட்டு போனாயே! கால் பட்ட தீ தழும்பில் களிம்பு தடவி விட்ட ... |
| இடம் மாறுகிறது பி.பி.ஸி. தமிழோசை! Posted: 20 Jul 2014 05:21 AM PDT பி.பி.ஸி. தமிழ் சேவை இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளது என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரையான செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் படியே, இந்த இடமாற்றம் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக, கருத்து வெளியிட்ட பி.பி.ஸி. உலகசேவை பேச்சாளர் ஒருவர், பி.பி.ஸி. தமிழ் சேவை நேயர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். ஹிந்தி சேவை வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்ச் சேவையையும், இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் நேயர்களுக்கு அதிக வசதிகளை வழங்க முடியும். இந்தியாவில் ... |
| Posted: 20 Jul 2014 05:17 AM PDT உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் (Albert Campbell Square � Scarborough Civic Center) யூலை 20.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் Professor Daniel Ferenste...in (President, International Association of Genocide Scholars) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்படும் கறுப்பு ... |
| நடிகர் 'காதல்'தண்டபாணி காலமானார் Posted: 20 Jul 2014 05:07 AM PDT நடிகர் 'காதல்' தண்டபாணி, திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூலை 20) காலமானார். காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். காதல், சண்டைக்கோழி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடத்துள்ளார். இவருக்கு வயது 61 |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


