ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்
- வரலாற்றில் இன்று.... ஜூலை
- அம்மாவுக்கு பிறந்தநாள்!
- ஈவ்னிங் ஸ்நாக்ஸ்
- ஒரு பாடலுக்காக எழுதிய வரிகள்
- கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை
- ஞாயிற்றுக்கிழமை வருவதையே வரவேற்பதில்லை...!
- விபரீத விளையாட்டு...!
- தானத்தில் சிறந்தது அன்னதானம்!
- ஓடிப்போவது ஏன்? எதற்காக?
- ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்!
- ராகு கேது கோயிலும் வழிபாட்டு பயன்களும்
- சிங்கங்கள் வசிக்கும் காடு...(பொது அறிவு தகவல்)
- மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்..
- அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
- ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!
- சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது
- தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சி உதயம்
- உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
- பற்கள்: பல பயனுள்ள தகவல்கள்
- முதல்வர் சொன்ன கதைகள்
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- அருணாசலம் என்பதன் பொருள்...(ஆன்மீக தகவல்கள்)
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (52)
- வினா விடை
- காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு
- தொடத் தொடத் தொல்காப்பியம் (251)
- ரமணியின் கவிதைகள்
- சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....(ஆன்மீக தகவல்)
- தாருகாவனத்து ரிஷிகளை மயக்க விஷ்ணு எடுத்த கோலம்...(ஆன்மீக தகவல்)
- பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது…(ஆன்மீக தகவல்)
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்
- வேலன்:-சுலபமான வீடியோ கட்டர்.
| தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார் Posted: 01 Jul 2014 12:47 PM PDT பெயர்: சையது சர்தார் சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் வலைகளின் தேடல் மூலம் பொழுதுபோக்கு: கணிணி, பூப்பந்து, நல்ல புத்தகங்கள் தொழில்: பாதுகாப்பு சேவையில் மேலும் என்னைப் பற்றி: நல்ல தமிழ் வலையை நீண்ட நாட்களாக தேடி வந்தேன். கிடைத்த சிலவற்றில் சேர மனம் ஒவ்வாது போனது. இன்று வேறு எதையோ தேட ஈகரை அறிமுகமானது. 30 வருடங்களுக்கு மேலாக பிற மாநிலங்களில் வசித்து வந்தாலும் இருந்த இடங்களில் எல்லாம் தமிழ் மன்றம் தோற்றுவித்து தமிழ் உள்ளங்களை இணைத்து, ஒருசேர தமிழ் விழாக்கள், ... |
| Posted: 01 Jul 2014 12:44 PM PDT 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன. 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது. 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1876 ... |
| Posted: 01 Jul 2014 11:16 AM PDT அம்மா! என்னை பெற்றெடுக்க இந்த உலகில் நீ ஜனித்த தினம் இன்று. இந்நநாளில் எழுபிறப்பிலும் - உனக்கே நான் பிறக்கும் வரம் வேண்டி நிற்கிறேனம்மா.... |
| Posted: 01 Jul 2014 11:11 AM PDT மினி சமோசா தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, ... |
| Posted: 01 Jul 2014 10:25 AM PDT என் நெஞ்சு தினம் வலிக்குது உன் நெனப்பால தினம் கொதிக்குது என் கண்ணு தூங்க மறுக்குது என் கை பாட்டில் தேடுது உனக்காக தினம் செலவழிச்சேன் என் சொத்தெல்லாம் அடகுவச்சேன் அது காத்துல போனது இந்த காத்தாடி இப்போம் ஆடுது.. சாராய போத ஏறுது சங்கதி உன்ன பாடுது தள்ளாடி நானும் நடக்கையில தாவணி உன்ன தேடுது மூனாறு மல மேலே நீயும் முன்னூறு அடிக்கு கீழ நானும் உக்காந்து நானும் இருந்தாலும் உம்முகம் தானா தெரியுது பேனாவ நானும் எடுக்கையில கையெழுத்து உம்பேராகுது பெத்து எடுத்த தாயவிட பாசம் உம்மேல ... |
| கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை Posted: 01 Jul 2014 09:44 AM PDT தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது. நமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் ... |
| ஞாயிற்றுக்கிழமை வருவதையே வரவேற்பதில்லை...! Posted: 01 Jul 2014 09:30 AM PDT - வரவேற்பு - ஞாயிற்றுக்கிழமை வருவதையே வரவேற்பதில்லை குழந்தைகளை சுமந்து கொண்டு பள்ளிக்கு செல்லும் ஆட்டோக்கள் - - ஆர்.அஜிதா - ---------------------------- எழுத்தில்..! - சுவற்றில் கோணலாக எழுதிய குழந்தைகளின் எழுத்துக்கள் நேராக நிமிர்ந்து விடுகிறது கடவுள் படிக்கும் தருணங்களில் - -சி.சங்கர் - ------------------------ பிரார்த்தனை! - குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார் கடவுள் - -சி.விஜயாம்பாள் - ------------------------ நன்றி: குமுதம் ... |
| Posted: 01 Jul 2014 09:21 AM PDT - அடடே...! - மனிதர்களின் கை தட்டலில் கூட உயிரை விடுகின்றன கொசுக்கள்..! - >எஸ்.டேனியல் ஜூலியட் ------------------- - விபரீத விளையாட்டு - இயற்கை எனும் குழந்தை செய்து விளையாடும் காகித கப்பலாகிறது வெள்ளத்தில் மிதக்கும் குடிசைகள்! - >கு.வைரச்சந்திரன் - ----------------------- |
| Posted: 01 Jul 2014 09:07 AM PDT மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, 'அன்ன விசாரம் அதுவே விசாரம்...' எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை? இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம். ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை ... |
| Posted: 01 Jul 2014 09:01 AM PDT அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்.... இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்! சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்.... முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது ... |
| ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்! Posted: 01 Jul 2014 08:59 AM PDT 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுங்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ... |
| ராகு கேது கோயிலும் வழிபாட்டு பயன்களும் Posted: 01 Jul 2014 08:54 AM PDT கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருத்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலந்தயடிதட்டில் ராகு பகவான் மங்கள ராகுவாகவும் கேது பகவான் ஞான கேதுவாகவும் அமர்ந்து அருள் பாலிக்கிண்றார்கள் இங்கு தினமும் காலை தென்காளஹஸ்தி சிவனுக்கு பூஜை முடிந்த உடன் ராகு கேதுவிற்கு பூஜை நடை பெறுகிறது . வாரத்தில் கிழமை 4.30 க்கு ராகு காலத்தில் 5 வகை அபிஷயங்களுடன் பூஜை நடை பெறுகிறது இதில் கலந்து கொண்டு 108 முறை ராகு கேது காயத்திரி மந்திரங்களை ஜெபித்து வருபவர்களுக்கு ராகு கேதுவால் ஏற்படும் அணைத்து துன்பங்களும் விலகி விடும் ... |
| சிங்கங்கள் வசிக்கும் காடு...(பொது அறிவு தகவல்) Posted: 01 Jul 2014 07:43 AM PDT - மனித உடலில் உள்ள தசைகள் எண்ணிக்கை - 639 - தடியான மனிதர் எளிதில் நீச்சல் கற்றுக்கொள்வர் - ஹெர்படாலஜி (Herpetology) என்றால் ஊர்வன பற்றி படித்தல் - அஸ்பெஸ்டாசுக்கு 'பாற் பஞ்சு' என்ற பெயருமுண்டு - நெப்போலியனின் முதல் மனைவியான ஜோஸஃபின் 'பிரான்ஸ் நாட்டின் ராணி' என்று அழைக்கப்பட்டாள் - ஆப்பிரிக்காவுக்கு கறுப்பு கண்டம் என்று பெயர் - எகிப்தியர்கள் பிரமிடுகளை, மன்னர் சொர்க்கத்திற்கு போகக் கட்டப்பட்ட மாடிப்படிகளாக கருதினர். - யானை தன் இனத்தில் ஒன்று மடிந்தால் கும்பலாக கூடி அதைச் ... |
| மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்.. Posted: 01 Jul 2014 07:40 AM PDT - துணிவை இழந்த மனிதனுக்கு தோன்றுவதெல்லாம் கவலையடா தெளிவடையாத மனதினிலே விளைவது எல்லாம் சந்தேகம் - தன்னைக்கூட நம்பிட மறுக்கும் சஞ்சலம் என்பது நோயாகும் தத்துவம் படித்து அறிந்திருந்தாலும் எல்லாம் அங்கே வீணாகும் - வருவது வரட்டும் பார்த்திடலாம் எனும் முடிவினைக் கொண்டால் சரி ஆகும் அதுவரை இடையில் நிகழ்வது யாவும் அறிந்திட முடியாப் புதிர் ஆகும் - கண்கள் பார்த்தும் செவிகள் கேட்டும் சாட்சியைத் தேடி அலைந்திடுவான் காரணம் எதுவும் இல்லாமல் பிறர் மேலே பழியிடத் துணிந்திடுவான் - மனதை அடக்கும் ... |
| அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்! Posted: 01 Jul 2014 07:38 AM PDT - ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள் அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன். - மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்! - --------------------------------------------- - தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்: ""ஏன் லேட்?" - மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகையில் 'பள்ளிக் கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!' என எழுதியிருந்தது டீச்சர்...! - ----------------------------------------------- - "மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு ... |
| ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Posted: 01 Jul 2014 07:33 AM PDT தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன். "பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?' "என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம் போயிடலாம்!' "என்ன சொல்றே நீ?' "ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும் வர்றதில்லை.' "கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை. அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா, பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?' "என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்' "கொஞ்ம் பொறுத்துக்க ... |
| சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது Posted: 01 Jul 2014 05:24 AM PDT சென்னை: சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். - இவர்களில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. - சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. ... |
| தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சி உதயம் Posted: 01 Jul 2014 03:51 AM PDT தமிழர் தேசிய முன்னணி புதிய கட்சி உதயம்: பழ.நெடுமாறன் தலைமையில் தமிழ் அமைப்புகள் தொடங்கின பழ.நெடுமாறன் தலைமையில் 60 தமிழ் அமைப்புகள் இணைந்து 'தமிழர் தேசிய முன்னணி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு, ஈழத்தமிழர் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், ... |
| உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள் Posted: 01 Jul 2014 03:44 AM PDT முதலாம் உலகப் போர் நூற்றாண்டில் நமக்குத் தெரியாத சில தகவல்களை பி.பி.சி. தருகிறது… உலகப் போர் என்றாலே ஐரோப்பிய நாடுகளின் போர்க்கள நெடுங்குழிகளில் நடந்த ரத்தக்களரிகள்தான் நம் நினைவுக்கு வரும். அதுதான் உண்மையும். இதுதவிர, உலகப் போர்குறித்து நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உலகப் போர் சீனா வரை ஊடுருவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆசியா, வடக்கு அமெரிக்கா, கரீபியத் தீவுகள், ஆஸ்திரேலியேசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டது உங்களுக்குத் ... |
| Posted: 01 Jul 2014 03:40 AM PDT முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். வரிசையான, பளிச் பற்களை பெற்றவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள். பற்களில் நோய் ஏற்பட்டு, அவைகளை பிடுங்கி எடுத்து மாற்றும்போது, பற்கள் மட்டுமல்ல முக அழகும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால் பற்களை பாதுகாத்து பராமரிப்பதில் இப்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பற்களைப் பற்றிய பற்பல அடிப்படை தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. உணவு உண்பதற்கு, பேசுவதற்கு, சிரிப்பதற்கு, எடுப்பான அழகுக்கு அடிப்படையாக இருக்கும் பற்களை நாம் இழந்தால் பேசும்போது ... |
| Posted: 01 Jul 2014 03:27 AM PDT சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:- ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம். ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை ... |
| Posted: 01 Jul 2014 02:52 AM PDT மகிழும் தவளைகள்….!! * விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு இரவில் ஒளி சிந்தி மின்மினிகள் * இருளில் எவரை வேவு பார்க்கின்றன இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள். * காதல் கிளிகளின் கூடுகளை எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள். * இரவுமில்லை பகலுமில்லை நீரில் வாழும் மீன்களுக்கு… * மழை நின்றபின் இரவெல்லாம் கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள். * |
| அருணாசலம் என்பதன் பொருள்...(ஆன்மீக தகவல்கள்) Posted: 01 Jul 2014 02:46 AM PDT - 1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.... திருவண்ணாமலை - 2. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்.... திருமங்கையாழ்வார் - 3. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்.... பரணிதீபம் (அணையா தீபம்) - 4. அருணாசலம் என்பதன் பொருள்... அருணம்+ அசலம்- சிவந்த மலை - 5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம் - 6. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்... பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் - 7. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் ... |
| Posted: 01 Jul 2014 02:46 AM PDT மகிழும் தவளைகள்….!! * விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு இரவில் ஒளி சிந்தி மின்மினிகள் * இருளில் எவரை வேவு பார்க்கின்றன இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள். * காதல் கிளிகளின் கூடுகளை எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள். * இரவுமில்லை பகலுமில்லை நீரில் வாழும் மீன்களுக்கு… * மழை நின்றபின் இரவெல்லாம் கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள். * |
| Posted: 01 Jul 2014 02:43 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 01 Jul 2014 01:55 AM PDT ''''பூ வாளை நாறு நீ பூ மேகலோகமே பூ நீறு நாளை வா பூ''' இந்த வாக்கியத்தின் சிறப்பை கண்டுபிக்கவும்...... |
| காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Posted: 30 Jun 2014 10:25 PM PDT - [கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில் பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது . - அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ] காந்தி மகான் கதை –இரா.நக்கீரன் 'முப்பக்கம் சூழ்ந்த கடல் முத்திருக்கும் ஆழ்ந்த கடல் இப்பக்கம் வந்தாலும் இமயம் வடக்கினிலே கட்டாத கோட்டையுண்டு கடலும் மலைகாவல் எட்டாது அசலானுக் கிடங்கொடுக்கா திந்நாடு' - என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (251) Posted: 30 Jun 2014 10:13 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 30 Jun 2014 09:15 PM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....(ஆன்மீக தகவல்) Posted: 30 Jun 2014 08:30 PM PDT - 1. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்... மகதி யாழ் - 2. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்.... அனுமன் - 3. ராமானுஜர் அவதரித்த திருத்தலம்.. ஸ்ரீபெரும்புதூர் - 4. கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்? ஸ்காந்தம் - 5. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்? விநாயகர் - 6. அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்.. கவிகாளமேகப்புலவர் - 7. தேவாரத்தில் முருகனை "செட்டியப்பன்' என்று சொன்னவர்... சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 8. நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்... காஞ்சி ... |
| தாருகாவனத்து ரிஷிகளை மயக்க விஷ்ணு எடுத்த கோலம்...(ஆன்மீக தகவல்) Posted: 30 Jun 2014 08:30 PM PDT - 1.சேக்கிழாரின் இயற்பெயர்..... அருண்மொழித்தேவர் - 2. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்..... வியாக்ரபாதர், பதஞ்சலி - 3. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்......... சிவபெருமான் - 4. கிருஷ்ணருக்கு சிவதீட்சை வழங்கியவர்..... உபமன்யு - 5. நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர் குஞ்சிதபாதம் - 6. தாருகாவனத்து ரிஷிகளை மயக்க விஷ்ணு எடுத்த கோலம்..... மோகினி - 7. தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்...... ரத்தினசபாபதி - 8. உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த ... |
| பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது…(ஆன்மீக தகவல்) Posted: 30 Jun 2014 08:28 PM PDT - 1. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்....... விரைந்து அருள்புரிபவர் - 2. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்..... லிங்கோத்பவர் - 3. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை? 64 - 4.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்.... சோமாஸ்கந்தர் - 5. பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது..... மதுரை - 6. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை..... 14 - 7. தேவாரம் என்பதன் பொருள்...... தெய்வத்திற்கு சார்த்தும் மாலை - 8. ... |
| சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம் Posted: 30 Jun 2014 08:26 PM PDT - சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், கொடியேற்றத்துடன் 25-6-14 புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் பஞ்சமூர்த்தி வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது. - ஜூலை 3-ஆம் தேதி தேர்த் திருவிழா, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. - ஜூலை 4-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் ... |
| Posted: 30 Jun 2014 07:01 PM PDT இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளஒப்பன் பைல் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோபைலினை தேர்வு செய்யவும். எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை தேவையோ அந்த இடத்தினை இதில் கீழே உள்ள ஸ்லைடரை கொண்டு தேர்வு செய்யவும்.வீடியோவில் குறிப்பிட்ட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |