Tamil News | Online Tamil News |
- இ - ரிக் ஷா தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் கட்காரி மறுப்பு
- அ.தி.மு.க.,வுக்கு செல்ல தயாராகும் தி.மு.க., பேச்சாளர்கள்?
- என் மகனுக்கு ஆதரவளியுங்கள்: தொண்டர்களிடம் கேட்ட விஜயகாந்த்
- கருணாநிதியின் ஆதங்க கடிதம்: அறிவாலயத்தில் குவியும் பதில்கள்
- 'தினமலர்' நாளிதழுக்கு எதிராக தமிழக முதல்வர் மனு
- பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்? அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை
- தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி
- 'அரைகுறை ஆடையுடன் பெண்கள் செல்வதா?'
- மானியமில்லா சமையல் 'காஸ்' சிலிண்டர் விலை அதிகரிப்பு: வர்த்தக காஸ், விமான எரிபொருள் விலையும் உயர்வு
- கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்: தமிழக மீனவர்களுக்கு அங்கு மீன்பிடி உரிமை கிடையாதாம்
| இ - ரிக் ஷா தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் கட்காரி மறுப்பு Posted: "பேட்டரியால் இயக்கப்படும், இ - ரிக் ஷாக்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தொழிலில், என் குடும்பத்தினர் யாரும், ஈடுபடவும் இல்லை," என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.சைக்கிள் ரிக் ஷாக்களுக்கு மாற்றாக, டில்லி போன்ற நகரங்களில், இ - ரிக் ஷாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆட்டோவை போன்று இருந்தாலும், இது, பேட்டரியால் இயக்கப்படும் ரிக் ஷா தான். டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நொய்டா, காசியாபாத், குர்கான் போன்ற நகரங்களில், இந்த ரக ரிக் ஷாக்கள் அதிக அளவில் ... |
| அ.தி.மு.க.,வுக்கு செல்ல தயாராகும் தி.மு.க., பேச்சாளர்கள்? Posted: தி.மு.க., மாநில பேச்சாளர்கள் மத்தியிலும், கோஷ்டி பூசல் வெடித்திருப்பதால், அக்கட்சியை சேர்ந்த பேச்சாளர்கள், 20 பேர், தி.மு.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாவதற்கு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் என, செய்தி பரவி இருக்கிறது.கட்சியின் கொள்கைகளை எளிமையான முறையில் பேசி, சாதாரண மக்களிடம் கொண்டு செல்வதில் பேச்சாளர்களின் பங்கு அதிகம். இதனால், அரசியல் கட்சிகளில், பேச்சாளர்களுக்கு, தகுதி அடிப்படையில் முக்கியத்துவம் தரப்படுகிறது.ஓரம் கட்டப்படுகின்றனர் தி.மு.க.,வில், 542 பேச்சாளர்கள் உள்ளனர். பேச்சாளராக வளர்ந்து, எம்.எல்.ஏ., பதவியை கைபற்றியுள்ள தி.மு.க., ... |
| என் மகனுக்கு ஆதரவளியுங்கள்: தொண்டர்களிடம் கேட்ட விஜயகாந்த் Posted: சேலத்தில் நடந்த, 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில், கட்சியினரிடம் பேசிய விஜயகாந்த், "எனக்கு ஆதரவளிப்பது போல நினைத்து, சினிமாவில் நடிக்கும் என் மகனுக்கும் ஆதரவளியுங்கள்,'' என, கேட்டுக் கொண்டார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, 'உங்களுடன் நான்' என்னும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., தோற்றுவிட்டதால், கட்சி அழிந்து விடாது. கட்சியை யாராலும் அழிக்க ... |
| கருணாநிதியின் ஆதங்க கடிதம்: அறிவாலயத்தில் குவியும் பதில்கள் Posted: 'சூட்சமத்தை புரிந்து கொள்வாய்' என்ற தலைப்பில், தி.மு.க., தலைவர், தொண்டர்களுக்கு கடிதம் எழுத, அந்த கடிதத்துக்கு தொண்டர்களிடம் இருந்து, பதில் கடிதம் வந்து கொண்டிருக்கிறது. அதுதான், இப்போது அறிவாலய வட்டாரத்தில், பரபரப்பான பேச்சாக இருக்கிறது.லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் என, கண்டறியப்பட்ட, 33 கட்சி நிர்வாகிகளின், கட்சிப் பதவியைப் பறித்து, தற்காலிக நீக்கம் செய்தது, தி.மு.க., தலைமை. இதற்கிடையில், கட்சியின் தோல்விக்கு காரணம், கட்சியின் நிர்வாகிகள் என்பதை விட, இந்த தேர்தலை பொறுப்பேற்று நடத்திய, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தான் என, பரபரப்பாக ... |
| 'தினமலர்' நாளிதழுக்கு எதிராக தமிழக முதல்வர் மனு Posted: சென்னை: தமிழக முதல்வர் சார்பில், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.அதன் விவரம்: கடந்த, 30ம் தேதி, 'தினமலர்' நாளிதழில், 'அவலம். இடிந்த கட்டடத்திற்காக, விதிகளை தளர்த்தி, 2 அரசாணைகள் - சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.,' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.இது, தமிழக முதல்வருக்கு எதிரான, அவதூறான செய்தி. விதிகள் தளர்த்தப்பட்டு, நில உரிமையாளருக்கு சாதகமாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதில், ... |
| பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்? அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை Posted: டீசல் விலை உயர்வு உட்பட, செலவினங்கள் அதிகரிப்பை காரணம் காட்டி, தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டண உயர்வு குறித்து, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, எப்போது வேண்டுமானாலும்,வெளியாகும் என, போக்குவரத்துக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலம் மூலம், 20,654 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் தினந்தோறும் சராசரியாக, 1.98 கோடி முதல் 2.10 கோடி வரையிலான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர். சென்னையில் ... |
| தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி Posted: சென்னை: கட்டட இடிபாடுகளில் சிக்கிய,தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர் களுக்கான தங்குமிடங்களை, அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய தமிழகம், ஆந்திரா, ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.அவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி யவர்களின் உறவினர்கள், அவர்களை தேடி, சம்பவ இடத்தில் குவிந்தனர்.ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், இடிந்த கட்டடம் அருகே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், தங்க ... |
| 'அரைகுறை ஆடையுடன் பெண்கள் செல்வதா?' Posted: பனாஜி: ''இளம்பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு செல்வது, நம் கலாசாரத்திற்கு எதிரானது,'' என, கோவா மாநில மூத்த அமைச்சர் சுதின் தவாலிகர், 57, தெரிவித்து உள்ளார்.கோவாவில், முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசில், பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சுதின் தவாலிகர். கோவாவில், பா.ஜ., கூட்டணி கட்சியான, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவர். இவர், நேற்று கூறியதாவது: கோவாவில், இளம்பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு செல்வது தவறான கலாசாரம்; இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற ... |
| மானியமில்லா சமையல் 'காஸ்' சிலிண்டர் விலை அதிகரிப்பு: வர்த்தக காஸ், விமான எரிபொருள் விலையும் உயர்வு Posted: புதுடில்லி: மானியமில்லா, 14.2 கிலோ எடை சமையல் 'காஸ்' சிலிண்டர் விலை, நேற்று முதல், 16.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அது போல், வர்த்தக சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளும், 1,000 லிட்டருக்கு, 413 ரூபாய் உயர்ந்துள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு பயன்பாடு (14.20 கிலோ); வர்த்தக பயன்பாடு (19 கிலோ) என, இரண்டு வகை, காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, வர்த்தக ... |
| Posted: சென்னை:'இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவுக்கு மீனவர்கள், யாத்ரீகர்கள் செல்லலாம்; கச்சத்தீவில், இந்திய மீனவர்களுக்கு, மீன்பிடி உரிமை வழங்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மாறி, பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து, ஒரு மாதம் முடிந்து விட்டது.மீனவர்கள் விவகாரம்:கடந்த, 2012ம் ஆண்டு, மீனவர்கள் விவகாரம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனவர்கள் நல அமைப்பின் தலைவர், பீட்டர் ராயன் என்பவர், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 02,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |