Tamil Star |
- சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் ராஜ்கிரண்!
- மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு இளையராஜாவைச் சந்தித்தார்!
- மரணத்தின் வாயிலை இரண்டு முறை தொட்டுவிட்டு திரும்பிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா!
- சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை மகிந்தா ராஜபக்சே நிறைவேற்ற அமெரிக்கா வலியுறுத்தல்!
- ஈராக்கில் புனிதப் போரில் கலந்து கொள்ள ட்விட்டர் மூலம் பிரச்சாரம், ஆட்சேர்ப்பு செய்யும் தீவிரவாதிகள்!
- நடுவர் மீது அப்படி என்ன கொலைவெறி இந்த வீரருக்கு?
- பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருட்டுப் பயலுக்கு கிடைத்த தண்டனை
- வீட்டின் கூரைகள் பிரியாவிடை பெறுவதை காண வேண்டுமா?
- கண்ணு வைக்காமல் பாருங்க கண்கொள்ளாக் காட்சியை!
- இந்த கொண்டாட்டத்தை இளைஞர்கள் கட்டாயம் அவதானிக்கவும்!
- குத்தாட்டத்தில் அசத்தும் பெண் பொலிஸ்: இது இவங்களோட இன்னொரு முகம் போல!
- ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா?
- வங்கதேச அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இந்தியா!
- முதல் இன்னிங்சில் 221 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்!
- ஈராக்கின் மொசூல் நகரில் 40 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தல்!
- மேற்கு மலேசிய கடற்கரையின் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 66 பேர் பலி!
- கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள் ஹர்த்தால் அனுஷ்டிப்பு: இயல்பு நிலை ஸ்தம்பிதம்!
- பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவச் சிப்பாய்!
- அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனை அரசியலுக்கு கொண்டு வரும் ஜனாதிபதி!
| சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் ராஜ்கிரண்! Posted: 18 Jun 2014 03:21 AM PDT
சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண். எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் முன்னணியில் இருந்தவர் ராஜ்கிரண். அவரது என் ராசாவின் மனசுல, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை. ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கவனித்து வந்தவர், பின்னர் மாயி கிரியேட்டர்ஸ் என்ற பெயரிலும் தயாரித்தார். பின்னர் பத்தாண்டு காலத்துக்கும் மேல் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சிவப்பு என்ற படத்தை விநியோகிக்க முடிவு செய்துள்ளார். புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவப்பு'. நவீன்சந்திரா - ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து கழுகு சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகிவிட்டாராம். மஞ்சப்பை படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி சிவப்பு படமும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண். இலங்கை அகதிகளின் வாழ்க்கைப் பதிவாக உருவாகி உள்ள சிவப்பு படத்தை ராஜ்கிரணே வாங்கி தன் பேனரில் திரையிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு இளையராஜாவைச் சந்தித்தார்! Posted: 18 Jun 2014 03:11 AM PDT
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இசைஞானி இளையராஜாவை அவரது பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துப் பேசினார். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவை. தன் அண்ணனும் குருவுமான பாவலர் வரதராசன் மற்றும் சகோதரர்களோடு, கம்யூனிஸ இயக்க மேடைகளில் பிரச்சாரப் பாடல்களாக ஒலித்தவை ராஜாவின் குரலும் இசையும். கம்யூனிச இயக்கங்கள் எப்போதும் எந்த மேடையிலும் இதை நினைவு கூறத் தயங்கியதில்லை. இளையராஜாவும் அப்படியே. ராஜாவின் சாதனைகளை பெருமையுடன் அவ்வப்போது கொண்டாடவும் தவறுவதில்லை கம்யூனிஸ்ட் அமைப்புகள். அந்த வகையில் இளையராஜா மீது பெரும் அன்பும் மதிப்பும் கொண்ட மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இளையராஜாவை அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து சந்தித்தார். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற இளையராஜா, நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இளையராஜாவின் குரல் ஒலித்த முதல் மேடை, பாவலர் சகோதரர்கள் கச்சேரி செய்த கம்யூனிஸ மேடைகள், ஊர்கள் பற்றியெல்லாம் நல்லக்கண்ணு நினைவு கூற, அவற்றை மகிழ்வுடன் ஆமோதித்தார் இளையராஜா. பின்னர் ஈரோட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு இளையராஜாவுக்கு நல்லக்கண்ணு அழைப்புவிட, ராஜாவும் வர ஒப்புக் கொண்டார். பின்னர் விடைபெற்றுச் சென்றார் நல்லக்கண்ணு.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரணத்தின் வாயிலை இரண்டு முறை தொட்டுவிட்டு திரும்பிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா! Posted: 18 Jun 2014 03:03 AM PDT
நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம். ப்ரீத்திக்கு 13 வயது இருக்கையில் அவரது தந்தையும், ராணுவ வீரருமான துர்கானந்த் ஜிந்தா கார் விபத்தில் பலியானார். அதே விபத்தில் படுகாயம் அடைந்த ப்ரீத்தியின் தாய் நீல்பிரபா படுத்தபடுக்கையானார். 2004ம் ஆண்டில் ப்ரீத்தி இரண்டு முறை உயிர் தப்பியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோதும், தாய்லாந்தை சுனாமி தாக்கிய போதும் ப்ரீத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ப்ரீத்தி எந்த மதத்தையும் பின்பற்றுபவர் அல்ல. எனக்கு கர்மா மீது நம்பிக்கை உள்ளது. கோவிலுக்கு செல்வதில் நம்பிக்கை இல்லை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம் என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார். நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு வைத்ததாக கூறி சோரி சோரி சுப்கே சுப்கே படத் தயாரிப்பாளர் பரத் ஷா கைது செய்யப்பட்டார். இந்த படத்தை நிழல் உலக ஆட்கள் தான் தயாரித்ததாகவும் அவர்கள் நடிகர், நடிகைகளை மிரட்டி நடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த படத்தில் நடித்து வந்த ப்ரீத்தி நிழல் உலக ஆட்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்தார். தாதாக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறிய அவருக்கு காட்ஃப்ரே ஃபிலிப்ஸ் நேஷனல் பிரேவரி விருது கிடைத்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை மகிந்தா ராஜபக்சே நிறைவேற்ற அமெரிக்கா வலியுறுத்தல்! Posted: 18 Jun 2014 02:53 AM PDT
கடந்த 15ஆம் தேதி இலங்கையிலுள்ள ஆழுத்கமாவில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் முஸ்லீம்களின் பல்வேறு கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்று வரும் இன ரீதியான மோதல்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கண்டனம் தெரிவித்துள்ளார். குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து, வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் சாகி வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு நாட்டை அமைதியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளான ஈரான், கத்தார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதர்கள், கொழும்பிலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, 6 நாடுகளின் தூதர்களுக்கு, ரவூப் ஹக்கீம் விளக்கி கூறினார். மேலும், இந்த தாக்குதலின் பின்னணி குறித்தும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும், 'பொதுபல சேனா' என்கின்ற பெயரில் தீவிரவாத இயக்கத்தினரின் இந்த திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிர் மற்றும் உடமை இழப்புகள் குறித்தும், தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்தார். இவற்றை மிகவும் கவனமாகக் கேட்ட தூதர்கள், இலங்கை வாழ் முஸ்லீம்களின் நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், இப்பிரச்னைகள் குறித்து தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், 19ஆம் தேதி நடைபெறவுள்ள முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டிலும் இதுகுறித்து எடுத்துரைத்து, அதன் மூலம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்கில் புனிதப் போரில் கலந்து கொள்ள ட்விட்டர் மூலம் பிரச்சாரம், ஆட்சேர்ப்பு செய்யும் தீவிரவாதிகள்! Posted: 18 Jun 2014 02:41 AM PDT
ஈராக்கில் புனிதப் போரில் கலந்து கொள்ள புதிய நபர்களை தேர்வு செய்யவும், பிரச்சாரத்தை பரப்பவும் தீவிரவாதிகள் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள். ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா'(ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா நகரை கைப்பற்றிய இந்த அமைப்பு தற்போது மொசுல் நகரை கைப்பற்றியுள்ளது. இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மக்களை கொலை செய்து அந்த படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. மேலும் தங்களின் புனிதப் போரில் கலந்து கொள்ள புதிய ஆட்களை ட்விட்டர் மூலம் தேர்வு செய்கிறது. இதற்காக அந்த அமைப்பு ஆன்ட்ராய்ட் ஃபோன்களுக்கென தி டான் ஆஃப் கிளாட் டைடிங்ஸ்(The Dawn of Glad Tidings) என்ற ட்விட்டர் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த ட்விட்டர் அப்ளிகேஷன் மூலம் ஐ.எஸ்.ஐ.ஸ். பற்றிய தகவல்கள், செய்திகளை தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவோர்களின் ட்விட்டர் கணக்கு மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தனது தகவல்களை பிற ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பும். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் ட்வீட்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அனுப்பியுள்ளது. அதன் ட்வீட்களை பலர் ரீட்வீட் செய்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரச்சாரத்தை பார்த்த ட்விட்டர் நிர்வாகம் அந்த அமைப்புடன் தொடர்புடைய கணக்குகள் பலவற்றை கடந்த வாரம் முடக்கியது. இதற்கிடையே ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த ஈராக் அரசு தடை விதித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஆதரவான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுவர் மீது அப்படி என்ன கொலைவெறி இந்த வீரருக்கு? Posted: 18 Jun 2014 02:20 AM PDT |
| பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருட்டுப் பயலுக்கு கிடைத்த தண்டனை Posted: 18 Jun 2014 02:14 AM PDT |
| வீட்டின் கூரைகள் பிரியாவிடை பெறுவதை காண வேண்டுமா? Posted: 18 Jun 2014 02:10 AM PDT |
| கண்ணு வைக்காமல் பாருங்க கண்கொள்ளாக் காட்சியை! Posted: 18 Jun 2014 02:06 AM PDT |
| இந்த கொண்டாட்டத்தை இளைஞர்கள் கட்டாயம் அவதானிக்கவும்! Posted: 18 Jun 2014 01:55 AM PDT |
| குத்தாட்டத்தில் அசத்தும் பெண் பொலிஸ்: இது இவங்களோட இன்னொரு முகம் போல! Posted: 18 Jun 2014 01:52 AM PDT |
| ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? Posted: 18 Jun 2014 01:42 AM PDT
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப, பிரச்னைகளும் பின்தொடர்ந்து வந்துகொண்டேதான் உள்ளது. ஸ்மார்ட் போன் உலக மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் உங்கள் கையில் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுகள் உள்ளது. வீட்டிலிருந்த படியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர். இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது நமது செல்போனில் உள்ள தகவல்களை சமூக விரோதிகள் ஹேக் செய்து எடுக்க எளிதாக மாறிவிடுகிறது. குறிப்பாக மால்வேர் புரோகிராம்களில் எளிதாக ஹேக் செய்துவிடுகின்றனர். இதனால் செல்போன்களில் நாம் பதிவு செய்து வைத்த ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதாக திருடப்படுகிறது, மேலும் இணையதளத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொடர்ந்து விளம்பர செய்திகளை திரைக்கு கொண்டுவந்து தொந்தரவு கொடுக்கும். மேலும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதன் மூலம், சமூக விரோதிகள் உங்களின் அடையாளத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் செல்போனை ஹேக் செய்து, அதை செயலிழக்க வைக்கலாம். இவற்றை தடுக்க ஸ்மார்ட் போன்களில் உரிய ஆன்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், மேலும் தேவையில்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப் பது மிகவும் நல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வங்கதேச அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இந்தியா! Posted: 18 Jun 2014 01:37 AM PDT
வங்கதேச அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், 47 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா தொடரை கைப்பற்றியது. வங்கதேசம் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்றது.இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாகத் தொடங்கியதால், தலா 41 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக அறிவிக்கப்பட்டது. டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இந்தியா 25.3 ஓவரில் 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரெய்னா அதிகபட்சமாக 27 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். உத்தப்பா 14, புஜாரா 11, உமேஷ் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வங்கதேச பந்துவீச்சில் அறிமுக வேகம் டஸ்கின் அகமது 5 விக்கெட் வீழ்த்தினார்.இதைத் தொடர்ந்து 41 ஓவரில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 17.4 ஓவரிலேயே வெறும் 58 ரன்னுக்கு சுருண்டது. அறிமுக வீரர் மிதுன் அலி 26, கேப்டன் முஷ்பிகுர் ரகிம் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (4.4-2-4-6), மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சம்பிரதாயமான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல் இன்னிங்சில் 221 ரன்னில் நியூசிலாந்து ஆல் அவுட்! Posted: 18 Jun 2014 01:34 AM PDT
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் (ஜூன் 16-20), டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக லதாம், ரூதர்போர்டு களமிறங்கினர். ரூதர்போர்டு 3 ரன் மட்டுமே எடுத்து ஜெரோம் டெய்லர் பந்துவீச்சில் கேல் வசம் பிடிபட்டார். அடுத்து லதாமுடன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தனர். வில்லியம்சன் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த லதாம் 82 ரன் எடுத்து (163 பந்து, 10 பவுண்டரி) ரோச் பந்துவீச்சில் பென் வசம் பிடிபட்டார். ராஸ் டெய்லர் ஒரு முனையில் தாக்குப்பிடிக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். கேப்டன் மெக்கல்லம் 4, நீஷாம் 15, சவுத்தீ 10, கிரெய்க் 4, போல்ட் 1 ரன் எடுக்க, வாட்லிங் மற்றும் சோதி டக் அவுட் ஆகி வெளியேறினர். ராஸ் டெய்லர் 45 ரன் எடுத்து (80 பந்து, 7 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெரோம் டெய்லர் 4, சுலைமான் பென் 3, கேப்ரியல் 2, கெமார் ரோச் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கிறிஸ் கேல் விக்கெட்டை (1 ரன்) பறிகொடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன் எடுத்திருந்தது.பிராத்வெயிட் 5, சுலைமான் (0) இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக பிளாக்வுட் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்கின் மொசூல் நகரில் 40 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தல்! Posted: 18 Jun 2014 01:28 AM PDT
ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேற முயன்ற 40 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிவாதிகள் கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மொசூல் நகரில் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் 40 பேர் அங்கிருந்து வெளியேற முயன்ற வேளையில் கடத்தபட்டுள்ளனர். அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகின்றது. இது இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில் ஈராக்கின் திக்ரத் நகரில் தவித்து வரும் இந்திய செவிலியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். ஈராக்கில் தொடர்ந்து நிலைமை மோசமடைவதை அடுத்து இந்திய தூதரகக் குழு பாக்தாத் விரைகிறது. அங்குள்ள கல நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு மீட்பு பணிகள் தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே மொசூல், திக்ரத், சாதியா, ஜலலா, உள்ளிட்ட முக்கியமான நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். பாக்தாத்தில் இருந்துது 60கி.மீ தொலைவில் இருக்கும் அவர்கள் மீது அமெரிக்க வான்வழி தாக்குதல் நடத்தகூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேற்கு மலேசிய கடற்கரையின் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 66 பேர் பலி! Posted: 18 Jun 2014 01:24 AM PDT
இந்தோனேஷியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசியா செலவதற்காக 97 பேருடன் வந்த அகதிகள் படகு ஒனறு மேற்கு மலேசிய கடற்கரையில் முழ்கியது. கடலில் படகு மூழ்கியதில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பயணம் செய்தவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவார்கள். இந்த படகு மலேசியாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் மலேசியா ஈடுபட்டுள்ளது. இது வரை 31 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 66 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புபணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள் ஹர்த்தால் அனுஷ்டிப்பு: இயல்பு நிலை ஸ்தம்பிதம்! Posted: 18 Jun 2014 01:16 AM PDT
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையைக் கண்டித்து கல்முனை பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை, அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்திலுள்ள கல்முனை மாநகரசபை மட்டும் இயங்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்க அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை அழைப்பு விடுத்திருக்கிறது. இதேவேளை, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மீது கல்முனைக்குடிப் பகுதியில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவச் சிப்பாய்! Posted: 18 Jun 2014 01:09 AM PDT
இராணுவ சிப்பாய் ஒருவர் கொழும்பில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் 17 வயதான மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபரான இராணுவச் சிப்பாய், மாணவியை கடத்திச் சென்று அவருக்கு விஷ போதைப் பொருள் ஒன்றை கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் சம்பவம் குறித்து நுகேகொட நீதவானுக்கு தொலைநகல் மூலம் அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் தந்தை செய்த முறைப்பாட்டுக்கு அமைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டது. தனது மகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தலைமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்ட போது, முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தலைமைத்துவ பயிற்சிகள் முடிந்து, மகள் கடந்த வருடம் மே மாதம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மகளை அண்மையில், ஒரு நாள் வெளியில் அழைத்துச் சென்ற சந்தேக நபரான சிப்பாய், கொழும்பு சுதந்திரச் சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் வைத்து விஷ போதைப் பொருள் கலந்த பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். இதன் பின்னர் மயக்கமுற்ற தனது மகளை விடுதி ஒன்று கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் பற்றி எவருக்காவது கூறினால், குடும்பத்துடன் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ள குறித்த சந்தேக நபர், மாணவியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனை அரசியலுக்கு கொண்டு வரும் ஜனாதிபதி! Posted: 18 Jun 2014 01:01 AM PDT
அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வரான மாலக்க சில்வாவை அடுத்த பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அலரி மாளிகையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடாது மகனின் வெற்றிக்காக பணியாற்றுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக், அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் கூறியுள்ளார். அத்துடன் மேர்வின் சில்வாவை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் மேர்வின் சில்வா சார்ந்த துராவே சாதி இன மக்களின் வாக்குகளை கவர்வதற்காகவே ஜனாதிபதி மாலக்க சில்வாவை அடுத்த பொதுத் தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துராவே சாதியை சேர்ந்த முக்கியமான வேட்பாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மாலக்க சில்வாவை தேர்தலில் நிறுத்த தீர்மானித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் பெரும்பாலான வாக்காளர்கள் துராவே சாதியை சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது மகனின் தேர்தல் பணிகளை தற்போதே ஆரம்பித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, கடந்த பொசன் பௌர்ணமி தினத்தில் மாத்தறை நகரில் மாபெரும் தான சாலையை நடத்தினார். வழமையாக அமைச்சர் மேர்வின் சில்வா, தனது தொகுதியான களனியிலேயே இவ்வாறான தான சாலையை ஒழுங்கு செய்வார். எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய இம்முறை அவர் அதனை மாத்தறையில் நடத்தியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















